வெள்ளி, 20 ஆகஸ்ட், 2021

காணாமல் போன பெட்டி - இரயில் பயணங்களில் - பகுதி 1 - நிர்மலா ரங்கராஜன்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கல்லூரி நாட்கள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


பிரச்சனைகளைச் சொல்லி வாழ்வது வாழ்க்கையல்ல; இதெல்லாம் ஒரு பிரச்சனையான்னு, என்று சொல்லிக் கொண்டு முன்னேறிச் செல்வது தான் வாழ்க்கை.


******


இந்த வலைப்பூவில் சில பதிவுகளை எழுதிய தில்லி வாசி திருமதி நிர்மலா ரங்கராஜன் அவர்களை நீங்கள் நினைவில் வைத்திருக்கலாம். சற்றே இடைவெளிக்குப் பிறகு அவரிடமிருந்து ஒரு பதிவு - இரண்டு பகுதிகளாக வர இருக்கிறது - அந்த வரிசையில் முதலாவது பகுதியாக இதோ இன்று - வாசிக்கலாம் வாருங்கள் - வெங்கட் நாகராஜ்.


******


நண்பர்கள் அனைவருக்கும் இனிய வணக்கம். எனது இந்த இரயில் பயண அனுபவம் மூலமாக உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.





இரயில் பயணம் யாருக்கு தான் பிடிக்காது!? எனக்கும் அப்படித்தான் ரயிலில் பயணிப்பது மிகவும் பிடிக்கும். ஜன்னலோரத்தில் உட்கார்ந்துகொண்டு ஓடும் மரங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டே.... பயணிப்பது என்பது ஒரு தனி சுகம். அதுவும் நெடுந்தூர பயணம் என்றால் கேட்கவே வேண்டாம்.


டெல்லியிலிருந்து சென்னைக்கோ அல்லது சென்னையிலிருந்து டெல்லிக்கோ செல்லும் 2 நாள் பயணம் மிகவும் உற்சாகமான தாகவே இருக்கும். இந்த இரண்டு நாட்களில் உடன் பயணிப்பவர்களோடு தொலைபேசி எண் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு நட்பாகி விடும். பயணம் முடிந்த பிறகும்கூட அவர்களோடு போன் மூலமாக நட்பு தொடரும். அப்படி ஒரு சிலருக்கு சில உதவிகள் செய்யவும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இப்படியாக பல அனுபவங்களை தருவதாகவும், பலதரப்பட்ட மக்களுடன் பழக ஒரு வாய்ப்பாகவும் அமையும் இந்த ரயில் பயணம் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். எனவே நான் எப்போது ஊருக்கு செல்வதானாலும் முதலில் ரயில் பயணத்தை தான் தேர்ந்தெடுப்பேன். அவசரம் என்றால் மட்டுமே விமான பயணம்.


2018 நவம்பர் மாதத்தில்  திருக்கடையூரில் நடந்த டெல்லி நண்பரின் அறுபதாம் கல்யாணத்திற்கு செல்லவேண்டியிருந்தது. டெல்லியிலிருந்து நண்பர்கள் சிலரும் அதற்காக சென்றனர். நான் ரயிலில் செல்ல விரும்பினேன். கணவரும் மற்ற நண்பர்களும் மறுப்பு தெரிவித்தனர். நானோ பிடிவாதமாக ரயில் பயணம் சென்று வெகு நாட்கள் ஆகிவிட்டது எனவே இப்போது ரயிலில் செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டதால் கணவரும் சம்மதித்து ரயில் பயணம் செல்ல பயணச்சீட்டு முன்பதிவு செய்து கொடுத்தார். 


ஊருக்கு செல்லவிருக்கும் அன்று இரவு தமிழ்நாடு விரைவு வண்டியில் கணவர் என்னை வழியனுப்ப வந்திருந்தார். இருக்கையில் அமர வைத்துவிட்டு என்னுடைய பெட்டி, பை எல்லாவற்றையும் இருக்கைக்கு கீழே இருக்கும் இடத்தில் வைத்து சங்கிலியால் நன்றாக கட்டி பூட்டிவிட்டு மறு பரிசோதனையும் செய்து திருப்தியான பிறகு எனக்கு பை சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். எங்கள் ரயிலும் புறப்பட்டது. எனது பெட்டியில் என்னோடு நிறைய பள்ளி குழந்தைகள் விளையாட்டு போட்டிக்காக டெல்லி வந்து திரும்பிக்கொண்டிருந்தனர். அவர்களோடு மிகவும் சலசலப்பு கலகலப்பாக பயணம் ஆரம்பித்தது.


பொதுவாகவே ரயில் பயணத்தின் போது எனக்கு தூக்கம் வராது. தூங்கவும் மாட்டேன். குடும்பத்தோடு சென்றாலும் கூட நான் மட்டும் தூங்குவது கிடையாது. அன்று இரவு எல்லோரும் படுத்த பிறகு நானும் படுத்தேன். படுத்து சிறிது நேரத்திலேயே எப்படி தூங்கினேன் என்று எனக்கே தெரியவில்லை. நல்ல தூக்கம். கணவரிடம் இருந்து காலையில் ஏழு மணிக்கு ஃபோன் வந்த பிறகு தான் எழுந்தேன்.  ரயில் போபாலை நெருங்கிக்கொண்டிருந்தது. அடடா இவ்வளவு தாமதமாக எழுந்து விட்டோமே! எப்படி இப்படி ஒரு தூக்கம் நமக்கு என்று யோசித்தவாறே பல்துலக்கி விட்டு வந்து முகம் துடைக்க பெட்டியிலிருந்து துண்டு எடுக்க கை விட்டு துழாவினால் பெட்டியை காணவில்லை. நகர்ந்து  இருக்குமோ என்று குனிந்து பார்த்தால் பெட்டி இருந்த இடம் வெறுமை!. எப்படி இருக்கும்? ஒரு நிமிடம் எதுவும் புரியவில்லை. கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது. நிதானித்து உடனே கணவருக்கு தொலைபேசியில் அழைத்து விஷயத்தைச் சொன்னேன். அவர் நான் இங்கிருந்து கொண்டு என்ன செய்ய முடியும் நீ பார்த்துக்கொள் என்று சொல்லிவிட்டு போனை வைத்து விட்டார். அதன் பிறகு என்ன நடந்தது?  அடுத்த பகுதியில் சொல்கிறேன்! 


மீண்டும் சந்திப்போம் 👋


நட்புடன்



நிர்மலா ரங்கராஜன்

புது தில்லி


******


நண்பர்களே, இந்த நாளில் வெளியிட்ட பதிவு குறித்த தங்கள் எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். நாளை வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை… 


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லி.


22 கருத்துகள்:

  1. கட்டிவைத்த பை எப்படி காணாமல் போனது?  கட் செய்து கொண்டுபோய் விட்டார்களா?  மயக்க பிஸ்கட்டா?  காத்திருக்கிறேன், தொடர..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கட்டி வைத்த பை - காணாமல் போய்விடுகிறது. தில்லியிலிருந்து சென்னை வரும் வழியில் இரண்டு இரவு பயணம் என்பதால் இப்படி பலருக்கு இந்த அனுபவம் உண்டு ஸ்ரீராம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. ரயில் பயணம் எனக்கும் பிடித்த ஒன்று.
    நீங்கள் சொல்வது போல் ஜன்னலோரம் அமர்ந்து வேடிக்கைப்பார்ப்பது பிடித்த ஒன்று. கை அசைக்கும் சிறு குழந்தைகளுக்கு உற்சாகமாக கை அசைப்பேன், அவர்கள் வெட்கத்தோடு சிரிப்பது இன்னும் மகிழ்ச்சியை தரும்.

    பெட்டியை உங்கள் கணவர் சங்கிலியால் பூட்டி வைத்தாரே!

    அடுத்து என்ன என்று தெரிந்து கொள்ள வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரயில் பயணம் எனக்கும் பிடித்தது தான் கோமதிம்மா. ஆனால் சமீப நாட்களில் இந்த மாதிரி இரயில் பயணங்கள் வாய்ப்பதில்லை.

      பூட்டி வைத்தாலும் திருடிவிடுகிறார்களே.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸ் - லக்கேஜ் அபேஸா? என்ன செய்திருப்பார்? ஒருவேளை அவசரத்தில் வேறு பெட்டியில் வேறு இருக்கையில் தேடியிருப்பாரோ? தொடர்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸ் - இப்படி நிறைய லக்கேஜ் அபேஸ் ஆவதுண்டு - குறிப்பாக ஆக்ரா மற்றும் விஜயவாடா இரயில் நிலையங்களில்! அடுத்த பகுதியும் இன்றைக்கு வெளியாகிவிட்டது நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  5. பயங்கரமான அணுபவம் தான்.
    நிர்மலா மேடம் பதிவுகளை அந்தமான் தொடரில் வாசித்த ஞாபகம்.
    அடுத்த பதிவிர்க்காக காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தமான் தொடர் தவிர வேறு சில பதிவுகளும் அவர் எழுதி இருக்கிறார் அரவிந்த்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. திகிலான இடத்தில் இடைவேளை இட்டது போலிருக்கிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திகிலான இடத்தில் இடைவேளை - :) எல்லாம் ஒரு நுணுக்கம் தான் கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. மிகவும் கடினமான சம்பவம். அடுத்த பதிவிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடினமான சம்பவம் தான் இராமசாமி ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. பெட்டி அம்போ.....திகில்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெட்டி அம்போ - அதே தான் மாதேவி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. ரயில் பயணம் என்றதும் ஆவலாக வந்தேன்.
    பெட்டியா காணாமல் போய் விட்டது.
    ஒரு வேளை கனவோ? டிக்கெட்டாவது பத்ரமாக இருந்ததா,.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டிக்கெட் - இப்போதெல்லாம் அலைபேசி வழி டிக்கெட் தான் வல்லிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. ஆரம்பமே அமர்க்களம்
    காத்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அமர்க்களமான ஆரம்பம் தான் கரந்தை ஜெயக்குமார் ஐயா. இறுதிப் பகுதி இன்றைக்கு வெளியிட்டு இருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. பதில்கள்
    1. சஸ்பென்ஸ் - இன்றைக்கு இறுதிப் பகுதி வெளியிட்டு விட்டேன் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....