அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட கடந்து வந்த பாதை பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
முயற்சி செய்வது மற்றும் முயற்சியை தக்கவைத்துக் கொள்பவரால் மட்டுமே வெற்றியை பெறவும் மற்றும் வெற்றியைத் தொடர்ந்து பெறவும் முடிகிறது - வில்லியம் கிளெமெண்ட் ஸ்டோன்.
******
Plastic bag free day:
வெளியே செல்லும் போது கையோடு சணல் பையோ, துணிப் பையோ எடுத்துச் செல்வதை வழக்கமாக்கிக் கொள்தல் அவசியம். இது சுற்றுப்புறமும், பூமியும் மாசடையாமல் பாதுகாக்க உதவும்.
******
மாங்காய் தொக்கு!
நடைப்பயிற்சியின் போது குடியிருப்புக்கு அருகே உள்ள கருப்பண்ண சாமி கோவிலில் கொத்து கொத்தாக மாங்காய்களைப் பார்த்தேன். எதிரே உள்ள தோப்பிலும் மாங்காய்கள். மாங்காயைப் பார்த்தாலே நாவில் நீர் சுரக்கும்..:) நல்ல புளிப்பான மாங்காயாக கிடைக்கும் போது செய்ய ஏற்ற ரெசிபி..
Adhi's kitchen சேனலில் மாங்காய் தொக்கு செய்முறை பார்க்க சுட்டி கீழே!
Raw Mango thokku Recipe by Adhi Venkat/மாங்காய் தொக்கு/Pickle variety/Raw mango/Recipes!!
******
பழையது கழிதலும்…
பழைய பேப்பர் எடுக்கறவங்க வந்தா அனுப்பி விடுங்க வாட்ச்மேன்!
சரிங்கம்மா! மதியம் பேப்பர்காரரை அழைத்து வந்தார்.
மகளின் உபயோகித்த பழைய நோட்டு புத்தகங்களை போடுவதற்காக எடுத்து வைத்திருந்தேன்.
துணிமணிக, பாத்திரங்க இருந்தா குடுங்க மேடம்!
எதுவுமே இல்லங்க! நல்லா இருக்கும் போதே தேவைப்படறவங்களுக்கு தூக்கி குடுத்துடுவேன்.
நல்ல விஷயம்மா! உபயோகமானா நல்லது தான! என்றார்.
குடிக்கத் தண்ணி கொஞ்சம் கெடைக்குமா மேடம்! என்றார்.
சொம்பு நிறைந்த தண்ணீரை குடித்து விட்டு, கையெடுத்து கும்பிட்டார். நோட்டு புத்தகங்களுக்கு பணத்தையும் கொடுத்து விட்டுச் சென்றார்.
உபயோகமில்லாத பொருட்களோ, துணிமணிகளோ அவ்வப்போது தேவைப்படுவோருக்கு குடுத்தால் தான் மனசு நிம்மதியா இருக்கு. வீட்டையும் சுத்தமாக வைத்திருக்க முடிகிறது.
******
ஆடிப் பண்டிகை!
ஆடிப்பிறப்புக்கு 'ஆடிப்பால்' காய்ச்சுவது எங்கள் வீட்டில் வழக்கம்.. வடை தட்டுவது கட்டாயம் இல்லை! ஆனால் கடந்த மூன்று வருடங்களாக ஏதோ ஒருவிதத்தில் பண்டிகை இல்லாததால் அந்நாளில் எண்ணெய் வைத்து வடையெல்லாம் பண்ண முடியாது..! அதனால் இன்று கொண்டக்கடலை வடை தட்டியிருக்கிறேன். நல்லதே நடக்கட்டும்!
காலையிலேயே எதிர் வீட்டிலிருந்து லஷ்மி நாராயண கோவில் பிரசாதமாக சர்க்கரைப் பொங்கலும், புளியோதரையும், மஞ்சள் காப்பு துளசியுடன் கிடைத்தது.
சில வேலைகளுக்காக எலெக்ட்ரீஷியனை வரச் சொல்லியிருந்தேன். அவரும் சமயத்தில் வரவே "அண்ணே! இன்னிக்கு ஆடிப்பண்டிகை எடுத்துக்கோங்க" என்று வடையும், பாயசமும் முதல் போணியாக அவருக்கே!
******
குடமிளகாய் சாதம்!
Adhi's kitchen சேனலில் காணொளியாக எளிதான குடமிளகாய் சாதம் செய்து பகிர்ந்துள்ளேன். பார்க்க சுட்டி கீழே!
குடமிளகாய் சாதம்/Capsicum rice/Lunch box recipe/Variety rice/Easy/South Indian lunch recipe!
******
இளமையில் முதுமை
காட்டன் புடவைக்கு கஞ்சி போட வைத்திருந்த Revive பாட்டிலை எடுத்து மகளை அழைத்து Instructions என்ன போட்டிருக்குன்னு பார்த்து சொல்லு கண்ணா! சின்ன எழுத்தா இருக்கு! என்கிறேன்..:)
என் கல்யாணம் ஆன புதுசுல...இப்படித் தான் இருந்தேன்! என்று பாட்டிம்மா மாதிரி சொல்கிறேன்...:)
அதே போல நிறைய விஷயங்கள் மறந்து போய் விடுகின்றன...:)
Matured ஆக உணர்கிறேன்..:) இனி என் வாழ்வில் என்ன இருக்கு! என்பது போல தோன்றுகிறது..:)
இதெல்லாம் நாற்பதின் துவக்கத்திற்கான அறிகுறிகள் போல..:)
******
ரோஷ்ணி கார்னர் - கோலம்:
தினமும் மகளை வாசலில் கோலம் போட பழக்கப்படுத்தியுள்ளேன். அவள் போட்டக் கோலங்கள் சில இங்கே பார்வைக்கு! வராண்டாவில் உள்ள பல்பு வெளிச்சம் எல்லாவற்றிலும் இடம் பெற்றுள்ளது. அதை தவிர்க்க முடியலை..:)
******
நண்பர்களே, இந்த நாளின் கதம்பம் பதிவு குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள். இந்த வாரம் எல்லாமே சாப்பாடு விஷயமாகவே அமைந்திருக்கிறது! மீண்டும் வேறொரு பதிவின் வழி சந்திக்கும் வரை...
நட்புடன்
ஆதி வெங்கட்
பிளாஸ்டிக் அரக்கனை ஒழிக்க முடியாது போல... எவ்வளவு பேர் திருந்துவார்கள்?!!
பதிலளிநீக்குமாங்காய்த்தொக்கு நிறமே கவர்கிறது. நாவூறுகிறது. தொக்கு செய்ய ஏற்ற மாங்காய் அது.
ஆடிப்பெருக்குக்கு தேங்காய் சாதம், புளியோதரை, சர்க்கரைப் பொங்கல், தயிர்சாதம் செய்வோம். செய்தோம்!
குடைமிளகாய் சாதம் - பாஸ் கிட்ட சொல்றேன்!!!
கோலங்கள் அழகு. சபாஷ் ரோஷ்ணி.
பிளாஸ்டிக்கை ஒழிக்க எல்லோரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே முடியும்.
நீக்குஇங்கேயும் ஆடிப்பெருக்குக்கு தேங்காய், எலுமிச்சை & தயிர்சாதங்களும், பாயசமும் செய்தேன்..இங்கு பகிர்ந்திருப்பது ஆடி மாசப்பிறப்பன்று செய்தது.
மகள் போட்ட கோலங்களை பாராட்டியதற்கு நன்றி.
தங்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.
கதம்பம் வழக்கம் போல் அருமை.
பதிலளிநீக்கு//தினமும் மகளை வாசலில் கோலம் போட பழக்கப்படுத்தியுள்ளேன்//
இதுதான் நாளை உங்களுக்கு நல்ல பெயரெடுத்து கொடுக்கும் இன்றைய சூழலில் தாங்கள் இப்படி பழக்குவதற்கு பாராட்டுகள்.
இன்று வாசலில் கோலம் போடச் சொன்னால் சிலர் வினோதமாக பார்க்கிறார்கள்.
இங்கே திருவரங்கத்தில் சின்னஞ்சிறு சிறுமிகள் கூட பெருமாள் புறப்பாடு என்றால் தெருவையே அடைத்தாற் போல் பெரிய கோலம் போடுவார்கள்.
நீக்குதங்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.
அருமை.
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி அர்விந்த் சார்.
நீக்குகோலங்கள் ஒவ்வொன்றும் ஓவியம் போல... பாராட்டுகள்... வாழ்த்துகள்...
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றிங்க தனபாலன் சகோ.
நீக்குகதம்பம் நன்று
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி நெல்லை சார்.
நீக்குகதம்பம் அருமை
பதிலளிநீக்குகோலங்கள் அழகு
தங்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றிங்க ஐயா.
நீக்குவணக்கம் சகோதரி
பதிலளிநீக்குஎப்போதும் போல் கதம்பம் பதிவு அருமை.நல்ல விஷயங்களை அழகாக சொல்லியுள்ளீர்கள். ஆடிப்பண்டிகை சிறப்பு பற்றி கூறியது அருமை. மாங்காய் தொக்கு மனதை கவர்கிறது. குடைமிளகாய் சாதமும் நன்றாக உள்ளது. இங்கு நானும் அடிக்கடி செய்வேன்.
/தினமும் மகளை வாசலில் கோலம் போட பழக்கப்படுத்தியுள்ளேன்/
நல்ல பழக்கம். சிறுவயதில் கற்ற நல்ல பழக்கங்கள் என்றும் நிலைத்து நிற்கும். ரோஷ்ணியின் கோலங்கள் அருமை. அவருக்கு என் அன்பான வாழ்த்துகளை தெரிவியுங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றிங்க கமலா ஜி.
நீக்குவாசகம் அருமை.
பதிலளிநீக்குஉங்கள் கதம்பம் எப்போது அருமை.
அனைத்தையும் முகநுலில் படித்து விட்டேன்.
ரோஷ்ணியின் கை வண்ணத்தில் மலர்ந்த கோலங்கள் மிக அருமை.
உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
அனைத்து பகுதிகளையும் வாசித்து பாராட்டியதற்கு மிக்க நன்றி கோமதிம்மா.
நீக்குகதம்பம் அருமை. ரோஷிணிக்கு பாராட்டுகள்.
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றிங்க மாதேவி.
நீக்குரோஷ்ணியின் கோலங்கள் மிக அழகு. குனிந்து கோலம் போடுவது உடலுக்கும் நல்லது.
பதிலளிநீக்குமனதுக்கும் நல்லது.
நல்ல இடங்களில் வசிப்பது நல்ல எண்ணங்களை
வளர்க்கிறது.
மாங்காய்த் தொக்கு மிக மிக அருமை.
குடமிளகாய் சாதம் செய்யும் முறையும் நன்றாக வந்திருக்கிறது.
நாற்பது வயதெல்லாம் ஒரு வயதே இல்லைமா.
வளமுடன் இருங்கள்.
அனைத்து பகுதிகளையும் வாசித்து பாராட்டி கருத்து தெரிவித்தற்கு மிக்க நன்றி வல்லிம்மா.
நீக்கு