அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட நீ இல்லாமல் நானேது பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
சோள குழிப்பணியாரம்
வாரச்சந்தையில் வாங்கிய மூன்று சோளத்தை உதிர்த்து வைத்திருந்தேன். முதல் ரெசிபியாக அதில் சிறிதளவு சோளத்தை அரைத்து ரவையுடன் கலந்து குழிப்பணியாரம்!
*&*&*&*&*&*&
தொல்லை:
ஹலோ!
ரோஷ்ணியோட பேரண்ட்டா?
ஆமாங்க! நீங்க யாரு?
நாங்க....... இந்தக் காலேஜ்ல இருந்து பேசறோம் மேடம்! ரோஷ்ணி எந்த க்ரூப் எடுத்துருக்காங்க?
எதுக்கும்மா அதெல்லாம் உங்களுக்கு? நீங்க எதுக்கு கால் பண்ணியிருக்கீங்கன்னு முதல்ல சொல்லுங்க? என்றேன்.
அது வந்து மேடம் எங்க காலேஜ்ல ரோஷ்ணிக்கு அட்மிஷன் போடலாமே! அதுக்காக தான் கால் பண்ணியிருக்கோம்! என்றாள்.
அட்மிஷன்லாம் ஆயிடுச்சுமா! காலேஜ் போயிட்டிருக்காங்க என்றதும்…
எந்த காலேஜ் மேடம்??
அதை எதுக்கும்மா உங்களுக்கு சொல்லணும்?
சட்டென்று பதிலில்லை அவர்களிடம்....
இல்ல மேடம் எண்ட்ரி பண்ணி வெச்சிப்போம்! அதுக்காக தான் கேட்கிறோம்! சொல்லுங்க மேடம்!
மொதல்ல எங்க நம்பர் எப்படி கிடைச்சதுன்னு சொல்லும்மா என்றதும் கட் செய்து விட்டாள்!
எங்கள் இருவருக்கும் இப்படி அன்றாடம் ஏதோ ஒரு காலேஜிலிருந்து கால் வந்து கொண்டே இருக்கிறது! குறிப்பிட்ட கோர்ஸ் உங்க காலேஜ்ல இல்லை என்று சொன்னாலும் அவர்கள் ஒத்துக் கொள்வதில்லை..🙂 ப்ளாக் செய்து கொண்டே இருக்கிறோம்!
இவர்களுக்கெல்லாம் நம்பர் எப்படி கிடைக்கிறது என்று புரியவில்லை??? செயற்கை நுண்ணறிவின் செயலாக இருக்குமோ??
*&*&*&*&*&*&
மாவீரன்:
ரெண்டு பேரும் பார்த்து போயிட்டு வாங்க! என்ன!
அம்மா ஆட்டோ கிடைக்கலன்னு டென்ஷன் ஆகப் போறா!! முன்னாடியே கிளம்பிடுங்க!
மகளிடம் என்னவரின் அட்வைஸ்...🙂
மகளுடன் கம்பெனிக்காக மாவீரனுக்கு சென்று வந்தேன்..🙂
*&*&*&*&*&*&
மகள் வரைந்த ஃபேஸ் பெயிண்டிங் ஒன்று:
கல்லூரியில் நடைபெற்ற Talent oriented competitionல் 'Save humanity from plastics' என்ற தலைப்பில் மகள் செய்த face paintingக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது என்பதை மகிழ்வுடன் இங்கு பகிர்ந்து கொள்கிறேன். அவள் முதல்முறையாக செய்த பெயிண்ட்டிங் இது!
*&*&*&*&*&*&
Biscuit cake!
தினசரி வேலைகளை முடித்து விட்டு Spotifyல் பாடல்களை கேட்டபடியே மெஷினில் மகளின் உடைகளை Alter செய்து கொண்டிருந்தேன். அப்போது தான் இந்த யோசனை வந்தது! அதற்கு கலந்து அடுப்பில் வைத்து விட்டால் தயாராகி கொண்டிருக்குமே!! உடனே செயலில் இறங்கி விட்டேன்.
இப்போதெல்லாம் மாலைநேரம் எனக்கு டீயுடன் சாப்பிட சால்ட் பிஸ்கெட்ஸ் மட்டும் தான் பிடித்திருக்கிறது! சென்ற மாதம் வாங்கிய 50 50 பிஸ்கெட்டுகள் இனிப்பாக இருந்ததால் ஏனோ சாப்பிடாமல் அப்படியே இருந்தது! நமுத்தும் போய்விட்டது!
அதை மிக்சியில் இட்டு பொடித்துக் கொண்டு அதற்கேற்ற அளவு நாட்டுச் சர்க்கரை, கோக்கோ பவுடர், ஏலக்காய் எசன்ஸ், பால், தயிர், எண்ணெய், பேக்கிங் சோடா என்று எல்லாவற்றையும் கண் திட்டமாக சேர்த்துக் கொண்டு டூட்டி ஃப்ரூட்டியும் முந்திரியும் தூவி பேக் செய்துள்ளேன். ருசியும் பார்த்து விட்டேன்..🙂 அருமையாக வந்துள்ளது!
வீணாக தூக்கிப் போடாமல் ருசியான பண்டமாக மாற்றியதில் மகிழ்ச்சி.
******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
போன், கல்லூரிகளிடமிருந்து மட்டுமல்ல, சில விஷமிகளிடமிருந்தும் வரலாம். சிறப்பாகக் கையாண்டீர்கள். பேஸ் பெயின்டிங் அருமை. பிஸ்கட் கேக் ஐடியா அருமை. சோளத்தோடு என்ன சேர்த்து எப்படி செய்தீர்கள் என்றும் சுருக்கமாக சொல்லி இருக்கலாம்.
பதிலளிநீக்குநேற்றைய பதிவு என்று வேறு பதிவைக் குறிப்பிட்டுள்ளீ ர்கள். அந்தப் பதிவுக்கு அடுத்த நாள் இதை வெளியிட ஷெட்யூல் செய்யப் பட்டிருந்ததோ....
பதிலளிநீக்குமகளுக்கு வாழ்த்துகள்...
பதிலளிநீக்குமுதலில் ரோஷிணிக்கு வாழ்த்துகள்! செமையா face painting செஞ்சுருக்காங்க. She keeps rocking and will keep rocking! God Bless!!
பதிலளிநீக்குசோளமும் ரவையும் கலந்த குழிப்பணியாரம் மற்றும் பிஸ்கட் கேக் சூப்பர், ஆதி!! நல்லா வந்திருக்கு.
நான் தெரியாத எண் எதையும் attend செய்வதில்லை. ஏகப்பட்ட அழைப்புகள் வருகின்றன. நான் எல்லாமும் ப்ளாக் செய்கிறேன்.
கீதா
ரோஷ்ணிக்கு வாழ்த்துகள். நன்றாக இருக்கிறது ஃபேஸ் பெயிண்டிங் .
பதிலளிநீக்குஆதி செய்த கேக்,குழிப்பணியாரம் அருமை.