எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, June 11, 2015

கோபால்பூரில் மானாட மயிலாட!தேவ் பூமி ஹிமாச்சல் பகுதி 19

தேவ் பூமி ஹிமாச்சல்  பகுதி 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18

வெளியே இருந்த தகவல் பலகை பார்த்ததும் எங்களுடன் வந்திருந்த குழுவில் இருந்த சிறுவர்களுக்கு ஒரு குதூகலம். “தொடர்ந்து கோவிலாக பார்த்து கொஞ்சம் அலுப்பாக இருந்த அவர்களுக்கு அந்த இடம் கொஞ்சம் மாற்றமாக இருக்குமே என்று நினைத்து, எங்களுடைய பயணத்தில் அந்த இடம் பற்றி யோசிக்கவில்லை என்றாலும், அங்கே போக முடிவு செய்தோம்.கோவிலின் வெளியே இருந்த தகவல் பலகையில் கோபால்பூர் Zoo 4 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது என்று தெரிந்தவுடன், விசாரித்துக் கொண்டு அங்கே வாகனத்தில் பயணித்தோம். செல்லும் வழியெங்கும் பாலம்பூர் நகருக்கே உரித்தான தேயிலைத் தோட்டங்கள் இருக்க, அவற்றை பார்த்தபடியே பயணித்து மிருகக்காட்சி சாலையின் வாயிலை சென்றடைந்தோம்.Dhauladhar National Park என்றும் Gopalpur Zoo என்றும் அழைக்கப்படும் இந்த மிருகக்காட்சி சாலை சுற்றுலா வருபவர்களுக்கு மிகவும் பிடித்தமான இடங்களில் ஒன்று.  இவ்விடத்தில் பல வகையான விலங்குகளை முடிந்த அளவிற்கு சுதந்திரமாக விட்டிருக்கிறார்கள். சித்தன் போக்கு சிவன் போக்குஎன்பது போல, தன்னிச்சையாக சுற்றித் திரிந்த விலங்குகளை அவற்றின் இயற்கைச் சூழலிலிருந்து அகற்றி இப்படி மிருகக்காட்சி சாலைகளுக்குள் அடைத்து வைப்பது கொடுமையான விஷயம்.  என்றாலும் சற்றே பெரிய பரப்பளவு கொண்ட இடத்தில் இந்த மிருகக்காட்சி சாலையில் இருப்பதால் கொஞ்சம் சுதந்திரமாக உணர்ந்து கொள்ள முடியுமோ என்னமோ?உள்ளே நுழையவும், வாகனம் நிறுத்தவும், புகைப்பட கருவிகளை உள்ளே எடுத்துச் செல்லவும் என விதம் விதமாக கட்டணங்களை வசூலித்த பிறகே நம்மை உள்ளே அனுமதிக்கிறார்கள். எல்லா கட்டணங்களையும் கொடுத்து விட்டு உள்ளே நுழைந்தோம். கடல் மட்டத்திலிருந்து சுமார் 1200 மீட்டர் உயரத்தில் இருக்கும் இந்த மிருகக்காட்சி சாலை சுமார் 12.5 ஹெக்டேர் அளவு பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் பலகை தெரிவிக்கிறது.பக்கத்திலேயே இன்னுமொரு தகவல் பலகையில் இங்கே இருக்கும் பல்வேறு விலங்குகள், பறவைகள், மரங்கள் என பல தகவல்களை வரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக எழுதி வைத்திருக்கிறார்கள். சிறுத்தை, சிங்கம், குரங்குகள், பல வித மான்கள், பறவைகள் என நிறையவே இருக்கின்றது இவ்விடத்தில். மிருகக்காட்சி சாலையின் நுழைவுப் பகுதியிலேயே கரடிகள் இருக்க, அவற்றைப் பார்த்த பின் உள்ளே நுழைந்தோம்.மலைப்பகுதி என்பதால் நிறைய பறவைகளும் இங்கே வந்து செல்வதுண்டு. இங்கே இருக்கும் சில தனியார் தங்குமிடங்கள் பறவைகளை பார்ப்பதற்கென்றே சில சுற்றுலாக்களை ஏற்படுத்துவதும் உண்டு எனத் தெரிகிறது.  Bird Watching என்று அழைக்கப்படும் விஷயம் மிகவும் சந்தோஷமான விஷயம்.  ஒவ்வொரு பறவைகளையும் பார்த்துக் கொண்டும், அவைகளின் பரிபாஷைகளை உற்றுக் கேட்டுக் கொண்டும் இருப்பது அலாதியான விஷயம். இம்மாதிரி ஒரு இடத்திற்கு, சில கவிதைப் புத்தகங்களைக் கொண்டு சென்று பறவைகளின் ஒலிகளைக் கேட்டபடியே படித்து ரசிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு.  நேரம் கிடைக்க வேண்டுமே! ஒரே ஓட்டமாக அல்லவா இருக்கிறது வாழ்க்கை!நாய் குரைக்கும் என்று நமக்கு எல்லாருக்கும் தெரியும்.  மான்கள் கூட குரைக்கும் என்று தெரியுமா உங்களுக்கு! மான் வகைகளில் ஒரு குறிப்பிட்ட மான்கள் குரைக்கும்.  தில்லி zoo-விலும் இப்படி Barking Deer பார்த்திருக்கிறேன். அதே வகை மான்கள் இங்கும் காண முடிந்தது. ஒரு வகை மான்களை சாம்பார்என்றும் அழைப்பதுண்டு! இறைவனின் படைப்பில் எத்தனை எத்தனை வித்தியாசங்கள்!இப்படியாக விலங்குகளையும், பறவைகளையும் பார்த்துக் கொண்டே வரும்போது, அங்கே இருந்த பூக்களையும், மரங்களையும் பார்க்கத் தவறவில்லை. ஒவ்வொரு ராசிக்கான மரங்களையும் அதன் பெயர்களையும் எழுதி வைத்ததோடு அம்மரங்களையும் அங்கே காண முடிந்தது. எல்லாவற்றையும் ரசித்தபடியே சிறுத்தைப் புலி இருக்கும் இடத்திற்கு வந்தால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பார்த்தும் சிறுத்தை இருப்பதாகத் தெரியவில்லை! அண்ணாத்தே எங்கே இருக்காரோ?என்று நினைத்தபடியே அனைவரும் நகர்ந்து விட, நானும் ஒரு சிலரும் மட்டும், பார்த்தால் கொஞ்சம் புகைப்படம் எடுக்கலாமே என நின்று கொண்டிருந்தோம்!நாங்கள் நினைத்தது, சிறுத்தைக்கு டெலிபதி மூலம் சென்றடைந்தது போலும்.  புதர்களுக்கு நடுவே தூங்கிக் கொண்டிருந்த சிறுத்தை கொட்டாவி விட்டு, சோம்பல் முறித்தபடியே எழுந்து நடக்கத் துவங்கியது.  ஒன்று தான் இருக்கிறதென நினைத்தால் இரண்டு மூன்று என தொடர்ந்து காட்சி தந்தன.  ஏகப்பட்ட புகைப்படங்களை எடுத்துக் கொண்டேன்.  என்னவொரு கம்பீரம்! ஆனாலும், சுதந்திரமாகத் திரிய வேண்டிய என்னை இப்படி சிறு பரப்பளவில் அடைத்து வைத்துவிட்டீர்களே என்று சொல்லாமல் சொல்வது போலத் தோன்றியது எனக்கு!அடுத்ததாக சிங்கங்களைப் பார்க்கலாம் என நகர்ந்தோம்.  அவற்றுக்கு என்ன கோபமோ தெரியவில்லை. மறைவான இடத்திலிருந்து வெளியே வரவே இல்லை!   அவ்வப்போது கர்ஜனை மட்டும் செய்து தன் இருப்பைச் சொல்லியபடி இருந்தது. விலங்குகளுக்கு எல்லாம் சாப்பாட்டு நேரம் போல! ஒரு ஜீப்பின் பின் பக்கத்தில் மாமிசங்களை போட்டு எடுத்துக் கொண்டு வந்தார் ஒரு பணியாளர்.வேட்டையாடி உண்டு பழகிய விலங்குகளுக்கு, இப்படி Ready to Eat வகையில் உணவு தந்தால் பிடிப்பதில்லை போலும். சில கூண்டுகளில் சீண்டப்படாது கிடந்தன மாமிசத் துண்டுகள்!நிறைய விலங்குகள், பறவைகள் என பார்த்தபடியே வந்ததில் நேரம் போனது தெரியவில்லை. அனைத்தையும் பார்த்து வெளியே வந்தால் மலைகளிலிருந்து வரும் தண்ணீரை குழாய்களின் வழியே வரவைத்து இருந்தார்கள்.  தண்ணீர் இயற்கையாகவே அப்படி ஒரு சில்லிப்பு! சுவையும் அலாதி! தண்ணீரின் இந்த இயற்கையான சுவைக்கு முன் பாட்டிலில் அடைத்து விற்கப்படும் மினரல் வாட்டர் எம்மாத்திரம்!

அனைத்தையும் ரசித்து அங்கிருந்து வெளியே வந்தோம். என்னதான் அங்கே வரும் மக்களுக்கு இவ்விலங்குகளையும், பறவைகளையும் பார்ப்பதில் மகிழ்ச்சி கிடைக்கிறது என்றாலும், தன் சூழலிலிருந்து மாறுபட்டு, கூண்டுகளுக்குள் அடைந்து கிடக்கும் விலங்குகளைப் பார்த்தால் கொஞ்சம் பரிதாப உணர்வும் வருவது நிஜம்!

அடுத்து எங்கே சென்றோம் என்று விரைவில் சொல்கிறேன்.   

தொடர்ந்து பயணிப்போம்….

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

40 comments:

 1. அழகான படங்கள்...

  பறவைகளின் ஒலிகளைக் கேட்டபடியே படிப்பது... ம்... எதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 2. வணக்கம்
  ஐயா
  ஒவ்வொன்றையும் பற்றி சொல்லிச்சென்ற விதம் வெகு சிறப்பு ஐயா... அழகிய புகைப்படங்கள் பகிர்வுக்கு நன்றி
  த.ம 3

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 3. நாம் பார்த்து ரசிப்பதாகவே இருந்தாலும் கூண்டில் அடைபட்ட பறவைகளையும் விலங்குகளையும் நினைத்தால் பரிதாபமாகவே உள்ளது. தவறேதும் செய்யாமலேயே வாழ்நாள் முழுக்க சிறைவாசம்.

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான். அடைபட்டுக் கிடப்பது கொடுமையான விஷயம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி ஜி!

   Delete
 4. // கவிதைப் புத்தகங்களைக் கொண்டு சென்று பறவைகளின் ஒலிகளைக் கேட்டபடியே படித்து ரசிக்க வேண்டும்// ஆஹா!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 5. சுவாரஸ்யமான பதிவு! அழகாக எழுதியிருக்கிறீர்கள் வெங்கட்!

  ஆனால் எப்போது இப்ப‌டி கூண்டில் அடைக்கப்பட்ட மிருகங்களைப்பார்த்தாலும் எனக்கு மிக‌வும் பரிதாபமாகாவே இருக்கும்! சொல்ல முடியாத அவஸ்தைகள் அவைகளுக்கு எத்தனை இருக்குமோ?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   Delete
 6. இம்மாதிரி பெரிய பரப்புள்ளவனப் பூங்காக்களைச்சுற்றி வருவதே அயர்வு உண்டாக்கிவிடும் சிங்கம் சிறுத்தை எல்லாம் நமக்குப் பாதுகாப்பான கூண்டுக்குள்தானே.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 7. இயற்கையுடன் ஒரு குலாவல். நடக்கட்டும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
 8. வாகனத்துக்கு, உள்ளே நுழைய, கேமிராவுக்கு என்று அவர்கள் பிடுங்கிக் கொண்டபின் மற்ற செலவுகளுக்கு மிச்சம் விட்டார்களா? :)))))))))

  தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 9. இயற்கையே இறைவன் தந்த வரமே! உண்மை! இயற்கை என்பது செடி கொடிகள் பூக்கள் விலங்குகள் எல்லாமே அடங்குமே1...மட்டுமல்ல இது போன்று விலங்குகள் அடைக்கப்ப்டு இருப்பது எங்களுக்கும் மனதிற்கு வேதனை தருவதே. மக்களை அடைத்தால் எப்படி இருக்குமோ அப்படித்தானே அவைக்களுக்கும் இருக்கும்.....ஆம் வாழ் நாள் முழுக்க பாவம்! அருமையான வர்ணனை மிகவும் ரசித்தோம் வெங்கட் ஜி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 10. //தேநீர் தோட்டங்கள் இருக்க,//
  தேயிலைத்தோட்டங்கள் என்றிருந்தால் நன்றாயிருக்கும். .
  மான் ஆடுவதை பார்த்தீர்கள் என நினைக்கிறேன். மயில் ஆடுவதை பார்த்தீர்களா?
  தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. சரி செய்து விடுகிறேன். தவறைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.

   மயிலாட! - கூண்டுக்குள் சிறைபட்ட மயில்கள்! ஆட இறக்கைகளை உயர்த்தக்கூட முடியவில்லை பாவம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 11. பயணங்கள் முடிவதில்லை! தொடரட்டும்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 12. பயணங்களில் நாங்களும் உடன் வருகிறோம் சகோ...

  விலங்குகளை பார்க்க அழகாகவும், பரிதாபமாகவும் இருக்கு....

  பறவைகளின் ஒலியைக் கேட்டுக் கொண்டே படிப்பது..நினைக்கையிலேயே....இனிக்கிறது

  தம +1.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி ஜி!

   Delete
 13. பதிவும் படங்களும் பிரமிப்பை தருகின்றன. விலங்குகளை இப்படி படம் எடுப்பது மிகவும் கடினம். அதை சுலபமாக செய்திருக்கிறீர்கள். அருமையான பதிவு.
  த ம 8

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.

   Delete
 14. காட்டிலே இருக்க வேண்டிய மிருகங்களை ,வீட்டிலே இருக்கப் பிடிக்காமல் நாம் சென்று பார்ப்பது கொடுமைதான் :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 15. எஸ்பி சொன்னதை வழிமொழிகிறேன் ..
  தொடரட்டும் பயணங்கள்
  வாழ்த்துக்கள்
  தம +

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

   Delete
 16. சிலநாட்களாக வலைப்பக்கம் வராமையால் சில பகுதிகளை படிக்காமல் விட்டுவிட்டேன் போலும்! விடுபட்ட பகுதிகளையும் வாசித்து வருகிறேன்! படங்களும் தகவல்களும் சிறப்பு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 17. சிலநாட்களாக வலைப்பக்கம் வராமையால் சிலபதிவுகள் வாசிப்பில் விடுபட்டுவிட்டன! சென்று வாசிக்கின்றேன்! படங்களும் தகவல்களும் அருமை! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 18. உண்மைதான் ஐயா
  காட்டில் சுதந்திரமாய் சுற்றித் திரியும் மிருகங்களை அடைத்து வைப்பது
  என்பது பரிதாபகரமானதுதான்
  பாவம் விலங்குகள்
  புகைப்படும் ஒவ்வொன்றும் அருமை ஐயா
  நன்றி
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 19. தங்கள் பயணங்கள் பற்றிய பதிவு அருமை. கூண்டில் அடைபட்ட பறவைகளையும் விலங்குகளையும் நினைத்தால்தான் மிகவும் பரிதாபமாகவே உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 20. பாவம்தான் மிருகங்கள். நல்லவேளை கூண்டில் அடைக்காமல் உலவ விட்டுருப்பது கொஞ்சம் ஆறுதல்தான். சிறுத்தை பலே ஜோர்!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்! பத்துக்குப் பத்து அறையில் சிங்க ராஜா இருப்பது கொடுமை இல்லையா... ராஜாவுக்கே இந்த நிலை என்றால் மற்ற உயிரினங்களுக்கு!

   இங்கே கொஞ்சம் சுதந்திரமா உலவ இடமாவது இருக்கு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....