செவ்வாய், 23 ஜூன், 2015

ஹிமாச்சல் - பார்க்க வேண்டிய இடங்கள்தேவ் பூமி ஹிமாச்சல் பகுதி 22

தேவ் பூமி ஹிமாச்சல்  பகுதி 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21

காரில் தொங்கவிட ஏதுவாய் பிள்ளையார்....
பாதங்களைத் தொட்டுத் தொட்டு அழுக்காகி விட்டார் பாவம்! 

சென்ற பதிவில் சொன்னது போல பைஜ்னாத் சிவன் கோவில் பார்த்து விட்டு காங்க்டா திரும்பினோம். எங்களது வருகையை மனிஷுக்கு தெரிவிக்க, அவர் எங்களது தங்குமிடத்திற்கு வந்தார். மூன்று நாள் பயணத்தில் பைஜ்னாத் கோவில் வாசலில் சின்னதாய் ஒரு Purchase மட்டுமே செய்திருந்ததால், காங்க்டாவில் Shopping செய்ய ஒரு வாய்ப்பு வேண்டும் என்பது எங்களுடன் வந்திருந்தவர்களின் ஏகோபித்த குரல்!

பளிங்கினால் செய்த ஒரு கணபதி.....

காங்க்டா தேவி கோவிலுக்கும் இன்னுமொரு முறை செல்லும் வாய்ப்பும் கிடைத்தது. கோவிலுக்கு மீண்டும் ஒரு முறை சென்று நின்று நிதானித்து மாலை நேர ஆரத்தி பார்த்து விட்டு கடைத் தெருவிற்கு வந்தோம். குளிர் பிரதேசம் என்பதால் இங்கே குளிர் கால உடைகள் விற்கும் கடைகள் நிறையவே உண்டு. “ஜவஹர் கோட்என்று அழைக்கப்படும் கோட் எனக்கு ஒன்று வாங்கிக் கொண்டேன்மற்றவர்களும் சில குளிர் கால உடைகளை வாங்கிக் கொண்டார்கள்.

பனிபடர்ந்த மலைகள்.... மேலும் ஒரு முறை பார்க்க ஏதுவாய்!

வாங்கிய பொருட்கள் அனைத்தையும் தங்குமிடத்தில் வைத்து விட்டு இரவு உணவு உண்பதற்காக முந்தைய நாள் சாப்பிட்ட அதே இடத்திற்குச் சென்றோம். கூடவே மனிஷும் வந்திருந்தார். அறுசுவை உணவு சாப்பிடும் போதே மனிஷின் அலைபேசியில் தொடர்ந்து அழைப்புவீட்டிலிருந்து! வீட்டில் உறவினர்கள் இவரது வருகைக்காக காத்திருப்பதாகவும் அனைவரும் சேர்ந்து உண்ணவேண்டும் எனவும் சொல்லவே, இவர் தொடர்ந்து சில நிமிடங்களில் வந்து விடுவதாகச் சொல்லிக் கொண்டிருந்தார். அங்கேயும் இங்கேயும் ஓடி ஓடி எங்களுக்கு உணவு கொடுத்துக் கொண்டிருக்க, அவரை கட்டாயப்படுத்தி காலையில் சந்திக்கலாம் என அனுப்பி வைத்தோம்.

நோட்டு நல்ல நோட்டா, கள்ள நோட்டா?
வழியில் தேநீர் அருந்திய போது சோதித்துப் பார்க்கும் உணவகத்தின் முதலாளி!

இரவு உணவு திருப்தியாக உண்டு முடித்து தங்குமிடம் வரை காலாற நடந்து வருவது ஒரு அலாதியான அனுபவம்அன்றைய பொழுதில் பார்த்த விஷயங்களைப் பேசியபடியே திரும்பி வந்து சேர்ந்தோம். அடுத்த நாள் காலை ஆறுமணிக்கு தில்லி நோக்கி திரும்ப வேண்டும் என்பதால், உடைமைகளை சரி பார்த்து Packing செய்ய வேண்டும். அனைவரும் விரைவாகப் புறப்பட்டால் தான் இரவுக்குள் தில்லி திரும்ப முடியும்.

”மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்ன?” ஒளிந்து விளையாடிய சூரியன்!

இந்தப் பயணத்தில் நாங்கள் பார்த்த அனைத்து விஷயங்களையும் இத்தொடரில் உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். ஹிமாச்சல் பிரதேசத்தில் பார்க்க வேண்டியவை நிறையவே உண்டு. தேவ் பூமி என்று சொல்லப்படும் இம்மாநிலத்தில் கோவில்கள், இயற்கை எழில் கொஞ்சும் மலைகள், குளிர் பிரதேசங்கள் என நிறையவே உண்டுநாங்கள் பார்த்த இடங்களுக்கு அருகிலேயே இருக்கும் இன்னும் சில இடங்களைப் பற்றிய சில குறிப்புகளை இப்பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்

இலைகள் அனைதும் உதிர்ந்த நிலையில் ஒரு மரத்தின் கிளைகள்..... 

பாலம்பூர் அருகிலேயே “[Dh]தரம்ஷாலாஎனும் இடம் இருக்கிறது. ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இந்த “[Dh]தரம்ஷாலாவில் இருக்கும் விளையாட்டு அரங்கில்  நடக்கும்போது கிரிக்கெட் ப்ரேமிகள் பார்த்திருக்கக் கூடும். மிகவும் அருமையான குளிர் வாசஸ்தலம். திபெத்திய புத்த மத குருவான [Dh]தலாய் லாமா இருக்கும் இடம் இது தான். புத்தர்களின் வழிபாட்டுத் தலங்களும் இங்கே அதிக அளவில் உண்டு. அனைத்துமே அருமையான வடிவில் அமைக்கப்பட்டு இருக்கும்

குளிருக்கு இதமாய் தேநீர்!
சாலையோர உணவகம் ஒன்றில் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்தபடி!

இயற்கைக் காட்சிகளுக்கும் இங்கே குறைவில்லை. கண்கவர் காட்சிகள் நிறைந்த இவ்விடத்தில் இரண்டு மூன்று நாட்கள் தங்கி ஓய்வெடுக்கும் படிச் செல்வது நல்லது. வெறும் சுற்றுலாவாக அல்லாது இப்படி ஓய்வாக இருப்பதில் நிச்சயம் உங்களுக்கு புத்துணர்வு கிடைக்கும். பயணங்களில் நிறைய இடங்களைப் பார்த்து ரசிப்பது ஒரு வகை ஆனந்தம் எனில், எந்த வித வேலையும் செய்யாது, இயற்கைக் காட்சிகளை பார்த்தபடி அந்த எழிலில் மூழ்கிப் போவது மற்றொரு வகை!

உணவகத்தின் அருகே இருந்த ஒரு பறவை!

கடல் மட்டத்திலிருந்து 1380 மீட்டர் உயரத்தில் இருக்கும் தரம்ஷாலா நகரிலிருந்து இன்னும் மேலே 1830 மீட்டர் அளவில் சென்றால் Upper Dharmshala என அழைக்கப்படும் பகுதியில் Mcleodganj, Forsytheganj எனும் இடங்கள் உண்டு. ஆங்கிலேயர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட இடங்கள் என்பதால் கலோனியல் வகைக் கட்டிடங்கள் இங்கே நிறையவே உண்டு.

பயணித்தபடியே எடுத்த ஒரு புகைப்படம்!

Trekking செய்ய விருப்பமுள்ளவர்களுக்கும் இங்கே சில இடங்கள் உண்டு.  Triund எனும் இடத்தில் வருடம் முழுவதும் [பனி அதிகம் விழும் ஜனவரி, ஃபிப்ரவரி மாதங்கள் தவிர] Trekking செய்ய முடியும்அனைத்து வயதினரும் இங்கே Trekking செய்வதை பார்க்க முடியும். முதல் ஐந்து கிலோ மீட்டர் வரை சற்றே சுலபமாகத் தெரிந்தாலும், கடைசி ஒரு கிலோ மீட்டர் தொலைவு கொஞ்சம் கடினமானது தான். நண்பர்களோடு பல வருடங்களுக்கு முன்பு இங்கே முதன் முதலாய் சென்றதுண்டு. கடைசி ஒரு கிலோ மீட்டரில் பல கொண்டை ஊசி வளைவுகள் உண்டு. அங்கே நடப்பது ஒரு சவாலான விஷயம் தான்!

பயணித்தபடியே எடுத்த மற்றுமோர் புகைப்படம். இது என்ன வழிபாட்டுத் தலம்?

இப்படி நிறைய இடங்கள், பார்க்க வேண்டிய இடங்கள் ஹிமாச்சல் மாநிலம் முழுவதுமே உண்டு. பொதுவாக ஷிம்லா, குலு, மணாலி போன்ற இடங்கள் தான் நிறைய பேருக்குத் தெரியும் என்றாலும், மணிகரன், டல்ஹவுசி, குஃப்ரி, [Ch]சைல், சோலன், பாலம்பூர், கசௌலி போன்ற நிறைய இடங்களும் இம்மாநிலத்தில் உண்டு. ஒவ்வொரு இடமும் சென்று பார்க்க வேண்டிய இடங்கள் தான். எத்தனை தான் பயணித்தாலும் அலுக்காத ஒரே விஷயம் பயணம் தானே!


இப்படி பயணிப்பதிலும் ஒரு சுகம் இருக்குமோ?

இந்தியா முழுவதுமே இப்படி நிறைய இடங்கள் இருக்க, அனைத்து இடங்களுக்கும் இவ்வாழ் நாளில் பயணித்து விட முடியுமா? முடிந்தால் பயணிக்க ஆசை தான் எனக்கு! உங்களுக்கு

ஹிமாச்சலப் பிரதேசம் பற்றிய இத்தொடர் அடுத்த பகுதியோடு நிறைவடையும்.   

தொடர்ந்து பயணிப்போம்….

நட்புடன்

வெங்கட்.
திருவரங்கத்திலிருந்து


42 கருத்துகள்:

 1. இந்தியா முழுவதுமே இப்படி நிறைய இடங்கள் இருக்க, அனைத்து இடங்களுக்கும் இவ்வாழ் நாளில் பயணித்து விட முடியுமா? முடிந்தால் பயணிக்க ஆசை தான் எனக்கு! உங்களுக்கு? //

  இனிமையான பயணம்....உங்களோடே வந்து அனைத்தையும் பார்ப்பதாய் திட்டம்....ம்...நன்றி சகோ
  தம 2

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி ஜி!

   நீக்கு
 2. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   நீக்கு
 3. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வடுவூர் குமார் அவர்களே...

   நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்கள் வருகை. மகிழ்ச்சி.

   நீக்கு
 4. பணயம்அருமை, புகைப்படங்கள் அழகு, நாங்களும் தொடர்கிறோம். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன் ஜி!

   நீக்கு
 5. // இந்தியா முழுவதுமே இப்படி நிறைய இடங்கள் இருக்க, அனைத்து இடங்களுக்கும் இவ்வாழ் நாளில் பயணித்து விட முடியுமா? முடிந்தால் பயணிக்க ஆசை தான் எனக்கு! உங்களுக்கு? //

  எனக்கும் ஆசைதான். ஆனால் முடியுமா என்பதுதான் கேள்வியே! உங்கள் தயவால் ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள பல வழிபாட்டுத் தலங்களை பதிவின் மூலம் காண முடிந்தது. நன்றிகள் பல!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   நீக்கு
 6. அனைத்துப்படங்களும், பயணத்தகவல்களும் தங்கள் பாணியில் வழக்கம்போல் மிக அருமை. பாராட்டுகள் + வாழ்த்துகள், வெங்கட்ஜி. பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   நீக்கு
 7. 50 ரூபாய் நோட்டையே அவ்வளவு சோதிக்கிறாரா?

  :)))

  பறவைப்படம், விநாயகர் படம் உட்பட எல்லாப் படங்களும் அருமை.

  பயணங்கள் சுகமானவை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 8. பயண இலக்கியத்தில் உங்களது பதிவுகள் முத்திரைப் பதிவுகள் ..
  வாழ்த்துகள் தொடர்க

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

   தொடர்ந்து நீங்கள் தரும் ஊக்கத்திற்கும் தான்!

   நீக்கு
 9. முதலில் செய்ய வேண்டியதை முதலில் செய்ய வேண்டும்!
  தம +

  பதிலளிநீக்கு
 10. அனைத்து படங்களும் மனத்தைக் கவர்ந்தன...

  மறைந்திருந்தே பார்க்கும் சூரியன் ஆகா...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 11. உங்கள் எழுத்து எங்களை அவ்விடத்திற்கே கொண்டு சென்றுவிட்டது. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 12. அழகான படங்கள்..
  //இந்தியா முழுவதுமே இப்படி நிறைய இடங்கள் இருக்க, அனைத்து இடங்களுக்கும் இவ்வாழ் நாளில் பயணித்து விட முடியுமா? முடிந்தால் பயணிக்க ஆசை தான் எனக்கு! உங்களுக்கு? //
  எனக்கும் கொள்ளை ஆசைதான்..உங்கள் பதிவுகளிலாவது பார்க்கமுடிகிறதே :)
  நன்றி சகோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.

   நீக்கு
 13. உங்களுடனே பயணித்த உணர்வு..விரைவில் உங்களது அடுத்த பயணம் அமைய வாழ்த்துக்கள்..! [அப்பதானே நாங்களும் சுவாரசியமாப் படிச்சுப் படமும் பார்க்கலாம்!! ;)..ஹிஹி!!]

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏற்கனவே இரண்டு பயணங்கள் போயாகி விட்டது - குஜராத், மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் - இரண்டு பற்றியும் எழுத வேண்டும்! :) பார்க்கலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மஹி.

   நீக்கு
 14. வணக்கம்
  ஐயா
  தங்களின் பயண அனுபவத்தை மிகத் தெளிவாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 7
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   நீக்கு
 15. பார்க்க வேண்டிய இடங்களை அழகான படங்களுடன் பதிவிட்டிருப்பது அருமை.எந்த ஊருக்கு சென்றாலும் உங்கள் வலைப்பக்கம் கொஞ்சம் உலவி விட்டு சென்றால் அந்த ஊரை ரசித்து பார்க்கமுடியும் நன்றி .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   நீக்கு
 16. பளிங்கு கல் பிளைளையார் அருமை
  தமிழ் மணம் நவராத்திரி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
 17. இந்தத் தொடரை நிதானமாப் படித்துப்பார்த்து உள்வாங்கிக் கொள்ளணும். அந்தப்பக்கமெல்லாம் இனி போவேனான்னு தெரியலை. முடிஞ்சால் பத்ரிநாத் பயணம் ஒன்னு மட்டும் போயிடணுமுன்னு ஒரு எண்ணம் மட்டும் விடாமல் துரத்துது.

  அருமையான பயணங்களை உங்கள் மூலம் ரசிக்கின்றேன். இந்தப் பிறவியில் என்ன கிடைக்குதோ அதுதான். பயணங்கள் முடிவதே இல்லை என்பதுதான் உண்மை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பத்ரிநாத் பயணம் சற்றே சுலபம் தான். அங்கே வரை வண்டியில் செல்ல சாலைகள் உண்டு. அதற்கு மேலே கேதார் என்றால் தான் கொஞ்சம் கடினம். அங்கே செல்ல அவன் அருளட்டும்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   நீக்கு
 18. பயணக் கட்டுரை அருமை. டெல்லிவாசி ஆனப்பறம்தான் ஹிந்தி கத்துக்கிட்டீங்களா? எல்லா இடத்தையும் சுத்திப்பார்க்கணும் என்ற எண்ணம் தோன்றியது அருமை. உங்க பயணக் கட்டுரைகள் (குறிப்பா வடக்கு) பொறாமையக் கிளப்புவது ('நமக்கு இந்த மாதிரி ஒரு வாய்ப்போ எண்ணமோ அமையவில்லையே என்று) உண்மை. ஒவ்வொருமுறை செல்லும்போதும் நமக்குக் கற்றுக்கொள்ள, மற்றவர்கள் வாழ்க்கையிலிருந்து படித்துக்கொள்ள நிறைய இருப்பது தெரியும். கட்டுரை முடிவுப் பகுதியிலும் ஒரு உணவின் படத்தைப் போட்டிருக்கலாமே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடுத்த பதிவுடன் முடிக்கப் போகிறேன். அதில் உங்கள் நேயர் விருப்பம் நிறைவேற்றப்படும்!

   தில்லி சென்ற பிறகு தான் ஹிந்தி கற்றுக் கொண்டேன்.

   உங்களுக்கும் இப்படி பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்கட்டும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 19. எங்களுக்கும் சுற்றிக்காட்டி விட்டீர்கள் வெங்கட்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   நீக்கு
 20. எனக்கும் இப்படி இயற்கை எழில் கொஞ்சும் பிரதேசங்களை கண்டு மகிழ்வதில் விருப்பம்தான்! ஆனால் சூழ்நிலை ஒத்துழைக்கவில்லை! தங்கள் பதிவு மற்றும் புகைப்படங்கள் வாயிலாக இத்தகைய இடங்களை காண்பதில் மகிழ்ச்சி! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   நீக்கு
 21. படங்கள் அனைத்தும் சிறப்பாக உள்ளன!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....