ஞாயிறு, 11 பிப்ரவரி, 2018

தைத் தேர் 2018 – திருவரங்கம் – புகைப்பட உலா



திருவிழா, தேரோட்டம், காவடி, தீமிதி, விதி உலா, என எல்லா விஷயங்களும் நமக்கு ஒரு பொழுதுபோக்கு – தமிழகத்தில் இருக்கும் வரை இந்த விஷயங்கள் ஒரு சாதாரண நடவடிக்கையாக இருந்தாலும், தமிழகத்தினை விட்டு விலகி இருக்கும்போது இவை பார்க்க மனதில் ஒரு பரவசம், குதூகலம், மகிழ்ச்சி என பல்வேறு அடைமொழிகளோடு சொல்லக் கூடிய ஒரு அனுபவம். சித்திரை, தை மாதங்களில் திருவரங்கம் செல்லும் வாய்ப்புக் கிடைத்தால், அதுவும் தேரோட்டம் சமயம் என்றால் நிச்சயம் விடிகாலையில் எழுந்து கையில் கேமராவுடன் புறப்பட்டுவிடுவேன்! மனைவியும் மகளும் முதல் நாளிலிருந்தே சற்றே கிண்டல் தொனியுடன் “நாளைக்கு தேர் பாக்க போவீங்க தானே?” என்று கேட்க ஆரம்பித்தாலும்!





அது என்னமோ தேரோட்டம், காவடி, திருவிழா என்றால் மனது குதூகலிக்க ஆரம்பித்து விடுகிறது. கேமராவிற்கு தீனி கிடைக்கும் என்பதாலா, இல்லை பல்வேறு விதமான அனுபவங்கள் கிடைக்கும் என்பதாலா, என்றெல்லாம் ஆராய்ச்சி செய்யாமல் கேமராவுடன் புறப்பட வேண்டியது தான் பாக்கி.  தை மாதத்தில் உத்திர வீதியில் தான் தேரோட்டம் – சற்றே சிறிய தேர் என்பதால் விரைவிலேயே நிலைக்கு வந்து விடும் – இந்த முறையும் தேரோட்டம் சமயத்தில், திருவரங்கத்தில் இருந்ததால், ஐந்தரை மணிக்கே எழுந்து புறப்பட்டு விட்டேன் – கர்ணனுக்கு கவச குண்டலம் மாதிரி காமிராவும் கையுமாகத் தான்! – வழியில் பார்த்த தெரிந்தவர் ஒருவர் – “நான் காலையிலேயே நினைச்சேன் – நீங்க இருந்தா கேமராவோட வந்துடுவீங்களேன்னு” என்று சொன்னார் – கிண்டல் தொனியாகத் தெரிந்தாலும் புன்னகைத்தபடியே கடந்தேன்! [ஃபோட்டோ எடுக்கறது ஒரு தப்பாய்யா!]

தேரோட்டம் என்றால் தேரையும், தேரின் மீது வைக்கப்பட்டிருக்கும் உற்சவரின் சிலையை பார்ப்பதோ மட்டும் அல்ல, தேர் வடம் பிடிக்கும் மனிதர்கள், தேரைப் பார்க்க வந்தவர்கள், வீதி வலம் வரும் இறைவனைப் பார்க்க வரும் பக்தர்கள், பாதுகாப்புக்கு வந்திருக்கும் காவலர்கள், தேரோட்டத்திற்கான ஏற்பாடு செய்தவர்கள், தேர் சமயத்தில் உருவாகும் திடீர் வியாபாரிகள், ”ரங்கா!” என்று பக்திப் பரவசத்தில் குரல் கொடுப்பவர்கள், தேருக்கு முன் வரும் ஆண்டாள் [திருவரங்கத்து கோவில் யானை – இம்முறை ஆண்டாள் மிஸ்ஸிங் – ஒரு மாதம் யானைகளுக்கான Camp சென்றிருப்பதால்!], குதிரை, என அனைத்தும் பார்க்கவேண்டும், புகைப்படம் எடுக்க வேண்டும் – புகைப்படம் எடுப்பதில் சிக்கல்கள் உண்டென்றாலும்!

தேரோட்டம் சமயத்தில் பாவம் ஒரு மூதாட்டி – அவர் குடும்பத்தில் என்ன பிரச்சனையோ, தேரோட்டத்திற்கு காவலுக்கு வந்த காவலர்களிடம் முறையிட்டுக் கொண்டிருந்தார் – “இது என் வீடு சார், அவங்கல்லாம் என்னை அடிக்கறாங்க, வெளியே தொரத்தறாங்க, நீங்க அதையெல்லாம் கேட்க மாட்டீங்களா? அந்த ரங்கன் தான் அவங்களுக்கெல்லாம் கூலி கொடுக்கணும்” என்று புலம்பிக் கொண்டிருந்தார். ரங்கன் எல்லாவற்றையும் கேட்டபடியே தேரின் மீது ஜ[க]ம்மென்று உலா வந்தார். காவல்துறை நண்பர் “எல்லாம் சரியாகிடும் போங்க!” என்று சொன்னபடியே சென்றார். மூதாட்டி வீட்டை இழுத்துப் பூட்டிய பின்னர் தேரின் பின்னோடு, “ரங்கா, ரங்கா!” என்று பிரார்த்திபடியே நடந்தார். அவரவருக்கு அவரவர் பிரச்சனை.

சரி புகைப்படங்களைப் பார்க்கலாம் வாங்க....


தேரோடும் வீதியிலே.....


தேரோடும் வீதியிலே - முதியவர் - குளிர் தாங்கல எனக்கு....



தேரோடும் வீதியிலே.....


தேரோடும் வீதியிலே - தேர் மீது ரங்கன்.....


தேரோடும் வீதியிலே.....


தேரோடும் வீதியிலே.....


தேரோடும் வீதியிலே.....


தேரோடும் வீதியிலே..... - காற்று வீசினால் சுத்துவேன்....


தேரோடும் வீதியிலே..... - தேர் எப்ப நிலைக்கு வரும்? - கொஞ்சம் உட்காரணும்....





தேரோடும் வீதியிலே - தேரின் மீது ரங்கன்........








தேரோடும் வீதியிலே - தேரின் பின்புற மேடையில் இசைக்கலைஞர்கள்....


தேரோடும் வீதியிலே - நாலு கால் பாய்ச்சலில்.....


தேரோடும் வீதியிலே - தேர் சிற்பங்கள்......


தேரோடும் வீதியிலே - அமுதம் எடுக்கும் காட்சி - தேர் சிற்பம்.....


தேரோடும் வீதியிலே - தேர் சிற்பங்கள்.........


தேரோடும் வீதியிலே - தேர் ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றம்.....

இந்த முறை தேரோட்டம் வேலை நாளில் வந்ததாலோ என்னமோ, கூட்டம் அத்தனை இல்லை என்றே சொல்ல வேண்டும். மேல வாசல் [மேற்கு வாசல்] முதல் கீழ வாசல் வரை தேருக்கு முன்னர் நடந்து, எடுத்த புகைப்படங்கள் மட்டும் இந்த ஞாயிறில் புகைப்பட உலாவாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.  புகைப்பட உலாவினை ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!

மீண்டும் ச[சி]ந்திப்போம்......

நட்புடன்

வெங்கட்
புதுதில்லி.


26 கருத்துகள்:

  1. தேரோட்டப் படங்கள் அருமை. ஆனாலும், மூதாட்டியின் சோகம்தான் மனதைக் கவ்வியது. கடைசி காலத்தில் பிரச்சனை வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான், இறக்கும் வரையில் சொத்தைக் கைமாற்ற விடுவதில்லை (வாரிசுகளுக்கு). அப்படியும் சோகமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூதாட்டியின் சோகம். அன்றைக்கு முழுவதுமே எனக்குத் தேர் காட்சிகளை விட மூதாட்டியின் முகமும், அவர் பேசிய பேச்சும் தான் நினைவில் வந்தது. பாதிப்பு அவர் பேச்சிலும், நடவடிக்கையிலும் நன்றாகவே தெரிந்தது.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  2. படங்கள் ரசிக்க வையன ஜி
    பாட்டிதான் பாவமாக இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களை ரசித்தாலும் பாட்டியை நினைத்தால் பாவம் தான்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  3. படங்கள் எல்லாம் மிக அருமை வெங்கட் ஜி! கூட்டமில்லையே என்று கேட்க நினைத்தேன் நீங்களே சொல்லிட்டீங்க வேலை நாளில் வந்ததாலோ என்னவோனு...பாவம் அந்த வயதான பாட்டி. இல்லையா!! பிள்ளைகள் அவரைக் கவனிக்க வில்லை போலும்..

    //கர்ணனுக்கு கவச குண்டலம் மாதிரி காமிராவும் கையுமாகத் தான்! – வழியில் பார்த்த தெரிந்தவர் ஒருவர் – “நான் காலையிலேயே நினைச்சேன் – நீங்க இருந்தா கேமராவோட வந்துடுவீங்களேன்னு” என்று சொன்னார் – கிண்டல் தொனியாகத் தெரிந்தாலும் புன்னகைத்தபடியே கடந்தேன்! [ஃபோட்டோ எடுக்கறது ஒரு தப்பாய்யா!]//

    அதானே!! வெங்கட்ஜி இதே அனுபவம் எனகுமுண்டு. எங்கள் வீட்டிலும் என்னை கர்ணகவசத்தோடு என்று தான் சொல்லுவார்கள்...வாக்கிங்க் போகும் போது இப்போது கேமரா வேலை செய்யவில்லை எனப்தால் மொபைல் தான் எடுத்துச் செல்கிறேன்...வழியில் ஒருவர் சொன்னாஅர்....அங்க பாருங்க ஒரு நாய் குட்டி போட்டுருக்கு...எங்க உங்களைக் காணலையே கேமாராவோடு வந்துடுவீங்களே சுட்டுத் தள்ளனு...காமேரா என்னாச்சு காணலை? அதிசயம்" என்று சொல்லிவிட்டு சிரித்துக் கொண்டே நடந்தார்.

    நான் கண்ணைச் சிமிட்டி சிரித்து கேரளத்து ஸ்டைலில் தோளைக் குலுக்கிவிட்டு நடந்தேன் ஹா ஹா ஹா...பெண் என்பதால் என்னை வேடிக்கை பார்ப்பது முதலில் நிறைய இருந்தது. இப்போது கொஞ்சம் குறைவு...

    தேரின் சிற்பங்கள் நன்றாக இருகு குதிரைகளும்...உம்மாச்சி நன்றாகவே தெரிகிறார்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் நிறைய படங்கள் எடுப்பேன். ஆபீஸ் மீட்டிங் போதும் படம் எடுப்பேன் (முக்கியமான சமயத்துல). அப்போ சலிச்சுக்கறவங்க, அப்புறம் எங்கிட்ட, படத்தை ஷேர் பண்றீங்களான்னு கேட்பாங்க. ரொம்ப நன்றியும் பாராட்டுவாங்க.

      நான் பொதுவா, இவைகள் நடந்தன என்று ரெக்கார்டுக்காக அப்போ அப்போ படம் எடுத்து வச்சுக்குவேன்.

      சொல்றவங்களைப் பத்தி நாம எப்போவுமே கவலைப்படக்கூடாது. (புயலால் தாக்கப்பட்டபிறகு அடையார் வந்த உடனே நான் சில படங்களை எடுத்தேன். இங்க 2000ல், தொடர்ந்து சாதாரண மழை 15 மணி நேரம் பெய்ததற்கே, ஊரெல்லாம் முழங்கால் அளவுக்குமேல் தண்ணீர். இதையெல்லாம் எடுத்துவைத்திருக்கிறேன். பார்க்கிறவங்களுக்கு இவ்வளவு தண்ணீர் அப்போ வந்ததான்னு இருக்கும்)

      நீக்கு
    2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
    3. //சொல்றவங்களைப் பத்தி நாம எப்போவுமே கவலைப்படக்கூடாது. உண்மை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    தேரோட்ட படங்கள் ஒவ்வொன்றும் கண்ணுக்கு விருந்தாயிருந்தது. ஜம்மென்று தேரில் அமர்ந்திருக்கும் ரங்க நாதனை கண் குளிர பார்த்து மனதாற தரிசித்தேன். பாட்டியின் சோகம் மனதை வருத்தியது. யாரிடமாவது சொன்னால், ஏதேனும் நல்லது நடக்காதாவென வந்து காவலர்களிடம் முறையிட்டிருக்கிறாரோ என்னவோ? தேரோட்ட படங்கள் நெல்லையப்பர் தேரோட்டங்களை நினைவு படுத்தின. நான்தான் அதுசமயம் அங்குசென்று கலந்து கொள்ள இயலவில்லை! பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாட்டியின் சோகம் - என்ன சொல்வது. வருத்தம் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு
  5. படங்களும் பகிர்வும் மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  6. படங்கள் அருமை!
    // சற்றே சிறிய தேர் என்பதால் விரைவிலேயே நிலைக்கு வந்து விடும்//
    இல்லை. அப்படி கிடையாது. சித்திரை தேர் பெரியதாக இருந்தாலும் அதுதான் சீக்கரம் நிலைக்கு வரும். காரணம் அதை இழுப்பதற்கு அக்கம் பக்கத்தில் இருக்கும் கிராமத்திலிருந்து நிறைய ஜனங்கள் வந்து தேரை இழுத்து, விரைவில் நிலை நிறுத்தி விடுவார்கள்.

    தை தேரை உள்ளூர் ஜனங்கள்தான் இழுத்தாக வேண்டும். தயிர் சாதத்தை சாப்பிட்டு விட்டு எப்படி இழுப்பது? ஆகவே நிலைக்கு வர அதிக நேரம் ஆகும். இது குறித்து அங்கு வேடிக்கையாக ஒரு கதை சொல்வார்கள். சித்திரை தேரை இழுக்க வருபவர்கள் கிராமத்து ஜனங்கள், அவர்கள் ரெங்கநாதருக்கு வேண்டப்பட்டவர்கள். தாயார் பெருமாளிடம்," ஐயோ இந்த சித்திரை மாதம் வந்தால் வேப்பெண்ணை வாசனை தாங்க முடியவில்லை" என்பாளம். அதற்கு அரங்கர்," தை மாதத்தில் தேரில் உட்கார்ந்து உட்கார்ந்து இடுப்பே விட்டுப் போய் விடுகிறது, சீக்கிரம் நிலைக்கு வந்தால்தானே?" என்பாராம்.

    நான் சொல்வது 70-80கள் கதை. இப்போது நிலை மாரி இருக்கிறதோ என்னவோ? ஏனென்றால் இப்போது ஸ்ரீரெங்கத்தின் மக்கள் தொகையே அதிகரித்திருக்கிறதே. மேலும் BHEL உபயத்தில் சக்கரங்கள் மாற்றப்பட்டதாகவும் கேள்விப்பட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தை தேர் உள்ளூர் ஜனங்கள் இழுப்பது - அதெல்லாம் அப்போது. இப்போது அப்படி இல்லை. சமீபத்தில் நான் பார்த்த வருடங்களிலெல்லாம் விரைவிலேயே நிலைக்கு வந்து விட்டது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!

      நீக்கு
  7. வேத பாராயண கோஷ்டியையும், பாசுரம் இசைத்தபடி சொல்லுபவர்களையும் எடுத்திருக்கலாம். அடுத்த முறை கோணல் வையாளியை வீடியோ எடுத்துப் போடுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த முறை எடுக்க வாய்ப்பிருந்தால் நிச்சயம் எடுக்கிறேன்.

      கோண வையாளி - எடுக்க முடிந்தால் பகிர்ந்து கொள்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!

      நீக்கு
  8. 'அந்தரங்கம் யாவும் அந்த ரங்கன் அறிவான்... அவன்தான் வைகுண்டனே... ' எனும் வரிகள் மனதில் ஒலிக்க, அந்த மூதாட்டியின் பிரச்னை தீரவேண்டும் என்று பிரார்தித்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தரங்கம் யாவும் அந்த ரங்கன் அறிவான்.... மூதாட்டியின் பிரச்சனை தீர்க்க வழி செய்யட்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  9. தேரடி வீதியில் திருவிழான்னு தெரிஞ்சுக்க உதவும் சாட்சியங்களைக் காணோமே!!!

    படங்களை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேரடி வீதியில் திருவிழான்னு தெரிஞ்சுக்க உதவும் சாட்சி - ஆஹா... நான் சாட்சியங்களைப் படம் எடுத்தால் கூட நீங்க இருக்க வேண்டும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  10. தைத் தேர் தரிசனம் கிடைத்தது...

    தைத் தேர் பாக்கணும் ன்னா வெயிலுக்கு முன்னே போகணும் ன்னு சொல்லுவாங்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

      நீக்கு
  11. தைத்தேர் அழகு.
    படங்கள் அருமை.
    மூதாட்டியின் புலம்பல் மனதை கஷ்டபடுத்துகிறது.
    ரங்கன் நல்லது செய்ய வேண்டும்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  12. முகப்புத்தகத்திலிருந்து.......

    Sreemathi Ravi நெய்வேலியில் வேலுடையான்பட்டு கோவில் பங்குனி உத்திர திருவிழாவில் தேரோட்டம் பார்க்க நாமெல்லாரும் சேர்ந்து போனது ஞாபகம் வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது ஒரு கனாக் காலம்......

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீமதி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....