சனி, 30 டிசம்பர், 2017

கதம்பம் – 21 காய்கறி பை – வைகுண்ட ஏகாதசி கோலம் – இறைவனின் படைப்பில் – கோதுமை சேமியா



21 காய்கறிகள் கொண்ட பை - கோலங்கள்

கோவிலில் இருந்து வரும் வழியில் பொம்மைக் கடைகள், காய்கறி கடைகள், வீடுகளில் போட்டிருக்கும் கோலங்கள் என கண்களை கவர்ந்தது. அதிலும் நாளை துவாதசிக்கு 21 வகை காய்களை போட்டு குழம்பு செய்வார்கள். அதனால் எல்லா காய்களிலும் சில துண்டுகள் நறுக்கி சேர்த்து பை போட்டு தருவார்கள்.





கோலங்களை மட்டும் மகளை விட்டு படமெடுக்கச் சொன்னேன். வீட்டுக்கு வந்து அரிசி உப்புமாவும், இனிப்புக்காக கேசரியும் செய்து நிவேதனம் செய்தேன். உம்மாச்சி சாப்பிட்ட பிறகு நாங்களும் இப்போது தான் சாப்பிட்டோம்.

கோலங்கள் சில உங்கள் பார்வைக்கு..






வைகுண்ட ஏகாதசிசொர்க்க வாசல்


ரத்னாங்கி சேவை - தொலைவிலிருந்து எடுத்த படம் 


கோபுர தரிசனம் - கோடி புண்ணியம்....

வருடா வருடம் மக்கள் வெள்ளம் கூடுகிறதே தவிர குறைவதில்லை. வருடத்தின் ஒரே ஒருநாளில் தான் ரங்கனை ரத்னாங்கி சேவையில் தரிசிக்க முடியும். அதனால் காலையில் மகளும் நானும் வடக்கு வாசல் வழியாக சென்று ஆயிரங்கால் மண்டபத்தில் தரிசித்து வந்தோம்.

சொர்க்க வாசல் வழியை கடக்க ஒரு வரிசை, ரங்கநாதரை முத்துக்களால் ஆன அங்கியில் தரிசிக்க என எங்கு திரும்பினாலும் வரிசை. இந்த ஐந்து வருட திருவரங்க வாழ்க்கையில் ஒருமுறை தான் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்க வாசல் படி மிதித்திருக்கேன். அதுவும் நான்கு மணி நேர காத்திருத்தலில்.

அடுத்த நாளோ அல்லது இரண்டு நாட்கள் கழித்தோ சென்றிருக்கேன். முத்தங்கி தரிசனமும் 20 நாட்கள் இருக்கும் என்பதால் ராப்பத்தில் தான் சென்று தரிசித்திருக்கேன். அப்போதும் இரண்டிலிருந்து மூன்று மணிநேரங்கள் ஆகும்.

சொர்க்கத்திற்கு கொஞ்சம் தாமதமாய் சென்றாலும் பரவாயில்லை. இந்த கூட்டத்தில் இடிபட்டு நசுங்க முடியாது.. நம்மை படியாக மாற்றி மிதித்தாலும் சொல்வதற்கில்லை...

போட்டிக்கு புகைப்படம் – இறைவனின் படைப்பில்….



என்னவரிடம் அலைபேசியில் பேசிக் கொண்டிருக்கும் போது அங்கே உள்ள காம்பவுண்ட் சுவரின் மீது என் கவனம் சென்றது. ஒரு சின்ன எறும்பின் அளவையொத்த ஒரு பூச்சி. பச்சை உடம்பில் வெண்புள்ளிகள், கோடு போன்று தங்கநிறத்தில், மெரூன் கால்கள், ஆரஞ்சு நிறத்தில் கண்கள்!!!

கடவுளின் படைப்பில் எத்தனை அற்புதம்!!

மார்கழி கோலங்கள்:

மார்கழி மாதத்தில் போட்ட சில கோலங்கள் சென்ற கதம்பத்தில் வெளியிட்டு இருந்தேன். அதற்குப் பிறகு போட்ட சில கோலங்கள் இன்றைக்கு….




ரோஷ்ணி’ஸ் கார்னர்:

மகளின் கைவண்ணத்தில் Silk Thread வளையல் மற்றும் காதணி!





ஷர்ட் உள்ளே புதிதாய் வாங்கும் போது இருக்குமே ஒரு அட்டை, அதை வைத்து மகள் பலவிதங்களில் உபயோகித்துக் கொள்வாள். அப்படி ரங்கோலி வரைந்து வண்ணம் தீட்டியிருக்கிறாள். எப்படி இருக்கு என்று சொல்லுங்களேன்!!



வெங்கி’ஸ் கார்னர்:

சாதாரணமா இந்த வலைப்பூவினை வாசிப்பவர்கள் எண்ணிக்கை, நாளொன்றுக்கு சராசரியாக 500-600- ஐ தாண்டியதில்லை. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக என்னவாயிற்று எனப் புரியவில்லை! சூடு வச்ச ஆட்டோ மீட்டர் கணக்கா, தாறுமாறா ஏறிருக்கு! நேற்றைய முன் தினம் 4705 பக்கப் பார்வைகள், நேற்று 5720 பக்கப் பார்வைகள்! என்னப்பா நடக்குது! ஒரே நாள்ல நிறைய பேர் படிக்க ஆரம்பிச்சிட்டாய்ங்களே! வலைப்பூ ஆரம்பித்த நாட்களிலிருந்தே இன்று வரை பார்த்தாலும், இந்த மாதத்தில் மட்டும் தான் நிறைய பக்கப் பார்வைகள்! ம்ம்… ஓவர்நைட்ல ஒபாமா ஆக்கிடாதீங்கப்பா!

கோதுமை சேமியா:


நம்ம விஜய் சேதுபதி வர்றாரே ஒரு விளம்பரத்துல... அவங்க தயாரிப்பு தான் இந்த கோதுமை சேமியா. ஏற்கனவே அரிசி சேவையும், ராகி சேவையும் அடிக்கடி செய்வது தான். இப்போ புதிய தயாரிப்பாக கோதுமையிலும், சோளத்திலும் கடையில் கிடைத்தது..

பச்சைத் தண்ணீரில் இரண்டு நிமிடம் நனைத்து, ஆவியில் வைத்து, தாளிக்க வேண்டியது தான். உடனடி தயாரிப்புக்கு ஏற்றது.

உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லலாமே!

மீண்டும் ச[சி]ந்திப்போம்....

நட்புடன்


16 கருத்துகள்:

  1. கதம்பம் நன்று கோலம் அழகாக இருக்கிறது கடவுளின் வண்டுகூட அழகே...

    வருகையாளர்களின் எண்ணிக்கை கூடவும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  2. கோலங்கள் அழகாய் இருக்கின்றன.

    ரோஷ்ணிக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. அருமையான கோலங்கள். ரோஷ்ணியின் கைவண்ணம் வியப்பைத் தருகிறது! சேமியா எந்த தானியத்தில் செய்தாலும் சுவைதான் என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  4. வண்ண வண்ணக் கோலங்கள்.. அழகோ அழகு...

    இனிய பதிவு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி.

      நீக்கு
  5. ரோஷ்ணிக்கு பாராட்டுக்கள்
    கோலங்கள் அனைத்தும் அழகு
    பகிர்வும் அருமை
    கோதுமை சேமியாவும் வந்திருக்கா பார்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூ விழி.

      நீக்கு
  6. கதம்பம் அருமை,,,,,கோலங்களும் அருமை...கோலங்கள் போடுவதால் கவனத்தை ஒருங்கிணைக்கும் பயிற்சிகிடைக்கிறது . ஆனால் பலர் ஏதோ பேருக்கு கோலம் போட்டுகிறார்கள் ஆனால் நீங்கள் மிக கவனம் செலுத்தி அழகாக போடுகிறீர்கள்.....பாராட்டுக்கள் ரோஷினியின் கைவண்ணமும் மிக அருமை பாராட்டுக்கள் அந்து குட்டி பெண்ணிற்கும்,,,,,,ஒபாமாவாக ஆகி கொண்டிருக்கும் வெங்க்ட்ஜிக்கும் பாராட்டுக்கள்


    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் அட்வான்ஸ் புத்தாண்டு தின நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  7. ஆதி!!! செம கதம்பம்......ரோஷினியின் கை வண்ணம் பிரமிக்க வைக்கிறது...பேசாம் நான் ஆர்டர் கொடுக்கலாமானு யோசிக்கரேன்.யாருக்கேனும் பரிசளிக்க....நானும் என் கஸினின் மகளும் சேர்ந்து இரு வருடங்கள் முன் செய்து வந்தோம் அவள் இப்போது டி சிஎஸ்ஸில் ஜாயின் செய்த பிறகு செய்வது நின்றுவிட்டது. ரோஷினியின் கலர் செலக்ஷன் அருமை...படமும் தான் மிக மிக திறமை படைத்தவர்!!! பின்னாளில் ஃபேஷன் டிசைனிங்க் ல் கலக்குவார் !!! படம் வரைதலிலும்...ஆனால் என் அனுமானம் அவருக்கு ஃபேஷன் டிசைனிங்கில் நல்ல ஆர்வம் இருப்பது போலவும் அதில் அவர் மிளிர்வார் என்றும்...

    ஆதி அந்தப் பொன்வண்டு என்று தோன்றுகிறது. எங்கள் வீட்ட்டுற்கும் வருகை தந்தார். நானும் எடுத்திருக்கேன்....

    ரசனையான கதம்பம்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொன்வண்டு வேறு மாதிரி இருக்கும் கீதா ஜி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  8. சிவப்பு நிறத்தில் கடவுளின் படைப்பை சிறு வயதில் மேட்ச் பாக்சில் வைத்து அழகு பார்த்ததுண்டு. மூவரின்பர்டைப்புகள் அமல்கமேட் ஆனதால் பக்கப் பார்வைகள் கூடுகிறதோ வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா....

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....