அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட கல்லூரி நாட்கள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
இதய வங்கியில் அன்பைச் சேமியுங்கள். அதை எந்தத் திருடனாலும் களவாட முடியாது..
******
சிறுதானிய பக்கோடா:
சிறுதானியங்கள் உடலுக்கு நன்மை தருவன மற்றும் செரிமானத்திற்கும் ஏற்றது. தொடர்ந்து பயன்படுத்தும் போது நோய் எதிர்ப்பு சக்தியைத் தரவல்லது. இத்தனை சிறப்புகள் வாய்ந்த சிறுதானியங்களுடன் பருப்புகள், பயறு வகைகள், கீரை என்று சேரும் போது அது முழுமையான உணவாகி விடுகிறது.
இந்த வாரம் Adhi's kitchen சேனலில் சிறுதானிய அடைமாவில் சட்டுபுட்டு மாலைநேர crunchy snack recipe. பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்களேன்.
ரெசிபிக்கான சேனல் லிங்க் கீழே!
சிறுதானிய பக்கோடா/Multi Millets Pakoda/Healthy Evening Snack recipe by Adhi Venkat!
******
சஹானா இணைய இதழில் என் வெளியீடு - Crunchy Snack:
இந்த மாத சஹானா இணைய இதழில் என்னுடைய Crunchy சட்டுபுட்டு ஸ்நாக் ரெசிபி வெளியாகியுள்ளது. கீழே உள்ள இணைப்பில் சென்று வாசிக்கலாம்.
Sweet Corn Balls Recipe By Adhi Venkat - சஹானா (sahanamag.com)
******
ரோஷ்ணி கார்னர் - மண்டலா ஓவியம்:
மகள் வரைந்த Mandala Art!
******
தாமரைப்பூ காசுகள்:
1971-ல் அச்சிடப்பட்ட பித்தளையால் ஆன 20 பைசா நாணயங்களில் 'தாமரைப்பூ' அச்சிடப்பட்டு இருக்கும். பூக்களுக்கு பதிலாக அதை வைத்தும் பூஜை செய்யலாம் என்று சொல்லி, பெரியம்மா தான் சேகரித்து வைத்திருந்த நாணயங்களை உறவுகளுக்கு கொடுத்தார். அதிலொரு பங்காக 108 தாமரைப்பூ நாணயங்கள் எனக்கும் கிடைத்தது. இந்த ஆடி வெள்ளியில் 'லஷ்மி அஷ்டோத்ரம்' சொல்லி 108 காசுகளால் அர்ச்சனை செய்தேன். நிவேதனமாக அரிசி தேங்காய் பாயசமும் செய்திருந்தேன்.. அதன் செய்முறையை வீடியோவாகவும் எடுக்க முடிந்தது.
******
அரிசி தேங்காய் பாயசம்:
ஆடி மாதம் பிறந்தால் வரிசையாக பண்டிகைகள் தான். வர இருக்கும் பண்டிகைகளுக்கு செய்ய ஏற்ற ரெசிபி இது. சேனலில் இது என்னுடைய 50-ஆவது ரெசிபி. 50 ரெசிபிக்களை தடையில்லாமல் பகிர முடிந்ததே பெரிய விஷயமாக நினைக்கிறேன்..🙂
ரெசிபிக்கான இணைப்பு கீழே.
அரிசி தேங்காய் பாயசம்/Rice coconut keer for festival/Traditional/பண்டிகை நாட்களில் செய்ய ஏற்ற பாயசம்.
எல்லோருக்கும் இன்றைய நாள் இனிய நாளாக இருக்கட்டும்!
******
சஹானா இணைய இதழ் முதலாம் ஆண்டு விழா:
சமீபத்தில் சஹானா இதழின் முதலாம் ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டம், பதிப்பக துவக்கம், புத்தக வெளியீடு என முப்பெரும் விழாவாக சிறப்பாக நடைபெற்றது. வலைப்பூ மூலம் அறிமுகமான எழுத்தாளர்களின் உரை, கலைநிகழ்ச்சிகள் என நம்ம வீட்டு விழா போல் இருந்தது.
தோழியின் அயராத உழைப்புக்கு கிடைத்த வெற்றி. தொடர்ந்து சஹானா இணைய இதழ் வெற்றிநடை போட மனமார்ந்த வாழ்த்துகள்.
******
ஆடிப்பெருக்கு!
நிறைந்தோடும் காவிரிக்கும், இன்று வரை உணவளிக்கும் இறைவனுக்கும் நன்றி தெரிவித்து, நோய்நொடி இல்லா வாழ்வும், மன நிம்மதியும் வழங்கிட பிரார்த்தித்துக் கொண்டேன்.
ஆடிப்பெருக்கு என்றால் எல்லோரும் கலந்த சாதங்களை ஆற்றங்கரைக்கு எடுத்துச் சென்று உண்டு மகிழ்வார்களாம். அதனை பின்பற்றும் விதமாக இன்று கலந்த சாதங்கள் தான் நைவேத்தியம்.. எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், தயிர்சாதம்..!
கேரளத்து உணவுகள் எனக்கு பிடித்தமானது. அந்த வகையில் இனிப்புக்காக இன்று 'பாலட பிரதமன்' செய்தேன்..! எல்லாரும் வாங்க சாப்பிடலாம்.
******
நண்பர்களே, இந்த நாளில் பகிர்ந்து கொண்ட கதம்பம் பதிவின் பகுதிகள் குறித்த உங்கள் எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கலாமே. மீண்டும் வேறு ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்,
ஆதி வெங்கட்
சுவாரஸ்யமான பகிர்வு. இனிப்பு வகைகளும், பக்கோடாவும் கண்ணை நிறைக்கின்றன. ரோஷ்ணியின் மண்டாலா ஆர்ட் நுணுக்கம், அழகு. தாமரைப்பூ நாணயங்கள் சில நானும் வைத்திருந்தேன். காலப்போக்கில் இப்போது எதையும் காணோம்!
பதிலளிநீக்குபகிர்வின் அனைத்துப் பகுதிகளையும் வாசித்து கருத்து தெரிவித்ததற்கு மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.
நீக்குஇன்றைய கதம்பம் அருமை. கடைசி படத்தைப் பார்த்து, இன்றைய காலை மெனுவைச் சொல்லியிருக்கிறேன்.
பதிலளிநீக்குசிறுதானியம் நன்று... ஆனால் எண்ணெயில் பொரிக்கும்போது, அதன் நற்குணங்கள் காணாமல் போயிருக்குமே
வரைந்த படம்..அழகு
கடைசிப் படத்தை பார்த்து மெனுவென்றால் கலந்த சாதமா? இல்லையெனில் ஆடி வெள்ளி என்பதால் பாயசமா? எதுவாக இருந்தாலும் ஜோர் தான்..:)
நீக்குஎண்ணெயில் பொரிக்கும் போது - வாஸ்தவம் தான். ஆனால் என்றாவது ஒருநாள் தான் இந்த பக்கோடா எல்லாம். பொதுவாக இந்த மாவில் அடை தான் பண்ணுவேன்.
தங்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன் சார்.
நேற்றைக்கு முந்தைய நாள்தான் வெல்லப் பாயசம் என்பதால், ஜவ்வரிசி/சேமியா பாயசம், எலுமி, தேங்காய், ஏல், தயிர் சாதங்கள், வெள்ளரி (கேரள வெள்ளரி) கூட்டு என்று காலைச் சமையலை உங்கள் பதிவு பார்த்து மாற்றிவிட்டேன். இப்போ தோணுது... அரிசி தேங்காய் பாயசமே பண்ணச் சொல்லியிருக்கலாமோன்னு. But inspiration was today's உங்கள் பதிவு
நீக்குபதிவை பார்த்து சமையல் - மிக்க மகிழ்ச்சி.
நீக்குதங்களின் மீள் வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன் சார்.
கதம்பம் முழுவதும் விழா... அருமை...
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி தனபாலன் சகோ..
நீக்குகதம்பம் அருமை
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குமங்கலகரமான ஆடி வெள்ளி தரிசனம். மகிழ்ச்சி.. நலமே வாழ்க..
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றிங்க துரை செல்வராஜு சார்.
நீக்குஅந்த மஞ்சள் நிற தாமரைக் காசுகளை நானும் சேர்த்து வைத்திருந்தேன்...
பதிலளிநீக்குகால வெள்ளத்தில் கரைந்து போயின...
அப்படியா சார்! தங்களிடமும் இருந்ததா!!
நீக்குதங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க துரை செல்வராஜூ சார்.
மிகவும் இனிப்பான கதம்பம். ரோஷ்ணியின் மண்டலா ஓவியம் சூப்பர்.
பதிலளிநீக்குமகள் வரைந்த ஓவியத்தை பாராட்டியதற்கு நன்றி சார்.
நீக்குதங்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி ராமசாமி சார்.
கதம்பம் அருமை. படங்கள் எல்லாம் கண்ணையும் கருத்தையும் கவர்கிறது.
பதிலளிநீக்குரோஷ்ணியின் ஓவியம் அழகு.
தாமரை காசுகள் இப்போது கொஞ்சம் என்னிடம் இருக்கிறது.ஒரு ரூபாய் நாணயங்கள் 108 வைத்து லட்சுமி பூஜை செய்து கொண்டு இருந்தேன். கீழே வெகு நேரம் அமர்ந்து பூஜை செய்ய முடியவில்லை என்று அதை குலதெய்வம் உண்டியலில் சேர்த்து விட்டேன்.
தாமரைக்காசுகள் உங்களிடமும் உள்ளதா! நல்லதும்மா.
நீக்குபதிவில் பகிர்ந்து கொண்ட எல்லாப் பகுதிகளையும் வாசித்து கருத்து தெரிவித்ததற்கு மிக்க நன்றி கோமதிம்மா.
ஆடிப் பெருக்கு ஆடி வெள்ளி வாழ்த்துகள். பிரசாதங்கள் நன்று.
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றிங்க மாதேவி.
நீக்கு