செவ்வாய், 11 ஜூலை, 2023

கதம்பம் - கரும்பு ரசம்! மயில்காச்சி - கல்லூரியில் அடியெடுத்து...! - கல்லூரி நிகழ்வுகள்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட சதுரகிரிக்கு ஒரு குறும்பயணம்… - பகுதி ஒன்பது பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


கரும்பு ரசம்! மயில்காச்சி! - 28 ஜூன் 2023:


கரும்பு ரசம் என்றால் கரும்பின் சாறு என்று இங்கு அர்த்தமில்லை..🙂 பிறகு? வேறு என்ன? சொல்கிறேன்! 


சென்ற வாரம் காய்கறி சந்தைக்கு செல்லும் வழியில் ஒரு வீட்டின் வாசலில் மூங்கில் தட்டி ஒன்றில் வைக்கோல் பரப்பி மாம்பழங்களை  விற்பனைக்கு வைத்துக் கொண்டு ஒரு பெண்மணி நின்று கொண்டிருந்தார்! விசாரித்ததில் 'எங்க தோப்புல விளைஞ்ச பழங்க அக்கா! இந்தாங்க  சாப்பிட்டுப் பாருங்க! என்று ஒரு துண்டு நறுக்கிக் கொடுத்தார்! 


பங்கனபள்ளி! நல்ல இனிப்பு!! கிலோ  50ரூ என்று சொல்ல இரண்டு கிலோ வாங்கி வந்தேன்! உடன் ஒரு நாட்டுப் பழமும் கொடுத்தார்! இந்த வாரம் சந்தைக்கு செல்லும் போதும் அவரை பார்த்ததால் அத்தனை பழங்களுமே அருமையாக இருந்ததாகச் சொன்னேன்! பங்கனபள்ளி முடிஞ்சிருச்சுக்கா! இதுவும் எங்க தோட்டத்துல விளைஞ்சது தான் என்று ஒரு துண்டு நறுக்கிக் கொடுத்தார்!


தோல் சற்று கனமாக இருந்தது! பங்கனபள்ளி அளவு இனிப்பில்லை! ஆனால் நன்றாக இருந்தது! இது என்ன ரகம்? என்று கேட்கவும் 'கரும்பு ரசம்' அக்கா! கி 40ரூ என்றார்! ஒரு கிலோ மட்டும் வாங்கிக் கொண்டேன்! கிளிமூக்கு மாம்பழம் இருக்கில்ல அக்கா! அத நாங்க 'மயில்காச்சி'ன்னு சொல்வோம்! அது கூட போட்டிருக்கோம்! என்றார்.


அங்கிருந்து கிளம்பி சற்று தூரத்தில் இருந்த மருந்தகத்திற்கு சென்று மருந்துச்சீட்டை கொடுத்து விட்டு  காத்திருந்தேன்! 'அம்மா இத உங்ககிட்ட குடுக்க சொன்னாங்க ஆண்ட்டி!' என்று இரண்டு விதமான மாம்பழங்களை கொடுத்து விட்டு ஓடினாள் ஒரு சிறுமி! அதன் பெயர்கள் என்னவென்று தெரியவில்லை...🙂 கரும்பு ரசமும், மயில்காச்சியும் மனதில் நின்றது..🙂


மாண்புறு மங்கையே!

ஏன் கலித்தொகை மொழியில் பாடுகிறாய்!

ஏன் குறுந்தொகை தமிழை தேடுகிறாய்!

என் பாமர மொழியில் பாடாயோ!


நேற்றைய பொழுதில் யூட்டியூபில் நேரத்தை கடத்திய போது இந்தப் பாடலை கேட்க முடிந்தது! 2006ல் மணிரத்னம் சாரின் இயக்கத்தில்  வெளிவந்த 'குரு' படத்தின் பாடல் தான் இது! வரிகள் மனதைக் கவர்ந்தது! நீங்களும் கேட்டுப் பாருங்களேன்!



*&*&*&*&*&*&


கல்லூரியில் அடியெடுத்து...! - 4 ஜூலை 2023:


இதோ இப்போது தான் மகளை தூக்கிக் கொண்டு போய் ப்ளே ஸ்கூலில் சேர்த்து விட்டு வந்து என்னவரிடம் தொலைபேசியில் அழைத்து சொன்னது போல இருக்கின்றது..🙂 அதற்குள் வருடங்கள் எவ்வளவு வேகமாக கடந்து செல்கிறது!


இன்று முதல் மகள் கல்லூரி வாழ்வில் அடியெடுத்து வைக்கின்றாள்! முதல் நாளான இன்று அவளை கல்லூரிக்கு அழைத்துச் சென்று விட்டுவிட்டு வந்தேன்! மகள் பெரிதாகி விட்டாலும் அவளை அப்படியே கிளம்பு என்று சொல்ல மனம் ஒப்பவில்லை! 


என்னுடைய எல்லா சந்தர்ப்பங்களிலும் அப்பா உடன் இருக்க வேண்டும் என்று நினைப்பேன். பரீட்சைக்கு கிளம்பணும் என்றால் பேனாவுக்கு அப்பா தான் இங்க் போட்டுத் தரணும்..! அப்பா ஆரம்பித்துக் கொடுத்தால் அந்த விஷயம் நன்றாக இருக்கும் என்று முழுதாக நம்புவேன்! 


மூன்று மாதமாக என்னுடனேயே இருந்த மகள் இன்று கல்லூரிக்கு சிறகடித்து பறந்து சென்றதும் வீடு நிசப்தமாகி விட்டதாக உணர்கிறேன்! அடுத்து என்ன செய்வது என்று புரியவில்லை...🙂 


லஞ்சுக்கு லெமன் சாதம் குடுக்கட்டுமா கண்ணா? 


12 வருஷமா நானும் பார்க்கிறேம்மா!! 


என்ன கண்ணா?


எல்லா வருஷமும் முதல் நாள் நீ லெமன் சாதம் தான் குடுக்கிற...:))


*&*&*&*&*&*&


கல்லூரி நிகழ்வுகள்  - 5 ஜூலை 2023:


என் கிளாஸ்ல என்னையும் சேர்த்து மூணு ரோஷ்ணி மா!


இந்த வாரம் முழுக்க Bridge course தான்! Skill development, Language development இப்படித்தான் இருக்குமாம்!


எங்க மேம் இன்னைக்கு Manish malhotra பத்தி யாருக்காவது தெரியுமான்னு கேட்டாங்க! நான் ஆன்ஸர் பண்ணேன்!


அப்படியா!! யாரு அவர்??


அவர் ஒரு Famous Fashion Designer! Bollywood Actorsக்கு அவர் தான் டிசைன் பண்றார்!


Self introல உங்க hobbies என்னன்னு கேட்டாங்களா! நான் Reading books, crafts, Accessories making அப்புறம் சிலம்பம் கத்துண்டதையும் சொன்னேன்!


Drawing சொல்லலையா கண்ணா?


எல்லாரும் drawing சொல்றாங்க! நானும் அதையே ஏன் சொல்லணும்னு சொல்லலை! அப்புறம் அம்மா! hobbiesனா Eating & Sleeping கூட சொல்றாங்க…:)


யாராவது ஒருத்தராவது குக்கிங் சொன்னாங்களா???


ம்ம்ம்ஹூம்! ஸ்கூல்ல கூட இந்த மாதிரி டாபிக் பத்தி மிஸ் கேட்டா பாய்ஸ் தான் ரெசிபியெல்லாம் சொல்வாங்க! என்றாள்!


சுத்தம்…:)) என்றேன்!


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்


16 கருத்துகள்:

  1. சுவாரஸ்யமான கதம்பம்.  இந்த சீசனுக்கு ஜவ்வாது மாம்பழம் மட்டுமே சுவைத்தேன்.  அதுவும் ஒன்றே ஒன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் பகிர்வு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  2. நிர்மலா ரெங்கராஜன்11 ஜூலை, 2023 அன்று 7:08 AM

    Roshni க்கு வாழ்த்துக்கள் 💐
    இரண்டு புதுவித மாம்பழ வகைகள் தெரிந்து கொண்டேன் 👍

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகளை வாழ்த்தியமைக்கு நன்றி நிர்மலா ரெங்கராஜன் ஜி. மாம்பழ வகைகள் - புதிது புதிதாக பெயர் வைத்து விடுகிறார்கள் போலும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. கல்லூரி வாழ்க்கை தொடக்கம் சிறப்பாக அமையும் வாழ்த்துகள்.

    கதம்பம் நன்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகளை வாழ்த்தியமைக்கு நன்றி கில்லர்ஜி.

      கதம்பம் பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  4. ரோஷ்ணிக்கு நல்வாழ்த்துகள்
    ரிஷபன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகளுக்கு உங்கள் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ரிஷபன் ஜி.

      நீக்கு
  5. முகநூலில் படித்தேன் முன்பே.
    ரோஷ்ணிக்கு வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!
    இந்த மூறை உறவுகள் மாம்பழங்கள் வாங்கி வந்து கொடுத்தார்கள். பங்கனபள்ளி, நீலம். மல்கோவா.
    கதம்பம் அருமை.

    பதிலளிநீக்கு
  6. புதுப் பெயர்களாக இருக்கிறதே மாம்பழங்களின் பெயர்கள். கிளிமூக்கின் வேறு பெயர்!!! ஆனால் கரும்புரசம் கூட தெரிந்த மாம்பழ வகையின் வேறு பெயராக இருக்குமோ? ருமானி?

    கீதா

    பதிலளிநீக்கு
  7. நீலன் இங்கு கிடைக்கிறது...செம சுவை...

    பாடல்வரிகள் யார் எழுதியதோ...நன்றாக இருக்கிறது..பாடல் கேட்டதில்லை. கேட்டுப் பார்க்கிறேன்.

    ரோஷ்ணிக்கு வாழ்த்துகள்! ஆஹா 12 வருட முதல் நாளும் லெமன் சாதம் என்பதை நல்ல நினைவு வைத்திருக்கிறாரே!!!!

    Manish Malhotra - ஆமாம் ரோஷ்ணியின் ஆர்வம்!!!
    இப்ப சமீபத்தில் கூட அவர் பெயர் வந்தது.

    அட! ரோஷ்ணி சிலம்பம் கற்றுக் கொண்டாரா!!!! வாவ்!!! ரொம்ப சிறப்பான விஷயம். வாழ்த்துகள்! மிக மிக நல்ல கலை. என் பாராட்டுகளையும் சொல்லிடுங்க ஆதி!

    //யாராவது ஒருத்தராவது குக்கிங் சொன்னாங்களா???

    ம்ம்ம்ஹூம்! ஸ்கூல்ல கூட இந்த மாதிரி டாபிக் பத்தி மிஸ் கேட்டா பாய்ஸ் தான் ரெசிபியெல்லாம் சொல்வாங்க! என்றாள்!

    சுத்தம்…:)) என்றேன்!//

    சிரித்துவிட்டேன். ஆண் பசங்க இப்பவே எதிர்காலத்துக்குத் தயாராங்க! நல்ல விஷயம்தானே!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  8. சுவாரசியம். கல்லூரி வாழ்க்கை மிகச் சிறப்பாக அமையட்டும். வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  9. ரோஷ்ணிக்கு அன்பின். நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  10. இந்த வருடம் மாம்பழமும் தின்னவில்லை..

    பலாச்சுளையும் தின்னவில்லை..

    பதிலளிநீக்கு
  11. கரும்பு ரசம், மயில்காச்சி.. இந்தப் பெயர்களை முதல் முறையாக கேள்விப்படுகிறேன். ரோஷ்ணியின் கல்லூரி விஜயம்.. முகநூலிலும் படித்தேன்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....