திங்கள், 12 நவம்பர், 2018

என்ன சமையலோ…. – ஆதி வெங்கட்



வாழைக்காய் மொளகூட்டல்!!



ரெசிபி பார்க்காமல் சற்றே மாறுதலுக்கு செய்து பார்த்தது. தேங்காய் எண்ணெய் மணத்தில் நன்றாகவே இருந்தது. கேரள சமையல் எனக்கு எப்போதுமே பிடிக்கும். சிகப்பரிசி சாதத்தை தவிர!
 
முகநூலில் இந்த நிலைத் தகவலை பகிர்ந்த போது, பதிவர் சாந்தி மாரியப்பன் [அமைதிச் சாரல்] அவர்கள் “நாங்க என்ன கேக்கப்போறோம்? வழக்கம்போல ரெசிப்பிதான்!” என்று கேட்டிருந்தார்.  அவருக்கு பதிலாகத் தந்ததையே இங்கே தருகிறேன் – “வாழைக்காயை வேகவைத்து, உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும். தேங்காயுடன் மிளகும், சீரகமும் சேர்த்து அரைத்து காயில் சேர்க்கவும். கொதித்ததும் தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுந்து கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பருப்பும் வேகவைத்து சேர்க்கலாம். மிளகுக்கு பதில் மிளகாயும் சேர்க்கலாம். புளிக்கரைசல் தேவையில்லை!”

மாலைத் தேநீருடன் கப்பக்கிழங்கு!!!



கோவையில் அடிக்கடி வேகவைத்த மரவள்ளிக்கிழங்கு அம்மா கொடுப்பாங்க. இல்லையென்றால் கடுகு, உளுத்தம்பருப்பு, வரமிளகாய் தாளித்து துண்டங்களாக நறுக்கிய வேகவைத்த மரவள்ளிக்கிழங்கு சேர்த்து பிரட்டி இறுதியில் துருவிய தேங்காயும் சேர்ப்பார். பிரமாதமாக இருக்கும்.

அங்கு பழைய பேப்பர், இரும்புச் சாமான் வாங்குபவரும் (ஹிந்தியில் - Kabaadiwala என்று சொல்வார்கள்) கூட எடைக்கு தகுந்தாற்போல் மரவள்ளி தான் தருவார்.

மரவள்ளி அப்பளமும், சிப்ஸும் எனக்கு மிகவும் பிடித்தமானது.

கோவை வாசத்திற்கு பிறகு மரவள்ளி சாப்பிட்ட சந்தர்ப்பம் மிகவும் அரிது. டெல்லியில் கேரளக் கடைகளில் கிடைக்கும்.

காய்கறிக்கடையில் பார்த்ததும் வாங்கி வந்தேன். மாலை மகளுக்கு உப்பு போட்டு வேகவைத்து தந்தேன். அவளுக்கு ஏனோ இஷ்டப்படலை.

தீபாவளி பலகாரங்கள்…


இந்த முறை எங்களுக்கு தீபாவளி இல்லை – அதனால் பலகாரம் ஒன்றும் செய்யப் போவதில்லை என்று இருந்தேன். சென்னையிலிருக்கும் தம்பி அக்காவுக்காக வாங்கி அனுப்பிய இனிப்பு காரங்களுடன் தித்திக்கும் தீபாவளி!!!






தீபாவளி முடிந்த பிறகு நான் செய்த இரண்டு பலகாரம் – ரவா லாடு மற்றும் ரிப்பன் நாடா!

ரவை குழிப்பணியாரம்!!



தோசைமாவு கொஞ்சமே கொஞ்சம் தான் இருந்தது! சரி என அதில் ரவை சேர்த்து செய்தேன் – ரவை குழிப்பணியாரம்!

ஒவ்வொரு நாளும் சமையல் என்ன செய்வது என்று யோசிப்பதே பல வீடுகளில் நடக்கும் விஷயம் – என்ன சமைக்கலாம் எனக் கேட்டால் பதில் வேறு ஒழுங்காகக் கிடைக்காது! என்ன வேணும்னாலும் சமைக்கலாம்! சமீபத்தில் செய்த சில பலகாரம் இன்றைய பதிவில் ஒரு தொகுப்பாக….  முகநூலில் பகிர்ந்தவை இங்கேயும் ஒரு சேமிப்பாக!

மீண்டும் வேறு ஒரு பகிர்வுடன் சந்திப்போம்…. சிந்திப்போம்….

நட்புடன்

ஆதி வெங்கட்

42 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஆதி அண்ட் வெங்கட்ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
  2. சூப்பரா இருக்கு எல்லாமே....மொளகூட்டல், கப்பைக் கிழங்கு, எல்லாமே பிடிக்கும் கேரள அரிசி சாதமும்...நான் சொல்லும் அரிசி வெள்ளை அரிசி அல்ல கேரளத்து சிகப்பரிசி மட்ட அரி. இப்போதும் வீட்டில் செய்வதுண்டு..கேரள டிஷ் என்றால்.

    கப்பையில் நீங்க சொல்லிருப்பது போலத்தான் பிரட்டி தேங்காய்ப்பூ போட்டும் அல்லது வெருமனே...அல்லது உருளை வதக்குவது போலவும் வதக்கலாம்...கப்பை புழுக்கு என்றும் செய்வதுண்டு...எங்கள் வீட்டில் எல்லோருக்குமே பிடிக்கும். எங்க வீட்டுல எதுவும் பிடிக்காது என்று எதுவும் இல்லாததால் எனக்கு சமையல் கஷ்டமாக இருந்ததில்லை...ஆனால் என்ன எனக்குத்தான் அப்பப்ப மூளை ஃப்யூஸ் ஆகிடும் என்ன செய்யறதுனு குழம்புவேன்...ஹா ஹாஅ ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன சமைப்பது என்ற குழப்பம் பலருக்கும் இருக்கின்ற ஒன்று தான்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  3. ரவை குழிப்பணியாரம், நாடா, ரவா லாடு எல்லாமே சூப்பரா இருக்கு..ஆதி..

    வாழைக்காய் மொளகூட்டலைப் பார்த்ததும் அட இங்கும் இன்று திங்க வா என்று நினைத்து சரி அப்ப எபில ஒரு மெயின் டிஷ் இருந்தா நல்லாருக்குமோனு தோனித்து...ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  4. என்ன சமையலோ ந்ற பாடலும் நினைவுக்கு வந்துச்சு. ரொம்பப் பிடித்த பாடல்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் பிடித்த பாடல் அது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  5. குட்மார்னிங். என்ன, காலையிலேயே பசியைக்கிளப்பி விட்டால் எப்படி?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் 🙏 ஸ்ரீராம்.

      ஹாஹா... பசியைத் தூண்டும் பதிவாகிவிட்டதோ.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. வாழைக்காய் மொளகூட்டல் - ஒருதரம் செஞ்சு பார்த்துடலாம். கப்பக்கிழங்கு என்பது சர்க்கரை வள்ளிக்கிழங்குதானா? ஓ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கப்பக் கிழங்கு = மரவள்ளிக்கிழங்கு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  7. மிளகாய்ப்பொடியில் ட்யூப்லைட் தெரிவது கூட அழகா இருக்கு...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  8. ரிப்பன் நாடாவும், ரவா குழிப்பணியாரமும் நன்றாய் வந்திருப்பதாய் படங்கள் செப்புகின்றன!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படம் பார்த்து எனக்கும் அப்படியே தோன்றியது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  9. வணக்கம்
    காலையில் பார்த்தவுடன் சுவையான தீன் பண்டங்கள்தான் ஐயா..

    -நன்றி-
    -அன்புடன்-
    -த.ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சற்றே இடைவெளிக்குப் பிறகு உங்கள் வருகை. மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி.

      நீக்கு
  11. அருமையான பலகாரங்கள் அணி வகுப்பு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  12. கப்பகிழங்கு எனக்கு பிடித்தமானது.
    படங்கள் அருமை சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  13. மரவள்ளி கிழங்கு எனக்கும் ரொம்பவும் பிடிக்கும்... இங்கும் கிடைப்பதால் அடிக்கடி செய்வோம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  14. (எங்கள் Blog) அங்கே போனா லட்டு... இங்கே விதவிதமாக... காலையில் பார்த்ததாலயே சுகர் அதிகமாகும் கண்கொள்ளாக் காட்சி...! ஹா... ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  15. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா பிரேம்குமார் ஜி.

      நீக்கு
  16. அழகான சுவையான பதிவு.
    முகநூலில் படித்து விட்டேன்.
    ஆதிக்கு அழகாய் பலகாரம் செய்யவும், அதை அழகாய் படம் எடுக்கவும் தெரிகிறது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  17. சாப்பிட முடிகிறபடி என்ன வேணா சமைக்கலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  18. அன்பு ஆதி,
    அருமையான படங்களைப் பார்த்தே மனம் நிரம்புகிறது.
    சுவையாய் இருந்திருக்கும். அதுவும் வாழைக்காய் மொளகூட்டல்
    சூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

      நீக்கு
  19. வாழைகாய் மிளகூட்டல் என்பது இப்படித்தானா? இதை நாங்கள் பிரட்டல் கறி என்போம்.வாழைக்காய்ப்பிரட்டல், வாழைகாய் சமைக்கும் போது பூஉண்டு கட்டாயம் சேர்ப்போம் வாய்பு தன்மை என சொல்வார்கள். மரவள்ளி கிழங்கு குறித்து சொல்லவே வேண்டாம். எங்க வாழ்க்கையுடன் ஒன்றி இணைந்தது. சுவிஸ் வந்த பின் தான் அடிக்கடி கிடைப்பதில்லை. மரவள்ளியும் பூசணிக்காயும் சேர்த்து தேங்காய்ப்பால் விட்ட கறி இலங்கை யாழ்ப்பாணத்து ஸ்பெசல். எங்கள் பக்கம் குழம்பு கூட்டி பொரியல், பிரட்டல் என் வைத்தாலும் தேங்காய்ப்பால் சேர்த்த சொதி போன்ற கிரேவி வகை சமையல் தான் விஷேசம். மரவள்ளிக்கிழங்கை உப்பு சேர்த்து அவித்து மாங்காய், பச்சைமிளகாய் அவித்து கடைந்த அவிய்லுடன் தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும். இல்லாக பிள்ளைகள் இம்மாதிரி உணவுகளை விரும்புவதில்லை.

    ஸ்வீட் பாக்கெட் பார்க்கும் போது உடனே ஸ்வீட் சாப்பிடும் ஆசை வருகின்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மரவள்ளிக்கிழங்குடன் வாழ்க்கை
      http://alpsnisha.blogspot.com/2016/12/blog-post.html

      நீக்கு
    2. வாழைக்காய் மிளகூட்டல் என்பது இப்படித்தானா? இதை நாங்கள் பிரட்டல் கறி என்போம்.வாழைக்காய்ப்பிரட்டல், வாழைக்காய் சமைக்கும் போது பூண்டு கட்டாயம் சேர்ப்போம் வாய்வு தன்மை என சொல்வார்கள். மரவள்ளி கிழங்கு குறித்து சொல்லவே வேண்டாம். எங்க வாழ்க்கையுடன் ஒன்றி இணைந்தது. சுவிஸ் வந்த பின் தான் அடிக்கடி கிடைப்பதில்லை. மரவள்ளியும் பூசணிக்காயும் சேர்த்து தேங்காய்ப்பால் விட்ட கறி இலங்கை யாழ்ப்பாணத்து ஸ்பெசல். எங்கள் பக்கம் குழம்பு கூட்டு பொரியல், பிரட்டல் என் வைத்தாலும் தேங்காய்ப்பால் சேர்த்த சொதி போன்ற கிரேவி வகை சமையல் தான் விஷேசம். மரவள்ளிக்கிழங்கை உப்பு சேர்த்து அவித்து மாங்காய், பச்சைமிளகாய் அவித்து கடைந்த அவியலுடன் தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும். இக்கால பிள்ளைகள் இம்மாதிரி உணவுகளை விரும்புவதில்லை.

      ஸ்வீட் பாக்கெட் பார்க்கும் போது உடனே ஸ்வீட் சாப்பிடும் ஆசை வருகின்றது.


      எழுத்து பிழை திருத்தி பதிவு.

      நீக்கு
    3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.

      நீக்கு
    4. அந்தச் சுட்டி வேறு பதிவுக்கு அழைத்துச் செல்கிறது....

      தங்களது வருகைக்கும் தகவல் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.

      நீக்கு
    5. தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....