செவ்வாய், 8 ஜூன், 2021

கதம்பம் - கூழ் - மதிய உணவு - லாக்டவுன் பரிதாபங்கள் - புகையிலை ஒழிப்பு தினம் - 100 ஸப்ஸ்க்ரைபர்ஸ் - குடும்பம் - சைக்கிள்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட படித்ததில் பிடித்தது பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


WHEN LIFE GIVES YOU A HUNDRED REASONS TO BREAK DOWN AND CRY, SHOW LIFE THAT YOU HAVE A MILLION REASONS TO SMILE AND LAUGH. STAY STRONG.


******


ஆதியின் அடுக்களையிலிருந்து - கேழ்வரகு கூழ் - 30 மே 2021: காலை ஆகாரமாக இன்று கூழ் செய்து சுவைத்தாச்சு. நேற்று இரவு செய்த சப்பாத்தி மீதம் இருக்கவே மகள் அதைச் சாப்பிட, நாங்கள் மூவரும் கூழ் 🙂


பெரியம்மா வெங்காயம், பூண்டு, மசாலா எல்லாம் சாப்பிட மாட்டார் என்பதால் அவருக்கு வெங்காயம் இல்லாமலும், எங்கள் இருவருக்கும் சேர்த்தும் 🙂 பச்சை வெங்காயம் எனக்கு பிடித்தமானது 🙂


உங்கள் வீட்டில் இன்றைய காலை உணவு என்ன?


******


ஆதியின் அடுக்களையிலிருந்து - மதிய உணவு - 30 மே 2021: சாதம், பொன்னாங்கன்னிக் கீரை மசியல், சுண்டக்காய் வத்தக்குழம்பு, கட்டித்தயிரும், பங்கனப்பள்ளி மாம்பழமும்!!  வாங்க சாப்பிடலாம்.


******


லாக்டவுன் பரிதாபங்கள் - 30 மே 2021:


எல்லாப் பாடல்களையும் மாற்றிப் பாடும் என் கணவர், இந்த லாக்டவுனால் ஏற்பட்ட சோதனைகளை ”என் சோகக் கதையக் கேளு தாய்க்குலமே”ன்னு புலம்பாத குறையாக புலம்பியிருக்கிறார் 🙂 கேளுங்களேன் 🙂******


உலக புகையிலை ஒழிப்பு தினம்! - 31 மே 2021:

அப்பாவை நினைத்துக் கொண்டு தான் ஒவ்வொரு முறையும் எழுதுகிறேன். ஒழுக்கத்திலும், சுத்தத்திலும், நேர்மையான குணத்தாலும், உதவும் மனப்பான்மையாலும் சிறந்த மனிதரை புகைப்பழக்கத்தால் தான் இழந்தேன்.


என்னமோ! அந்த நேரத்தில் இன்பமாக இருப்பதாகவும், தன் வலியை மறப்பதற்கும், அசதியை போக்குவதாகவும் நினைத்துக் கொண்டு இந்த பழக்கத்தை தொடர்கிறார்கள். ஆனால்! கொஞ்சம் கொஞ்சமாக அது உயிரைக் கொல்லும் என்று மெல்ல மெல்லத் தான் புரிகிறது 🙁


ஒருவரின் மனக் கட்டுப்பாடு மட்டுமே நிச்சயமாக இந்த பழக்கத்திலிருந்து மீண்டு வர உதவும். மீண்டு வாருங்கள் சகோதரர்களே! உங்களுக்காக அன்பான குடும்பம் காத்துக் கொண்டிருக்கிறது.


இன்றே விட்டு விடுங்கள் புகைப்பழக்கத்தை!


******


Adhi's kitchen சேனல் - 100 சப்ஸ்க்ரைபர்ஸ் - 31 மே 2021:

Adhi's kitchen சேனல் ஆரம்பித்து பத்து மாதங்கள் ஆகிறது. இதுவரை வாரம் ஒன்றாக 42 காணொளிகளை பகிர்ந்து கொண்டுள்ளேன். ஒவ்வொரு சப்ஸ்க்ரைபரும் ஏறுவதும், இறங்குவதுமாக கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தது 🙂


இன்றைய நாளில் 100-ஐ தொட்டுள்ளதில் மிக்க மகிழ்ச்சி. அந்த  மகிழ்ச்சியை உங்கள் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்கிறேன். 


******


குடும்பம் ஒரு கதம்பம் - 3 ஜூன் 2021:


நேற்று இரவு தட்டில் அரிசி உப்புமாவை போட்டு எடுத்து வந்து டைனிங் டேபிளில் வைத்து விட்டு…


நான்:  அப்பா! சாப்பிடலாம் வாங்கோ!


மாமனார்: தயிர்சாதமா இது?? (உப்புமாவை பார்த்து விட்டு)


நான்: அரிசி உப்புமாப்பா!


அதற்குள் இந்த உரையாடலை வேறு ஒரு ரூமில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த என் மாமியாரும், பெரிய மாமியாரும்....


பெரிய மாமியார்:  அவர் தயிர்சாதம் கேட்கறார் போலருக்கு டி!


நான்: இல்ல பெரிம்மா!


பெரிய மாமியார்:  அப்போ உப்புமால தயிர விட்டுட்டியா!


நான்: இல்ல பெரிம்மா!


பெரிய மாமியார்: உப்புமா மேல சாதம்   போட்டுட்ட போலிருக்கு!


நான்: இல்ல பெரிம்மா!


ஹா..ஹா..ஹா..

___________

நான்கு நாட்களாக வீடே அமர்க்களமாக இருக்கிறது. வயதானவர்கள் மூன்று பேருமே மூன்று விதம். எல்லோரும் 75+... அவரவர் இஷ்டப்படி தான் இருப்பார்கள்...🙂 நாம் தான் வளைந்து கொடுக்க வேண்டும்..🙂

ஒருவருக்கு காஃபி, ஒருவருக்கு டீ, ஒருவருக்கு பால்!


ஒருவர் கொத்தவரங்காய் சாப்பிட மாட்டார், ஒருவருக்கு வெங்காய தயிர்பச்சடி வேணும்!  இப்படி எல்லாமே வேறுபடும்..🙂


__________  


அக்காவை இரண்டு நாட்களுக்கு தங்கை குளிப்பாட்டி விட, நீ அழுத்தியே தேய்க்க மாட்டேங்கிறடி, நுரையே வர மாட்டேங்கறது! அவளையே குளிப்பாட்டச் சொல்றேன்..🙂


******


சைக்கிள் தினம் - 3 ஜூன் 2021:


அப்பா ஒருபுறம், தம்பி ஒருபுறம் பிடித்துக் கொள்ள, வெந்தயக் கலரில் பூப்போட்ட ஸ்கர்ட்டுடன் சைக்கிள் ஓட்ட கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். கோவையின் ரேஸ்கோர்ஸ் ஹவுசிங் யூனிட்டில்! சிறிது தூரம் போவதற்குள்  கீழே விழுந்துவிட்டேன் 🙂 


அடடா! எல்லாரும் பார்ப்பார்களே! என்ன பார்த்து சிரிப்பாங்களே! காலில் இருந்த கொலுசும் விழுந்து விட அதை அழுகையுடன் எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்துவிட்டேன் 🙂 அதன் பிறகு எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் பயம் 🙂 கற்றுக் கொள்ளவே இல்லை 🙂 எனக்கு இப்போது வரை சைக்கிள் ஓட்டத் தெரியாது 🙂 ஆனால்!!


மகளுக்கு மூன்றாம் வகுப்பில் சைக்கிள் வாங்கிக் கொடுத்தோம். அவளுக்கு நான் தான் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுத்தேன் 🙂 திருவரங்கத்தின் சித்திரை வீதிகளில் அவள் ஓட்ட அவள் பின்னேயே எத்தனையோ நாட்கள்  ஓடியிருக்கிறேன் 🙂 கீழே விழுந்தால் தூக்கி விட்டு, தள்ளிக் கொண்டே வருவேன் 🙂


கொஞ்சம் கற்றுக் கொண்ட பின் எனக்கு மருந்துகள், காய்கறி என்று வாங்கி வந்து தருவாள். இப்போது அவள் நன்றாகவே ஓட்டுகிறாள். பள்ளிக்கு எடுத்துச் செல்வாள். இம்முறை என்னவரும் மகளின் சைக்கிளில் தான் கடைகளுக்கு சென்று வருகிறார் 🙂


எதுக்கு இந்தப் புராணம்?? இன்னிக்கு சைக்கிள் தினமாமே!!


******


நண்பர்களே, இந்த நாளின் கதம்பம் பதிவு குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள். மீண்டும் வேறொரு பதிவின் வழி சந்திக்கும் வரை...


நட்புடன்ஆதி வெங்கட்


34 கருத்துகள்:

 1. இன்றைய கதம்பம் நன்று.

  மண்பாத்திர தயிர்.. யம்மி.

  வயதானவர்களை மேனேஜ் செய்வது... அவ்வளவு பொறுமை எனக்கு இல்லையே என நினைத்துப்பேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

   வடக்கே மண் தட்டுகளில் வைத்திருக்கும் கெட்டித் தயிர் - ஆஹா... சொல்ல வைக்கும்! எருமைத் தயிர் என்பதால் இன்னும் கெட்டியாகவே இருக்கும்!

   வயதானவர்களை மேனேஜ் செய்வது - பொறுமை அதிகம் தேவை தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. உணவு வகைகள் மண்பாண்டங்களில் சமைக்கப்பட்டிருப்பது சிறப்பு.

  வெங்கட்டின் பாடல் சூப்பர்.   ஹா..  ஹா..  ஹா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மண் பாண்டங்களில் உணவு - சில வருடங்களாகவே மண் பாண்ட சமையல் தான் ஸ்ரீராம்.

   பாடல் - ஹாஹா.. மகிழ்ச்சி. சும்மா மாற்றி மாற்றிப் பாடுவது வழக்கம். அப்படிப் பாடியதை பகிர்ந்தாயிற்று!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. பதில்கள்
  1. கதம்பம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

   கேட்பொலி - ஹாஹா... ரசித்தமைக்கு நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. எங்க வீட்டுல நான் காய்கறி வாங்கிவருவதோட சரி. தேங்காய் கட் பண்ணி மிக்சில போடுவேன். நான் தேங்கா சீயன் பண்ணினால்தான் துருவுவேன். காய்களை பல நாட்களில் கட் பண்ணிக் கொடுப்பேன். இதெல்லாம் செஞ்சா என் நேரம் ரொம்பவே குறைந்துவிடுவதாய்த் தொன்றும்.

  இவ்வளவுதானா வீட்டுவேலைகள் வெங்கட்டுக்கு? அப்பாக்கு ஏதேனும் செய்துகொடுப்பீர்களா? சமையல் திறன் காட்டுவதுண்டா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வீட்டு வேலைகள் இன்னும் உண்டு நெல்லைத் தமிழன். இங்கே சொன்னது கொஞ்சமே! ஒரு சில நாட்கள், சில வேளைகள் சமைத்தேன். அப்பாவுக்கென்று தனியாக என்றால் காஃபி போட்டுக் கொடுப்பது போன்றவை தான். வெளி வேலைகளைச் சமாளிப்பதும் தற்போது நானே!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
  2. எதற்காகக் கேட்டேன் என்றால், என் அம்மாவுக்கு நான் பஹ்ரைனில் சமைத்திருக்கிறேன், ஊருக்கு வந்த பிறகும் இனிப்புகள் செய்து எடுத்துச் சென்றிருக்கிறேன். அப்பாவுக்கு நான் சமைத்து எதுவும் பண்ணித் தரலையே என்ற வருத்தம். பண்ணித் தந்திருந்தால் குறைந்தபட்சம் மனதுக்குள் சந்தோஷப்பட்டிருப்பார்.

   நீக்கு
  3. அவருக்கு நான் சமைத்துத் தந்திருக்கிறேன் - தில்லியிலும் இங்கேயும். குறிப்பாக வட இந்திய உணவுகள். இந்த முறை கூட வீட்டில் எல்லோருக்கும் சமைத்தேன் - அவருக்கும் சேர்த்து தான் நெல்லைத் தமிழன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. ஆஹா! வெங்கட்ஜி!! ஹா ஹா ஹா ஹா சூப்பர்!! புது அவதாரம்!

  நானும் சிலப்போ இப்படி மாத்தி மாத்திப் பாட முயற்சி செய்வதுண்டு ஹிஹிஹி

  ஆதி கூழ் ப்ளஸ் சாப்பிட வாங்க எல்லாம் செம. அதுவும் மண் பாத்திரத்தில் ஜூப்பர்!

  உங்கள் வீட்டில் இன்றைய காலை உணவு என்ன?// ஹா ஹா ஹா இது மே 30 க்கு கேட்டது ஸோ அன்று என்ன செய்தேன் என்பது ஓ மை நினைவு இல்லையே! இன்று என்றால் தமிழ்நாட்டு ஆப்பம், கடலைக்கறி!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புது அவதாரம் - ஹாஹா... சும்மா பாடறதா பெயர் பண்ணுவதே இது கீதாஜி.

   ஆப்பம், கடலைக் கறி - ஆஹா... பெங்களூருக்கு ஃபளைட் புடிக்கலாம் போல இருக்கே! இங்கே இன்றைக்கு காலை உணவு பாவ் பாஜி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
  2. காலை உணவு பாவ் பாஜி!//

   அப்ப இடம் மாறிப்போம்.. ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
  3. இடம் மாறிப்போம் - ஆஹா... நான் ரெடி கீதாஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. ஒருவரின் மனக் கட்டுப்பாடு மட்டுமே நிச்சயமாக இந்த பழக்கத்திலிருந்து மீண்டு வர உதவும். //

  கண்டிப்பாக. இப்பழக்கம் மட்டுமல்ல எந்தக் கெட்டப்பழக்கமும் தான். ஆனால் அது ரொம்ப ரொம்பக் கடினம்தான் மனம் சார்ந்த விஷயமாயிற்றே..

  பெரியம்மா ராக்ஸ்! ஒரு கேள்விக்கு எத்தனை கற்பனை...

  அழுத்தித் தேய்க்க மாட்டேங்கற//...ஹா ஹா ஹாஹா...

  வயதானவர்களைப் பார்த்துக் கொள்வதற்கு வாழ்த்துகள் உங்கள் மூவருக்கும். காட் ப்ளெஸ்!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மனதைக் கட்டுப்படுத்துவது கடினமான வேலை தான் கீதாஜி.

   பெரியம்மா ராக்ஸ் - ஹாஹா... எஞ்சாயிங்! வயதானவர்களைப் பார்த்துக் கொள்ள அதீத பொறுமை வேண்டும். உடனடியாக கோபம் வந்து விடும், பல சமயம் தவறாகப் புரிந்து கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
  2. வயதானவர்களைப் பார்த்துக் கொள்ள அதீத பொறுமை வேண்டும். உடனடியாக கோபம் வந்து விடும், பல சமயம் தவறாகப் புரிந்து கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது!//

   நிச்சயமாக..அனுபவம் உண்டு என்பதால் புரிந்து கொள்ள முடிகிறது ஜி

   கீதா

   நீக்கு
  3. உங்களுக்கும் அந்த அனுபவம் இருப்பதால் புரிந்து கொள்ள முடியும் கீதா ஜி.

   தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. பதில்கள்
  1. கதம்பம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 8. Adhi's kitchen சேனல் ஆரம்பித்து எபிசோட் 100-ஐ தொட்டுள்ளதில் மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்
  எனக்கும் உப்மா கூட தயிர் பிடிக்கும் தயிரை தோசைக்கு கூடத் தொட்டுக்க கொள்வேன் . என் சைக்கிள் பிட்டும் ஆசை பாதிக் கிணறு மட்டுமே தாண்டியது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எபிசோட் 100 அல்ல! சப்ஸ்க்ரைபர் (தொடர்பவர்கள்) 100! இது வரை 43 காணொளிகள் வெளியிட்டு இருக்கிறார் அபயா அருணா ஜி.

   சைக்கிள் ஓட்டும் ஆசை - பலருக்கு ஆசை நிறைவேறுவதில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. மூன்று பெரியவர்கள் அதுவும் 75+ அவர்களைப் பார்த்துக்கொள்வது என்பது மிகப் பெரிய விஷயம். பாராட்டுகள். வாழ்த்துகள்.

  பெரிய மாமியாரின் உரையாடல்கள் ரசிக்க வைத்தன.

  நானும் கல்லூரிக் காலத்தில் புகைப்பிடித்துக் கொண்டிருந்தேன் அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திவிட்டேன். மனம் ஒத்துழைக்க வேண்டும் என்பது மிக முக்கியம் தான். உங்கள் அறிவுரையை வழிமொழிகிறேன்.

  கதம்பம் நன்றாக இருக்கிறது சகோதரி.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உரையாடல்களை ரசித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.

   புகை பழக்கத்தினை நிறுத்தியது நல்ல விஷயம் தான்.

   கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 10. உலக சைக்கிள் தினத்தில் சைக்கிளை மட்டும் ஓட்டாமல் சாரையும் ஓட்டும் என்னத்துடன் பாடுவதை ரகசியமாக ரெக்கார்டு செய்து பகிர்ந்துள்ளது சூப்பர்.
  புது அவதாரம் வாழ்த்துக்கள். கேட்க சுவாரசியமாகவும் வார்த்தைகள் காமெடியாகவும் இருந்துச்சு.
  100 சப்ஸ்கிரைபர்ஸ்களுக்கு வாழ்த்துக்கள்.
  புகைப்பழக்கம் எல்லாம் இப்போது ஒழியாது என்பது என் என்னம், பெண்களும் அதில் போட்டியாளர்கள் ஆகிறார்கள்.
  வீட்டில் ஒன்றுக்கு மூன்று முதியோர் இருப்பது சுவாரசியம் தான்.
  எங்களுக்கெல்லாம் அந்த பாக்கியம் இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் பகுதிகள் குறித்த உங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி அரவிந்த்.

   பெண்களும் அதில் போட்டி போட ஆரம்பித்து விட்டார்கள் என்பது உண்மை தான் - தில்லியில் எங்கள் அலுவலகத்திலேயே இப்படி பலரைப் பார்க்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 11. உங்களுக்கு எழுத மட்டும்தான் தெரியும் என்று நினைதிருந்தேன். பாடவும் தெரியும் என்பதை இந்த பதிவு மூலம் தெரிந்து கொண்டேன் வெங்கட் ஜி. சூப்பர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாடவும் தெரியும் - ஹாஹா... சும்மா அப்படியே பேசறது தான்! :) ரசித்தமைக்கு நன்றி இராமசாமி ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 12. கதம்பம் அருமை.
  பாட்டு எனக்கு கேட்கவில்லை. கேட்டு விட்டு சொல்கிறேன். நன்றாகத்தான் பாடி இருப்பீர்கள்.
  பன்முகதிறமை வாய்ந்தவர் .

  குடும்பம் ஒரு கதம்பம் ரசித்தேன்.

  //இன்றைய நாளில் 100-ஐ தொட்டுள்ளதில் மிக்க மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியை உங்கள் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்கிறேன். //
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 13. பாடல் அருமை. வேலைகளின் பட்டியல் அடங்க்கிய பாடல்.
  ஒன்றா இரண்டா எடுத்து சொல்ல!
  திறமைகள் வளர்ந்து கொண்டே போகிறது.
  பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல! - ஹாஹா... சும்மா அப்படியே எதையாவது செய்வது தான் கோமதிம்மா. வாழ்த்தியமைக்கு நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 14. வயதானவர்களைப் பார்த்துக்கொள்வதில் நிறையவே அனுபவங்கள். மாமியார், மாமியாரின் ஓர்ப்படி, நாத்தனார், என் அப்பா நால்வரையும் வைத்துக் கொண்டு சமாளித்திருக்கிறேன். ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொன்று வேண்டும் என்பாங்க. என் அப்பாவுக்குப் பத்து மணிச்சாப்பாடு, ஒரு மணிக்காஃபி! 3 மணி டிஃபன். ஏழு மணிச் சாப்பாடு. மத்தவங்களுக்கு நேர்மாறாக இருக்கும். உட்கார நேரமில்லை என்றால் உண்மையாகவே இருக்காது. :))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உட்கார நேரமில்லை - அதே தான் கீதாம்மா. உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....