வெள்ளி, 25 ஜூன், 2021

The Aim - குறும்படம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட நிழற்பட உலா பதிவையும் நேற்று மாலையில் வெளியிட்ட மீண்டும் தலைநகரில் பதிவையும் படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


ஒரே குறிக்கோள்; எல்லையற்ற ஊக்கம்; தளர்வில்லாத நெஞ்சுறுதி; சளைக்காத உழைப்பு; நேர்மையான பாதை; வெற்றி கிடைக்காமலா போய்விடும்!


******
இந்த வாரம் நாம் பார்க்கப் போகும் குறும்படம் பின்னணி ஒலி மட்டுமே கொண்ட பேச்சுகளற்ற ஒரு குறும்படம்!  ஒரு குறிக்கோளுடன் அயராது உழைத்தால் கிடைக்கும் வெற்றி குறித்துப் பேசும் (பேசாத?) ஒரு குறும்படம்.  நல்ல விஷயத்தினைச் சொல்லும் இந்தக் குறும்படம் மாணவர்களுக்கானது என்றாலும் நாமும் பார்க்கலாம் - தவறில்லை! குறும்படம் பார்க்கலாம் வாருங்கள்!


மேலே உள்ள காணொளி வழி இந்தக் குறும்படத்தினை பார்க்க இயலவில்லை எனில் யூட்யூப் தளத்தில் இங்கே நேரடியாகவே பார்க்கலாம்!


******நண்பர்களே, இன்றைய நாளில் பகிர்ந்து கொண்ட குறும்படம் குறித்த தங்கள் எண்ணங்களை பின்னூட்டம் வழி பகிர்ந்து கொள்ளுங்களேன்.  நாளை காஃபி வித் கிட்டு பதிவின் வழி உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…12 கருத்துகள்:

 1. படிப்பினை ஊட்டும் குறும்படம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. குறும்படம் மிக அருமை.
  முயன்று வெற்றிபெற்ற சிறுவன் அருமை.
  பள்ளியில் படிக்காமல் மற்றவர்களையும் தொந்திரவு செய்த பையன் கதி!
  நல்ல படிப்பினை சொல்லும் படம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

   நீக்கு
 3. பதில்கள்
  1. குறும்படம் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 4. வெங்கட்ஜி வாசகம் செம.

  படம் அருமையான படம் ஜி. நல்ல படிப்பினை. ஊக்கம் தரும் படம். ஏற்கனவே பார்த்திருக்கிறேன் மீண்டும் ரசித்தேன்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகமும் குறும்படமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

   நீக்கு
 5. வித்தியாசமான அருமையான குறும்படம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 6. அன்பின் வெங்கட் ,
  இனிய காலை வணக்கம்.
  வாசகம் சிறப்பு.
  குறும்படம் மிக அருமை. அனேகப் பள்ளிகளில் இதைப் போல
  school bullies இருப்பார்கள்.
  அவர்களைத் திருத்த செய்யும் முயற்சிகள் பலிப்பதில்லை.
  தானாக திருந்தினால் உண்டு.
  பொறுமையாகப் படிக்கும் பையனைக் கண்டால்
  மகிழ்ச்சியாக இருகிறது.நன்றி வெங்கட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வல்லிம்மா.

   School Bullies - உண்மை தான். பெரும்பாலான பள்ளிகளில் இப்படி சில மாணவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....