எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, June 17, 2015

பைஜ்னாத் கோவில் சிற்பங்கள்
தேவ் பூமி ஹிமாச்சல் பகுதி 21

தேவ் பூமி ஹிமாச்சல்  பகுதி 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20

சென்ற பகுதியில் பைஜ்னாத் கோவில் பற்றிய சில தகவல்களைச் சொல்லி இருந்தேன். இப்பகுதியில் அக்கோவிலின் சுற்றுச் சுவர்களில்/பிரகாரத்தில் இருந்த சில சிறப்பான சிற்பங்களைப் பார்க்கலாம். ஒவ்வொரு சிற்பமும் என்ன அழகு! அதிலும் சில சிற்பங்கள் நம் தமிழகத்தில் பார்க்கும் சிற்பங்களைப் போலவே இருந்தன. பொதுவாகவே வடக்கில் பார்க்கும் சிலைகள் எல்லாமே பளிங்குக் கற்களில் தான் அமைந்திருக்கும். ஆனால் இச்சிலைகள் நமது ஊர் போலவே வடித்திருக்கிறார்கள்!

இக்கோவிலில் இருக்கும் சிற்பங்கள் ஒவ்வொன்றாய்ப் பார்க்கலாமா?

 1. நர்த்தன விநாயகர்

1. முதலில் ஆனைமுகத்தான் – அவன் தானே முழு முதற்கடவுள்! இக்கோவிலில் இருக்கும் கணபதி – நர்த்தன கணபதி. வித்தியாசமாக சிங்கம், மூஷிகம் என இரண்டு வாகனங்கள் – இடப்புறத்தில் சிங்கமும் வலப் புறத்தில் மூஷிக வாகனம். ஆறு கரங்கள். நர்த்தன விநாயகர் என்பதாலோ என்னமோ, மேடையின் அடி பாகத்தில் மூன்று பேர் மத்தளம் வாசிக்கும்படி வடித்திருக்கிறார் அந்த சிற்பி! 

 2. ஹரிஹர்

2. ஹரியும் சிவனும் ஒண்ணு! அதை அறியாதவன் வாயில் மண்ணு! என்று சொல்வதுண்டு. இங்கே இருக்கும் ஒரு சிலை – ஹரி ஹர் – மூன்று தலைகளோடு காட்சியளிக்கும் இச்சிலையில் வலப்பக்கம் சிவனையும் இடப்பக்கம் விஷ்ணுவையும் குறிக்கிறது. அதற்குத் தகுந்த மாதிரி வலப்பக்க கை ஒன்றில் திரிசூலம் இருக்க, இடப்பக்க கை ஒன்றில் சக்கரம் இருக்கிறது. கீழ்ப்பக்கத்தில் இடப்பக்கம் லக்ஷ்மியும், வலப்பக்கத்தில் பார்வதியும் அமைத்திருக்கிறார் சிற்பி. நுணுக்கமான வேலைப்பாடுகள் இச் சிற்பத்திலும்.

 3. கல்யாண சுந்தரர்

3. கல்யாண சுந்தரர்: சிவபெருமானும் பார்வதி தேவியும் கல்யாண கோலத்தில். நடுவே விஷ்ணு கன்யா தானம் செய்து கொடுக்கிறார்! இச்சிற்பம் வெகுவாக சிதிலம் அடைந்திருக்கிறது. ஆகையால் இதன் அழகு அவ்வளவாக தெரியவில்லை. 

 4. கார்த்திகேயன்

4. கார்த்திகேயன்: பொதுவாக முருகப் பெருமானின் ஆறுமுகங்களும் வரிசையாக இருப்பது பார்த்திருக்கிறோம். மூன்று முகங்கள் – அதன் மேலே மூன்று முகங்கள் என்று பார்த்திருக்கிறீர்களா? இங்கே இருக்கும் சிற்பம் அப்படி இருக்கிறது. முதன் முறையாக ஆறுமுகனின் இப்படியான சிற்பத்தினை இங்கே தான் பார்த்தேன்.  மயில்வாகனத்தில் அமர்ந்தபடி இருக்கும் அந்த சிற்பத்தினை நீங்களும் பார்க்க உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.......

 5. அந்தகாசுர வதம்

5. அந்தகாசுரன் வதம்: விஷ்ணுவின் விராட ரூபம் பல ஓவியங்களில் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் சிவனின் விராட ரூபம் பார்த்ததுண்டா? அந்தகாசுரன் எனும் அசுரனுக்கு பயங்கர பலம். பார்வையற்றவனாக இருந்தும், தனது தவ வலிமையால், ஆகாயம் பூமி ஆகிய இரண்டு இடங்களிலும் வதம் செய்ய முடியாது என்ற வரம் பெற்றிருந்தவன். தனது திரிசூலம் கொண்டு அந்தரத்தில் அந்தகாசுரனின் சிரம் கொய்து வதம் செய்த கோலம். நான்கு சிரங்களும், பதினாறு கைகளும் கொண்ட இந்த சிற்பம் இதோ உங்கள் பார்வைக்கு! எத்தனை வேலைப்பாடு இச்சிற்பத்தில்.

 6. சாமுண்டா தேவி

6. சாமுண்டா தேவி: பத்து கைகளுடன் காட்சி தருகிறார் சாமுண்டா தேவி.  ஒரு அசுரனை வதைத்து தனது காலடியில் வைத்து, மற்றொரு அசுரனை தனது குறுவாளினால் வதைக்கும் வடிவில் இருக்கும் இச்சிலையில் கபாலங்களினால் ஆன மாலை! கன்னத்தில் ஒற்றை விரல் வைத்து அழகாய் இருக்கும் சிலை. என்னவொரு கலைநயம்.....

 7. அர்த்தலக்ஷ்மி நாராயணன்

7.  அர்த்தலக்ஷ்மி நாராயணன்:  அர்த்தநாரீஸ்வரர் – சிவனும் பார்வதியும் பாதிப்பாதியாக இருக்கும் சிற்பம் நமது கோவில்கள் பலதிலும் பார்த்திருக்க முடியும். அர்த்தலக்ஷ்மி நாராயணன் பார்த்ததுண்டா? கருட வாகனத்தில் அமர்ந்தபடி இருக்கும் இச்சிற்பத்தில் பத்து கைகளுடன் காட்சி தருகிறார். வலப்புறத்தில் விஷ்ணு, இடப்புறத்தில் லக்ஷ்மி.  பார்த்துப் பார்த்து ஒவ்வொரு விஷயத்தினையும் சிறப்பாக செய்திருக்கிறார் இந்தச் சிற்பி!

 8. சிவபெருமான்.

8.    இந்த சிற்பமும் சிவபெருமானின் ரூபமாகத் தான் தெரிகிறது. இது பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை.

 9. சூரியதேவன்

9.   சூரியதேவன்:  ஏழு குதிரைகள் கொண்ட தேரில் அமர்ந்து இருப்பது போல வடிவமைத்திருக்கிறார்கள்.

 10

 11

இப்படி கோவில் முழுவதும் இருக்கும் சிற்பங்களைப் பார்த்து ரசித்த பிறகு இயற்கைச் சூழலில் குழுவினரின் சில புகைப்படங்களையும் எடுத்து முடித்தேன்!  அதன் பிறகு அனைவரும் வெளியே சின்னதாய் ஒரு Shopping செய்ய, நான் அங்கே கண்ட காட்சிகளை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தேன். மெதுவாக அங்கிருந்து புறப்பட்டு நாங்கள் அனைவரும் காங்க்ரா நகர் நோக்கி பயணத்தினைத் துவங்கினோம்.  அன்றைக்கு இரவும் காங்க்ரா நகரில் தான் தங்க வேண்டும்......

அப்பயணமும் அதன் பிந்தைய நிகழ்வுகளும் அடுத்த பதிவாக!

தொடர்ந்து பயணிப்போம்….

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

38 comments:

 1. அருமையான சிற்பங்கள்..பராமரிப்பு சரியானபடி இல்லாமல் சிதிலமடைவதைப் பார்க்க நெஞ்சு பொறுக்குதில்லையே!! :(

  பகிர்வுக்கு நன்றிங்க வெங்கட் ஜி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மஹி.

   Delete
 2. அனைத்தும் அருமை...

  ஆறுமுகனின் சிற்பம் வித்தியாசம்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 3. அருமையான சிற்பங்களை காண உதவியமைக்கு நன்றி! தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 4. Awesome clicks & observations/explanations venki !! Mamma oor sirpi vadivamaitha sirpangal pol ulladhu. Thnx for sharing!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி லதா ஜி!

   Delete
 5. அனைத்து சிற்பங்களும் மனதை கொள்ளை கொண்டன! அழகாக படம் பிடித்து பகிர்ந்து தகவலையும் விரிவாக விளக்கியமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 6. வணக்கம் சகோதரரே.

  அத்தனை சிற்பங்களும் மிக அழகாய் இருக்கின்றன. அசுரனை வதைக்கும் வேளையிலும், கன்னத்தில் விரலூன்றி புன்னகைக்கும் சாமுண்டா தேவி சிற்பம் மிக அழகு.அனைத்தையுமே மிகவும் ரசித்தேன்.தொடருங்கள்,,படிக்க காத்திருக்கிறோம். பகிர்வுக்கு நன்றி
  விட்ட பதிவுகளை படித்து வருகிறேன்.தாமத வருகைக்கு வருந்துகிறேன்.

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   Delete
 7. அந்தக் காலத்தில் சிற்பக்கலை எத்தனை சிறப்பாக இருந்திருக்கிறது!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 8. அனைத்தும் அருமை, பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன் ஜி!

   Delete
 9. புகைப்படங்கள் அனைத்தும் எடுத்த விதம் அழகு
  தமிழ் மணம் 5

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 10. அசத்தும் சிற்பக்கலை! அழகிய படங்கள்!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 11. அனைத்து சிற்பங்களும் அழகாக இருக்கின்றன. இருந்தாலும் தென்னகத்தில், குறிப்பாக தமிழ்நாட்டிலுள் கோயில்களில் காணப்படும் பாவனைகளிலிருந்து சற்று வித்தியாசமாகவே இவை உள்ளன. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 12. படங்களும் விளக்கமும் நன்று!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 13. சிற்பங்கள் அனைத்தும் வித்தியாசமாக செதுக்கப்பட்டிருக்கின்ற‌ன என்றாலும் அனைத்தும் மிக அழகு!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   Delete
 14. அன்புடையீர்! வணக்கம்!
  அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (19/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
  இணைப்பு: http://gopu1949.blogspot.in/

  நன்றி!
  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com
  FRANCE

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி புதுவை வேலு அவர்களே.

   Delete
 15. அன்புள்ள சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு வணக்கம்! நமது மூத்த வலைப்பதிவர் அய்யா திரு வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்கள், தனது வலைத்தளத்தில் ”நினைவில் நிற்கும் பதிவர்களும், பதிவுகளும்” என்ற தலைப்பினில் வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தும் தொடர் ஒன்றினை தொடங்கி எழுதி வருகிறார்.

  தங்களின் வலைத்தளத்தினை இன்று (19.06.2015) அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

  இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.

  அவரது வலைத்தளத்தின் இணைப்பு இதோ:
  நினைவில் நிற்போர் - 19ம் திருநாள்
  http://gopu1949.blogspot.in/2015/06/19.html

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

   Delete
 16. நல்ல பதிவு
  சிற்பங்களை பார்க்கவாவது கோவிலுக்கு செல்ல வேண்டும்.
  உங்கள் படங்கள் பல முக்கியமான தரவுகளை தரும் ஆய்வாளர்களுக்கு
  நன்றி
  தம +

  ReplyDelete
  Replies
  1. பல கோவில்களில் இப்படி சிற்பங்களைப் பார்ப்பதற்காகவே சென்றது/செல்வதுண்டு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

   Delete
 17. சிற்பங்கள் அனைத்தையும் பொறுமையாக படமெடுத்துப் பகிர்ந்துள்ளீர்கள். பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 18. சிற்பங்கள் எவ்வளவு நுணுக்கமான கலை அழகுடன் இருக்கின்றன...அதற்காகவே கோயிலுக்குச் செல்லலாம்.......புகைப்படங்களும் அருமையாக இருக்கின்றன! உங்கள் பயணக் குறிப்புகள் எல்லோருக்குமே உதவுவதாக இருக்கின்றன..வெங்கட் ஜி! புத்தகமாகக் கொண்டுவரலாம் இல்லையா...மின் நூலாகவேனும்..

  தங்களால் காணக் கிடைத்தமைக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 19. அர்த்தலக்ஷ்மிநாராயணரும் ஆறுமுகமும் .... ஹைய்யோ! இப்பதான் இப்படி பார்க்கிறேன்!!

  ReplyDelete
  Replies
  1. இம்மாதிரி ஆறுமுகம் பார்த்தது வேறெங்கும் இல்லை. அர்த்தலக்ஷ்மி நாராயணரும்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....