எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, February 13, 2013

எல்லாம் வாங்க ரிசர்வ் வங்கியின் உதவி தேவை....[சூரஜ்குண்ட் மேளா போகலாம் வாங்க! – இரண்டாம் பகுதி]

சூரஜ்குண்ட் மேளா போகலாம் வாங்க! – முதல் பகுதி-யில் உங்களை அங்கே அழைத்துச் சென்றதற்கு நன்றி சொன்ன அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி! [அட நெஜமாகவே சொல்ல நினைச்சாங்கப்பா!]

என்ன கேட்டீங்க? இந்தப் பகுதியில் என்ன என்றா? இதோ பதிவுக்கு போயிடுவோம்! 


பீங்கானில் கைப்பை?


விதவிதமாய் பீங்கான் பொருட்கள்


இவ்வளவு உண்டியல் வைச்சிருக்கே, ஒண்ணுலயாவது காசு போடுங்க!

உள்ளே நுழைந்த இடத்திலேயே பீங்கானில் பல பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தார்கள். தேநீர் கோப்பைகள், சூப் கப்கள், கைப்பைகள் மாதிரி ஒன்று – அதைப் பேனா ஸ்டேண்டாகவோ அல்லது ஸ்பூன் ஸ்டேண்டாகவோ பயன்படுத்தலாம், குழந்தைகளுக்கான உண்டியல், பூ ஜாடிகள் எனப் பலப் பல பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தார்கள். நீல வண்ணத்தில் சிறிய சிறிய கோப்பைகள், தட்டுகள் என 15 எண்ணிக்கை கொண்ட ஒரு செட் வைத்திருந்தார்கள் – அதன் பெயர் பேபி செட்! விலை 185 ரூபாய் மட்டுமே.


இந்தக் கார்ல ஒரு ரவுண்ட போலாமா?
 

இல்லைன்னா இந்தக் கார்ல?
  
அதன் பிறகு மரத்தினாலான பல பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தார்கள். சின்னச் சின்னதாய் வாகனங்கள், விளையாட்டு பொம்மைகள், ‘நாங்க ஒண்ணுக்குள்ள ஒண்ணுஎனச் சொல்லும் ஒரு பொம்மை [பிரிக்கப் பிரிக்க உள்ளுக்குள் இன்னொரு பொம்மை வருகிறது – மொத்தம் ஐந்து], குழந்தைகளுக்கான சில பேனா பென்சில்கள் என நிறைய இருந்தது.

சாசிவேகலு கணேஷ்

அது என்னமோ தெரியவில்லை, ஆனைமுகன் மேல் அனைவருக்கும் காதல். எந்த பொருள் பார்த்தாலும் அதில் ஆனைமுகனை வடித்து விடுகிறார்கள். மேளாவில் பல இடங்களில், பல பொருட்களில், பல வடிவங்களில் ஆனைமுகன். வெட்டி வேரில் கூட ஆனைமுகனை செய்திருக்கிறார்கள். கர்நாடகத்தின் ஹம்பி நகரில் ஹேமகுண்டா மலை அடிவாரத்தில் 1506 ஆம் வருடம் அமைக்கப்பட்ட சாசிவேகலு கணேஷ்உருவச்சிலையை தில்லியிலும் காண அதன் மாதிரியை இங்கே வைத்திருக்கிறார்கள். ஆனைமுகனின் கால் விரல்கள் கடுகு போன்ற வடிவில் இருப்பதால் இந்த ஆனைமுகனுக்கு கடுகு கணேஷ் பெயர் கொடுத்திருக்கிறார்கள்.


கண்ணார ரசிப்போம்....  இங்கே நோ ஜருகண்டி!!!
 

குழலூதும் கண்ணன்
  மரத்தில் செய்யப்பட்ட பெரிய பெரிய சிலைகள் ஆங்காங்கே வைத்திருந்தார்கள். அதில் சில சிலைகள் தத்ரூபமாக இருந்தன. திருப்பதி வெங்கடாஜலபதியின் உருவச் சிலை ஒன்று பத்தடிக்கு மேலிருக்கும். ஒரு மரத்தில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த வேங்கடவனை நீங்கள் மெய்மறந்து காணும்போது ‘ஜருகண்டி ஜருகண்டிஎனச் சொல்லி உங்களை தள்ளிவிட யாருமில்லை. ஆனந்தமாக ஏகாந்த சேவை சாதிக்கிறார். வெங்கடாஜலபதி, குழலூதும் கிருஷ்ணர், பஞ்சமுக ஆஞ்சனேயர் என பல கடவுள்களின் உருவச் சிலைகளை இங்கே பார்க்க முடிந்தது.


அஷ்ட லக்ஷ்மி
 
தமிழகத்திலிருந்து தஞ்சாவூர் ஓவியங்கள் விற்கும் ஒரு நிலையமும் இருந்தது. தஞ்சாவூர் ஓவியங்கள் பெயர் பெற்ற அளவுக்கு விலையும் அதிகம் தானே. அஷ்ட லக்ஷ்மியின் ஒரு ஓவியம் பார்த்து, விலை கேட்டேன். ரூபாய் 12,000/- எனச் சொன்னார். கீழேயே ராதா கிருஷ்ணர் ஓவியம் இருக்க, அதன் விலையையும் கேட்டு வைப்போமே எனக் கேட்க, ரூபாய் 45,000/- என்றார்.  ரொம்ப நல்லா இருக்குஎனச் சொல்லி அங்கே விற்பனைக்கு/காட்சிக்கு வைத்திருந்த சில ஓவியங்களைப் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு அடுத்த கடை நோக்கி நகர்ந்தோம்.

விதவிதமான பொருட்கள் இருக்க, அனைத்தையும் வாங்க ஆசைதான். அதற்கு தலைப்பில் சொன்னது போல மத்திய ரிசர்வ் வங்கியின் உதவி தேவை என்பதால் கண்ணால் ரசித்து மட்டும் வந்தேன்.

இன்னும் இந்த மேளாவில் பல விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது. அவற்றை அடுத்த பகுதியில் காண்போம்.

மேளா பற்றிய அடுத்த பகுதியில் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

48 comments:

 1. விலைகளை நாங்களும் 'பார்த்து' வெச்சோம்:))

  இருந்தாலும் அந்த பீங்கான் பொருட்கள் நேரில் வந்து பார்க்கச் சொல்லும் அழகு!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

   Delete
 2. கடவுள் சிலைகள் கண்களைக் கொள்ளை கொள்ளும் அழகு... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்தி்ற்கும் மிக்க நன்றி ஸ்கூல் பையன்.

   Delete
 3. அழகு... அருமை... ரசித்தேன்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 4. படங்களும் சூரஜ்கன்ட் தகவலும் நன்று

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கண்ணதாசன்.

   Delete
 5. அற்புதமான வேலைப்பாடுகள். அருமையான பகிர்வு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 6. அனைத்து படங்களும் தகவல்களும் மிக அருமை.....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.......

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மலர்.

   Delete
 7. அட நீங்களும் இங்கு வந்திங்களா ?எங்கள் பகுதியிலும் பஸ் பிடித்து வந்திருந்தார்கள்(sunday feb 10) .நாங்கள் போகவில்லை.2007 ல் ஒரு முறை வந்தோம்.நல்ல பகிர்வு

  ReplyDelete
  Replies
  1. நானும் சில நண்பர்களும் வியாழனன்றே சென்று வந்தோம்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆச்சி.

   Delete
 8. // மத்திய ரிசர்வ் வங்கியின் உதவி தேவை //

  அமாம் அதுவும் 'பின்னாளில் கடன் தள்ளுபடியாகும்' என்கிற உத்திரவாத்துடன்.

  ReplyDelete
  Replies
  1. இந்த உத்திரவாதம் கிடைத்தா இன்னும் நல்லது! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதவன்.

   Delete
 9. பீங்கான் கைப்பை இப்பொழுதுதான் பார்க்கிறேன். கண்ணைக்கவரும் விதமாக அழகாக இருக்கு.

  நீங்க ஜர்கண்டி இல்லாமல் ரசித்த பெருமாள், மற்றும் கணேஷர்,குழலூதும் கிருஷ்ணரின் சிலைகள் எல்லாமே மிகச்சிறப்பாக இருக்கு.

  கண்ணையும் மனத்தையும் கவரும் விதமாக இருக்கு பதிவு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமா ரவி.

   Delete
 10. சிலைகள் தத்ரூபமாக மனம் கவர்ந்தன ...

  பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 11. வெங்கடாசலபதி, குழலூதும் கண்ணன், பிள்ளையார் சிலைகள் அழகு. எல்லாப் படங்களும் ரசிக்க வைத்தன.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 12. எல்லாமே அருமை. அதிலும் நம்மாளு சூப்பர்! மிச்சத்தை அப்புறமா வந்து பார்க்கிறேன். :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   Delete
 13. அழகான தகவலை பகிர்ந்துகொண்டதற்கு நன்றி நண்பரே

  சிவாவின் கற்றதும் பெற்றதும்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சிவா.

   Delete
 14. நைனா சூப்பர் நைனா நம்ளே உட்டுட்டு போய் வண்டேயப்பா.
  அருமயான பதிவு. வாழ்த்துக்கள் மிக பல.
  விஜய்

  ReplyDelete
  Replies
  1. அலுவலக நாளில் நீங்கள் பிசி என்பதால் அழைக்கவில்லை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

   Delete
 15. புகைப்படங்கள், குறிப்பாக, சிலைகளின் புகைப்படங்கள் அருமையாய் இருக்கின்றன வெங்கட்ஜீ! அஷ்டலட்சுமி தஞ்சாவூர் ஓவியம் வாங்குவதற்கு தனலட்சுமி பேங்கில் கடன் வாங்கணும் போலிருக்கே? :-))

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேட்டை.

   Delete
 16. கலைநயம் மிக்க உருவச் சிலைகளின் படங்கள் அற்புதம்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 17. பீங்கான் கைப்பை எல்லாம் பார்க்கப் புதுமையாக இருக்கிறது.
  பொருட்கள் எல்லாம் அழகு. ஆனால் விலையைப் பார்த்தால் தலை சுற்றல் வருகிறது.

  போய் பார்த்த திருப்தி வந்தது உங்களால்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

   Delete
 18. உங்க தில்லி ஹாட் கூட அருமையா இருக்கேங்க. பெருமாள் அங்கே(யும்) சேவை சாதிச்சார்.

  சண்டிகர் மேளாக்களை நினைச்சுக்கிட்டேன். ரெண்டு மாசத்துக்கொருமுறை எதாவது கைவினைப் பொருள்காட்சி வந்துருதுல்லே அந்தப்பக்கங்களில்.

  தமிழ்நாட்டுலேதான் அவ்வளவா இல்லைன்னு நினைக்கிறேன்.

  தஞ்சாவூர் பெயிண்டிங் கடைக்காரரிடம் தமிழில் பேசலாம்:-)

  உங்க ரெண்டு பதிவையும் மிஸ்பண்னிட்டு இப்போ மூணாவது மூலமா வந்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தில்லி ஹாட்- சில கடைகள் தான். இங்கே ஏகப்பட்ட இடமும், கடைகளும்......

   இப்ப கூட ராஜஸ்தான் மேளா துவங்கி இருக்கு இன்னிக்கு - பாபா கரக் சிங் மார்க்-ல. சனி/ஞாயிறு முடிஞ்சா போகணும்!

   அட்லீஸ்ட் வந்துட்டீங்களே.... அதுதான் முக்கியம்! :)

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 19. பீங்கான் கைப்பை மிக அழகு.கூடை பக்கத்தில் இருக்கும் மரக்கார் எங்கள் வீட்டுக் கொலுவில் இடம் பெற்று இருக்கிறது. முன்பு கர்நாடக டூர் போனபோது மகள் வாங்கி வந்த மரக்கார்.
  படங்கள், செய்திகள் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   Delete
 20. ;)))) தத்ரூபமான சிலைகள் ... கண்ணைக்கவர்ந்தன.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை. கோ. ஜி.

   Delete
 21. அற்புதமான சிலைகள். அனைத்தும் கண்ணைக் கவர்கின்றன.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 22. //- பாபா கரக் சிங் மார்க்-ல. //


  ஆஹா.... கைவினைப்பொருட்கள் கடைகள் வரிசைக்கு எதிரில் உள்ள கோவிலில் க்யூட்டா ஒரு ஹனுமன் இருக்கார்!!!

  தில்லிஹாட் நான் போன காலத்தில் நிறைய கடைகளோடு இருந்துச்சே. இப்ப *** தேய்ஞ்சு கட்டெறும்பாச்சோ?

  http://thulasidhalam.blogspot.com/2007/03/blog-post_573.html

  ReplyDelete
  Replies
  1. இப்பவும் தில்லி ஹாட்-ல நிறைய கடைகள் இருக்கு - ஆனா சூரஜ்குண்ட் மாத்ரி விஸ்தாரமா இடம் இல்லாததால அவ்வளவு சிறப்பா இல்லைன்னு தோணியது......

   ஹனுமன் - மூணு கோவில் இருக்கு எதிரே - பிள்ளையார் கோவில், பக்கத்திலே ஹிந்தி கோவில்கள் இரண்டு... எந்தக் கோவில் சொல்றீங்க துளசி டீச்சர்?

   Delete
 23. இடது ஓரம் இருக்கும் புள்ளையார் கோவில். மதுரை மீனாக்ஷி, ஐய்யப்பன்,முருகன் எல்லாம் இருப்பாங்க. சனி பகவானுக்கு எண்ணெய் தீபமேற்றும் ராட்சஸ கடாய் இருக்கு பாருங்க அங்கே மரத்தடி பக்கத்தில் இருக்கும் ராமர் & கோ இருக்கு பாருங்க அதுலே இருக்கும் அனுமன்.

  மேல் விவரம் இதில்
  http://thulasidhalam.blogspot.com/2007/03/blog-post_27.html

  ReplyDelete
  Replies
  1. தகவலுக்கும் இணைப்பிற்கும் நன்றி டீச்சர். இப்ப தான் போய் படிச்சுட்டு வந்தேன்!

   இந்த கோவில் பக்கத்துல இருக்கும் தமிழ் கோவில் பத்தி நானும் எழுதி இருந்தேன். நீங்க படிச்சு கருத்தும் எழுதி இருந்தீங்க!

   லிங்க் இதோ: http://venkatnagaraj.blogspot.com/2012/07/18.html

   Delete
 24. படங்களும் கம்மென்ட்சும் ரசிக்க வைத்தன !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....