வியாழன், 24 ஜூன், 2021

நிழற்பட உலா - நடைப்பயிற்சியும் இயற்கையும்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கடந்து வந்த பாதை பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


இயற்கையால் மனிதனின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும். அவனது பேராசைகளை ஒரு போதும் பூர்த்தி செய்ய முடியாது - மஹாத்மா காந்தி. 


******




நிழற்பட உலா பதிவுகள் வெளியிட்டு பல நாட்கள்/மாதங்கள் ஆகிவிட்டது.  உலா போகும் சூழல் இல்லையே!  நீண்ட இடைவெளிக்குப் பிறகு வீட்டிலிருந்து பக்கத்தில் இருக்கும் ஒரு கிராமத்திற்குச் செல்லும் சாலையில் நடைபயிற்சி மேற்கொண்ட போது எடுத்த படங்கள் இந்த வாரத்தின் நிழற்பட உலாவாக உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.  படங்கள் அலைபேசியில் எடுக்கப்பட்டவை.  படங்கள் எடுத்தது எனது இல்லத்தரசி! ஒன்று (கடைசி) மட்டுமே நான் எடுத்தது - அதுவும் அலைபேசியில் தான்.  இயற்கை எழிலை படங்கள் வழி ரசிக்கலாம் வாருங்கள்! 






















நண்பர்களே, பகிர்ந்து கொண்ட படங்கள் உங்களுக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். பதிவு/படங்கள் குறித்த உங்கள் எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்!


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து...


12 கருத்துகள்:

  1. எல்லாப் படங்களும் சிறப்பு.   மூன்றாவது படம் மிக அழகாக இருக்கிறது.  அடுத்ததாக ஐந்தும், ஆறும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. அழகிய காட்சி எடுத்த கோணங்களும் அருமை ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களும், படங்களின் கோணங்களும் தங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. உங்களையே மிஞ்சி விட்டார்கள்...! அருமை... வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    இன்றைய வாசகம் அருமையாக உள்ளது.

    உண்மைதான்.. இயற்கையாக ஒரு மனிதருக்குள் வரும் ஆசைகள் சில சமயம் அவரை ஜெயிக்க வைக்கிறது என்றால், அதைக்கண்டு அவனுள் எழும் பேராசைகள் அவனை வீழ்த்தியும் விடும்.

    பதிவின் படங்கள் மிக மிக அழகாக உள்ளது. இயற்கை வனப்பு களும்,அழகான பூக்களும், மரங்களுமாக படங்கள் நல்ல கோணத்தில் எடுக்கப்பட்டு கண்களுக்கு விருந்தாக உள்ளது. மேகங்கள் விளையாடும் வானத்தின் படங்களும், பூமியின் பசுமை நிறைந்த படங்களும் கண்களுக்கு குளிர்வாக அழகாக இருக்கிறது. உங்கள் இருவருக்குமே வாழ்த்துகள்.

    அது என்ன சீதாப்பழம் போல் உள்ளது? அதுதானா? ஆனால் அதுவும் இல்லையென நினைக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      பதிவின் வழி பகிர்ந்த படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      முதல் படத்தில் இருப்பது சீதாப்பழம் தான். அதன் பிற்கு சிறியதாக இருப்பது நுணா மரத்தின் காய்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. ஐந்தாவது படமும் ஆறாவது படமும் ஆஹா என்ன அழகான பச்சை நிறம் பசுமை!

    சீதாப்பழம், நுணா காய் சூப்பர். நுணா காய், மரம், இலைக்கும் மருத்துவ குணம் உண்டு.

    எல்லாப்படங்களும் ரசித்தேன் ஜி. ஆதிக்கும் வாழ்த்துகள்! சபாஷ் சரியான போட்டி!

    ஆதி! சீக்கிரம் அடுத்த 'தல' புராணம் போடுங்க....மிஸ்ஸிங்க் அம்பா பெரியம்மா!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.

      தல புராணம் - தல தலைநகருக்குத் திரும்பி விட்டதால் வருவதற்கு வாய்ப்பு குறைவு! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....