சாம்பாருக்காக எடுத்து வைத்த நான்கு
வெண்டைக்காய்கள் இருந்தது. வழக்கமாக செய்யும் சாம்பாரும், ரசமும் சலித்துப் போக இணையத்தில்
தேடி இருபுளி குழம்பு செய்தேன்.
WWW.BETTERBUTTER.IN என ஒரு இணைய தளம் –
ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், மராட்டி என நான்கு மொழிகளில் சமையல் குறிப்புகள் இங்கே
கிடைக்கின்றன. அங்கே இக்குறிப்பைப் பகிர்ந்து கொண்ட சௌம்யா சுந்தர் அவர்களுக்கு
நன்றி. தேவையான பொருட்கள் மற்றும் செய்வது எப்படி என்ற குறிப்புகள்
அத்தளத்திலிருந்து அப்படியே கீழே தந்திருக்கிறேன்!
மேலதிகத் தகவல்: மேலே குறிப்பிட்ட தளத்தில் எனது சமையல் குறிப்புகள் எட்டும் இருக்கின்றன. இத்தளத்தின் App கூட இருக்கிறது.
மேலதிகத் தகவல்: மேலே குறிப்பிட்ட தளத்தில் எனது சமையல் குறிப்புகள் எட்டும் இருக்கின்றன. இத்தளத்தின் App கூட இருக்கிறது.
தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய்/பூசணிக்காய்- 1/2 கப்
புளி- நெல்லிக்காய் அளவு
கெட்டி மோர்- 1/2 கப்
கறிவேப்பிலை
கடுகு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய்- 2 டேபிள் ஸ்பூன்
வறுத்து அரைக்க:
தேங்காய்- 1/2 கப்
வற்றல் மிளகாய்- 6
வெந்தயம்- 1/2 டீஸ்பூன்
பெருங்காயம்- 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு- 1 டீஸ்பூன்
செய்முறை:
ஒரு கடாயில ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு
வறுக்க வேண்டிய பொருட்களை சிவக்க வறுத்து கொள்ளவும்.
பின்னர் அதை மிக்ஸியில் தயிர் சேர்த்து
நன்கு அரைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்
கடுகு கறிவேப்பிலை தாளித்து காய் சேர்த்து வதக்கவும்.
சிறிது வதங்கியதும் புளி கரைசல் உப்பு
சேர்த்து கொதிக்க விடவும்
காய் வெந்ததும் அரைத்த விழுது சேர்த்து
பொங்கி வரும் போது இறக்கவும்.
நான் செய்து பார்த்ததில் நன்றாகவே
இருந்தது. நீங்களும் செய்து பார்த்துட்டு சொல்லுங்க!
மீண்டும் ச[சி]ந்திப்போம்...
நட்புடன்
பெட்டர்பட்டர் தளத்தைக் குறித்துக் கொண்டேன். சுவையான குறிப்பு. இதை எரிகொள்ளிக்குழம்பு என்று எங்கள் பாஸ் செய்வார்.
பதிலளிநீக்குநல்ல தளமாகத் தெரிகிறது. நானும் நேற்று சில குறிப்புகளை இங்கே பார்த்தேன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
அருமை
பதிலளிநீக்குதம +1
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குமோர்க்குழம்பு மாதிரியே இருக்கிறதே....
பதிலளிநீக்குமோர்க்குழம்பில் புளி சேர்ப்பதில்லை. இங்கே இரண்டும்! அதனால் இரு புளிக் குழம்பு! பார்க்க ஒரே மாதிரி இருந்தாலும் இது வேறு! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
இது புளி மோர்க்குழம்பு அல்லவா?
பதிலளிநீக்குபுளி மோர்க்குழம்பு - கேள்விப்பட்டதில்லை.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
அந்த தளத்துக்கு இனி நல்ல வரவேற்பு இருக்கும்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.
நீக்குபார்க்கவே நல்லாயிருக்கு. இப்போ கொஞ்ச நாட்களாக இங்கு தமிழ்மண வோட் பொக்ஸ் தெரிவதே இல்லை, லிங் மூலம்தான் வோட் போட முடிகிறது.
பதிலளிநீக்குhttps:// என திறப்பதால் இப்பிரச்சனை. மாற்றி விடுகிறேன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.
நல்லது செய்து பார்கிறேன் , அறிமுக தளத்திற்கு நன்றி
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூ விழி.
நீக்குசமையல் பற்றிய ரைட்டப் என்றால் உடனே வந்து படிக்கத் தூண்டுகிறது.
பதிலளிநீக்குதங்களது முதல் வருகையோ? மகிழ்ச்சி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வான்மதி மதிவாணன்.