வியாழன், 17 ஜூன், 2021

அமேசான் தளத்தில் மின்னூல் வெளியீடு - தகவல்கள்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கடந்து வந்த பாதை பதிவையும் இன்று காலை வெளியிட்ட அம்பா பெரியம்மா பதிவையும் படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


பேசுவதற்கு முன் யோசியுங்கள்; யோசிப்பதற்கு முன் வாசியுங்கள் - ரான் லெபோவிட்ஸ்.


******
அன்பின் நண்பர்களுக்கு, இன்று ஒரு தகவலுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  சில மாதங்களாக எந்த மின்னூலும் வெளியிட முடியாத சூழல். கடைசியாக சென்ற அக்டோபர் மாதம் “கிட்டூஸ் கிச்சன்” என்ற மின்னூலை வெளியிட்டேன். அதன் பிறகு எந்த மின்னூலையும் வெளியிட இயலவில்லை.  சமீபத்தில் தான் கொஞ்சம் முனைப்புடன் உட்கார்ந்து மின்னூல் வெளியிடுவதற்கான வேலையினைச் செய்ய முடிந்தது.  இதற்கிடையில் வலையுலக நண்பர்கள் சிலரின் மின்னூல்களை வெளியிட உதவி செய்ய முடிந்ததில் மகிழ்ச்சி.  சரி தற்போது வெளியிட்டு இருக்கும் மின்னூல்கள் எவை? அவை குறித்த தகவல்கள் என்ன என்பதைப் பார்க்கலாம்.  கடந்த இரண்டு நாட்களில் எனது இரண்டு மின்னூல்களை அமேசான் தளத்தில் வெளியிட்டு இருக்கிறேன்.  இரண்டுமே பயண நூல்களே!  


முதலாவது நூல் 2014-இல் நான் சென்று வந்த ஒரு பயணம் குறித்த நூல் என்றால், இரண்டாவது மின்னூல், எனது தில்லி நண்பர் திரு சுப்ரமணியன் அவர்கள் சென்று வந்த ஒரு பயணம் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு!  இரண்டு மின்னூல்களும் தற்போது அமேசான் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.  


மின்னூல் - 1:  மஹா கும்பமேளா - ஒரு பயணம்: 

முதலாவது மின்னூல் 2014-ஆம் ஆண்டு அலஹாபாத் எனும் ப்ரயாக்ராஜ் நகரில் நடந்த  மஹாகும்பமேளா சமயத்தில் அங்கே சென்ற போது எனக்குக் கிடைத்த அனுபவங்கள் மற்றும் தகவல்கள் அடங்கிய மின்னூல்!  இந்த மின்னூலை Kindle Unlimited வசதி பெற்றவர்கள், இலவசமாக தரவிறக்கம் செய்து படிக்கலாம்.  மற்றவர்கள் ரூபாய் 100/- செலவு செய்து படிக்கலாம்!  இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளும் வசதியைத் தரும் பட்சத்தில் அதன் தகவலையும் நான் பகிர்ந்து கொள்கிறேன்.  மஹா கும்பமேளா - ஒரு பயணம் மின்னூலை தரவிறக்கம் செய்து கொள்ள சுட்டி கீழே தந்திருக்கிறேன். 

 

மஹா கும்பமேளா - ஒரு பயணம்மின்னூல் - 2: மேகங்களின் ஆலயம் மேகாலயா:

மேகங்களின் ஆலயம் மேகாலயா - இந்தத் தலைப்பில் இன்று ஒரு மின்னூல் அமேசான் தளம் வாயிலாக வெளியிட்டு இருக்கிறேன். தில்லி நண்பர் திரு சுப்ரமணியன் அவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் அங்கே சென்று வந்த போது கிடைத்த அனுபவங்கள், தகவல்கள் என அனைத்தையும் சுவை பட எழுதி இருக்கிறார். வலைப்பூவில் எழுதிய போது பகிர்ந்த தகவல்களுடன் கூடுதலாக உணவு, கட்டணங்கள் குறித்த தகவல்களும் மின்னூலில் இணைத்திருக்கிறேன். இந்தப் பயண நூல், அங்கே சென்று வர நினைக்கும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.  மின்னூலை வெளியிட அனுமதித்த நண்பருக்கு மனம் நிறைந்த நன்றி.  மின்னூல், Kindle Unlimited கணக்கு வைத்திருப்பவர்கள் இலவசமாகத் தரவிறக்கம் செய்து வாசிக்க முடியும்.  மின்னூலை தரவிறக்கம் செய்ய சுட்டி/உரல் கீழே!


மேகங்களின் ஆலயம் மேகாலயாமின்னூல்களை தரவிறக்கம் செய்ய இருக்கும் நண்பர்களுக்கு மனம் நிறைந்த நன்றி. வாசித்து உங்கள் கருத்துகளையும் எண்ணங்களையும் பின்னூட்டம் வாயிலாக பகிர்ந்து கொள்ளுங்கள். மீண்டும் வேறு ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து...


16 கருத்துகள்:

 1. மின்னூல்களை தரவிறக்கம் செய்கிறேன்... நன்றி... வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்தியமைக்கு நன்றி தனபாலன். முடிந்த போது தரவிறக்கம் செய்து படியுங்கள்.

   நீக்கு
 2. மின்னூல்களுக்கு வாழ்த்துக்கள் . தரவிறக்கம் செய்து படிக்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்தியமைக்கு நன்றி அபயா அருணா ஜி. முடிந்தபோது தரவிறக்கம் செய்து வாசித்து விடுங்கள்.

   நீக்கு
 3. வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

  பதிலளிநீக்கு
 4. வாழ்த்துகள் ஐயா
  மின்னூல்களை தரவிறக்கம் செய்கிறேன்
  நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்தியமைக்கு நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா. முடிந்த போது தரவிறக்கம் செய்து, வாசித்து, உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள் ஐயா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....