எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, June 12, 2015

ஃப்ரூட் சாலட் – 136 – ரயில் பெட்டிகளில் சோலார் – காதணி – புகைப்படம் இப்படியும் எடுக்கலாம்!இந்த வார செய்தி:

ரயில் பெட்டிகளின் மேல் புறத்தில் Solar Panel அமைத்து மின்சாரம் தயாரிக்கும் Pilot Project பற்றிய தகவல் சமீபத்தில் படித்தேன். ரயில் பெட்டிகளின் மேல்புற பரப்பளவான 40 சதுர மீட்டரில் சுமார் 18 Solar Panel அமைக்க முடியும். சோதனை முன்னோட்டமாக ஒரு பெட்டியில் 12 Panel-கள் அமைத்து நாளொன்றுக்கு 17 Unit மின்சாரம் வரை சேகரித்திருக்கிறார்கள்.

நமது நாட்டில் ரயில்கள் கணக்கிலடங்காத அளவில் இருக்கிறது. டீசலில் இயங்கும் இந்த ரயில்களின் மேல்புறத்தில் Solar Panel-கள் அமைத்து அந்த ரயிலில் இருக்கும் அனைத்து பெட்டிகளின் மின்சாரத் தேவையை சமாளிக்க முடியும் என்று சொல்கிறார்கள். சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கும் இந்த திட்டம் உதவும் என்றும் சொல்கிறார்கள்.

நல்ல திட்டமாகத் தான் தெரிகிறது. முதலில் கொஞ்சம் அதிகம் செலவானாலும் பயனுள்ள திட்டமாக இருக்கும் என்றே தோன்றுகிறது.  Pilot Project முடிவுகளை இன்னும் கொஞ்சம் அதிக அளவில் சோதனை செய்த பின் நல்ல முடிவு எடுப்பார்கள் என்று நம்புவோம்!

இந்த வார முகப்புத்தக இற்றை:

தவறு செய்யாத மனிதனும் இல்லை. தவறு செய்யாதவன் மனிதனும் இல்லை. ஆனால் தவறு என்று தெரிந்தும் அதை மீண்டும் செய்பவன் மனிதனே இல்லை!

இந்த வார குறுஞ்செய்தி:

உங்களின் கோபத்திற்காக வேறு யாராலும் தண்டிக்கப்பட மாட்டீர்கள். உங்கள் கோபமே உங்களை தண்டித்துவிடும்.

இந்த வார காணொளி:

நீ எல்லாம் என்னய்யா Photographer? இங்கே பாருய்யா... எப்படியெல்லாம் ஃபோட்டோ புடிக்கிறாரு! என்று புகைப்படம் எடுக்கும் அனைவரையும் கேட்கலாம்!


படித்ததில் பிடித்தது:

உயிரின் எல்லா மொழியும் அறிந்தவனை
அன்று தான் சந்தித்தேன்
பூச்சிகளோடு பேசத்தொடங்கி
நாய்களை நண்பனைப்போல் பாவித்து
செல்லப்பூனைக்கு சினேகப்பெயர் வைத்து
கிளிகளோடு கொஞ்சி விளையாடி
என்னிடம் வந்தவன்
புன்னகைக்கு சில்லறையற்றவனைப்போல்
முகம் கடுத்தான்
மிருககாட்சி சாலையொன்றை
செலவின்றி பார்த்ததற்காய்
சந்தோஷப்பட்டுக்கொண்டது
மனம்...

     www.penmai.com தளத்தில் படித்த கவிதை.

இந்த வார உழைப்பாளி:


கொஞ்சம் பழைய செய்தி என்றாலும் இன்று தான் என் கண்ணில் பட்டது. ஒடிசா மாநிலத்தில் இருக்கும் [B]பாரிபாடா மாவட்டத்தில் பன்னிரெண்டாம் வகுப்பில் படிக்கும் இப்பெண், தனது படிப்புச் செலவுகளை சமாளிக்க ஆட்டோ ஓட்டுகிறாராம்.  தன் படிப்புக்காக உழைக்கும் இந்தப் பெண்ணிற்கு  ஒரு பூங்கொத்து.

Daughter Roshni’s Corner:

ரோஷ்ணி சமீபத்தில் செய்த பேப்பர் காதணிகள்!!
மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

36 comments:

 1. எல்லா செய்திகளையும் ரசித்தேன். காணொளி, ஓடிஸா உழைப்பாளிப் பெண் உட்பட.

  ரோஷ்ணிக்குப் பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. வணக்கம்
  ஐயா
  சொல்லிய செய்திகள் யாவற்றையும் படித்து மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம2
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 3. சால்ட்டை ருசித்தேன்
  கவிதையும் புகைவண்டியில்
  சோலார் குறித்த தகவலும்
  ரோசினியின் காதணியும் அருமை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. சற்றே இடைவெளிக்குப் பிறகு எனது தளத்தில் உங்கள் வருகை. மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 4. Replies
  1. தமிழ் மணம் மூன்றாம் வாக்கிற்கு நன்றி ரமணி ஜி!

   Delete
 5. பேப்பர் காதணி சூப்பர். குட்டிப் பெண்ணுக்கு வாழ்த்துகள்.
  கவிதை அருமை . நான் நெடு நாளாக நினைப்பதுண்டு ரயில் பஸ்களில் ஏன் சோலார் பயன்படுத்த முயற்சிப்பதில்லை. இப்போதாவது தோன்றி யுள்ளதே.வரவேற்போம்.

  ReplyDelete
  Replies
  1. ரயில்களில் சோலார் - இது ஒரு நல்ல முயற்சியாக இருக்கும் என நம்புவோம்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 6. வழக்கம்போல் அனைத்துச் செய்திகளையும் ரசித்தேன். மாணவியின் தன்னம்பிக்கையும் உழைப்பும் மனதில் பதிந்தது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 7. உழைப்பாளி மிகவும் சிறப்பு...

  கவனிக்க : காணொளி : Video unavailable... Sorry, this video could not be played... என்று வருகிறது...

  ReplyDelete
  Replies
  1. காணொளி பற்றிய தகவலுக்கு நன்றி. சரி செய்து விட்டேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 8. அனைத்தும் அருமை, வாழ்த்துக்கள். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன் ஜி!

   Delete
 9. சில நாட்களுக்கு முன் ரயில் பெட்டிகளில் விண்ட் மில் பொருத்தி மின்சாரம் தயாரிக்க முடியாதா என்று பேசிக் கொண்டிருந்தோம் எதையும் செய்யும்முன் எல்லாசாதக பாதகங்களையும் யோசிக்க வேண்டும் மகள் ரோஷணிக்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   Delete
 10. சோலார் புரொஜெக்ட் நல்ல திட்டம்! கவிதை அருமை! மகள் செய்த காதணிகள் மிக அழகு! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 11. தவறு செய்யாத மனிதனும் இல்லை. தவறு செய்யாதவன் மனிதனும் இல்லை. ஆனால் தவறு என்று தெரிந்தும் அதை மீண்டும் செய்பவன் மனிதனே இல்லை!

  முற்றிலும் உண்மை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 12. ரயிலில் சோலார் பேணல் திட்டமும், படித்துக் கொண்டே ஆட்டோ ஓட்டும் அந்த பெண்ணும் கவர்ந்தன.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.

   Delete
 13. ஆட்டோ ஓட்டும் பெண் குழந்தைக்கு எங்கள் பூச்செண்டும் வாழ்த்துகளும்! ரோஷிணி செய்த க்வில்லிங்க் காதணிகள் அழகு! ரோஷினிக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்! இவை இரண்டும் டாப்!

  ரயில்வே திட்டம் மிக நல்ல வரவேற்கப்படவேண்டிய திட்டம்...

  இற்றையும், குறுஞ்செய்தியும் அருமை!

  படித்ததில் பிடித்தது கவிதையை ரசித்தோம்...

  அந்தக் காணொளி செம...ஹஹ்ஹ

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 14. சூரிய சக்தி பற்ரிய செய்தி நல்லதே.
  ரோஷ்ணியின் கைவண்ணம் அருமை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   Delete
 15. Replies
  1. தமிழ் மணம் பத்தாம் வாக்கிற்கு மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   Delete
 16. நல்ல தொகுப்பு. ரோஷ்ணியின் கைவண்ணம் அருமை.

  காணொளி சுவாரஸ்யம்:).

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 17. அன்புடையீர்! வணக்கம்!
  அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (19/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
  இணைப்பு: http://gopu1949.blogspot.in/

  நன்றி!
  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com
  FRANCE

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி புதுவை வேலு அவர்களே.

   Delete
 18. ஃப்ரூட் சாலட் – 136 ருசியோ ருசியாக உள்ளது. :) பகிர்வுக்கு நன்றிகள், ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....