எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, May 17, 2015

கொடைக்கானல் – ஒரு புகைப்படப் பார்வை…..இந்த வாரத்தின் செவ்வாய்க் கிழமை ஒன்றில் திருச்சியிலிருந்து கொடைக்கானல் வரை ஒரு நாள் பயணமாய் சென்று வந்தோம். அந்த பயணத்தில் எடுத்த சில புகைப்படங்களை இரண்டு நாட்களாக முகப் புத்தகத்தில் பகிர்ந்து கொண்டேன். முகப்புத்தகத்தில் பார்க்காத மற்ற நண்பர்களுக்காக, இந்த ஞாயிறில் இங்கேயும் ஒரு புகைப்படத் தொகுப்பாக….வானம் காட்டும் வர்ண ஜாலம்.....
திருச்சியிலிருந்து கொடைக்கானல் பயணிக்கும்போது நெடுஞ்சாலையில் எடுத்த படம்....

எந்த அசோகர் நட்டு வைத்த மரங்களோ....
சாலையில் பயணிக்கும் அனைவருக்கும் வரவேற்பு அளிக்கும் மரங்கள்.....
இச்சாலையில் 50 கிலோ மீட்டர் பயணித்தால் குளிர் அடிக்கும் கொடைக்கானல்.... வாங்க ஒரு ரவுண்டு போய்ட்டு வரலாம்!
எத்தனை எத்தனை மரங்கள்.....
அத்தனைக்கும் தண்ணீர் கொடுத்து எனக்கு மாளலை!
நீயும் கொஞ்சம் உதவி செய்யேன்...
கேட்டுக்கொண்ட அருவிக்கு
ஓடோடி வந்து உதவி செய்தது....
சோவெனப் பொழிந்து
மேகக் கூட்டங்களில் ஒளிந்து கொண்டிருந்த மழை....நீங்கள் மட்டும் தான் நடை பழகுவீர்களா?” என்று எங்களோடு போட்டி போட்டுக்கொண்டு நடந்த மேகக் குழந்தைகள்....உன் மெல்லிதழில் முத்தமிட ஆசை....
நீயும் கொஞ்சம் நெருங்கி வாயேன்....
பூவின் இதழிடம் சொல்கிறதோ?
ஷ்ஷ்ஷ்..... குழந்தை தூங்கறான்.....
க்ளிக்சத்தம் கேட்டுச்சு....
தொலைச்சுப்புடுவேன்!
சொல்லாமல் பார்வையாலே சொல்லும் அம்மா.....
எவ்வளவு முட்டினாலும் இந்த தூண் பாறைகள் வீழாதோ?” என்று கேட்கிறதோ இந்த மேகக்கூட்டம்.....
எதையும் சாப்பிடும் முன்னர் கொஞ்சம் சோதனை செய்து சாப்பிடுவது தான் நல்லது..... தோ பாருங்க!
நான் சொல்றத சொல்லிட்டேன்! அப்புறம் உங்க இஷ்டம்!
கொடைக்கானல் ஏரி - மேலிருந்து பார்த்தால் நட்சத்திர வடிவில் இருக்கும் எனக் கேள்வி.....
Lake View Point-ல் இருந்து பார்த்தபோது நட்சத்திரத்தின் சில முனைகள் மட்டுமே தெரிந்தது... இன்னும் உயரே போய்ப் பார்க்க வேண்டுமோ?இந்த மனிதர்களின் தொல்லை தாங்க முடியவில்லையே.... நிம்மதியா இருக்க விட மாட்டேங்கறாங்க!என்று ஒரு மரத்தின் உச்சாணியில் அமர்ந்து கொண்டிருந்த குரங்கு ஒன்று. Close up Shot படத்தின் ஒரு மூலையில்......
பூ பூக்கும் ஓசை....
அதை கேட்கத்தான் ஆசை....
என்று பூக்களின் அருகிலே அமர்ந்து கொண்டதோ இந்த ஈ....
பூவே உந்தன் உன் பெயர் என்னவோ?
யாரும் சொல்வதற்கு முன் நீயே சொல்லி விடேன்....
ரோசாப் பூ... சின்ன ரோசாப் பூ.....
என்னைப் படம் பிடிக்கவா இவ்வளவு தூரம் வந்தீங்க?”
என்னிடம் கேள்வி கேட்டதோ இப்பறவை....


என்ன நண்பர்களே, இந்த வார புகைப்படத் தொகுப்பினை ரசித்தீர்களா? கொடைக்கானல் பயண அனுபவங்கள் பிறிதொரு சமயத்தில் பதிவாக வந்தாலும் வரலாம்உங்களுக்கு விருப்பம் இருப்பின்!

மீண்டும் சந்திப்போம்……

நட்புடன்

வெங்கட்.

திருவரங்கத்திலிருந்து…….

34 comments:

 1. நான் அங்கு ஃபேஸ்புக்கில் பார்க்காத படங்களும் இங்கு. எல்லாப் படங்களுமே அழகு என்றாலும், பூவில் புழு அற்புதமான க்ளிக். அதற்கடுத்த படமும்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. கொள்ளை அழகு. அற்புதமான படப்பிடிப்பு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

   Delete
 3. நான் சொல்ல நினைப்பது அத்தனையும் ஶ்ரீராமுக்கு எப்படியோ தெரிந்துவிடுகிறது.

  ReplyDelete
  Replies
  1. அனைத்தும் ஸ்ரீராமுக்கு தெரிந்து விடுகிறது! :))))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

   Delete
 4. அனைத்து படங்களும் பளிச் பளிச்... பாராட்டுகள் ஜி...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 5. கோடைக்கானல் செல்லும்போது எடுத்த படங்களும் கோடைக்கானலில் எடுத்த படங்களும் அருமை. அந்த பூ தன் பெயரை சொல்லுமுன் நான் சொல்லலாமேன எண்ணுகிறேன். அதனுடைய பெயர் Torch lily. Red-hot poker என்றும் சொல்வதுண்டு. அதனுடைய தாவரப் பெயர் Kniphofia spp.

  ReplyDelete
  Replies
  1. பூவின் பெயரைத் தெரிவித்ததற்கு நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 6. கொடைக்கானல் புகைப்படங்களை ரசித்தேன். தங்களது பதிவுகள் மெருகேற ஒரு முக்கியமான காரணமாகக் கருதுவது தங்களின் கலை ரசனையே. தொடருங்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 7. ரசித்தேன். படங்கள் நன்றாக இருக்கின்றன

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
 8. குளு குளு கொடைக்கானல்!.. நேர்த்தியான படங்கள்..
  தங்களால் - மீண்டும் ஒரு முறை கொடைக்கானல் பயணம்..

  வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 9. வர்ணஜாலம் அருமை,
  அசோகர் நட்ட மரங்களா??,,
  நீங்கள் கொங்சம் உதவியிருக்கலாம்,
  அப்புறம் அவுங்க மட்டும் என்ன செய்வாங்க,
  அய்யோ முத்தமா? மலர் கேட்டது,
  தாயல்லவா,,,,,,,,,,
  பாவம் தான் போங்க,
  ஆமா ஆமா,
  நல்ல ஞானம்,
  எனக்கு தெரியல,
  ஓசைக் கேட்டதா?
  அத்துனையும் அருமை. நன்றி.
  ரு

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன் ஜி!

   Delete
 10. சூப்பர் படங்கள்...தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி ஜி!

   Delete
 11. கோடைக்குப் போகாமல் ஊரைஸ் சுற்றிக் கொண்டிருக்கிறேன். அருமையான படங்கள். ஒரு நாளா போனீர்கள்.
  அதிலயே இத்தனை இடங்களை அலைந்திருக்கிறீர்கள். அருமை வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.....

   Delete
 12. கொடைக்கானலுக்கு மீண்டும் ஒருமுறை தங்களுடன் சேர்ந்தே சென்றதுபோல உணர்ந்தேன். பகிர்வுக்கு நன்றிகள். படங்கள் ஜோர் ஜோர்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 13. முகநூலிலும் ரசித்தேன்! இங்கும் ரசித்தேன்! அருமையான பகிர்வு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 14. வணக்கம்
  ஐயா
  பார்த்தது போது ஒரு உணர்வு... அழகிய படங்கள் பகிர்வுக்கு நன்றி. த.ம 7
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 15. நீங்கள் எடுக்கும் போட்டோக்களைப் பற்றி சொல்லவும் வேண்டுமோ? அத்தனையும் பளிச் ... பளிச் ... நேர்த்தியான படங்கள். வட இந்தியப் பயணங்களை வரிக்கு வரி விவரிக்கும் நீங்கள், இந்த கொடைக்கானல் பயணத்தில் படங்களுக்கு மட்டும் விவரம் சொல்லியது கொஞ்சம் குறைதான். இருந்தாலும் பிறிதொரு சமயத்தில் பதிவாக வந்தாலும் வரலாம் என்பதில் ஒரு ஆறுதல். அந்த பயணக் கட்டுரையை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.
  த.ம.8

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

   Delete
 16. அருமையான புகைப்படங்கள்! மனதை அள்ளுகின்றன. குறிப்பாக நம் மூதாதையர் ஃபோட்டோ அருமையான போஸ்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 17. அழகான இடம். அருமையான படங்கள். 3வது அற்புதம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....