அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட குறும்படப் பதிவையும் படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
இயற்கையை ரசிக்க, ரசிக்க இந்த வாழ்க்கையில் நம்பிக்கை அதிகமாகிறது.
******
இந்த வாரத்தின் எண்ணங்கள் - பணம்:
சமீபத்தில் ஒரு மனிதரைச் சந்தித்தேன். சந்தித்த சில நிமிடங்களில் அவர் பேசியது முழுவதுமே பணம், பணம், பணம் சம்பந்தமானது மட்டுமே! ஊருக்கெல்லாம் பணம் கொடுக்கறாங்க, எனக்கு தரலையே இந்த அரசாங்கம் எனச் சொல்லிக் கொண்டிருந்தார். பணம் மட்டுமே பிரதானம் என்பதாக இருந்த அவர் பேச்சு எனக்குப் பிடிக்கவில்லை என்றாலும் புதிதாகச் சந்தித்த அவரிடம் அவரை மறுத்துப் பேசுவதோ, ஆதரித்துப் பேசுவதோ தேவையற்றது என்று நினைத்ததால் ஒன்றும் பேசவில்லை. அதுவும் அவரிடம் இருக்கும் பணம் இன்னும் நாலு தலைமுறைக்கு வரும் என்றாலும் ஆசை யாரைவிட்டது - ஏனோ எனக்கு யாரோ சொல்லக் கேட்ட “போகும்போது என்னத்தையா வாரிக்கொண்டு போகப் போகிறோம்?” என்ற வாக்கியம் மனதுக்குள் வந்தது! போகும் போது என்ன கொண்டு போகிறோம்? பணத்தையா, நகை நட்டா? ஒன்றுமில்லையே! என்னவோ அந்த மனிதர் பேச்சினைக் கேட்டதிலிருந்தே இதே எண்ணங்கள் மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது!
******
இந்த வாரத்தின் எண்ணம் - மனசு:
சமீபத்தில் கிராமத்திற்கு (திருப்பராய்த்துறை) சென்று வர வேண்டியிருந்தது. அங்கே சந்தித்த ஒரு பெண்மணி - தோப்பு, துரவு என நிறைய இருக்கிறது. மாம்பழ சீசன் என்பதால் நிறைய மாங்காய் காய்த்திருக்கிறது அவர்களது தோப்பில். நாங்கள் அவரைச் சந்தித்த வேளையில், பை வைத்திருக்கிறீர்களா எனக் கேட்டார். ஒரு BIG SHOPPER பையை அவரிடம் கொடுக்க, அது முழுவதும் மாங்காய் போட்டு, கூடவே வைக்கோலும் போட்டுக் கொடுத்து, அதனை பழமாக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் சொல்லி அனுப்பினார். அவர்கள் தோப்பில் எத்தனை தான் பழங்கள் இருந்தாலும், அதனை விற்றுவிடுவதை மட்டும் செய்யாமல் இப்படி வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கும் கொடுத்து அனுப்ப வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டுமே - கொடுப்பதற்கும் மனது வேண்டுமே! நெய்வேலியில் நாங்கள் இருந்த வரை இப்படித்தான் மா, எலுமிச்சை என வீட்டுத் தோட்டத்தில் விளைந்த அனைத்தையும் வெளியிலிருந்து வருபவர்களுக்குக் கொடுத்து அனுப்புவோம். அது நினைவுக்கு வந்தது. கொடுப்பதற்கு மனது வேண்டும் என்று சொன்னேன் - அது போல அடுத்தவர்களை வாழ்த்தவும் மனது வேண்டும்! வாழ்த்துவோம்!
******
இந்த வாரத்தின் விளம்பரம் - Ma - Grandma:
இந்த வாரம் மனதைத் தொடும் விளம்பரமாக இல்லாமல், சிரிக்க வைக்கும் ஒரு விளம்பரம் - அதில் வரும் குழந்தை பார்க்க எவ்வளவு அழகு! பார்த்து ரசிக்கலாமே!
விளம்பரம் மேலே உள்ள காணொளி வழி பார்க்க முடியவில்லை எனில் யூட்யூப் தளத்தில் நேரடியாக இங்கே பார்க்கலாம்!
******
இந்த வாரத்தின் பின்னோக்கிப் பார்க்கலாம் பதிவு - ஓவியம்:
2016-ஆம் ஆண்டு, இதே நாளில் வெளியிட்ட ஒரு பதிவு - ஓவியம் – கண் பார்ப்பதை கை வரையும்.... எனும் பதிவு. அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் உங்கள் பார்வைக்கு!
நம் கண்களுக்கு மட்டும் பார்த்தவுடன் ஒருவரது திறமைகளைக் கண்டுபிடிக்கும் திறன் இருந்தால்..... எவ்வளவு நன்றாக இருக்கும்? யாரையும் பார்வையால் எடை போட்டு விட முடிவதில்லை. இந்த வாரம் ஃப்ரூட் சாலட் பதிவில் ஒரு காணொளியைப் பகிர்ந்து கொண்டிருந்தேன். காவி உடை அணிந்து கைகளில் குரங்கை வைத்திருக்கும் ஒரு முதியவர் சாலையில் சாக்பீஸ் கொண்டு விறுவிறுவென அத்தனை லாவகமாக அனுமனின் படத்தை வரைந்தார். அவரே இன்னுமொரு காணொளியில் முருகனின் படமும் வரைவதையும் பார்த்தேன். அவரைப் பார்த்தால், அவருள் இப்படி ஒரு திறமை ஒளிந்திருப்பதைத் தெரிந்து கொள்ள முடியுமா?
இப்படி திறமைகள் பலரிடமும் ஒளிந்திருக்கிறது. பார்க்கும் அனைத்தையும் ஓவியமாக வரைபவர்கள், எவரிடமும் பயிற்சி எடுத்துக் கொள்ளாமலேயே கேள்வி ஞானத்திலேயே இனிய குரலில் சிறப்பாக பாடுபவர்கள் என எத்தனை எத்தனை உதாரணங்கள்.
முழுப்பதிவும் படிக்க வசதியாக சுட்டி கீழே!
ஓவியம் - கண் பார்ப்பதை கை வரையும்
******
இந்த வாரத்தின் சமையல் - PINWHEEL SANDWICH:
எத்தனை நாள் தான் எப்போதும் போல, ஒரே வடிவில் இந்த ப்ரெட் சாப்பிடுவது! போரடித்து விடுமே! வட இந்தியாவில் தினம் தினம் காலையில் இந்த பிரெட், பால், பழங்கள் தான் உணவு - இல்லை எனில் பராட்டா! கொஞ்சம் வித்தியாசமாக பிரட் கொண்டு தயாரிக்கப்படும் சாண்ட்விச் தான் இந்த வாரத்தின் உணவு! அதாவது PIN WHEEL SANDWICH! பின்னாடி சக்கரமா எனக் கேள்வி எல்லாம் கேட்கப்படாது! ஹெப்பர்ஸ் கிச்சன் தளத்தில் இதற்கான பதிவும், காணொளியும் உண்டு! விருப்பமிருப்பவர்கள் பார்க்கலாம்!
******
இந்த வாரத்தின் ரசித்த பாடல் - காலம் அங்கனே கிடக்குன்னல்லே:
ஒரு பஞ்சாபி நண்பர் - ஆனாலும் பல மொழிகளில் ஒரு சில வார்த்தைகளாவது கற்றுக் கொண்டு பேசுவார். என்ன ஒரு பிரச்சனை என்றால், மலையாளத்திற்கும், தமிழுக்கும் உள்ள வித்தியாசம் தெரியாது! மலையாளம் பாடல் அனுப்பி இது தமிழ் பாடல் தானே என்று கேட்பார். சில சமயங்களில் பாடலைக் கேட்டு என்ன சொல்ல வருகிறார்கள் பாடலில் என்று கேட்பார்! ஹாஹா. அப்படி அனுப்பிய ஒரு மலையாளப் பாடல் இந்த வாரத்தின் ரசித்த பாடலாக! - அவர் ரசித்த பாடலாக! கேட்டுப் பாருங்களேன்!
******
இந்த வாரத்தின் வாட்ஸப் நிலைத்தகவல் - எவண்டா அது?:
பல சமயங்களில் நண்பர்கள் பகிர்ந்து கொள்ளும் வாட்ஸப் நிலைத்தகவல்கள் ஸ்வாரஸ்யமாக இருக்கும்! அப்படி ஒரு நிலைத்தகவல் கீழே!
******
நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த உங்கள் கருத்துகளை, பின்னூட்டம் வாயிலாகச் சொல்லுங்களேன். மீண்டும் வேறொரு பதிவு வழி உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லியிலிருந்து...
இந்த வாரக் கதம்பம் எப்போதும்போல ரசித்தேன்.
பதிலளிநீக்குமாங்காயை பழுக்க வைத்தீர்களா? என்ன வகை மாங்காய்?
பணம்.. இதற்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாதுதான்.. ஆனால் இறக்கும்வரை எவ்வளவு தேவையாயிருக்கும் என்பது தெரிவதில்லையே
இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.
நீக்குஒட்டு, நீலம், பங்கனப்பள்ளி என எல்லா வகைகளிலும் கொடுத்தார்கள். பழுக்க வைத்தோம்.
பணம் - எவ்வளவு தேவை என்பதை நம்மால் கணக்கிட முடியாது தான். ஆனாலும் அது ஒன்றே குறி என்று இருப்பதும் சரியல்லவே.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
மொபையிலில் சத்தமில்லாமல் 'பணம் என்னடா பணம் பணம் குணம்தானடா நிரந்தரம்' என்று காலர் டியூன் மாற்றி விட்டால் அப்போது வரும் அப்படிப் பாடும்படி வைத்திருக்கலாம்!
பதிலளிநீக்குதஞ்சையில் நாங்கள் இருந்தபோது மரப்பெட்டியில் வாய்க்கால் வைத்து மாம்பழங்கள் வரும். இது காவிரிமண் குணம் போலும்!
விளம்பரை ரசிரித்தேன்!
அசத்திய அமித்தின் அசாத்திய திறமையை மறுபடி ரசித்தேன். வாட்ஸாப் நிலைத்தகவலை வெகுவாக ரசித்தேன்!
காலர் ட்யூன் மாற்றி விட்டால் - ஹாஹா... நல்ல ஐடியா தான்.
நீக்குமரப்பெட்டியில் மாம்பழங்கள் - ஆஹா... எத்தனை அன்பு!
விளம்பரம், பதிவின் மற்ற பகுதிகளும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
பணமே பிரதானமாய் நினைத்து வாழ்ந்த எமது துபாய் நண்பரை நான் பணம் சேர்ப்பதை மறந்து செலவழித்து அனுபவித்து வாழச்சொன்னதை கேட்டு மகிழ்ச்சியாக இருப்பதாக நேற்றுதான் போன் செய்து சொன்னார்.
பதிலளிநீக்குஅதைக்கேட்டு எனக்கு மிகவும் மகிழ்ச்சி.
உங்களின் நண்பரை மாற்றியது அறிந்து மகிழ்ச்சி கில்லர்ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
காஃபி வித் கிட்டு பகுதிகள் அணைத்தும் சுவையாக உள்ளது.
பதிலளிநீக்குபணம் தேவைதான், அளவுக்கு மிஞ்சி ஆசைப்பட்டடாத்லான் நிம்மதி போய்விடும்.
திறமை இல்லாத மனிதர் இல்லை. அதை கண்டுபிடித்து அவரை வழி நடத்த ஆட்கள் அமைந்துவிட்டால் அவர் ஜொலிப்பார்.
காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.
நீக்குஅளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது புரிந்தால் நல்லது.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
கதம்பத்தில் எல்லாம் அருமை.
பதிலளிநீக்குவிளம்பர காணொளி சிரிப்பை வரவழைக்கிறது. எப்படி எல்லாம் விளம்பரம் செய்கிறார்கள்.
பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
கதம்பம் அருமை...
பதிலளிநீக்குபணம் வேண்டுமா...? என்று எழுதிய பதிவு ஞாபகம் வந்தது...
பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
கதம்பம் ரசனையான இருக்கிறது.
பதிலளிநீக்குநாமெல்லாம் மாம்பழத்தை பழுக்க வைக்க அரிசிப் பானையில் அல்லது அரசி ட்ரம்மில் போட்டு வைப்போம்.
விளம்பரம் interesting!. நம் ஊரில் தன் குழந்தையை அப்பா என்று சொல்ல வைக்க படாத பாடு படும் ஒரு இளைஞன் பற்றி விளம்பரம் வந்திருக்கிறது.
இருட்டறையில் போட்டுவைப்பதுண்டு. இல்லை எனில் அரிசிப் பானைக்குள்!
நீக்குபதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி பானும்மா.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
மலையாளத்திலும் இப்படிப்பட்ட பாடல்கள் வரத் தொடங்கி விட்டனவா?
பதிலளிநீக்குமலையாளத்திலும் இப்படியான ஆல்பம் பாடல்கள் உண்டு பானும்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
கொடுக்கும் மனதுடன் ஒருவர். பணமே பிரதானம் என எண்ணும் ஒருவர். மனிதர்கள் பல விதம். எளிய மனிதரின் ஓவியத் திறன் அசத்துகிறது. வாட்ஸ் அப் நிலைத் தகவல் அருமை:). நல்ல தொகுப்பு.
பதிலளிநீக்குகாஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ராமலக்ஷ்மி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வாசகம் செம. ரசித்தேன் ஜி.
பதிலளிநீக்குபணம் மட்டுமே பிரதானமாகப் பேசுபவர்களிடம் இருந்து நான் விலகியே இருப்பது வழக்கம். அது நட்பாக இருந்தாலும் சரி, உறவாக இருந்தாலும் சரி.
“போகும்போது என்னத்தையா வாரிக்கொண்டு போகப் போகிறோம்?” //
யெஸ் அதே இது நான் அடிக்கடி நினைப்பது. இப்படியான மனிதர்களைச் சந்திக்கும் போது நினைப்பது.
கீதா
வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.
நீக்குபணம் மட்டுமே பிரதானம் என்பவர்களிடமிருந்து விலகி இருப்பது நல்லதே!
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குவாசகம் அருமை. இன்றைய காஃபி வித் கிட்டு நன்றாக உள்ளது.
பணத்திற்கும்,மனத்திற்கும் சம்பந்தம் உண்டல்லவா? நிறைய இது குறித்து திரைப்பட பாடல்களே வந்திருக்கின்றனவே.. அன்புடன் மாங்காய்களை தந்து உபசரித்து கொடுக்கும் பண்பு நிறைந்த அந்த பெண்மணிக்கு பாராட்டுகள்.
விளம்பரம் நன்றாக உள்ளது.
ஓவியத்தில், பார்த்தவுடன் வரையும் திறமையுள்ள அந்த சிறுவனைப் பற்றி தங்கள் பதிவில் அறிந்திருக்கிறேன். அபார திறமையுள்ள அவருக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள். இப்போது மேலும் திறமை நிறைந்த ஓவியராக வந்திருப்பார் என நினைக்கிறேன்.
இன்றைய உணவான ப்ரெட் சாண்ட்விட்ச் வித்தியாசத்திற்காக புதுமையாகவும் பார்க்க அழகாகவும் உள்ளது.
மலையாளப்பாடல் நன்றாக இருந்தது. கேட்டு ரசித்தேன். யூடியூப்பில் பிரபலமான "ஜிமிக்கி கம்மல்" பாட்டை அப்படியே ஞாபகப்படுத்தியது. அந்த மெட்டுடன் ஒரளவு ஒத்துப் போகிறது.
வாட்சப் நிலைத்தகவல் சுவாரஸ்யமாக இருந்தது. அந்த பிறந்த குழந்தையின் முகமும் அழகாக உள்ளது. அத்தனை பகிர்வுக்கும் மிக்க நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குவாசகம், பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
மனசு - பொன்னான நிறைந்த மனசு! கொடுக்கும் மனசு! வாழ்த்துவோம். ஆம் வாழ்த்தவும் மனம் வேண்டும்.
பதிலளிநீக்குவிளம்பரம் ஹாஹாஹாஹா!!! என்ன ஒரு கற்பனை!
குழந்தை அழகோ அழகு!!!
ஓவியம் அமித் பையனா? அல்லது முன்பு முதியவர் ஒருவர் வரைவதை போட்டிருந்தீர்கள் யாராக இருக்கும் என்று பார்த்தால் அமித்!!! நல்ல திறமை மீண்டும் ரசித்தேன் ஜி.
பின்வீல் சான்ட்விச் செய்து ருசித்ததுண்டு. கூலாகவும் சாப்பிடலாம் ஆனால் நம் வீட்டில் கூல் செய்யாமல்.நன்றாக இருக்கும் நம் இஷ்டத்திற்கு உள்ளே ஸ்டஃபின்ங்க் செய்து கொள்ளலாம்.
எல்லாம் ரசித்தேன் ஜி
கீதா
கீதா
பதிவின் பகுதிகள் குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி கீதாஜி.
நீக்குஅமித் வரைந்து கொண்டிருக்கிறான். அரசு அலுவலகம் ஒன்றிலும் தற்போது தற்காலிகப் பணியில் சேர்ந்து இருக்கிறான்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.