ஞாயிறு, 27 ஜூன், 2021

நாற்பதில் நாய் குணம் என்றால் ஐம்பதில்?


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவையும் இன்று காலை வெளியிட்ட கடந்து வந்த பாதை பதிவையும்  படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த பதிவினை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


கற்றுக்கொள்ளும் மனம் இருந்தால் முட்டாள்களிடமிருந்து கூட பாடம் கற்க முடியும்; அந்த மனம் இல்லாவிட்டால் புத்தனிடமிருந்து கூட எதையும் கற்க முடியாது. 


******

 


நாற்பது வயதில் நாய் குணம் என்று சொல்வது வழக்கம். அதுவே ஐம்பது வயதானால்?  “ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?” என்ற ஒரு பழமொழி உண்டு.  அதைத் தவிர வேறு ஏதேனும் ஐம்பது வயதுக்காக நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருப்பார்களோ? எனக்குத் தெரியவில்லை.  சரி கூகுள் ஆண்டவரிடம் கேட்கலாம் என தேடினேன். ஹிந்து தமிழ் நாளிதழில் ஒரு கட்டுரை கிடைத்தது.  “முதுமை என்றால் எந்த வயது? என்ற தலைப்பில் சாந்தகுமாரி சிவகடாட்சம் என்பவர் எழுதிய கட்டுரை அது.  சிறப்பாக எழுதி இருக்கிறார்.  முடிந்தால் இந்தச் சுட்டிவழி படிக்கலாம்.  அக்கட்டுரையில் அவர் எடுத்தாண்ட ஹோசா பாலோ  என்பவரின் வாசகம் பிடித்திருந்தது.  அந்த வாசகம் - “நாற்பது வயது என்பது இளமையில் முதுமை. ஐம்பது வயது முதுமையில் இளமை.  இந்த  வாசகத்தின்படி நான் முதுமையில் இளமை பருவத்தில் இருக்கிறேன்.  முதுமை என்பது வெறும் ஒரு சொல் மட்டுமே.  எத்தனை வயதானாலும் இளமை என்பது நம் உடனேயே இருக்கும் விஷயம் - மனதுக்கு வயதாவதில்லையே! 


ஐம்பது வயது முடிந்து ஐம்பத்தி ஒன்றில் நான் அடி எடுத்து வைத்திருக்கும் இந்த நாளில், எனது இல்லத்தரசி அவரது முகநூல் பக்கத்தில் எழுதி இருக்கும் ஒரு இற்றையை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.


*****

ஒருநாள் நடுராத்திரியில்  எழுப்பி, என் காதுல படபடன்னு ஏதோ சத்தம்! காதுக்குள்ள ஏதோ போயிடுத்து போலருக்கு என்று அலற..


இரு..இரு பயப்படாத! என்று ஒரு கப்பில் தண்ணீர் எடுத்து வந்து அதில் சிறிது காதில் விட்டு, உடனே சாய்க்கச் சொல்லவும்...தண்ணீருடன் எறும்பும் மிதந்து வந்தது..:) 

&^&^&^& 


செல்ஃபோன் இல்லாத அந்நாளில் அலுவலகத்துக்கு ஃபோன் செய்து அழுகையுடன் 'நா ஒரு பாவம் பண்ணிட்டேன்! ஒரு பல்லியோட வால் என்னால துண்டாயிடுத்து! அந்த வால் மட்டும் துடிச்சிண்டு இருக்கு! என்ன பண்றதுன்னே தெரியல! 


சரி! சரி! அழாத!! அழாத! அது உன்னால போகல! உனக்கு பயமாயிருந்தா சாயந்திரம் நா வந்து அத எடுத்து போடறேன்!


&^&^&^&


குடும்ப விழா ஒன்றில் உறவினர்கள் சூழ்ந்திருக்கும் போது சாப்பிட்டு கை கழுவி விட்டு ஈரக்கையை ஓடி வந்து என்னவரின் வேஷ்டியில் துடைத்துக் கொண்டேன். 


என்னடி! இது! 


எப்பவும் எங்கப்பா வேஷ்டியில தான் கை துடைச்சிப்பேன்! அவர் ஒண்ணுமே சொல்ல மாட்டார் தெரியுமா ..:)


&^&^&^&


இப்படி என் எல்லா உணர்வுகளையும் புரிந்து கொள்ளும் ஜீவன்..சிறுபிள்ளை போல் நடந்து கொண்டாலும் பெருந்தன்மையுடன் அதை பொறுத்துப் போகும் மனிதர்.. அப்பாவாகவும், அம்மாவாகவும், நண்பனாகவும், வழிகாட்டியாகவும், அன்புக் கணவனாகவும், அன்புத் தந்தையாகவும் திகழும் அந்த மனிதருக்கு இன்று பிறந்தநாள்.


இன்று போல் என்றும் இதே அன்புடனும், ஆரோக்கியத்துடனும் வைத்திருக்க இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.


இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.


நட்புடன்


ஆதி வெங்கட் .


******


நண்பர்களே, இந்த நாளில் வெளியிட்ட இரண்டாம் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லலாமே! நாளை வேறு ஒரு பதிவுடன் சந்திக்கும் வரை…


நட்புடன்வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து...


19 கருத்துகள்:

 1. முதுமையில் இளமைப்பருவம் வாழ்த்துகள் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
 2. பிறந்தநாள் வாழ்த்துகள் வெங்கட் ஜி. எழுத்தாளர்களுக்கு வயது ஒரு நம்பர் தான்.உங்களுடைய எழுத்து பணி தொடர வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

   நீக்கு
 3. வணக்கம் சகோதரரே

  தங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். எல்லா நலன்களும் பெற்று இன்று போல் என்றும் சிறப்பாக வாழ இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  இன்றைய பதிவும் நன்றாக இருந்தது. ரசித்தேன். அன்பான உங்கள் இருவருக்குமே என் மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி.

  அன்புடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

   தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி. பதிவு உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி.

   நீக்கு
 4. பிறந்த நாள் வாழ்த்துகள் வெங்கட். வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 5. பிறந்தநாள் வாழ்த்துக்கள், வெங்கட்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி Bandhu ji.

   நீக்கு
 6. பதில்கள்
  1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அப்பாவி தங்கமணி.

   தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. //ஐம்பது வயது முதுமையில் இளமை.//

  அருமை.

  //இன்று போல் என்றும் இதே அன்புடனும், ஆரோக்கியத்துடனும் வைத்திருக்க இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.//

  ஆதியின் விருப்பம் நிறைவேற நாங்களும் இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறோம்.

  வாழ்க பல்லாண்டு.

  இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ! வாழ்க வளமுடன்
  ஆதி எழுதியதை படித்தேன், அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

   தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வெங்கட். அந்தக் அக்கட்டுரை குறித்து வைத்துக் கொண்டிருக்கிறேன்.  படிக்கிறேன்.  மருத்துவர் சிவகடாட்சம் மனைவி எழுதியது போலும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கட்டுரை - முடிந்த போது படியுங்கள் ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....