ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

சூரஜ்குண்ட் மேளா 2018 – புகைப்பட உலா – பகுதி - 1



ஹரியானாவின் சூரஜ்குண்ட் பகுதியில் ஒவ்வொரு வருடமும் சூரஜ்குண்ட் மேளா நடக்கும். வருடா வருடம் மேளாவிற்குச் செல்வது தொடர்கிறது. இந்த வருடமும் நானும் நண்பர் பத்மநாபனும் மேளாவிற்குச் சென்று வந்தோம்.  வருடா வருடம் ஏதாவது ஒரு மாநிலத்தினைச் சிறப்பு மாநிலமாக தேர்ந்தெடுத்து அங்கிருந்து கலைஞர்களையும் கலை விற்பன்னர்களையும் அழைப்பார்கள். இதற்கு முந்தைய வருடங்களில் நடந்த மேளாக்களில் நான் எடுத்த புகைப்படங்களை முன்னர் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். அப்போது பார்க்காதவர்களின் வசதிக்காக, முந்தைய பதிவுகளின் சுட்டிகள் கீழே தந்திருக்கிறேன்.
 







இன்னும் கூட சில பதிவுகள் சூரஜ்குண்ட் மேளா பற்றி இருக்கலாம்! தேடினால் கிடைக்கும்...

இந்த வருடம் சிறப்பு மாநிலமாக உத்திரப் பிரதேசம் மாநிலமும் சில வெளிநாடுகளிலிருந்தும் கலைஞர்களும் வியாபாரிகளும் வந்திருந்தார்கள். கர்நாடக மாநிலம் கூட ஒரு முறை சிறப்பு மாநிலமாக இருந்தது! எனக்குத் தெரிந்து தமிழகத்தினை எப்போதுமே அழைத்ததில்லை! நம்ம அரசும், அரசியல்வியாதிகளும் அவ்வளவு புகழ் பெற்றவர்கள்! சரி விடுங்க… சொல்லி என்ன ஆகப்போகுது….

இந்த வருடத்தின் மேளா சமயத்தில் எடுத்த புகைப்படங்கள் நிறையவே இருக்கின்றன. அவற்றில் சில மட்டும் இந்த முதலாம் பகுதியில். புகைப்பட உலா தொடர்ந்து வெளியிடப்படும் என்ற எச்சரிக்கையோடு!


படம்-1:  டெரக்கோட்டா பொம்மைகள் ...
சூரஜ்குண்ட் மேளா - 2018


படம்-2:  நல்ல வேளை பூக்க விட்டாங்க.....
சூரஜ்குண்ட் மேளா - 2018


படம்-3:  அடுக்கடுக்காய் - மரத்தில் ...
சூரஜ்குண்ட் மேளா - 2018


படம்-4:  வந்தேண்டா பால்காரன் - மினியேச்சர் வாகனங்கள் ...
சூரஜ்குண்ட் மேளா - 2018


படம்-5:  புடவையில என்னய்யா ஆர்கானிக் ...
சூரஜ்குண்ட் மேளா - 2018


படம்-6:  சுவர் அலங்காரத்திற்கு ...
சூரஜ்குண்ட் மேளா - 2018


படம்-7:  இதுவும் சுவர் அலங்காரத்திற்கு தான்...
சூரஜ்குண்ட் மேளா - 2018



படம்-8:  எதுவும் வீணல்ல...  மினியேச்சர் பைக்...
சூரஜ்குண்ட் மேளா - 2018


படம்-9:  எதுவும் வீணல்ல...  மினியேச்சர் பைக்...
சூரஜ்குண்ட் மேளா - 2018


படம்-10:  எதுவும் வீணல்ல...  மினியேச்சர் பைக்...
சூரஜ்குண்ட் மேளா - 2018


படம்-11:  எதுவும் வீணல்ல...  மினியேச்சர் பைக்...
சூரஜ்குண்ட் மேளா - 2018


படம்-12:  விளக்குகளுக்கான ஷேட்...
சூரஜ்குண்ட் மேளா - 2018



படம்-13:  எதுவும் வீணல்ல...  மினியேச்சர் ஜீப்...
சூரஜ்குண்ட் மேளா - 2018



படம்-14:  எதுவும் வீணல்ல...  மினியேச்சர் மாட்டுவண்டி...
சூரஜ்குண்ட் மேளா - 2018



படம்-15:  பேப்பர் கூடையை அலங்கரிக்கும் மூதாட்டி...
சூரஜ்குண்ட் மேளா - 2018 


படம்-16:  தொட்டி ரெடி... செடி வைக்கலாமா...
சூரஜ்குண்ட் மேளா - 2018 


படம்-17:  என் கிட்ட ஜாடி இருக்கு, உங்க கிட்ட ஊறுகாய் இருக்கா?...
சூரஜ்குண்ட் மேளா - 2018 


படம்-18:  டீ குடிக்க வாரீயளா... டீ குடிக்க வாரீயளா!
சூரஜ்குண்ட் மேளா - 2018 


படம்-19:  உப்பு, மிளகுத்தூள்... வேறென்ன போடலாம்!
சூரஜ்குண்ட் மேளா - 2018 


படம்-20:  மண்ணிலும் கலைவண்ணம்!
சூரஜ்குண்ட் மேளா - 2018 

என்ன நண்பர்களே, புகைப்படங்களை ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லலாமே….

மீண்டும் ச[சி]ந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்
புதுதில்லி.

22 கருத்துகள்:

  1. ஜாடிகள் எல்லாம் ஊறுகாயால் நிரப்பத் தயாரா இருக்கு. ஊறுகாய் தான் இன்னமும் போடலை! மிக அருமையாகப் படங்கள் வந்திருக்கின்றன. இந்த மேளாவைப் பத்திக் கேள்விப்பட்டதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேளா வருடா வருடம் நடக்கிறது - பல வருடங்களாக.....

      ஊறுகாய் போட்டுட வேண்டியது தான்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  2. அது சரி, நம்ம ஐடம், (அதான் தீனி தின்ன) ஒண்ணும் இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தீனி தின்ன - இரண்டாவது பகுதியில் கச்சோடி படம் போட்டு இருக்கேன்! பாருங்க.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..

      நீக்கு
  3. ஆர்கானிக் புடைவை என்பதால் இயற்கையான வண்ணங்களால் நெய்யப்பட்டிருக்கும். என்னிடம் கரூரில் தயாரிக்கப்பட்ட வாழை நார் புடைவை இருக்கு! விலை இங்கே அதிகம் இல்லை. ஆனால் இந்தப் புடைவை விலை அதிகமா இருக்கு! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழை நார் புடவை - நானும் பார்த்திருக்கிறேன்.

      எல்லாவற்றிலும் ஆர்கானிக் என்ற பெயர் வைத்து ஊரை ஏமாற்றுவதும் நடக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

      நீக்கு
  4. பூ நிஜப்பூவா? மரப்பானைகள் சின்ன வடிவில் எங்களிடம் இருந்தன. கொலுவில் வைச்சிருந்தோம் பல வருடங்கள்! அப்புறமா அங்கே இங்கே மாறினதில் எங்கே போச்சுனு தெரியலை! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிஜப் பூ தான் - கோஸ்/காலி ஃப்ளவர் போன்ற ஒரு தாவரத்தில் பூப்பது!

      மரப் பானைகள் இப்படி அலங்கரித்த பானைகள் இல்லை. சாதாரணமாக பார்த்திருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  5. இரண்டாவது படத்தில் இருக்கும் பூ வித்தியாச அழகு. நுரை பொங்கும் பூ...

    // புடவையில் என்னய்யா ஆர்கானிக்? // ஹா... ஹா.... ஹா....

    ஜாடிகள் பார்க்கவே அழகு. தேநீர்க்கோப்பைகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜாடிகளும் தேநீர் கோப்பைகளும் அழகு தான். இங்கே நிறைய வகைகள் கிடைக்கின்றன. உத்திரப் பிரதேசத்தின் ஒரு ஊர் இந்த பீங்கான் வகைகளுக்கு மிகவும் பிரபலமானது. அந்த ஊர் பெயர் குர்ஜா!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. படங்கள் அனைத்தும் அற்புதம் ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  7. புடவையில என்னய்யா ஆர்கானிக் ?
    வாழைநார், கற்றாழை நார் இவ்ற்றில் செய்கிறார்கள் கற்றாழை நார் எடுப்பதை காட்டினார்கள் எவ்வளவு கஷ்டபடுகிறார்கள் என்பதை காட்டினார்கள் தொலைக்காட்சியில்.
    கீதாவும் சொல்லி இருக்கிறார்களே.

    படங்கள் எல்லாம் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கற்றாழை நாரில் புடவை - கஷ்டமான வேலை தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  8. அதானே..

    படம் எல்லாம் அழகா இருந்தாலும் -
    ஜாடியெல்லாத்தையும் காலியா வைச்சிருக்காங்களே(க்கீங்களே)!..
    திங்கறதுக்கு ஒன்னும் இல்லாம போரடிக்குது...

    பஜ்ஜி கடை இல்லாம ஒரு மேளாவா!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உணவுக்கான கடைகள் நிறையவே உண்டு. புகைப்படங்கள் ஒன்றிரண்டு தான் எடுத்திருந்தேன். அவ்வளவு கூட்டம் அங்கே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  9. மினியேச்சர் வாகனங்கள் அனைத்தும் அருமை அருமை, அருமையோ அருமை, அருமைக்கெல்லாம் அருமை.....(சின்ச்சன் நொஹாரா styleல் படிக்கவும்,https://www.youtube.com/watch?v=B7lVqlFTblk)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மினியேச்சர் வாகனங்கள் எனக்கும் ரொம்பவே பிடித்தன. அதனால் தான் எல்லாவற்றையும் தனித்தனியே புகைப்படம் எடுத்தேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சோமேஸ்வரன்.

      நீக்கு
  10. அருமையாக இருந்தது புகைப்படங்கள்...நன்றி அண்ணே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

      நீக்கு
  11. ஹையோ அந்தப் பூ என்ன அழகு!! வித்தியாசமா அழகா இருக்கு ஜி...ஜாடிகள் டீ கப்புகள் வாவ்!!! பீங்கான் ஐட்டெம்ஸ் எல்லாமே எப்பவும் அழகுதான்!!

    குர்ஜாவ்ன் என் தங்கை எனக்குப் பீங்கான் பிடிக்கும்னு அங்கருந்து குட்டி குட்டி ஊறுகாய் ஜாடி கலர் கலரா கொடுதிருந்தாள். நானும் உப்பு, எண்ணெய் ஊறுகாய்னு போட்டு வைக்கறேன்...
    மினியேச்சர் பைக் அதில் கடிகாரம் செமை இன்னொவெட்டிவ் ஐடியா...

    எல்லாமே சூப்பர்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாமே நல்லா இருக்குன்னு சொன்னதில் மகிழ்ச்சி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....