வியாழன், 12 ஆகஸ்ட், 2021

கல்லூரி நாட்கள் பகுதி இரண்டு - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கடந்து வந்த பாதை பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


சினம் அன்பை அழிக்கும்; கர்வம் அடக்கத்தை அழிக்கும்; பொறாமை அனைத்தையும் அழித்துவிடும் - மஹாவீரர்.


******


சென்ற பகுதியில் கல்லூரியில் நான் சேர்ந்த விதத்தைப் பற்றி எழுதியிருந்தேன். இப்பகுதியில் 76 வருடங்கள் பழமையான எங்கள் கல்லூரி பற்றியும், அங்கே எங்களுக்கு இருந்த வசதிகளும், வழிமுறைகளும்  என்னவென்பது பற்றியும் பார்க்கலாம்.  வாங்க! என்னோடு கல்லூரிக்குள் போகலாம்!





எங்கள் கல்லூரி வளாகம் 1945-இல் உருவாக்கியது. 52 ஏக்கர்களைக் கொண்ட மிகப்பெரிய வளாகம். G.D. நாயுடு அவர்களால் துவக்கப்பட்டது என்றும், முதலில் 'ஆர்தர் ஹோப்' பெயரால் ஹோப் காலேஜ் என்றும் பின்பு 'அரசினர் பாலிடெக்னிக்' என்றும் அழைக்கப்பட்டதாம். 


கல்லூரிக்கான முக்கிய கட்டிடங்கள் போக, தனித்தனியாக பணிமனைகள், பேராசிரியர்களுக்கான குவார்ட்டர்ஸ், ஆண்கள், பெண்களுக்கென தனித்தனியாக ஹாஸ்டல் வசதி போன்றவையும் இங்கு  அமைக்கப்பட்டுள்ளன. வாசல் கேட்டிலிருந்து பேட்டரி கார் மூலம் பயணிக்கும் அளவு தூரம் கொண்டது என்று சொல்லலாம். பல பிரபலங்களை உருவாக்கிய கல்லூரி. 





கோவையின் அவினாசி சாலையில் (நான் கல்வி கற்ற மூன்று பள்ளிகள், கல்லூரி என அனைத்தும் அவினாசி சாலையில் தான்!) பீளமேடு என்ற இடத்தில் Civil Aerodrome அருகே அமைந்துள்ளது. பக்கத்து கட்டிடம் CIT என்று சொல்லப்படுகிற Coimbatore Institute of Technologyயும், எதிர்த்தாற் போல் மெடிக்கல் காலேஜும், மறுபுறம் PSG college of Arts என வரிசையாக கல்வி நிறுவனங்களைக் கொண்டது. சிறிது தொலைவில் அரவிந்த் கண் மருத்துவமனையும் அமைந்துள்ளது.


இப்போது எங்களுக்கான வசதிகளும், நெறிமுறைகளும் என்னவென்பதை சொல்கிறேன்..


பெண்களைப் பொறுத்தவரையில் கல்லூரிக்குள் நுழைந்ததுமே அடர்நீல ஓவர்கோட் அணிந்து கொள்ள வேண்டும். ஆண்களுக்கு ஆய்வகம்  மற்றும் பணிமனைக்குச் செல்லும் போது மட்டும் அணிந்து வர வேண்டும் என்பது நியதி. மாலை வீட்டிற்கு கோட்டை எடுத்துச் செல்லும் போது உண்மையிலேயே அப்போது பெருமிதமாக இருந்தது. வெள்ளை கோட் போட வேண்டிய இடத்தில் நீல கோட்டாவது போட்டுக் கொள்கிறோமே என்று..:)


வாரத்தில் இரண்டு நாள் மட்டும்  பணிமனைக்குச் செல்ல வேண்டும். ஆய்வகம் மற்றும் பணிமனைக்குச் செல்லும் போது ஷூ அணிந்திருப்பதும் அவசியம். பெண்கள் தலைமுடியை கொண்டை போட்டிருக்க வேண்டும். முழங்கைக்கு கீழே வளையல், வாட்ச், மோதிரம் என்று எதுவும் போட்டிருக்கக் கூடாது.


நான் சேர்ந்த அந்த வருடம் தான் மெக்கானிக்கல் டிபார்ட்மெண்ட்க்கு என்று தனியே ஒரு கட்டிடம் கட்டப்பட்டிருந்தது. முதல் வருடம் அந்தக் கட்டிடத்தில் தான் இருந்தோம். ஒருவருக்கொருவர் அறிமுகம் இல்லாததால் பழக சற்றே தாமதமானது. முதல் வருடம் எங்கள் வகுப்புத் தோழர்களுடனும் பழகவே இல்லை...:)





அதே போல் கல்லூரியில் பெண்களுக்கென்று பிரத்யேகமாக தனியே ஒரு அறையும் இருந்தது. காலை கல்லூரிக்குள் நுழைந்ததும் நேரே அங்கு சென்று தான் துப்பட்டாவை மாற்றி விட்டு ஓவர்கோட்டை அணிந்து கொண்டு, மதியம் வரை நடக்க உள்ள வகுப்புகளுக்கு தகுந்தாற்போல் புத்தகங்கள், கால்குலேட்டர் போன்றவற்றை மட்டும் எடுத்துச் செல்வோம்.


மதிய உணவை எல்லாத் துறை மாணவிகளும் சேர்ந்து பெண்கள் அறை வாசலில் உள்ள வராண்டாவில் அமர்ந்து கலாட்டாவுடன் உண்போம்..:) இரண்டாம் ஆண்டு முதல் எங்கள் வகுப்பிலும் கலாட்டாக்கள் துவங்கின..:) அப்படி என்ன செய்தோம்??? அடுத்த பகுதியில் சொல்கிறேனே..:)


பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



ஆதி வெங்கட்



22 கருத்துகள்:

  1. பொசுக்கென அதற்குள் இரண்டாம் ஆண்டுக்கு சென்று விட்டீர்களே...   முதல் ஆண்டிலேயே இன்னும் எதாவது சுவாரஸ்யமான சம்பவங்கள் இருந்திருக்குமே....!  கல்லூரி வளாகம் பார்க்க ப்ரம்மாண்டமாகத் தெரிகிறது.  நீங்கள் சொல்லி இருக்கும் விவரங்களும் அதை உறுதிப் படுத்துகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி வரிசையாக இல்லாமல் கலாட்டாக்கள், அனுபவங்கள், கற்ற தொழிற்கல்வி என்று வெவ்வேறு தலைப்புகளில் இதுவரை 10 பகுதிகளாக எழுதி வைத்துள்ளேன் ஸ்ரீராம் சார்.தொய்வில்லாமல் வாசிக்க வசதியாக இருக்கும்..:)

      தங்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன் சார்.

      நீக்கு
  3. சுவாரசியம்.
    கலாட்டாக்களை ரசிக்க தொடர்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அரவிந்த் சார்.

      நீக்கு
  4. வாசகம் அருமை.

    //பல பிரபலங்களை உருவாக்கிய கல்லூரி.//
    உண்மைதான் ஆதி வெங்கட் பிரபலம்தான்.
    கல்லூரி நினைவுகள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..ஹா..ஹா.. அப்படியெல்லாம் ஏதும் இல்லையம்மா..:)

      தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி தனபாலன் சகோ.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. கல்லுரி வளாகம் அருமையாக இருக்கின்றது. நான் ஆர்ட்ஸ் கல்லுரியில் படித்ததால் பாலிடெக்னிக் பற்றி தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு கொடுத்த உங்களுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கல்லூரி வளாகம் மிகப்பெரியது சார். நெடுக போய்க்கொண்டே இருக்கும்.

      தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமசாமி சார்.

      நீக்கு
  8. அருமையான கோவை நினைவுகள்.
    நான் அவினாசி கல்லூரிக்குப் போயிருக்கிறேன்.
    எந்த கலாட்டா என்றாலும்
    அருமையாக எழுதுவீர்கள். சுவாரஸ்யத்துக்குக் காத்திருக்கிறேன்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் கல்லூரிக்கு நீங்களும் வந்துள்ளீர்கள் என்பதில் மிக்க மகிழ்ச்சி.

      அடுத்தடுத்த பகுதிகளில் கலாட்டா மட்டும் இல்லாமல் வெவ்வேறு தலைப்புகளில் கொடுக்க திட்டமிட்டுள்ளேன்.

      தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

      நீக்கு
  9. வணக்கம் சகோதரி

    நல்ல பதிவு. கல்லூரி கால நிகழ்வுகளை சுவாரஸ்யமாக சொல்லி வருகிறீர்கள். நீங்கள் படித்த கல்லூரி மிக அழகாக விஸ்தாரமாக உள்ளது. மேலும் தாங்கள் பயின்ற நினைவுகளை அறிய ஆவலாக உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் கல்லூரி மிகப்பெரியது, அழகானது, பழமை வாய்ந்தது என்பதில் மிகுந்த பெருமைப்படுகிறேன்.

      தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஜி!

      நீக்கு
  10. //பல பிரபலங்களை உருவாக்கிய கல்லூரி. //

    ஆமாம் பிரபல பெண்பதிவர் ஆதிவெங்க்ட்டையும் உருவாக்கிய கல்லூரியும் இதுதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..ஹா..ஹா.. பிரபல பெண் பதிவர்..!!!

      தங்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி துரை சகோ.

      நீக்கு
  11. 'கலாட்டாக்கள் ...' தொடர்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கலாட்டாக்கள் இல்லாத கல்லூரிப் பருவமும் உண்டா!! தொடர்ந்து வாசியுங்கள்.

      தங்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றிங்க மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....