சாப்பிட வாங்க – மரவள்ளி
புட்டு - 13 அக்டோபர் 2018:
சமீபத்தில் சூப்பர் மார்க்கெட்டில்
கிழங்கு மாவைப் பார்த்ததும், அங்கே பணிபுரியும் பெண்மணி, அக்கா!! இதில் அடைதோசை செய்யலாம்!!
என்றார். கால் கிலோ வாங்கி விட்டேன்.
நம்ம Shanthy Mariappan புட்டு பகிர்வில்
மரவள்ளிக்கிழங்கு மாவிலும் நாகர்கோவில் பக்கம் புட்டு செய்வார்கள் என்று சொல்லியிருந்தார்.
அதை இன்று முயற்சி செய்து பார்த்துவிட்டேன்.
சோதனை எலிகள் தான் இரண்டு இருக்கே!
எட்டு நடை –8 அக்டோபர்
2018:
வீட்டுக்கு
அருகிலுள்ள பூங்கா பற்றி முன்பு எழுதியது நினைவிருக்கலாம். அங்கு அமைத்துள்ள எட்டு
வடிவ நடைபாதை. வீட்டிலும் மாடியிலும் 30 நிமிடங்கள் வேகமாகவே நடக்க முடிந்த
எனக்கு, இங்கு அதிகபட்சமாக மூன்றிலிருந்து நான்கு சுற்றுக்கள் தான் நடக்க
முடிகிறது. கூழாங்கற்களால் ஆன பாதை. வெறும் காலில் நடக்கும் போது சிரமமாக
இருந்தாலும் முடித்த பின் கால்களுக்கு இதமாக உள்ளது.
பெற்றோர் ஆசிரியர்
சந்திப்பு – 11 அக்டோபர் 2018:
மகளின் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர்
சந்திப்பு இருந்தது. இருவருமாக இம்முறை சென்று வந்தோம். அவர் ஆண்கள் பக்கமும், நான்
பெண்கள் பக்கமும் அமர்ந்து கொண்டோம்.
ஒருவருக்கொருவர் அறிமுகம் இல்லாததால்
அமைதியாக கவனிக்கத் துவங்கினேன். எனக்கு முன்பிருந்த அம்மாக்கள் தங்கள் பிள்ளைகள் குறைவாக
மதிப்பெண்கள் வாங்குவதாகவும், அதிகாலையில் எழுந்திருப்பதில்லை எனவும், க்ளாஸுக்கு போவதாகவும்
இடைவிடாமல் தங்களுக்குள் குறைபட்டுக் கொண்டனர் :)
சந்திப்பின் காரணம் மதிப்பெண்கள் தானோ!!!
என்று நினைத்திருந்தேன். நல்லவேளை!! பள்ளி முதல்வர் பெற்றோரிடம் டீன்ஏஜில் இருக்கும்
தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கையில் ஏதேனும் மாற்றம் இருந்தால் உடனே கண்காணிக்க வேண்டும்
எனவும், ஆட்டோக்களில் அனுப்பும் பெற்றோருக்கு, பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்தும் கவனம்
வைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
நான் படித்த சூழல் வேறு. இப்போது மதிப்பெண்களை
மட்டுமே சுற்றிச் சுற்றி வருகிறார்கள். போட்டி நிறைந்த உலகு தான். ஆனாலும் மதிப்பெண்களை
வைத்து ஒரு குழந்தையின் அறிவை எடை போட இயலுமா???
அன்று எடுத்த மதிப்பெண்களுக்கும் இன்று
வாழ்கின்ற சூழலையும் நினைத்துப் பார்த்தால் வேடிக்கையாக இருக்கு :)
பிள்ளைகளை நாள்பூராவும் படிக்கச் சொல்வதாலும்,
கிளாஸ்களுக்கு இடைவிடாமல் அனுப்பி விடுவதாலும், பள்ளிகளிலும் மதிப்பெண்களுக்காக அழுத்தம்
கொடுப்பதாலும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இதனால் அவர்கள் தவறான முடிவை எடுக்கின்றனர்.
கொஞ்சம் யோசிங்க பெற்றோரே!!!!
ரோஷ்ணி கார்னர் – 21
அக்டோபர் 2018
மகள், அவளே தன் கையில் போட்டுக்
கொண்ட மெஹந்தி...
பள்ளிப்பருவம் –
மீட்டெடுத்த நட்பு – 24 அக்டோபர் 2018:
நேற்று மூன்று பள்ளித்தோழிகளை மீட்டுத்
தந்தது முகப்புத்தக சமுத்திரம். வாழ்க்கை சக்கரத்தில் எங்கெங்கோ பிரிந்து விட்டோம்.
இப்போது வாட்ஸப்பில் அரட்டை அடித்துக் கொண்டிருக்கிறோம்.
முக்கியமாக ஓரிரு வருடங்களுக்கு முன்னர்
பள்ளித்தோழி ஜோதிமணியை தேடிக் கொண்டிருக்கிறேன் என்று எழுதியிருந்தேன். அவளை மீட்டெடுத்து
விட்டோம்! என்னுடன் போட்டி போட்டு படித்தவள்!
என் தோழிகளில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர்களும்
உண்டு, என்னைப் போல் கரண்டி அலுவலகத்தை விட்டு விலக முடியாதவர்களும் உண்டு..:))
நான் அவர்களின் முகங்களை மறந்து போயிருந்தாலும்,
அவர்கள் என்னை நன்றாகவே நினைவில் வைத்திருக்கிறார்கள் என்பது நான் செய்த புண்ணியம்.
நல்லா படிப்பே! கையெழுத்து அழகா இருக்கும்!
வெள்ள வெளேர்னு இருப்ப!! அழுதா முகமே சிவந்து போயிடும்!! என்று ஒவ்வொன்றாக சொல்லிக்
கொண்டிருக்கிறார்கள்.
எவ்வளவு வருடங்கள் கடந்திருந்தாலும்
லூசு!! எரும!! என்று உரிமையோடு உரையாடும் சக்தி "நட்புக்கு" மட்டுமே சாத்தியமல்லவா!!!
வடக்கும் கிழக்கும்… – 28
அக்டோபர் 2018
நவராத்திரியில் ஒரு மாலை நேரத்தில்,
திருவரங்கம் கோவில் உள்ளே கிருஷ்ணன் சன்னதி அருகே உட்கார்ந்து கொண்டு படம் பிடித்தது.
அப்போது தாயார் ரங்க நாச்சியாருக்கு திருவடி சேவை நடந்து கொண்டிருந்தது. வெண்பட்டில்
அவளை கண்குளிர பார்த்து வந்தோம். அன்று எடுத்த இரண்டு படங்கள் – வடக்கு வாசல்
கோபுரமும் கிழக்கு வாசல் வெள்ளை கோபுரமும்!
ஆசைக்கு ஒண்ணு,
ஆஸ்திக்கு ஒண்ணு… - 26 அக்டோபர் 2018
நேற்று வந்த பூக்கார பாட்டியை வியாபாரத்தை
முடித்த பின் லிஃப்ட்டில் அனுப்பி வைக்கச் சென்ற போது, பாப்பா!! 12 வது தானே படிக்குது
என்றார். இல்லம்மா உயரம் அவ. 8-வது தான் படிக்கறா என்றேன். ஒரு பொண்ணு தானாம்மா?? ஆமாம்மா.
ஆசைக்கொரு பொண்ணு, ஆஸ்திக்கு ஒரு பையன் வேண்டாமா?? என்றார். ஒரு புன்னகையுடன் அனுப்பி
விட்டு வந்தேன்.
மகள் இதைப் பற்றி என்னிடம் கேட்டாள்.
ஆஸ்தின்னா என்னம்மா? சொத்துபத்து என்றேன். பொண்ணுக்கும் சொத்தெல்லாம் கொடுத்துட வேண்டியது
தானே!! இதுல இந்த பாட்டிக்கு என்ன பிரச்சனை என்றாள். பொண்ணு கல்யாணமாகி வேற வீட்டுக்கு
போயிடுவா!! பையன் அப்பா அம்மா கூடவே இருப்பான்! அதனால சொத்தும் தொடர்ந்து வரும்னு அந்த
காலத்தில் நினைச்சு சொல்லியிருப்பாங்க. இப்போ அப்படியெல்லாம் ஒண்ணும் கிடையாது. அந்த
பாட்டி அந்த காலத்து மனுஷி!! என்றேன்.
விரைவில் வேறு சில கதம்பச்
செய்திகளோடு மீண்டும் Binச[சி]ந்திப்போம்….
நட்புடன்
ஆதி வெங்கட்
இனிய காலை வணக்கம் ஆதி அண்ட் வெங்கட்ஜி
பதிலளிநீக்குகீதா
வணக்கம் 🙏 கீதாஜி.
நீக்குஅட! எங்கள் ஊரு மரவள்ளிப் புட்டு...நாகர்கோவில், கேரளத்தில் செய்வதுண்டு...எங்க வீட்டுலயும்தான்...
பதிலளிநீக்குநாகர்கோவிலில் மரவள்ளி மாவு எல்லாம் மில் உண்டு அரைத்து தருவாங்க. மரச்சீனிக் கிழங்கு அப்பளம் போடுவோம்...அதனால் எங்க மாமா இதனை ஏழைகளின் கிழங்கு, உணவு என்பார்...
பார்க்க சூப்பரா இருக்கே...
கீதா
மரச்சீனியை விட சர்க்கரை வள்ளிக்கிழங்கு எனக்கு அதிகம் பிடிக்கும்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.
சோதனை எலிகள்... ஹா.. ஹா... ஹா... ஒரு எலி டெல்லியிலிருந்து வந்து மாட்டிக்கிட்டிருக்கு! ஒரு விஷயம் சொல்லவா? எனக்கு புட்டு பிடிக்காது! ஹிஹிஹி... குட்மார்னிங் திரு அண்ட் திருமதி வெங்கட்...
பதிலளிநீக்குஒரு எலி டெல்லியில் இருந்து வந்து மாட்டிக்கிட்டிருக்கு..... ஹாஹா....
நீக்குபுட்டு உங்களுக்கு பிடிக்காதா. கேரள கடலைக் குழம்புடன் சாப்பிட எனக்குப் பிடிக்கும்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
ஆதி சோதனை எலிகள் என்ன சொன்னாங்க புட்டுக்கு....
பதிலளிநீக்குபூங்கா அழகா இருக்கு...8 நடை...போட்டா வெயிட் குறையும்...சர்க்கரை வியாதிக்கு நல்லதுனு சொல்றாங்க...நானும் வாக்கிங்க் போனாலும் 8 நடையும் செய்யறேன்..இங்கு மொட்டைமாடி நன்றாக இருக்கு...
கீதா
சோதனை எலிகள் பாவம்....
நீக்குமொட்டைமாடி நடை.... நல்ல விஷயம். இங்கே சில நாட்களாக நடையை நிறுத்தி வைத்து இருக்கிறேன். காற்றில் மாசு மிகவும் அதிகமாக இருக்கிறது.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.
எட்டு நடை முன்னர் என் அப்பா கூட நடப்பார். ஆனால் கூழாங்கற்கள் பாதை புதிதாகக் கேள்விப்படுகிறேன்.
பதிலளிநீக்குகூழாங்கல் போட்ட எட்டு நடைபாதை நானும் இங்கே தான் பார்த்தேன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
எட்டிலே நடந்தால் கொஞ்சல் தலை சுத்தலா இருக்கிறாப்போல் தோணுது! ஆகவே நடப்பதில்லை. கிட்டத்தட்டத் தட்டாமாலை சுத்தறாப்போல் இருக்கோ?
நீக்குஎனக்கு அப்படி ஆகவில்லையே. இல்லத்தரசி தினமும் மாடிதில் நடக்கிறாரே!.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....
எங்க மாடியிலே நானும் நடப்பேன். நான் சொல்வது எட்டு வடிவத்தில் நடக்கும்போது!
நீக்குநான் சொன்னதும் எட்டு நடைதான். மாடியில் எட்டு நடை!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.
மதிப்பெண் பற்றிய பிரமைகளிலிருந்து விடுபடுவது கஷ்டம். நல்ல உருப்படியான விஷயம் பற்றி பேசியிருக்கிறார் முதல்வர்.
பதிலளிநீக்குஆமாம் நல்ல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
கதம்பம் வழக்கம்போல மணத்தது சகோ.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.
நீக்குகதம்பம் மணத்தது. பாட்டிபேசியதைப் பற்றி பாப்பா எழுப்பிய ஐயம் அருமை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குமெஹந்தி - பல திறமைகள் தொடரட்டும்...
பதிலளிநீக்குநட்பு தகவல் - இனிமை...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குஉங்கள் பள்ளித் தோழிகளை மீட்டெடுத்தமை மகிழ்வான விஷயம்.
பதிலளிநீக்குகோபுரம் படம் அழகு...
எங்க வீட்டுல எல்லாருமெ சோதனை எலிகள் தான்...ஹா ஹா ஹா, மைத்துனர்கள், நாத்தனார்கள், அப்புறம் ஒன்றுவிட்ட கிளைகள் எல்லாம் சோதனை எலிகள்தான்...அண்ணி என்ன புதுசா பண்றாங்கனு அப்பப்ப விசாரித்தல்கள் வந்துட்டே இருக்கும்....
கரண்டி அலுவலகம் ஹா ஹா ஹா ஹா....
கீதா
ஆஹா உங்களுக்கு வாய்த்த சோதனை எலிகள் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கிறதே. நல்ல விஷயம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.
என் வயதுக்கார நட்புகளை முகப்புத்தகத்தில்தேடினாலும் கிடைக மாட்டேன் என்கிறது கதம்பம் மணத்தது
பதிலளிநீக்குதொடர்ந்து முயற்சி செய்யுங்கள் ஐயா. கிடைக்கலாம் உங்க நட்புகளும்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.
ரோஷினி குட்டி மெஹந்தி சூப்பர்ப்!! பாராட்டுகள். செமையா இருக்கு ப்ரொஃபஷனலா இருக்கு...
பதிலளிநீக்குகீதா
நன்றியும் மகிழ்ச்சியும்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.
மதிப்பெண்கள்....இதுபல பெற்றோரை ஆட்டிப் படைக்கிறது...என்ன சொல்ல...பெற்றோர் இதிலிருந்து விடுபடுவது கடினம் தான். நம் கல்வி உலகமும் அப்படி ஆகிவிட்டதே...இதைப்பற்றி நிறைய பேசலாம் தான்...
பதிலளிநீக்குபள்ளி முதல்வரின் பேச்சு அருமை...
கீதா
மதிப்பெண்கள் எனும் விஷயத்திலிருந்து மீள்வது கடினம் தான்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.
எங்கள் ஊரிலும், வீட்டிலும் மரச்சீனிக் கிழங்கு புட்டு செய்வதுண்டு. நாங்கள் கிழங்கை அவித்து உதிர்த்தும் புட்டு செய்வதுண்டு.
பதிலளிநீக்குமுதல்வரின் பேச்சு நன்று. என்றாலும் ஆசிரியர்களும் சரி, பெற்றோரும் சரி நாங்கள் மதிப்பெண்களைச் சொல்லத்தான் வேண்டியிருக்கிறது. நான் ஆசிரியர்/தந்தையும்...ஆனால் குழந்தைகளை ஃபோர்ஸ் செய்வதில்லை. ஃபோர்ஸ் செய்து படிக்கச் சொன்னதில்லை. இதுவரை நாங்கள் அவர்களைப் படி என்று சொன்னதில்லை. ஆனால் அவர்களுக்குத் தேவையானவற்றைச் செய்து தருகிறோம். ஊக்குவிக்கும் விதத்தில்.
அனைத்துமே அருமை...
புட்டு உங்கள் ஊரில் ஸ்பெஷல் ஆயிற்றே.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி.
முகநூலிலும் பார்த்தேன். மரவள்ளிக்கிழங்கே இங்கே எங்க மாமியார் வீட்டில் தெரியாது. அம்மா தான் பண்ணுவா. ஆனால் புட்டுச் செய்தது இல்லை. எங்களுக்குப் புட்டு என்றால் வெல்லம் போட்டுச் செய்யும் அரிசிப் புட்டு மட்டுமே. குழாய்ப் புட்டு என்னமோ போணியே ஆகறதில்லை. ரோஷ்ணி அசாத்தியத் திறமைசாலியாக இருக்கிறாள். வாழ்த்துகள், ஆசிகள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.
நீக்கு