படப் புதிருக்கான விடைகள்:
இதற்கு முந்தைய பதிவில் படங்கள் கொடுத்து, அவற்றுக்கான பதில்கள் கேட்டிருந்தேன்.
படம்-1
படம்-1: படத்தில் இருப்பது கடுகுப் பூ. தில்லியை அடுத்த ஹரியானாவின் கிராமம் ஒன்றிற்கு சமீபத்திய பயணமாகச் சென்ற போது எடுத்த படம். சரியான விடை அளித்தவர்கள் - ஆர். சோமேஸ்வரன், தில்லையகத்து கீதா, ஏஞ்சலின் மற்றும் ஜி.வி. மகேஷ்.
படம்-2
படம்-2: இரண்டாம் படத்தில் இருப்பது வாத்து தான்! ஒரு க்ளோஸ் அப்! சரியான விடை அளித்தவர்கள்: ஆர். சோமேஸ்வரன், தில்லையகத்து கீதா, ஏஞ்சலின் மற்றும் பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி.
படம்-3
படம்-3: மூன்றாம் படத்தில் இருப்பது ஷிம்லா இரயில் நிலையம். இரயில் நிலையத்திற்கு அருகே இருக்கும் மேம்பாலம் [பாதசாரிகளுக்கான] மேல் நின்று எடுத்த படம். சரியான விடை அளித்தவர்கள்: ஜி.வி. மகேஷ் மற்றும் தில்லையகத்து கீதா [சிம்லா போல இருக்கு என Guess மட்டும்!]
படம்-4
படம்-4: நான்காம் படத்தில் இருப்பது மரத்தில் செய்த ஒரு பொருள். கைப்பிடியை உயர்த்தினால், அழகிய வடிவில் நான்கு கிண்ணங்களாக மாறும். அதில் உலர் பழங்கள் போட்டு வைக்கலாம் - கைப்பிடியை உயர்த்தினால், கீழே உள்ளது போல மாறும்.... சரியான விடை அளித்தவர்கள்: தில்லையகத்து கீதா மற்றும் ஏஞ்சலின்!
படம்-5
படம்-5: ஐந்தாம் படத்தில் இருப்பது ஷிம்லாவில் இருக்கும் ராஷ்ட்ரபதி நிவாஸ். ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இதன் பெயர் அப்போது Viceregal Lodge! பின்னர் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு ராஷ்ட்ரபதி நிவாஸ். கோடை காலங்களில் ராஷ்ட்ரபதி தங்குவதற்கு பயன்படுத்திய இடம். சர்வப்பள்ளி இராதாகிருஷ்ணன் அவர்கள் இந்தியாவின் ராஷ்ட்ரபதியாக இருந்தபோது இந்த இடத்தினை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக, இங்கே Indian Institute of Advance Study-ஐ ஆரம்பிக்க வழி செய்தார். ஹிந்துஸ்தான் - இந்தியா, பாகிஸ்தான் என இரண்டாக பிரிக்க வழிவகுத்த Shimla Conference இந்த கட்டிடத்தில் தான் நடந்தது. சரியான விடை அளித்தவர்கள் தில்லையகத்து கீதா ஜி மற்றும் பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!
அனைவருக்கும் வாழ்த்துகள்! முடிந்தால் படமும் புதிரும் தொடரும்!
மீண்டும் ச[சி]ந்திப்போம்.....
நட்புடன்
வெங்கட்
புது தில்லியிலிருந்து....
Super very interesting and informative
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுதா ஜி!
நீக்குஹை!! எல்லாம் சரியா!! வாவ்!! நன்றி வெங்கட்ஜி..சிம்லா ரயில் நிலையம் பல வருடங்களுக்கு முன் மோட்டார் ரயில் கார் காட்சிகளைக் கண்டு களிக்க என்று...மகன் அப்போது சிறியவன் என்பதால் அதில் செல்ல ஆசைப்பட்டு அதில் சென்ற போது ரயில் நிலையம் பார்த்த நினைவு. அப்புறமும் மகன் பெரியவானகி சென்ற போதும் பார்த்திருந்தாலும் கொஞ்சம் பசபசப்பாக நினைவு...அதான் அப்படி போட்டிருந்தேன்...
பதிலளிநீக்குமிக்க நன்றி வெங்கட்ஜி...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!
நீக்குஅனைவருக்கும் வாழ்த்துகள்! பதில் சொன்னவர்கள் மற்றுமின்றி எல்லோருக்கும் வாழ்த்துகள்
பதிலளிநீக்குகீதா
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
நீக்குநன்றி! ஐந்துக்கு ரெண்டு பழுதில்லை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!
நீக்குபங்கு பெற்று சரியான விடைகளைச் சொன்ன அனைவருக்கும் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....
நீக்குநல்லவேளை. நான் இந்த ஆட்டத்தில் இல்லை. இருந்திருந்தால் என்னுடைய விடைகளை பார்த்து சரியான வாத்து மடையன்னு சொல்லியிருப்பீர்கள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.....
நீக்குஅட எல்லாமே நான் நினைச்ச மாதிரி கரெக்டா இருக்கே... :)
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்....
நீக்குபுதிரில் கலந்துகொள்கிறேனோ இல்லையோ, படங்களை ரசிக்கிறேன்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா....
நீக்குவாத்து படத்தில் எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால் கேள்வி மாதிரி ஏமாந்துட்டேன்! மற்ற கேள்விகளுக்கும் விடைகள் தெரிந்தது. ஸூப்பர்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்...
நீக்குநன்றிஐயா
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா....
நீக்குநன்றி. படப் புதிர்களை தொடரவும்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மஹேஷ்....
நீக்கு