செவ்வாய், 22 ஜூன், 2021

கதம்பம் - ”தல” புராணம் - பழமொழி - தோசை - என்ன காய் - மிளகுக் குழம்பு - காதணி


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


தோற்றவன் புன்னகைத்தால் வெற்றியாளன், வெற்றியின் சுவை இழக்கிறான் - ஹிட்லர்.


******




”தல” புராணம் - 9 ஜூன் 2021:





தல: இன்னிக்கு என்ன சமையல்??


நான்: செளசெள போட்டு சாம்பார், வெண்டக்காய் கறி..


தல: ஏண்டி! யாராவது செளசெள போட்டு சாம்பார் வெப்பாளா?? செளசெளல கூட்டு தான் பண்ணுவா..!!


நான்: நீங்க எப்பவும் சொல்றதால அம்மாட்ட (மாமியார்) கூட கேட்டுட்டேன்!


தல: அம்மா என்ன சொன்னா??


தல: நான்ல்லாம் பண்ண மாட்டேன்! அதிசயமா நீ தான் பண்றேன்னு சொல்லியிருப்பா! எனக்குத் தெரியாதா எங்கம்மாவ பத்தி!! (என்ன ஒரு நம்பிக்கை!!)


நான்: அதுதான் இல்ல..🙂 தாராளமா பண்ணலாம்.. அவன் கிடக்கிறான் பைத்தியக்காரன்னு சொன்னா..:)))


ஙேஙேஙேஙே...!!!


தல: என்ன வாரி விடறதுல ரெண்டு பேரும் ஒண்ணு கூடிடுங்கடி!!! ஹா..ஹா..ஹா...


******


அம்பா பெரியம்மா At Her Best! - 9 ஜூன் 2021:


கீழே ஒரு வாக்கிங் போய் விட்டு வரலாம் என்று நேற்று மாலை என்னவரும் நானும் கிளம்பினோம்.


கீழே சென்ற பின் தான் மழை தூறிக் கொண்டிருப்பது தெரிந்தது. உடனேயே வீட்டுக்கு வந்துவிட்டோம்.


வீட்டுக்குள்ளேயே நடை பயின்று கொண்டிருந்த பெரியம்மா கதவைத் திறந்து நாங்கள் உள்ளே வந்த நொடி…


என்னாச்சு??


மழை தூர்றது!


"அதிசயமான ஊருல ஆம்பளப் பிள்ள பெத்தாளாம்! தொப்புள் கொடி அறுக்கிறதுக்குள்ள கப்பலேறி போச்சாம்" !!! 


இவளே இப்ப தான் கிளம்பினா!! 


ஹா..ஹா..ஹா..


******


அம்பா பெரியம்மா At Her Best! - 12 ஜூன் 2021:


நேற்று இரவு எல்லோருக்கும் தோசை வார்த்து கொடுத்து விட்டு கடைசியாக என்னுடைய மூன்று தோசையை வார்த்து எடுத்து வந்து  நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்..


ஏண்டி! பொறுமையா சாப்பிடற?? சாப்பிட முடியலையா??


பெரிசு பெரிசா பிய்ச்சு சாப்பிடறயா??


எல்லா வேலையும் முடிச்சுட்டு ஆறிப் போன தோசைய சாப்பிடறயா??


கிட்டுவுக்கு தோசை வார்க்கத் தெரியுமே?? வார்த்து குடுக்க மாட்டானோ??


அவ பாரு பாத்திரம் தேய்க்கறாடா!! சாப்பிட்டதும் உடனே செய்யணுமா??


ஹா..ஹா..ஹா..


பேச ஆள் வேண்டும்..🙂 பேசுவதற்கு ஏதாவது டாபிக் வேண்டும்..:)) 


******


படம் - என்ன காய் இது? - 9 ஜூன் 2021:





இன்றைய நடைப்பயிற்சியில் க்ளிக்கியது!! 


நம்ம அபார்ட்மென்ட்டுக்கு பின்னே உள்ள காலிமனையில் கொடி போல படர்ந்துள்ளது..பழங்கள் எலுமிச்சை போலவும், காய்கள் வரிவரியாகவும், காய்ந்தது சுருங்கி பழுப்பு நிறத்திலும். நிறைய இருக்கிறது. என்ன கொடி இது???


(பின் குறிப்பு: முகநூலில் கொமட்டி/குமட்டிக் காய் என்றும், ஆங்கிலத்தில் Bitter Apple என்றும் பதில் வந்திருந்தது!)


******


ஆதியின் அடுக்களையிலிருந்து - மிளகுக் குழம்பு - 12 ஜூன் 2021:





பாட்டிம்மாக்கள் அஞ்சறைபெட்டியில் இருக்கும் பொருட்களை வைத்தே உடலுக்கு நன்மை தரக்கூடியதும், சுவை மிகுந்ததாகவும் உணவை தயாரிப்பார்கள். அப்படியொரு ரெசிபி தான் மிளகுக் குழம்பு. மாமியார் இதில் காய்ந்த மாங்கொட்டைகளை போட்டு குழம்பாக செய்வார். பிரமாதமாக இருக்கும். இந்த வாரம் Adhi's kitchen சேனலில் மிளகுக் குழம்பு செய்முறை. காணொளியைப் பார்க்க சுட்டி கீழே!


மிளகுக் குழம்பு/Milagu kuzhambu by Adhi venkat/Traditional kuzhambu/pepper/South indian/Medicinal!!


******


ரோஷ்ணி’ஸ் க்ரியேட்டிவ் கார்னர் - 12 ஜூன் 2021:





மகளின் சேனல் அப்டேட்! மகளின் சேனலில் புதிய காணொளி - பழைய காதணிகளை புதுவிதமாக மாற்றியிருக்கிறாள். அதைக் காண சுட்டி கீழே!


Revamping earrings | Roshni's Creative Corner


******


நண்பர்களே, இந்த நாளின் கதம்பம் பதிவு குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள். மீண்டும் வேறொரு பதிவின் வழி சந்திக்கும் வரை...


நட்புடன்



ஆதி வெங்கட்


24 கருத்துகள்:

  1. சுவாரஸ்யம்.  பெரும்பாலும் எல்லாவற்றையும் பேஸ்புக்கில் படித்து விட்டேன்.  சௌ சௌவில் நங்கள் கூட்டு மட்டுமே செய்வோம்.  எப்போதாவது சாம்பார் செய்ததுண்டு.  தேங்காய் போட்டு கறியும் செய்யலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சௌசௌ கூட்டு மட்டுமே நான் ருசித்ததுண்டு. ஆனால் இப்போது அம்மா சாம்பார் செய்திருக்கிறேன் என்று சொல்கிறார்! ஒப்புக்கொள்ள வேண்டியது தான் - வேறு வழி? ஹாஹா...

      முகநூலிலும் இங்கேயும் வாசித்து கருத்துரைத்தமைக்கு நன்றி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. பதில்கள்
    1. கதம்பம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஜனா சார்.

      நீக்கு
  3. நாளைக்கே சௌசௌ சாம்பார்.
    வழக்குமொழி அட்டகாசம்.. என் பாட்டி வாய் திறந்தால் அடுக்கு மொழியாக வரும்.. அதுவும் கோபம் வந்தால் என் தாத்தாவைப் பிய்த்து உதறிவிடுவார்.. தமிழ் விளையாடும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சௌசௌ சாம்பார் சமைத்து சுவைத்திருப்பதை வாட்ஸப் வழி அறிந்தேன். மகிழ்ச்சி.

      வழக்குமொழி - அம்மா, பெரியம்மா, அவர்களின் அத்தை என அனைவரும் இப்படியான பழமொழிகள் நிறைய சொல்வார்கள். எழுதி வைக்க வேண்டும் என நினைத்து சிலவற்றை எழுதி வைக்கச் சொல்லி இருக்கிறேன் துரை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. கதம்பம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      நீக்கு
  5. கதம்பம் ரசிக்கும்படி இருந்தது. அதிலும் கான்வர்சேஷன்ஸ்.

    சௌசௌவை இரண்டு நாள் முன்பு அவியலிலும் போட்டேன். சாம்பாருக்கான தான் சௌசௌ இல்லைனு நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் பதிவின் பகுதிகளை ரசித்தமைக்கு நன்றி.

      சாம்பாருக்கான தான் இல்லை - அதே தான் என் எண்ணமும் நெல்லைத் தமிழன்.

      உங்களுக்கு ஒரு விஷயம் சொல்கிறேன் - இந்தக் காய் பொதுவாக வடக்கே இல்லை! ஆனால் இதற்கு ஹிந்தி பெயர் இஸ்குஸ்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      நீக்கு
  7. சுவாரசியமான கதம்பம்.
    எங்கள் வீட்டிலும் சௌசௌ வச்சு சாம்பார் பண்ணுவார்கள், சுவையாக இருக்கும். இன்ரு பலா கொட்டை போட்டு சாம்பார்.
    தளபதி பிறந்தநாள் அன்னைக்கு தல புறாணமா? நல்ல பொருத்தமா தான் இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.

      பலாகொட்டை சாம்பார் - ஆஹா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. பெரியம்மா சொல்லும் பழமொழிகளை எல்லாம் சேகரம் செய்து கொள்ளுங்கள். பொக்கிஷங்கள் அனைத்தும். சௌசௌவுக்கு நம்ம வீட்டில் வேலையே கிடையாது. அந்தக் காய் அன்னிக்கே சொல்ல நினைச்சு மறந்துட்டேன். கண்டங்கத்திரி போல இருக்கு. உடம்புக்கு ரொம்ப நல்லதுனு சொல்லுவாங்க. (கண்டங்கத்திரியாக இருந்தால்) கூட்டு, பொரிச்ச குழம்பு பண்ணலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழமொழிகள் சேமிக்க வேண்டும்.

      கண்டங்கத்திரி இல்லை கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. சௌசௌ சாம்பார் நீர்த்துப் போய் விடும். பெரியம்மாவின் பழமொழி அசத்தல். ரோஷ்ணியின் கை வண்ணம் சூப்பர்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவியலில் எல்லாம் போட்டிருக்கேன். மோர்க்கூட்டுப் பண்ணுவேன். மொளகூட்டல் பண்ணுவேன். பொரிச்ச கூட்டும் பண்ணுவேன். நீர்த்தெல்லாம் போனதில்லை. ஆனால் நம்ம வீட்டில் போணி ஆகாது. அது தனி!

      நீக்கு
    2. சௌசௌ சாம்பார் நீர்த்துப் போய் விடும் - இருக்கலாம்! எனக்கு அதைச் சாம்பாரில் போட்டால் பிடிப்பதில்லை.

      பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி பானும்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    3. கூட்டு மட்டுமே எனக்குப் பிடித்தது! மற்றவை பிடித்துப் புசிப்பதில்லை! வேறு வழியில்லாமல் சாப்பிடுவது தான் கீதாம்மா :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. கதம்பம் மிக சுவார்ஸ்யம்.
    சௌ சௌ சாம்பார் இன்று அ.துரை செய்து படமும் போட்டிருந்தார்.
    சௌசௌ எல்லா இடத்துலயும் உபயோகமாகும்.

    சில பதிவுகளை முக நூலில் படித்தேன். பெரியம்மா
    மொழிகள் மிக சுவாரஸ்யம்,.
    பாவம் பேச்சுத் துணைக்கு ஆள் தேடுகிறார்.

    ரோஷ்ணியின் காதணி மிக அருமை.
    தல புராணம் வெகு ஜோர்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

      அப்பாதுரை பகிர்ந்த படம் பார்த்தேன் வல்லிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. ஆ! நேற்று நான் போட்ட கருத்து எதுவுமே வரவில்லை போல!

    உரையாடல்களை மிகவும் ரசித்தேன்...பெரியம்மாவின் உரையாடல்களை பதிவு செய்வது பொக்கிஷம் ...

    நம் வீட்டில் சௌ சௌ சாம்பார், கூட்டு மிளகுக் கூட்டு, மிளகுஸ்யம், தனியா அரைத்துவிட்டக் கூட்டு மோர்க்கூட்டு (மாமியார் செய்வார்) தேங்காய் பொட்டுக் கறி என்று...

    உங்கள் மிளகு குழம்பு சூப்பர் அங்கும் பார்த்து லைக்கி கமெண்டிட்டேன்..

    அந்தக் காய் குமட்டிக் காய் மருத்துவ குணம் உள்ளது.

    ரோஷினி கார்னர் பார்க்கிறேன்

    இப்போதாவது கமென்ட் வருதா என்று தெரியலை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா... நீங்கள் இதுவரை போட்ட கருத்துரைகள் (எனக்கு வந்தவை) அனைத்துமே வெளியிட்டு விட்டேன் கீதாஜி. சில சமயம் ப்ளாக்கர் அண்ணாச்சி இப்படித்தான் படுத்துகிறார்.

      கதம்பம் பதிவின் பகுதிகள் குறித்த உங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....