எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, February 1, 2013

ஃப்ரூட் சாலட் - 31 – சிறைப்பறவைகளின் இசை வெளியீடு - ஆடு பலி எதற்கு?


இந்த வார செய்தி:

தலைநகர் தில்லியின் திஹார் ஜெயில். இங்கே அடைக்கப்பட்டிருக்கும் குற்றவாளிகள் சிலர் சேர்ந்து உருவாக்கிய ஒரு இசைக்குழு, இசைத்தொகுப்பினை வெளியிட்டு இருக்கிறார்கள் – பாடல் தொகுப்பின் பெயர் ஜானே அஞ்சானே’. 

பாடல் வரிகளை எழுதியது முதல், இசை அமைத்தது, வாத்தியங்கள் வாசித்தது என அனைவருமே ஏதோ ஒரு குற்றத்திற்காக சிறையில் அடைபட்டிருக்கும் நபர்கள் தான்.

குற்றவாளிகளாக இருந்தாலும், தன்னுடைய திறமையை வளர்த்துக் கொண்டு இப்படி இசைத் தொகுப்பினை வெளியிட்டு இருப்பது மகிழ்ச்சிக் குரியது. தங்களது தண்டனை காலம் முடிந்து வெளிவந்தபின், வாழ்க்கையில் முன்னேறவும், நல்ல வாழ்க்கை வாழவும் நல்லதொரு வழியை இசை இவர்களுக்கு வழங்கட்டும்....

இந்த இசைத் தொகுப்பு நேற்று தான் வெளியிடப் பட்டது. பாடல்கள் கிடைத்தால் கேட்டு வரும் ஃப்ரூட் சாலட் பகுதிகளில் பகிர்கிறேன்.

இந்த வார முகப்புத்தக இற்றை:


அடுத்தவரிடம் அவரைப் பற்றிப் பேசும்போது நூறு முறை யோசியுங்கள். அவரிடத்தில் உங்களை வைத்து யோசித்துப் பாருங்கள் – நீங்கள் சொல்ல வந்த விஷயம் உங்களுக்கு எப்படி இருக்குமென. அனைவரின் மனதும் மென்மையானது. யாருடைய மனதையும் புண்படுத்தாதீர்கள்.


இந்த வார குறுஞ்செய்தி

PEOPLE NOWADAYS ARE LIKE BLUE TOOTH. IF YOU STAY CLOSE, THEY STAY CONNECTED AND IF YOU GO AWAY THEY FIND NEW DEVICES. SAD BUT TRUE!

ரசித்த புகைப்படம்: 


சிலை வடித்த சிற்பியைப் பாராட்டுவதா, இல்லை எந்த பொருளிலும் அழகாய் உருமாறும் பிள்ளையாரைப் பாராட்டுவதா.... 

  
ராஜா காது கழுதை காது

கல்யாண ஊர்வலத்தில் மணமகன் குதிரையில் உட்கார்ந்து ஊர்வலம் வர, அவர் முன்னால் வாத்தியங்கள் முழங்க, ஆண்களும் பெண்களும் செம ஆட்டம் ஆடியபடியே வந்து கொண்டிருந்தார்கள். பார்த்துக் கொண்டிருந்த போது, அங்கே இருந்த ஒரு தமிழர் ஒருவர் சொன்னது – “எவனுக்கோ கல்யாணம் ஆகுது. அவன் சந்தோஷமா இருக்கப் போறான் – அதுக்கு எதுக்கு இவங்கல்லாம் இப்படி ஆட்டம் போடணும்? லூசுத்தனமா இருக்கே!அதற்கு பக்கத்தில் இருந்தவர் சொன்னது – அட நீ வேற? கல்யாணம் பண்ணிட்டு அவன் வாழ்க்கைப் பூறா திண்டாடப் போறான் அதை நினைச்சு தான் இப்படி சந்தோஷமா ஆடறாங்க!


ரசித்த காணொளி:

குட்நைட் காயில் பற்றிய இரண்டு காணொளிகள் நீங்கள் பார்த்திருக்க முடியும். இருந்தாலும் இந்த இரண்டு விளம்பரங்களுமே ரசிக்க முடியும் மீண்டுமொருமுறை!
படித்ததில் பிடித்தது:

பத்தொன்பது மா!

காதல் வயப்பட்ட பெண் ஒருத்தி, தன் காதலன் தன்னைப் பிரிந்து சென்ற துயரால், கனவில் புலம்பி நனவில் இளைத்தாள். அவள் உடலுக்கு வந்த நோயைக் [பசலை] கண்ட தாய், அவளுக்காகக் கடவுளை வேண்டி, ஒரு பூசாரியை அழைத்து ஆட்டை வெட்டிப் பலி கொடுக்கச் செய்தாள். இதைப் பழந்தமிழ் நூல்களில் ‘வெறியாட்டுஎன்பர்.

இதே தலைப்பில் வடலூர் வள்ளலார் சுவாமிகள் ஒரு பாடலை எழுதியுள்ளார். அப்பாடலில், ‘இந்தப் பெண் தலைவனிடம் கொண்ட மோகத்தால் வருந்த, மற்றப் பெண்களும் ஊராரும் பழித்துத் தூற்ற, இந்த ஆடு, என்ன பாவம் செய்ததோ? ஏதும் செய்யாத இந்த ஆட்டை வெட்டலாமா? இதனைக் கண்டு மன்மதன் அஞ்சுவானா? [அஞ்சுமா?] இவள் துன்பம் ஆறுமா? இச்செய்தி இவளைக் காதலித்தவனுக்கு எட்டுமா? எனும் பொருள் அமைந்துள்ளது. இப்பாடலில் இறுதி இரண்டடிகளில் ‘பத்தொன்பது மா’ [19 மா – 5 + 6 + 8 = 19] என்ற எழுத்துகள் வரிசையாக அமைந்துள்ளன. இப்பாட்டில் உள்ள பத்தொன்பது மா என்னும் எழுத்துகளை அஞ்சுமா, ஆறுமா, எட்டுமா என்று பிரித்துப் பொருள் கொள்ளுமாறு வள்ளலார் ‘வெறிவிலக்குஎன்ற துறையில் பாடியுள்ளார்.

இம்மையல் தையல்நைய ஏசூர மாதரும் ஆ
இம்மை’உமை இம்மைஐயோ என்செய்த[து] அம்மைதன்
மாமா மா மாமா, மா மாமா மா மாமா, மா
மாமா மா மாமாமா மா.

வள்ளலாரின் சொல்லாட்சித் திறத்தை இப்பாடல் எடுத்துக் காட்டுகிறது. இராமலிங்க அடிகளாரின் திருவருட்பா – தனிப் பாசுரத் தொகையில் இப்பாடல் இடம் பெற்றுள்ளது.

-          இரா. இராமமூர்த்தி, தினமணி தமிழ்மணி – 27.01.2013.

மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

40 comments:

 1. அனைவரும் தொடர வேண்டிய முகப்புத்தக இற்றை...

  பிள்ளையார் - எப்படி இருந்தாலும் அழகு...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன்.

   நலம் தானே.... சற்றே இடைவெளிக்குப் பிறகு உங்களை பதிவுலகில் பார்த்ததில் மகிழ்ச்சி.

   Delete
 2. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்கூல் பையன்.

   Delete
 3. சுவையான ஃப்ரூட் சாலட்.....:)

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி என்னவளே!

   Delete
 4. தனிப் பாசுரத் தொகை ரசிக்கவைத்தது ..

  ஃப்ரூட்சாலட் ருசிக்கவைத்தது ..பாரட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 5. வழக்கம்போல் சுவையான அருமையான
  புரூ சாலட். பகிர்வுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 6. Replies
  1. தமிழ்மணம் நான்காம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 7. சுவையோ சுவை.

  குட் நைட் விளம்பரத்தில் இரண்டாவது விளம்பரம் எனக்கு மிகமிகப் பிடிக்கும். 'சீட்டர் காக்' என்று பாட்டி கத்துவதும் தாத்தா தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு நிற்பதும் ரசிக்க வைக்கும்.

  ReplyDelete
  Replies
  1. இரண்டாவது எனக்கும் மிகப் பிடித்த விளம்பரம்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

   Delete
 8. முகபுத்தக வரிகள் அருமை!!
  தமிழில் சொல்லபடாத உணர்வுகளே இல்லை.. வெறியாட்டு, வள்ளலாரின் பத்தொன்பது மா...மிக அருமை!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சமீரா.

   Delete
 9. இசையின் மீதான ஈடுபாடே அவர்கள் மனதை நல்வழிப்படுத்தியிருக்கும் என நம்புவோம்.

  நல்ல தொகுப்பு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 10. வள்ளலாரின் மா மிக சிறப்பு. படமும் அழகு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.

   Delete
 11. சிறைக்கைதிகளை இசை மாற்றட்டும்.
  எப்போதும் ரசிக்கும் விளம்பரங்களை இங்கேயும் ரசித்தேன்.
  பத்தொன்பது மா மிகவும் அருமை!
  ப்ரூட் சால்ட் - நல்ல சுவை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

   Delete
 12. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 13. அனைத்தும் அருஞ்சுவை !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி....

   Delete
 14. good knight விளம்பரம் நானும் ரசிக்கும் ஒன்று. இந்த வயதிலும் இருக்கும் அன்யோன்யத்தை (நடிப்பு தான் இருந்தாலும்) ரசிப்பேன்.

  அந்தப் பிள்ளையார் முகம் எப்படி வெட்டவெளியில் நிற்க முடியும் ?என்று யோசித்துக் கொண்டு பார்த்தால் தும்பிக்கை மடிமேல் இருக்கிறது.

  ப்ரூட் சாலட் மிக சுவையே .

  ராஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

   Delete
 15. ஃப்ரூட் சாலட் - 31
  இன்று அனைத்து பகிர்வுகளும் அருமை நாகராஜ் ஜி.
  த.ம. 8

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா.....

   Delete
 16. வழக்கம் போல ரசித்துப் படிக்க முடிந்தது. அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணேஷ்.

   Delete
 17. நேற்று தான் நாங்கள் பேசிக்கொண்டோம். 'பிள்ளையாரை எப்படியெல்லாம் வரைய முடிகிறது! எதிலும் பொருந்தி காட்சியாகி விடுகிறாரென்று...'மேலுமொரு வடிவில் மேலுமொருவர் கற்பனையில் காட்சியாகிறார் இங்கு!

  வள்ளலார் எத்தகு 'மாமனிதர்'! மனித நிலையிலிருந்து தெய்வ நிலைக்கு உயர்ந்தவர் ... ! வியப்பை விரிக்கும்படி அவரின் பாடலொன்றை காட்டித் தந்தமைக்கு நன்றி சகோ.

  கழுதை காது குபீர் சிரிப்பு.

  சாலட்டின் பிறவும் வழமைபோல் தனிச் சிறப்புடன்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் விரிவான கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

   Delete
 18. நவீன பிள்ளையாரை வடித்த சிற்பி பாராட்ட வார்த்தைகள் இல்லை.

  அனைத்தும் நன்று.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 19. சிலை அழகு!ஃப்ரூட்சாலட் சுவையோ சுவை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி குட்டன்.

   Delete
 20. இசை மனதை மென்மையாக்கும் என்பதற்கு சிறை கைதிகளின் இசைக்குழு சாட்சி.
  பிள்ளையார், வள்ளலார் பாடல் பகிர்வு அனைத்தும் அருமை.

  ஃப்ரூட்சாலட் அருமையாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....