எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, February 20, 2013

பதிவுலகில் ப்ரையன் லாரா

பதிவுலகில் நான் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கும் சில பதிவர்களைப் பற்றிய பகிர்வு இது. 2009 ஆம் ஆண்டு பதிவுலகிற்கு வந்த பிறகு நான் தொடரும் பதிவர்களில் பல பதிவுகள் எழுதிய சில பதிவர்கள், மற்றும் அவர்களுடான எனது நட்பு ஆகிய விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இன்று எனக்கு ஒரு வாய்ப்பு! வாங்க பார்க்கலாம் :)

1.  கீதா சாம்பசிவம்

2005-ஆம் வருடத்திலிருந்து தமிழ் வலைப்பதிவுலகில் தனது முத்திரையைப் பதித்து வரும் திருமதி கீதா சாம்பசிவம் தனது எண்ணங்கள் வலைப்பூவில் இது வரை எழுதிய பதிவுகள் 1488. தனது அனுபவங்கள், பயணக் கட்டுரைகள், கதைகள் என பல தலைப்புகளில் பதிவுகள் எழுதி வரும் இவர், இந்த வலைப்பூ தவிர கண்ணனுக்காக, சாப்பிடலாம் வாங்க, பேசும் பொற்சித்திரமே, என் பயணங்களில், ஆன்மீகப் பயணம் என இன்னும் ஐந்து வலைப்பூக்களிலும் எழுதி வருகிறார். சென்னையின் அம்பத்தூர் வாசியான இவர் தற்போது ஸ்ரீரங்கத்துக்கு வந்த பிறகு நான்கைந்து முறை சந்தித்து விட்டேன். ஒவ்வொரு முறையும் நான் திருச்சி வரும் போதும் இவரைச் சந்திக்கா விட்டால், ‘க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்என்று சொல்லும் இவரது பாசத்திற்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன். 

2.   துளசி கோபால்

துளசிதளம் எனும் தளத்தில் 2004 – ஆம் வருடம் எழுத ஆரம்பித்த இவர் இதுவரை 1402 பதிவுகள் எழுதி இருக்கிறார். இவர் எழுதும் பயணக் கட்டுரைகளில் எத்தனை எத்தனை விவரங்கள். பார்க்கும் அத்தனை விஷயங்களையும் நினைவில் வைத்துக் கொண்டு இவர் தனது கட்டுரைகளில் எழுதுவதைப் பார்த்தால் தான் எனக்கு பொறாமை. பயணக் கட்டுரைகள் எழுதுவதில் எனக்குப் பிடித்தம் ஏற்படக் காரணமானவர் இவர் தான். தான் எழுதும் கட்டுரைகளில் அவர் எடுத்த புகைப்படங்களையே இணைத்து சிறப்பான பதிவுகள் எழுதும் இவரை நான் இதுவரை மூன்று முறை சந்தித்து இருக்கிறேன் – ஒரு முறை தில்லியில், இரண்டாவது சென்னையில் மூன்றாம் முறை திருச்சியில். இவருடனான எனது நட்பு தொடர ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.

3.   புதுகைத் தென்றல்

ஹைதை ஆவக்காய் பிரியாணி, பயணக் கட்டுரைகள், சினிமா, சமையல், கொசுவத்தி என பல தலைப்புகளில் தனது புதுகைத்தென்றல் வலைப்பூவில் இதுவரை 936 பதிவுகள் வெளியிட்டு இருக்கும் புதுகைத் தென்றல் வலைப்பூவில் எழுத ஆரம்பித்த்து 2007 – ஆம் வருடம்.  இரண்டு வருடத்திற்கு முன் தில்லி வந்த இவரை நானும் சக தில்லி பதிவர்களும் சந்தித்து நீண்ட நேரம் அளவளாவினோம். இது பதிவர்கள் சந்திப்பாக இல்லாது குடும்ப நண்பர்களின் சந்திப்பாகவே அமைந்தது! விரைவிலேயே 1000 பதிவுகள் எழுதிட இவருக்கு எல்லாம் வல்லவன் வாய்ப்புகள் தரட்டும்!

4.   மோகன்குமார்

இவரை உங்களுக்கு அறிமுகம் செய்யவேண்டிய அவசியமில்லை. தொடர்ந்து தமிழ்மணத்தில் முதலாம் இடத்தினை தக்க வைத்திருக்கும் இவர் 2008-ஆம் ஆண்டு எழுத ஆரம்பித்து இதுவரை 677 பதிவுகளை தனது வீடு திரும்பல் வலைப்பூவில் எழுதி இருக்கிறார். இவர் எழுதாத விஷயமே இல்லை எனச் சொல்லலாம்! புத்தகம்/சினிமா விமர்சனங்கள், பல விஷயங்களை தன்னகத்தே கொண்ட வானவில், தொலைக்காட்சி விமர்சனங்கள், என பல துறைகளில் கலக்கும் இவரது பதிவுகளில் இவர் எழுதும் சாதாரணமானவர்களின் நேர்காணல் எனக்கு மிகவும் பிடித்த விஷயம். இவரையும் இதுவரை மூன்று – நான்கு முறை சந்தித்து இருக்கிறேன். ஒவ்வொரு சந்திப்பும் சுவாரசியம்!

5.   பழனி. கந்தசாமி

2009-ஆம் வருடம் சாமியின் மன அலைகள் எனும் வலைப்பூவில் எழுத ஆரம்பித்த இவர் இதுவரை எழுதிய பதிவுகள் எண்ணிக்கை 536. சிறப்பான பல விஷயங்களை எழுதி வரும் இவரை நான் சந்தித்தது பழைய தில்லியின் ரயில் நிலையத்தில்! கோவையிலிருந்து ஹரித்வார் செல்லும் போது வழியில் சந்தித்தேன் இவரை. கோயம்புத்தூருக்கே உண்டான குசும்புடன் எழுதும் இவரது பல பதிவுகளுக்கு நான் ரசிகன்!

இவர்கள் தவிர நான் நேரில் சந்திக்காவிட்டாலும் தொடர்ந்து படித்து வரும் வலைப்பூக்களும் அவர்கள் எழுதிய பதிவுகளின் எண்ணிக்கையும், எழுத ஆரம்பித்த வருடமும் கீழே!

1184 – ஐந்து ஆசிரியர்கள் குழு – எங்கள் பிளாக் - 2009
823 - இராஜராஜேஸ்வரி – மணிராஜ் – 2011
510-சென்னை பித்தன்–நான் பேச நினைப்பதெல்லாம்–2008
439 – சங்கவி – 2009
406 – ராமலக்ஷ்மி – முத்துச்சரம் – 2008சரி, இதெல்லாம் இந்தப் பதிவில் இன்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன? என சந்தேகத்தோடு படிக்கும் உங்களுக்கு காரணம் சொல்ல வேண்டிய தருணம் வந்து விட்டது! கிரிக்கெட் விளையாட்டில் டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்க்ஸில் 400 ரன்கள் எடுத்த ஒரே வீரர் பிரையன் லாரா மட்டுமே! ஆனால் நமது தமிழ் வலைப்பூக்களில் 400 பதிவுகளுக்கு மேல் எழுதிய லாராக்கள் பலர். அவர்களைப் பற்றி சொல்லி நானும் அந்த பட்டியலில் இன்று இடம் பெறுகிறேன் எனச் சொல்லவே இந்த பதிவு! ஆமாங்க இது என்னுடைய நானூறாவது பதிவு!

உங்கள் வாழ்த்துகளுக்கு முன்கூட்டியே நன்றி சொல்லி விடுகிறேன்!தொடர்ந்து இந்த தளத்தில் சந்திப்போம்!

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

90 comments:

 1. நானூறு நாலாயிரமாக நல் வாழ்த்துக்கள்!

  ரேகா ராகவன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சித்தப்பா......

   Delete
 2. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
 3. அறிமுகங்கள் அருமை... அனைத்து தளங்களுமே நான் ரெகுலராக பார்வையிடும் தளங்களே...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்கூல் பையன்.

   Delete
 4. 400 தொட்டமைக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள். முன்கூட்டியே வாழ்த்தை எதிர்பார்த்து நன்றி சொல்லிட்டா மட்டும் போறுமா வெங்கட்...? ட்ரீட் தரணுமாக்கும் செமத்தியா!

  ReplyDelete
  Replies
  1. ட்ரீட் தானே கணேஷ்... அடுத்த சென்னை பயணத்தின் போது தந்தால் போச்சு! :)

   தங்களது வருகைக்கும் மனமார்ந்த வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கணேஷ்.

   Delete
  2. எங்கண்ணா என்னை விட்டுட்டு ட்ரீட்டுக்குலாம் வர மாட்டாராம் சொல்ல சொன்னார். அண்ணன் தங்கையை பிரித்த பாவம் உங்களுக்கு வேணாம் சின்ன சகோ!

   Delete
  3. உங்க நம்பர் மூணு! ஏற்கனவே கணேஷ், சேட்டை இரண்டு பேரும் சொல்லிட்டாங்க! உங்களுக்கும் சேர்த்து ட்ரீட் கொடுத்துட்டா போச்சு!

   வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராஜி!

   Delete
 5. வெங்கட்ஜீ! எனது அபிமானம் மற்றும் மரியாதைக்குரிய பதிவுலக முன்னோடிகளைப் பற்றிக் குறிப்பிட்டு, உங்களது 400-ஐயும் சொல்லிட்டீங்க! கணேஷுக்கு ட்ரீட் கொடுக்கும்போது, பக்கத்துலே எனக்கும் ஒரு சீட் கொடுங்க!

  ReplyDelete
  Replies
  1. சீட் தானே போட்டுடுவோம்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், இனிய வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சேட்டை அண்ணே!

   Delete
 6. நானூறு , பல்கிப்பெருக மனமார வாழ்த்துகின்றேன்.

  அடிச்சு ஆடுங்க!!!!

  கண்டுக்கிட்டதுக்கு நன்றீஸ்.

  ReplyDelete
  Replies
  1. நீங்க தானே எங்களுக்கெல்லாம் முன்னோடி!

   வாழ்த்துகளுக்கு நன்றி துளசி டீச்சர்......

   Delete
 7. 400-க்கு முதலில் வாழ்த்துக்கள்...

  வலைச்சரம் வந்து விட்டோமா என்று ஒரு நிமிடம் திகைத்தேன்...

  மேலும் அடிச்சி ஆட வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 8. ஆஹா மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ.

  (என்னைப்பத்தியும் சொல்லியிருக்கீங்க நன்றீஸ்)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி புதுகைத் தென்றல்.

   Delete
 9. நம்ம ஊருல பாதிப்பேருக்கு மேல நூறு - இருநூறு என்று அடித்து விட்டு ஆடிக்கிட்டு இருக்காங்க. அவர்களையெல்லாம் அடிக்காதீங்க, தள்ளாடாதீங்க என்று அறிவுறுத்துவோம். ஆனா நீங்களும் மற்ற பதிவர்களும் நானூறு, ஐநூறு, ஆயிரம்னு அடிச்சும் ஆடாம ஸ்டெடியா நிக்கிறீங்களே! வாழ்க! வாழ்க! நீங்கள் அனைவரும் இன்னும் நிறைய அடிங்க என்று வாழ்த்துகிறோம்.

  ReplyDelete
  Replies
  1. அட வாங்க அண்ணாச்சி - அந்த நூறு/இருநூறு வேற விதம்!

   தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் [ஈஸ்வரன்] அண்ணாச்சி.

   Delete

 10. நானூறாவது பதிவுக்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்..
  நலமுடன் வாழ்க .. வளமுடன் வளர்க..


  // 823 - இராஜராஜேஸ்வரி – மணிராஜ் – 2011 //

  எமது பதிவையும் அறிமுகப்படுத்தி சிறப்பித்தற்கு இனிய நன்றிகள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 11. 400க்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ராஜி.

   Delete
 12. 400aaaaaaa.....wow. First century easy thaan. Adukku appuramum ninnu aadaradhu great thaan. Adukku oru special salaam foe u and other munnodigal. Congrats Anna

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அப்பாவி தங்கமணி.

   Delete
  2. innaa? first century easyaa? nalla solveengale?!

   Delete
  3. அப்பாதுரை: அவங்க முதல் சென்சுரி சுலபமா அடிச்சிட்டாங்க போல! :)))

   Delete
 13. வாழ்த்துக்கள் வெங்கட்நாக்ராஜ்.

  நீங்கள் குறிபிட்டவ்ர்களை போல் நீங்களும் சிறப்பு பெற வாழ்த்துக்கள்.
  நீங்கள் குறிப்பிட்ட பதிவர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் மனமார்ந்த வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 14. உங்களது நானூராவது பதிவுக்கு வாழ்த்துகள்!

  நாலாயிரம், நாற்பதாயிரம் என்று மேலும் மேலும் வளர ஆசிகள்.

  'ப்ரையன் லாரா' பதிவர்களையும் நினைவில் கொண்டு அவர்களையும் பாராட்டி, அவர்களுடன் உங்களது நட்பையும் தெரியப் படுத்தியது அருமை!
  எல்லோருமே தெரிந்தவர்களாக இருப்பதில் அலாதி மகிழ்ச்சி!

  பாராட்டுக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் இனிய கருத்துப் பகிர்வுக்கும், மனமார்ந்த வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.....

   Delete
 15. பிரமிக்க வைக்கும் சாதனை. பாராட்டுக்கள். மேலும் தொடர்ந்து எழுத வாழ்த்துகிறேன்.

  கீதா அவர்கள் எழுத்து இணையத்தில் பரவலாக இருப்பதால் அவரை single blog வைத்து எடை போடமுடியாது. துளசி அவர்களின் 'பிஜி' பயணப் புத்தகம் (புண்காட்சியில் வாங்கிய மருந்து) பதிவாக எழுதியது என்பதை நம்பவே முடியவில்லை. கடுமையான உழைப்பு. இவங்க எல்லாருமே விதவிதமா எழுதுறாங்க. prolificனு பார்க்கிறப்ப ஏறக்குறைய ஆஸ்திகம் என்ற வகையில் மட்டும் எழுதிவரும் இராரா அவர்களை அட்ச்சுக்க ஆள்கிடையாத்..........:-)

  ஒரு பதிவு எழுதுவதற்குள் ஓய்ந்து விடுகிறது. லாராக்களின் உழைப்பின் பின்னே இருக்கும் தன்முனைப்பு வியக்க வைக்கிறது. அனைவருக்கும் பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் விரிவான கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

   ஃபிஜி தீவு பற்றிய பயணப் புத்தகம் அருமையான ஒன்று. துளசி டீச்சர் எழுதிய மூன்று புத்தகங்களையும் படித்து விட்டேன்....

   Delete
 16. 400க்கு வாழ்த்துகள். லேட்டா வந்தாலும்....என்னோட வாழ்த்தை முதல் வாழ்த்தா எடுத்துக்கணும்....ரைட்டா!

  சேம் பின்ச்! இன்னிக்கு இரண்டு பேருமே ”கீதா மாமி” பற்றி எழுதியிருக்கோம்...:))

  ReplyDelete
 17. 400 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
  இன்னும் மென்மேலும் வளரவும் வாழ்த்துக்கள் .

  நீங்கள் சொன்ன பதிவர்களை நான் படித்ததில்லை.
  இனி அறிமுகம் செய்து கொள்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

   Delete
 18. 400 க்கு வாழ்த்துக்கள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அமுதா கிருஷ்ணா.

   Delete
 19. 400-க்கு வாழ்த்துகள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

   Delete
 20. 400 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அண்ணே... என்னையும் அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி...

  என்றும் அன்புடன்
  சதீஸ் சங்கவி...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சங்கவி.

   Delete
 21. வாழ்த்துகள் வெங்கட்!

  இந்த மாதிரி ’ப்ரெயின்’ லாராக்களைப் பார்த்து தான் என் போன்ற ‘ப்ரெயின்’ இல்லாத லாராக்களும் ஏதாவது எழுத முயற்சிக்கிறோம். இவர்களை மீண்டும் நினைவு படுத்தி உற்சாகமூட்ட முயற்மைக்கு நன்றிகள்!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றிடா சீனு [வேங்கட ஸ்ரீனிவாசன்].

   Delete
 22. நானூறாவது பதிவுக்கு எங்கள் வாழ்த்துகள்.

  'எங்கள்' பெயரும் லிஸ்ட்டில் இருப்பது கண்டு சந்தோஷம் ஏற்பட்டது. உங்கள் மனதில் இடம் பெற்று, பதிவில் இடம்பிடித்த சக பதிவர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்....

   Delete
 23. ரெண்டு பேருமே பேசி வைச்சிண்டீங்களா? :)))) 400 அடித்திருக்கும் வெங்கட் விரைவில் 1000 அடிக்க வாழ்த்துகள்.

  நீங்க குறிப்பிட்டிருப்பவர்களில் பழனி.கந்தசாமியையும், நாஞ்சில் மனோவையும் தவிர மற்றப் பதிவர்கள் அறிமுகம் ஆனவர்களே. அனைவருக்கும் என் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. பேசியெல்லாம் வச்சிக்கல.... :) அதுவா அமைஞ்சது!

   தங்களது வருகைக்கும் மனமார்ந்த வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   Delete
 24. //400க்கு வாழ்த்துகள். லேட்டா வந்தாலும்....என்னோட வாழ்த்தை முதல் வாழ்த்தா எடுத்துக்கணும்....ரைட்டா!//

  ஹஹ்ஹா, மிரட்டி இருக்காங்க பாருங்க! :)))))

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்.... அதான் சரிங்கன்னு பணிவா பதில் எழுதிட்டேன்! :)

   Delete
 25. மகிழ்வும் பிரமிப்பும் சகோ... வாழ்த்துகள்! சக லாராக்களுக்கும்:)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

   Delete
 26. மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே ....:)

  சிவாவின் கற்றதும் பெற்றதும்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சிவா.

   Delete
 27. அன்புடையீர் வணக்கம்! இந்த வாரம் “ வலைச்சரம் ” http://blogintamil.blogspot.in எனது ஆசிரியர் பணியில், நாளைய பதிவில் (21.02.2013) உங்கள் வலைப்பதிவினைப் பற்றி எழுதுகிறேன். நாளைய 21.02.2013 வலைச்சரம் கண்டு தங்கள் கருத்தினைச் சொல்லவும். நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தகவலுக்கு மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி! காலையில் படித்து விடுகிறேன்.....

   Delete
 28. 400 தொட்டமைக்கு வாழ்த்துக்கள்...Almost every single post of yours has been informative,useful,interesting and entertaining...

  Keep going bro...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும், உற்சாகமூட்டும் கருத்திற்கும் மிக்க நன்றி ரெவெரி.

   Delete
 29. ஆஹா! நானூறு அருஞ்சாதனை!.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 30. 400வது பதிவுக்கு வாழ்த்துக்கள் பாஸ் நீங்கள் குறிப்பிட்ட பதிவர்கள் பலர் பதிவுலகில் அறிந்தவர்கள் தான் சிலரை உங்கள் பதிவின் மூலம் அறிந்துகொண்டேன் நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி K.s.s.Rajh.

   Delete
 31. நானூறுக்கு நல்வாழ்த்துகள்! என்னையும் பட்டியலில் சேர்த்திருப்பதற்கு நன்றி:)! பதிவில் குறிப்பிட்டிருக்கும் மற்ற அனைவருக்கும் என் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் மனமார்ந்த வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 32. சாதனைக்கு வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி குட்டன்.

   Delete
 33. வாழ்த்துக்கள் நாகராஜ் ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அருணா.

   Delete
 34. நானூறுக்கு நானொரு வாழ்த்து சொல்லிக்கறேன்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 35. 400 வது பதிவுக்கு வாழ்த்துக்கள மென்மேலும் வளரவும் வாழ்த்துக்கள் .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அவர்கள் உண்மைகள்.

   Delete
 36. வலைச்சர அறிமுக வாழ்த்துக்கள்...

  (http://blogintamil.blogspot.in/2013/02/4.html)

  ReplyDelete
  Replies
  1. வலைச்சரத்தில் அறிமுகம் - தகவலுக்கு நன்றி தனபாலன்.

   Delete
 37. மனம் நிறைந்த வாழ்த்துகள் வெங்கட். இன்னும் நிறைய பதிவுகள் நன்றாக எழுதி ஆயிரத்தை சீக்கிரமே தாண்ட ஆசிகள்.
  லாரா எனக்கு ரொம்ப்ப் பிடிக்கும்.
  டான் ப்ராட்மேன்,டெண்டுல்கர் ரேஞ்சுக்குப் போக வாழ்த்துகள்.
  உங்களுக்குப் பிடித்தவர்களை அறிய மகிழ்ச்சியாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் மனமார்ந்த வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....

   Delete
 38. 400 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் வெங்கட். பதிவுலகின் மற்ற லாரக்களையூம் நினைவூட்டி பதிவு எழுதியது மிகச்சிறப்பு. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரமா ரவி.

   Delete
 39. வாழ்த்துகள் :)

  தென்றல் வந்து சென்றதுபோல ஒரு சந்திப்பு மீண்டும் எப்பயோ..?

  ReplyDelete
  Replies
  1. அதே கேள்வி தான் எனது மனதிலும்!

   வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி முத்துலெட்சுமி.

   Delete
 40. 400 வது பதிவுக்கு வாழ்த்துக்கள மென்மேலும் வளர வாழ்த்துக்கள் .

  ReplyDelete
  Replies
  1. தங்களது முதல் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ராய துரை!

   Delete

 41. நீங்கள் நன்றாக சுவாரசியமாக எழுதுகிறீர்கள். உங்கள் பதிவுகளை பார்த்தபின்தான் எனக்கு எழுத வேண்டும் என்ற ஆசை எனக்கு வந்தது. என்னுடய முதல் பதிவை ஓரு வாரத்திற்கு முன்புதான் தமிழ்மணத்தின் மூலம் வெளியிட்டுள்ளேன்.


  உங்களுக்கு என்னுடய மனமார்ந்த வாழ்த்துக்கள் வெங்கட்.


  புதுகை ரவி

  ReplyDelete
  Replies
  1. தங்களது முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புதுகை ரவி. உங்கள் பக்கத்திற்கும் வந்து படிக்கிறேன்....

   Delete
 42. வாழ்த்துக்கள். தொடர்ந்து 500, 1000 பதிவுகளை தொட அட்வான்ஸ் வாழ்த்துக்கள் அண்ணா.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரஹீம் கஸாலி.

   Delete
  2. தங்களின் வெற்றிகரமான 400 ஆவது பதிவுக்கு என் மனமார்ந்த இனிய நல்வாழ்த்துகள், வெங்கட்ஜி. ;)))))

   Delete
  3. தங்களது வருகைக்கும் மனமார்ந்த வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வை.கோ. சார்.

   உங்கள் போன்றவர்கள் தரும் உற்சாகமே காரணம்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....