வெள்ளி, 1 டிசம்பர், 2017

சாப்பிட வாங்க – கொத்தமல்லி பொடி



வாரச்சந்தையில் நானும் தோழியும் காய்கறி வாங்கினோம். எல்லாம் வாங்கிய பின் அண்ணே!! கறிவேப்பிலை, கொத்தமல்லி குடுங்க என்றேன்.

இந்தாங்க அக்கா!! என்று கையில் ஒரு பெரிய கட்டு கொத்தமல்லியை திணித்தார். கொசுறாக சிறிதளவு கறிவேப்பிலை.

என்னண்னே!! என்று பார்க்க, 200 க்கு மேல் காய் வாங்கியதால் கொத்தமல்லி கட்டு இனாமாம். பம்பர் பரிசு கிடைத்த சந்தோஷம் இருவருக்கும்.

நேற்று கொத்தமல்லி சாதம் செய்து பாதி கட்டை காலி செய்தேன்.. இன்று வீணாக போவதற்குள் மீதியை காலி செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து விட்டேன்.

அம்மா செய்து கொத்தமல்லி பொடி சாப்பிட்டிருக்கிறேன். சட்டென்று வீணாகவும் போகாது. இணையத்தில் தேடி ரெசிபி எடுத்தேன். செய்தாச்சு.

தேவையான பொருட்கள்:

கொத்தமல்லி தழை – ஒரு கப்
கடலை பருப்பு – அரை கப்
உளுத்தம் பருப்பு – அரை கப்
சிகப்பு மிளகாய் – அரை கப்
பெருங்காயத் தூள் – கால் டீஸ்பூன்
புளி – ஒரு எலுமிச்சை அளவு
நல்லெண்ணை – அரை டீஸ்பூன்.
உப்பு – தேவையான அளவு

செய்முறை:




கொத்தமல்லி தழைகளை தண்ணீரில் சுத்தம் செய்து பரத்தி, உலர்த்தவும்.



புளியை வாணலியில் கொஞ்சமாக வறுத்துக் கொள்ளவும்.




கடலைப் பருப்பு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், சிகப்பு மிளகாய் ஆகியவற்றை நல்லெண்ணை விட்டு இளஞ்சிவப்பாக வறுத்துக் கொள்ளவும்.



கொத்தமல்லி தழைகளையும் வாணலியில் போட்டு வதக்கிக் கொள்ளவும்.



மிளகாய், புளி, உப்பு ஆகியவற்றை மிக்சி ஜாரில் போட்டு அரை நிமிடம் அரைக்கவும். பிறகு அந்த ஜாரில் கொத்தமல்லியை போட்டு அரை நிமிடம் அரைக்கவும். பிறகு மீதி உள்ள பருப்புகளையும் அரை நிமிடம் அரைத்துக் கொண்டால் கொத்தமல்லி பொடி ரெடி!

சூடான சாதத்தில் போட்டு நல்லெண்ணெய் விட்டு சாப்பிடலாம். மோர்சாதத்துக்கும் நல்ல ஜோடி.

உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லலாமே!

மீண்டும் ச[சி]ந்திப்போம்....

நட்புடன்

ஆதி வெங்கட்
திருவரங்கத்திலிருந்து....


26 கருத்துகள்:

  1. முதல் புகைப்படமே அட்டகாசம் பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  2. புளி கொஞ்சம் ஜாஸ்தியோ!

    முகநூலிலும் பார்த்தேன். மோர்சாதத்துக்கு மற்றும் தொட்டுக்கொள்ளலாம். தோசைக்கு சற்றே நல்லெண்ணெய் விட்டுப் பிசறி சாப்பிட ருசி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் அதே தான் தோன்றியது! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மிடில்கிளாஸ் மாதவி.

      நீக்கு
  4. இந்த கொத்தமல்லித்தொக்கு படத்தில் பார்க்கையில் பிரமாதம் ஆதி! சாப்பிடத்தூண்டுகிறது! தை மாதம் கிடைக்கும் சின்ன சின்ன கட்டுக்களில் செய்தால் இன்னும் ருசி அதிகமாயிருக்கும்!

    என் மாமியார் வழியில் நானும் அடிக்கடி செய்வதுண்டு. உளுத்தம்பருப்பு மட்டும். மற்றபடி இதே செய்முறை தான்! கடலைப்பருப்பும் உபயோகித்துப்பார்க்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

      நீக்கு
  5. இதே...இதே...காம்பிஇனெக்ஷன் பொருட்கள்....ஊரில் இருக்கும் வரை அம்மாவும் நானும் இதை உரலில் தான் இடிப்போம்....கெட்டும் போகாது.....சூப்பர்...ரெசிப்பி...என்ஜாய்..ஆதி...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  6. செஞ்சு சாப்பிட்டு பார்த்தாச்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

      நீக்கு
  7. எனக்கு மிகவும் பிடித்தது. தோசை, இட்லி, மோர் சாதத்துக்கு தொட்டுக்க யம்மியா இருக்கும். (தோசை/இட்லிக்கு, இந்தப் பொடியில் நல்லெண்ணெயும் சேர்த்துக்கணும்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூ விழி.

      நீக்கு
  9. ///200 க்கு மேல் காய் வாங்கியதால் கொத்தமல்லி கட்டு இனாமாம்.//

    ஹும்ம்ம் இங்க ரெண்டு கட்டு கொத்தமல்லி இந்திய மதிப்பிற்கு 75 ரூபாய்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  10. இந்த முறைப்படி ஆனால் பருப்பை மிக குறைத்து போட்டு கொத்தமல்லி சட்னி செய்வோம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  11. வெங்க்ட்ஜீதான் போட்டோ அழகாக எடுத்து கலக்குவார் என்று பார்த்தால் அவருக்கு நான் சளைத்தவர் அல்ல என்று போட்டிக்கு ஆதிவெங்கட் போட்டோ போட்டு கலக்கி இருக்குங்க.... சபாஷ் சரியான போட்டி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சபாஷ் சரியான போட்டி! :)))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  12. கொத்தமல்லி தொக்கு செய்வேன்...

    இது புதுசு..சோ நோட் பண்ணியாச்சு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

      நீக்கு
  13. மாமியார் கழுவிய மல்லித் தழையை இலேசாக வெயிலில் பரப்பி வாட விடுவார். வாணலியில் வாட்டுவதை விட பக்குவம் நன்கு வரும். உரலில் இடித்தால் தான் நல்லாயிருக்கு என்பார் மாமனார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....