என் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, February 14, 2013

ஹொளிகே – செய்ய ஒரு சுலப வழி[சூரஜ்குண்ட் மேளா போகலாம் வாங்க! – மூன்றாம் பகுதி]

என்ன நண்பர்களே, சூரஜ்குண்ட் மேளா போகலாம் வாங்க! – முதலாம் பகுதி மற்றும் இரண்டாம் பகுதி படிச்சு/பார்த்து ரசிச்சீங்களா? வாங்க இது கடைசி பகுதி.

 தோலால் செய்த கடிகாரம்  - 
முள் கூட தோலான்னு கேட்கக்கூடாது கேட்டோ!


 

செருப்பு வரிசை!

போன பகுதிகளில் பார்க்காத சில விஷயங்கள் இந்த பகுதியில் பார்க்கலாம். தோல் கொண்டு செய்யப்பட்ட பொம்மைகள் சில கடைகளில் வைத்திருந்தார்கள். ஒரு கடிகாரம் பார்க்கவே நல்லா இருந்தது. பக்கத்திலேயே கோலாப்பூரி செருப்புகள் விற்கும் கடை. அதிலே வரிசையாக செருப்புகளைக் கட்டி தொங்க விட்டிருந்தாங்க! அங்கே ஒரு கீ செயின் கிடைச்சது – செயின் ல என்ன கோர்த்துருந்தாங்க தெரியுமா? – மினி சைஸ்-ல ஒரு கோலாப்பூரி செருப்பு! – 30 ரூபாய் தான்...

 
ஆபியம், இஸ்தாபியம், மணியாபியம் - பச்சைக்குதிரை!

சின்ன வயசில பச்சை குதிரை தாண்டறதுன்னு ஒரு விளையாட்டு உண்டு. நீங்க தாண்டியிருக்கீங்களா? பெயிண்டட் மார்பிள் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு பொம்மை அச்சு அசலா இந்த விளையாட்டை நினைவுக்குக் கொண்டு வந்தது. நாங்க விளையாடும்போது “ஆபியம், இஸ்தாபியம், மணியாபியம்அப்படின்னு பாட்டு ஒண்ணு பாடிக்கிட்டே விளையாடுவோம்! முழு பாட்டு யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்களேன்!

 

ஆதிவாசி பிள்ளையார்

போன பதிவுல பிள்ளையார் சிலைகள் சொன்னதில, இரண்டு மூன்று பிள்ளையார் விட்டுப் போச்சு. மண்ணால செஞ்ச பொம்மைகள் நிறைய வைத்திருந்த இடத்தில இருந்த சில பிள்ளையார்கள் – அன்னப் பறவையில் அமர்ந்திருந்த பிள்ளையார், பிறைநிலாவில் அமர்ந்திருந்த பிள்ளையார், படகோட்டி பிள்ளையார், ஆதிவாசி பிள்ளையார்! எத்தனை எத்தனை வகை. கற்பனைக் குதிரையை ரொம்பவே தட்டி ஓட்டி இருக்காங்க அந்த பிள்ளையார்களை செய்தவர்கள்.டொல்லு குனிதா நம்


கூர்க் பாரம்பரிய உடையும் பொருட்களும்


இது என்னவென்று பின்னூட்டத்தில் சொல்லுங்க பார்ப்போம்!

கர்நாடகத்தின் பாரம்பரிய நாட்டுப்புற நாட்டியமான “டொல்லு குனிதா– இதில் பெரிய பெரிய மேளங்களை அடித்துக் கொண்டே பாட்டுப் பாடி நடனம் ஆடுவார்களாம். அவர்களைப் போல இரு கலைஞர்களின் சிலைகள் அங்கே நிறுத்தி வைத்திருந்தார்கள். அங்கே உட்கார்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டோம். போலவே கூர்க் மாவட்டத்தில் உள்ள பாரம்பரிய கிராமம் எப்படி இருக்கும், என்ன பொருட்கள் பயன்படுத்துவார்கள் என மாதிரியைச் செய்து வைத்திருந்தார்கள். அவர்கள் ஆடும் நடனம் பெயர் தெரியுமா ‘உம்ம தட்டா”.  ஆங்கிலத்தில் எழுதி வைத்திருந்ததைப் பார்த்தால் வேறு ஏதோ தோன்றியது!  

நம் ஊர் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் போலவே ஒரு ஆண் பொம்மையும், ஒரு பெண் பொம்மையும் பக்கத்திற்கு ஒன்றாய் அமர்ந்திருக்க, மொட்டைத் தலைப் பக்கத்தில் என்னை புகைப்படங்கள் எடுங்க என்று சொல்லி அதை உங்க பிளாக்-ல “மொட்டையும் சொட்டையும்னு போடுங்கஎன்று வேறு சொன்னார் என்னுடன் வந்திருந்த நண்பர்.  அவர் ஆசையைக் கெடுப்பானே என புகைப்படம் எடுத்தேன்.

உழைப்பாளி

போலவே, ஒரு ஏர்பிடித்து உழும் ஒரு உழவன், இரண்டு எருமை மாடுகளோடு இருக்கும் ஒரு சிலையைப் பார்த்த மற்றொரு நண்பர் அதன் முன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். எருமையை நோக்கி கையை நீட்டிக்கொண்டு நிற்கும் அவரை புகைப்படம் எடுத்து வைத்தேன்! – கையை நீட்டிக்கொண்டு அவர் இருப்பதைப் பார்த்தால் ‘இதோ அந்த எருமை போல வாழ வேண்டும்என அவர் பாடுவதைப் போல இருந்தது!


மேளாவில் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடந்தபடியே இருந்தது. பல்வேறு பள்ளிகள், கல்லூரிகளிலிருந்து வந்திருந்த மாணவ, மாணவியர்களின் நடனங்கள், வெளிநாட்டிலிருந்து வந்திருந்த கலைஞர்கள், கர்நாடகத்திலிருந்து வந்திருந்த கலைஞர்கள் என தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடந்தன. கொழும்புவிலிருந்து வந்திருந்த கலைஞர்களின் நிகழ்ச்சி மிகவும் நன்றாக இருந்தது. என்ன ஒரு வேகம் அந்த இளைஞனின் நடனத்தில் – அப்படியே சுழன்று கொண்டே இருந்தார் மூன்று நான்கு நிமிடங்களுக்கு – பூமியில் கையோ, காலோ இருப்பது போலவே தெரியவேயில்லை.

சுற்றிச் சுற்றி வந்தால் உங்களுக்கு பசி எடுப்பது நிச்சயம் தானே. அதற்காகவே அங்கே பல மாநிலங்களின் உணவகங்களும் இருந்தன. கர்நாடகம் மையக் கரு என்பதால் சில கர்நாடக உணவுகளைச் சுவைத்தோம். ராகி ரொட்டி, ஹொளிகே, புளியோகரே, பிஸிபேளாபாத், வாங்கி பாத், உப்பிட்டு என பலப் பல விதங்களில் உணவுகள் இருந்தன. கூடவே கூர்கிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட காபிக் கொட்டைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட காபி குடித்தோம். காபியின் விலை ரூபாய் 20 மட்டும். காபி கடையில் கேட்ட விஷயம் ஃப்ரூட் சாலட் பகுதியில் வெளியாகும்! புளியோகரே ஒரு சிறிய தொன்னையில் சட்னியுடன் விலை ரூபாய் 50 மட்டும்.

ஹொளிகே அதாங்க நம்ம ஊரு போளி செய்ய அம்மா வாழை இலைல வைச்சு கையால செய்வாங்க. அங்கே ரெண்டு பிளாஸ்டிக் பேப்பர் வைத்து சூப்பரா, சுலபமா செஞ்சார். பார்த்தா ரொம்ப ஈஸியா இருந்தது.  வீடியோ எடுக்க முடியல. அதனால, அதே மாதிரி இணையத்துல தேடி உங்களுக்காக இணைச்சு இருக்கேன் பாருங்க! பார்த்து செஞ்சு ரெண்டு ப்ளேட் ஹொளிகே தில்லிக்கு பார்சல் அனுப்பிடுங்க! சரியா....என்ன நண்பர்களே, எல்லோரும் என் கூடவே சூரஜ்குண்ட் மேளா பார்த்து ரசிச்சீங்களா?  இங்கே பகிர்ந்த புகைப்படங்கள் தவிர இன்னும் சில படங்கள் இருக்கின்றன. அவற்றை ஞாயிறு புகைப்படங்களாக அவ்வப்போது வெளியிடுகிறேன்.

மீண்டும் வேறொரு பதிவில் உங்களை அனைவரையும் சந்திக்கும் வரை......

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

36 comments:

 1. சூரஜ்குண்ட் மேளா படங்கள் அருமை...

  படத்தின் மேலும் கீழும் எழுத்துக்கள் தான் படிக்க முடியாதபடி மாறி உள்ளன... கவனிக்கவும்...

  1. ஆதிவாசி பிள்ளையார்!

  2. டொல்லு குனிதா நடனம்

  3. கூர்க் பாரம்பரிய உடையும் பொருட்களும்

  4. இது என்னவென்று பின்னூட்டத்தில் சொல்லுங்க பார்ப்போம்!

  5. உழைப்பாளி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி தனபாலன். எனக்கு சரியாகவே தெரிகிறது. இருந்தும் மீண்டும் பார்த்து மாற்றியிருக்கிறேன்.

   Delete
 2. படங்கள் எல்லாமே அருமை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 3. நல்ல போட்டோக்கள். ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
 4. அட்டகாசம்!அணு அணுவாய் ரசித்தேன்!!!!

  புள்ளையார்...கொள்ளை கொள்கிறார்!

  ReplyDelete
  Replies
  1. இன்னும் சில பிள்ளையார் படங்கள் இருக்கின்றன. பிறகு பகிர்ந்து கொள்கிறேன்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 5. நல்ல பயணக் கட்டுரை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரை அழகு.

   Delete
 6. சூரஜ்குண்ட் மேளா .... அழகான படங்களுடன் அற்புதமான வர்ணனைகள்.
  பாராட்டுக்கள் வெங்கட்ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 7. //இது என்னவென்று பின்னூட்டத்தில் சொல்லுங்க பார்ப்போம்!//
  சேவை நாழி?

  எல்லாமே அருமை. அழகாக எழுதியிருக்கிறீர்கள். நிறைய அனுபவித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பந்து ஜி!

   விடை சரியாவென நாளை சொல்லி விடுகிறேன்! :)

   Delete
 8. அழகிய படங்களுடன் சிறப்பான பதிவு. போளி செய்யும் வீடியோ அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமா ரவி.

   Delete
 9. சென்னையில் சிப்ஸ் கடைகளில் கூட இப்போது சூடான போளிகிடைக்கிறது.பூர்ணபோளியில் நெய் நிறைய ஊற்றிச் சாப்பிடும் சுகமே தனி!
  படங்கள் சூப்பர்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குட்டன்.

   Delete
 10. சூரஜ்குண்ட் மேளா பார்த்து ரசித்தோம்.
  ஹொளிகே செய்யும் வீடியோ காட்சி அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   Delete
 11. பச்சைக் குதிரைத் தாண்டப் பாட்டு.... எனக்குப் புதுசு!


  ஹொளிகே சூப்பர்!

  ReplyDelete
  Replies
  1. முழு பாடல் யாருக்காவது தெரியுமா என இன்னும் தெரியவில்லை!

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 12. கற்பனைக் குதிரையை ரொம்பவே தட்டி ஓட்டி இருக்காங்க ---ரொம்ப அழகாக ..

  //அவர்கள் ஆடும் நடனம் பெயர் தெரியுமா ‘உம்ம தட்டா”. ஆங்கிலத்தில் எழுதி வைத்திருந்ததைப் பார்த்தால் வேறு ஏதோ தோன்றியது!//

  முத்து - திரைப்படம் -
  ரஜினியும் மீனாவும் தோன்றியிருப்பார்கள்..

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 13. ஹொளிகே ஜூப்பர். நம்மூர்ல தட்டையும் இப்படித்தான் செய்வாங்க.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

   Delete
 14. ஆதிவாசிப் பிள்ளையார்,உழைப்பாளிகள என அற்புதமாக இருக்கின்றது.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 15. பல முறைகள் அதை பற்றி படித்தபோது , எப்படி இருக்கும் என்று வியந்திருக்கிறேன்.
  உங்கள் பதிவு வழியாக பார்க்க நேர்ந்ததில் , மகிழ்ச்சி. உங்களுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பட்டு ராஜ் ஜி!

   Delete
 16. அனைத்துப் படங்களுடன் பதிவு அருமை.

  “நீங்களே சொல்லுங்கள்“ -ன் பதிலை நீங்களாவது சொல்லிவிடுங்கள்.

  பிள்ளையாருக்கு ஆதிவேசம் சூப்பர்.
  உண்மையில் பிள்ளையார் ஒரு சூப்பர் நாயகள் தான்.
  எந்த ரூபம் ஏற்றாலும் அவருக்குத் தனி சிறப்புதான்.

  த.ம. 7

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா.

   Delete
 17. ஆதிவாசி பிள்ளையார் சிலை அழகு. போளி செய்யும் வீடியோ பார்த்தேன். எவ்வளவு லாவகமாக விரைவாக செய்கிறார்.

  பார்க்க பார்க்க ஆச்சர்யமாக இருந்தது.

  நல்ல பகிர்வு

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

   Delete
 18. என்னது , கில்லெட் மஷின் மாதிரி இருக்கே !
  போலி or அதிரசம் or ரோட்டி இதில் ஏதாவது ஒன்று செய்யும் மஷின் ???
  ஆஹா , அருமையான ஹோலிகே செய்யும் காணொளி இணைத்ததிற்கு
  மிக்க நன்றி !

  ReplyDelete
  Replies
  1. மேலே போட்டிருந்த படம் பந்து சார் சொன்ன மாதிரி சேவை நாழி தான். சேவை பிழிய பயன்படுத்துவார்களாம்.

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....