வெள்ளி, 22 டிசம்பர், 2017

கதம்பம் – மண் வாணலி சமையல் – மெஹந்தி – பீட்ரூட் பூரி - மார்கழி



ப்ரேக் ஃபாஸ்ட் – சாப்பிட வாங்க!


மகளுக்கு செய்து கொடுத்த பீட்ரூட் பூரி! நீங்களும் சாப்பிடலாம்!


போட்டிக்கு படங்களா?

சென்ற கதம்பத்தில்/முகப்புத்தகத்தில் நான் எடுத்த சில படங்களை வெளியிட்டபோது என்னவருக்கு போட்டியாக படம் எடுப்பதாக சில கருத்துரைகள் கண்டதில் மகிழ்ச்சி! போட்டியா என்பதை அவர் தான் சொல்ல வேண்டும்! இந்த கதம்பத்திலும் நான் எடுத்த சில புகைப்படங்கள்….

வயல் - நடவு நட்டிருக்கிறார்கள் - மொட்டை மாடியிலிருந்து!!


சுவரில் இருந்த நத்தையின் வீடு!!

மண் வாணலி/பாத்திரத்தில் சமையல்



மண்வாணலியைப் பழக்கியாச்சு! ஸாதிகா அக்கா தந்த லிங்க்கில் உள்ளபடி தண்ணீரில் ஒருநாள் முழுதும் போட்டு வைத்து, வெயிலில் காயவைத்து, எண்ணெய் தடவி அரிசி களைந்த தண்ணீர் விட்டு வைத்து ரெடியாகி விட்டது.

முதல் சோதனையாக கூட்டுக்கு வறுத்து, கூட்டும் வைத்தாயிற்று. இன்று ரசம், செளசெளவும் கேரட்டும் போட்டு கூட்டு, சேப்பங்கிழங்கு ரோஸ்டும் செய்தேன். ரோஸ்ட் படம் எடுக்க முடியவில்லை..

மோர்க்குழம்பு!!



மண்பாண்டத்தில் செய்த மோர்க்குழம்பு. வாங்க சாப்பிடலாம்.

மார்கழி கோலங்கள்:

மார்கழி மாதம் வந்தாச்சு! முன்பு போல பெரிய கோலங்கள் போட முடிவதில்லை – ஃப்ளாட்/வீட்டு வாசலில் சின்னதாய் போட வேண்டியிருக்கிறது. அப்படி போட்ட சில கோலங்கள்….






வெங்கி’ஸ் கார்னர்:

நேற்று வீட்டிலிருந்து வெளியே புறப்பட்டபோது கீழே இருந்து ஒரு கார் – சிகப்பு வண்ணத்தில் வேகமாக, க்றீச் சப்தத்துடன் புறப்பட்டது. யாருக்கு என்ன அவசரமோ, இவ்வளவு வேகமா போறாங்க என்ற எண்ணத்துடன் நடந்து கொண்டிருந்தேன். வீட்டிலிருந்து சுமார் 200 அடி தூரத்தில் அதே வாகனம் நின்று கொண்டிருந்தது! அதுவும் பெரிய குப்பைக் கூடை பக்கத்தில்! வாகனத்தில் கொண்டு வந்த தனது வீட்டுக் குப்பையை பெரிய குப்பைக்கூடையில் போட்டு மீண்டும் வீடு திரும்பினார் அந்த மனிதர்!

200-அடி தூரத்தில் இருக்கும் குப்பைக்கூடையில் குப்பை போட, நான்கு சக்கர வாகனத்தில் – அதுவும் அசுர வேகத்தில்! இந்தியா முன்னேறி விட்டது என்று தான் சொல்ல வேண்டும்!

ரோஷ்ணி’ஸ் கார்னர்:



மகள் முதல் முயற்சியாக இணையத்தில் வீடியோவாகப் பார்த்து, தன் கையில் அவளாகவே போட்டுக் கொண்ட மெஹந்தி.

மாலை நொறுக்ஸ்:

சமீபத்தில் ஒரு நாள் மாலையில் செய்து சாப்பிட்ட ஆலு போண்டா – உருளைக்கிழங்கு போண்டா!



உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லலாமே!

மீண்டும் ச[சி]ந்திப்போம்....

நட்புடன்

ஆதி வெங்கட்
திருவரங்கத்திலிருந்து....


28 கருத்துகள்:

  1. இன்று உங்கள் தளத்திலும் தம வாக்குப்பட்டை என் கண்களில் படவில்லை.

    பதிவை ருசித்து, ரசித்தேன். பீட்ரூட் பூரி... கவர்கிறது. ஆலு போண்டாவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. https என திறப்பதால் த.ம. பட்டை தெரிவதில்லை. இப்போது கீழே சுட்டி இணைத்திருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    2. வாக்களித்துவிட்டேன். நன்றி.

      நீக்கு
    3. தமிழ் மண வாக்கிற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. எல்லாமே முகநூலிலும் பார்த்து ரசித்தேன். குழந்தையின் திறமை கடவுள் கொடுத்த பரிசு! பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  3. இரண்டாவது படமும் கடைசி படமும் நன்றாக வந்திருக்கிறது .. போண்டாவை எடுத்து சாப்பிட ஆசையாக இருக்கிறது ஆனால் அது அழகான போட்டோவாக போய்விட்டதே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  5. மண்பாண்டச் சமையல் வாழ்க..

    அழகான படங்கள்.. வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  6. தங்கள் பதிவுகள் மிகவும் அருமையாக உள்ளது.மண் பாண்டிய சமையல் கேஸ்ஸில் நேரம் ஆகிறதா? முயற்சி செய்து பார்க்க கேட்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்போதும் போல் தான்.. நேரம் ஆகாது - ஆதி வெங்கட்.

      தங்களது முதல் வருகையோ?

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்தார்த்.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  8. பதிவர்கள் தாங்கள்சமையல் செய்வதில் இருக்கும் இண்டெரெஸ்டைவிட அதைப் படமெடுப்பதில் ஆர்வம் அதிகம் காட்டுகிறார்கள் ஜூனியர் பதிவர் ரோஷணிக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  9. பீட்ரூட் பூரி புதுமையாக உள்ளது .செய்து பார்க்கணும். கோலங்கள் அழகு .
    நான் கூட மண் வாணலியும் மண் சட்டியும்தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செய்து பாருங்கள்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா.

      நீக்கு
  10. படித்தேன் ரசித்தேன் ருசிப்பேன் பின்பு கதம்பம் வாசனை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூ விழி.

      நீக்கு
  11. ஶ்ரீரங்கத்துல வயல்கள் இன்னும் இருக்கா? ப்ளாட் போடலையா? ஆர்த்து வண்டு அலம்பும் சோலை அணி திரு அரங்கம் என்று ஆழ்வார் பாடியதில் கொஞ்சம் மிச்சம் இருக்கா?

    மண்சட்டி சமையலா? நடத்துங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருவரங்கத்தின் எல்லைப் பகுதிகளில் இன்னமும் வயல்கள் உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  12. ரோஷ்ணி குட்டி ராக்ஸ்!!!!!!!

    படங்கள் நல்லாருக்கு ஆதி..... கோலம் சூப்பர்....மண்பானை சமையல்....ஆஹா..நானும் வீட்டில் செய்வதுண்டு...சூப்பரா இருக்கு நீங்க செய்தது..........

    எங்க வீட்டுப் பக்கமும், அயர்ன் துணி கொடுக்க, குப்பை கொட்ட....ஜஸ்ட் அடுத்தாப்ல இருக்கறதுக்கும் கார் தான்....கால் தரையில் பாவாம....ஹாஹாஹா....

    எல்லாம் ரசித்தேன் ஆதி...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  13. மெஹந்தி முதல் தடவையாக போட்டது போல தெரியவே இல்லை. அழகாக வந்திருக்கின்றது, நானும் கோன் வாங்கி வந்து முயன்றேன்.. ஹாஹா சரியாக வரவே இல்லை . தூக்கி போட்டு விட்டேன். மகளின் கலை உணர்வுக்கு பாராட்டுக்களும், அதை ஊக்கப்படுத்தும் உங்களுக்கு வாழ்த்துகளும்.பூரியும்,போண்டாவும் சூப்பராக இருக்கின்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....