இரண்டாம்
தலைநகரம் – பயணத் தொடர் – பகுதி 18
இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரண்டாம்
தலைநகரம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down
Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!
நடக்கலாம் வாங்க.....
படம்: நண்பர் பிரமோத்..
நண்பர்கள்
ஓய்வு எடுக்கப் போவதாகச் சொல்லி விட, நான் மட்டும் மாலை நேரத்தில் கொஞ்சம் நடந்து வரலாம்
என நினைத்தேன். அறையிலிருந்து வெளியே வர, தங்குமிடச் சிப்பந்தி, இரவு உணவுக்கு என்ன
தேவை என்பதைக் கேட்டார். ஐந்து பேருக்கும் தேவையானது Simple Tawa roti, dhal,
Sabji மட்டும் என்பதைச் சொல்ல, சரி 08.00 மணிக்குள் தயார் செய்து விடுகிறேன் என்று
சொல்லி, இன்னுமொரு சிப்பந்தியை அழைத்து, Fresh-ஆக காய்கறிகள் வாங்கி வரச் சொன்னார்.
இந்த மாதிரி இடங்களில் தேவைக்கேற்ப, அவ்வப்போது காய்கறி வாங்கிக்கொள்ளலாம். வந்திருக்கும்
விருந்தினர்களிடம் கேட்டு பிறகு சமையல் செய்து தருவார்கள் என்பதால் சுடச்சுடவும், புதியதாகவும்
சாப்பிடக் கிடைக்கும். நகரங்களில் பெரும்பாலான இடங்களில் Deep Freezer-ல் சமைத்து வைத்திருந்தவற்றை
சூடு செய்து கொடுத்து விடுவார்கள்!
சவாரி போக நான் ரெடி... நீங்க ரெடியா?
படம்: இணையத்திலிருந்து....
நான்
நடக்க ஆரம்பிக்க, காய்கறி வாங்குவதற்காக, தங்குமிட சிப்பந்தியும் புறப்பட்டார். அவருடன்
பேச்சுக் கொடுத்தபடியே நடந்தேன். பனிக்காலங்களில் இப்பகுதி எப்படி இருக்கும், அவருக்கு
எந்த ஊர், எவ்வளவு படித்திருக்கிறார், வீட்டில் எத்தனை பேர் என்றெல்லாம் விசாரணைகள்!
பொதுவாக அவர் போன்ற உழைப்பாளிகளிடம் சுற்றுலாப் பயணிகள் பேசுவதில்லை – நான் பேசவும்
அவரும் மகிழ்ச்சியாக பதில் சொன்னதோடு, நிறைய விஷயங்களையும் சொல்லிக் கொண்டு வந்தார்.
பக்கத்தில் இருக்கும் கிராமங்களிலிருந்து குதிரைக்காரர்கள் வருவதையும், பனி உறைந்து
கிடைக்கும் நாட்களில் யாருமே வராமல் அவர்கள் வேறு பிழைப்பை நாடுவது பற்றியும் பல விஷயங்கள்
பேசிக் கொண்டு வர எனக்கும் பேச்சுத் துணையோடு மலைப்பகுதியில் நடக்க வசதியாக இருந்தது.
சிறிது நேரத்தில் கடைகளிருக்கும் இடம் வர, அவர் பொருட்களை வாங்கச் சென்றார்.
என் இடத்தில் காரையும் நிறுத்தி இருக்காங்களே.....
படம்: இணையத்திலிருந்து....
நான்
மலைப்பாதையில் தொடர்ந்து நடக்கத் தொடங்கினேன். குறுகிய மலைப்பாதையில் நடப்பது கொஞ்சம்
சிரமமாகவே இருந்தது – அதுவும் ஏறுமுகமாக இருந்த பாதையில் நடப்பது சிரமமான விஷயம் தானே. இரண்டு புறங்களிலிலும் மரங்கள், அந்த மரங்களில்
வசிக்கும் பறவைகள் அப்போது தான் வீடு திரும்பியிருந்தன போலும்! தங்களுக்குள் தங்களது
மொழியில் அன்றைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருந்த சப்தங்கள் – கீ கூ, கா என உற்சாகக்
கூவல்கள்! நான் நடந்த பாதையிலேயே குதிரைகளின் குளம்பொலிகள், அவ்வப்போது கேட்கும் கனைப்புகள்
– “அப்பாடா, இன்னிக்கு என் மேலே எத்தனை பேர் உட்கார்ந்துட்டாங்க, அலுப்பா இருக்கு,
நாளைக்கு காலை வரை ஓய்வு எடுக்கலாம்!” என்ற உற்சாகக் கனைப்பாகத் தோன்றியது.
என்னை எப்படி அழைப்பார்கள்?
படம்: இணையத்திலிருந்து....
குதிரைகள்
ஒவ்வொன்றும் அழகு! அனைத்திற்கும் வித்தியாசமான பெயர்கள் – முன்னி, சமேலி, ராஜா, ரோசி, ராக்கி! குதிரைகளின் பெயர்கள் எப்படித் தெரியும் எனக் கேட்பதற்கு முன்னர் சொல்லி விடுகிறேன் – மனிதர்களுக்கு பச்சை
குத்துவது போல, எழுத்துகளை குதிரைகளின் உடம்பில் பதிந்து இருக்கிறார்கள் – சூடு வைத்தது
போல பெயர்த் தழும்புகள்! விதம் விதமாக அழகு படுத்தி குதிரைச் சவாரிக்கு பயன்படுத்துகிறார்கள்.
சுற்றுலாப் பயணிகள் குதிரை மீது அமர்ந்து கொள்ள, அதன் உரிமையாளர் குதிரையை சற்று தூரம்
நடத்தி அழைத்து வருவார்! அதற்கு கட்டணம் வசூலிப்பார்கள். ஒரு குதிரைக்காரர் என்னுடனேயே
நடந்து கொண்டிருந்தார். பேச்சுக் கொடுத்தேன் – பக்கத்து கிராமத்திலிருந்து வருகிறாராம்
– குதிரையை வைத்து பிழைப்பு நடக்கிறது அவருக்கு! இரண்டு பெண்கள் – இருவருக்கும் திருமணம்
நடத்தி விட்டாராம் – அவர்களுக்கும் இவர் மாதிரியே குதிரைச் சவாரி தான் பிழைப்பு! ஏதோ
வருமானம் கிடைக்கிறது. வாழ்க்கை ஓடுகிறது – என் குதிரை போலவே என்று சொல்லிச் சென்றார்.
காலாடாப் - வனத்துக்குள் தங்குமிடம்.....
படம்: இணையத்திலிருந்து....
நான்
நடந்து சென்ற மலைப்பாதையில் அறிவிப்பு பலகைகள் – அடுத்த இடம் என்ன என்பதைப் பார்த்தால்
காலா டாப் – வனவிலங்கு சரணாலயம். கிட்டத்தட்ட 12 கிலோமீட்டர் தொலைவு – ஏற்கனவே நான்கு
கிலோமீட்டர் நடந்திருக்கிறேன் – மலைப்பாதையில்! நடந்து போக முடியாது, நாளை முடிந்தால்
அங்கே செல்லலாம் – நடந்து அங்கே செல்வது சரியல்ல! அதுவும் இது போன்ற மலைப்பகுதிகளில்
வெகு சீக்கிரம் இருட்டி விடுகிறது! தங்குமிடம் நோக்கி திரும்பி நடக்கும்போது சற்று
தொலைவு வரை, பாதையில் என்னைத் தவிர வேறு யாருமே இல்லை! நானும், இயற்கை எழிலும், மரங்களில்,
உறக்கத்தைத் தேடிக்கொண்டிருக்கும் பறவையினங்களும் மட்டுமே! தனிமை – அந்தத் தனிமையும்
இனிமையாகவே இருந்தது! கஜ்ஜியார் புல்வெளி வருகே வரும்போது கொஞ்சம் ஆட்கள் நடமாட்டம்
இருந்தது.
நடக்கலாம் வாங்க.....
படம்: இணையத்திலிருந்து....
இனிமையான
நடைப்பயணத்தில் விஷயங்களைப் பார்த்தும், பேசியும், கேட்டும் வர நல்லதொரு அனுபவமாக இருந்தது.
இருட்டி விட்டதால் நடக்கும் போது கேமரா கொண்டு வரவில்லை! நடைப்பயணத்தில் காட்சிகளை
மனதில் மட்டும் படம் பிடித்து வைத்துக் கொள்ள முடிந்தது. நல்லதொரு அனுபவம் அந்த நடைப்பயணம்.
பாதிக்கு மேல், பாதையில் தனிமை, தனிமை அப்படி ஒரு தனிமை! ஊரே உறங்கி விட்டது போலும்!
அப்படியே நடந்து அறைக்கு வர, என்னுடன் நடந்த சிப்பந்தி, “திரும்பி வந்துவிட்டீர்களா?,
இன்னும் வரக்காணோமே என்று யோசித்துக் கொண்டிருந்தேன்!” என்று சொல்ல, “நன்றி” சொல்லி
நகர்ந்தேன். 08.00 மணிக்கு உணவு தயாராகி விடும், கீழே வந்து விடுங்கள் என்று குரல்
கொடுத்தார் – நாங்கள் தங்கி இருந்தது முதலாம் மாடியில்! மாடியிலிருந்து சில நிமிடங்கள்
வரை ஜன்னல் வழி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். ஆஹா என்ன ஒரு அமைதி!
காலா
டாப் அடுத்த நாள் செல்ல முடியுமா? என்ற எண்ணம் மனதுக்குள்! ஏனெனில் எங்கள் திட்டம்
வேறாக இருந்தது! நாங்கள் எங்கள் திட்டப்படியே சென்றோமா, இல்லை காலா டாப் சென்றோமா என்பதை
அடுத்த பகுதியில் சொல்லட்டா!
தொடர்ந்து
பயணிப்போம்…
நட்புடன்
வெங்கட்
புது
தில்லி.
தொடர்ந்து பயணிப்போம்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.
நீக்குஇந்த மாதிரியான தொழிலாளிகளிடம் பேசினால் அவர்களுக்கு சந்தோஷமாக இருக்கும்
பதிலளிநீக்குநானும் இப்படித்தான் சாக்கடையை தோண்டிக்கொண்டு இருப்பவர்களிடம் பேசுவேன் இது மற்றவர்கள் கண்ணுக்கு நான் ஒருமாதிரியாக தோன்றும்.
அவர்களுக்கும் நமக்கும் மகிழ்ச்சி. இதில் மற்றவர்கள் கண்ணுக்கு எப்படித் தெரிந்தால் என்ன.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
தொடர்கிறேன். மலைப்பாதையில் இரவு சென்றது அவ்வளவு உசிதமாகத் தெரியவில்லை. Unknown territory will always bring unknown problems.
பதிலளிநீக்குநன்றி நெல்லை. சென்று வந்த பிறகு எனக்கும் இப்படித் தோன்றியது.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
இந்த மாதிரி குதிரைகளில் ஏற்றி பிழைப்பு தேடுபவர்கள் ஸ்ரீரங்கப் பட்டணத்தில் பார்த்திருக்கிறேன் சென்னை மரினாவிலும் முன்பையில் சில பகுதிகளிலும் உண்டு
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா...
நீக்குநல்ல சுற்றுலா, குதிரைகளைப் பார்த்தால் பசுக்களைப்போல இருக்கே.. ஸ்மார்ட்டா இல்லை.. ஒருவேளை குளிர் அதிகம் என்பதாலோ...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா....
நீக்குதனிமையை(யான) நடை - ஒரு சுவாரஸ்யம்தான்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குதொடருங்கள்
பதிலளிநீக்குஉடன் பயணிக்கிறோம் ஐயா
தம=1
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குவெங்கட் ஜி நேற்றே வாசித்துவிட்டேன்....தளத்தில் கருத்து போட முடியாமல் என் கணினியில் மெமரி பிரச்சனை...உங்கள் தளம் ஓபன் ஆகாமல் சுற்றிக் கொண்டே இருந்தது....இன்று ஓபன் ஆனதும் கருத்து..
பதிலளிநீக்குகுதிரைகள் அழகாக இருக்கின்றன ஜி....நானும் இப்படி மலைப்பகுதியில் செல்லும் போது நடப்பதுண்டு....ஆனால் பகல் வேளையில்.!!!! சில சமயம் பயணிப்பவர்கள் கூட வருவார்கள்....மகன் என்றால் நானும் அவனும் நடப்போம்...
படங்கள் அனைத்தும் அழகு ஜி
தொடர்கிறோம்
கீதா
கணினி பிரச்சனை - விரைவில் சரியாகட்டும்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!
படங்களும் பகிர்வும் அருமை...
பதிலளிநீக்குதொடரைத் தொடர்கிறோம் அண்ணா....
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.
நீக்கு