அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த
நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட கடந்து வந்த பாதை பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக
நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம்
வாருங்கள்.
பணம் பணம் என்று ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் மனதை நேசிக்கும் உறவுகள் கிடைத்தால் தொலைத்துவிடாதீர்கள்.
*******
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்!
உங்கள் எல்லோருக்கும் தித்திக்கும் தைத்திருநாள்
வாழ்த்துகள்!
நம் இல்லங்களில் பால் பொங்குவதைப் போல எங்கும்
அன்பும், மகிழ்ச்சியும் பொங்கட்டும்! வீடும் நாடும் வளமாக இருக்கட்டும்!
நல்லதே நடக்கட்டும்! நலமே சூழட்டும்!
*******
பொங்கலோ பொங்கல்!!
நல்ல நேரத்தில் பொங்கல் பானையை அலங்கரித்து பால்
பொங்கியாச்சு! எங்கும் இன்பமும் சந்தோஷமும் பொங்கிப் பெருகணும்! புரிதலும் அன்பும்
ஒற்றுமையும் பல்மடங்காக பெருகணும்! நாடும் வீடும் வளமாக இருக்கணும்!
பயிர்பச்சைகள் செழிப்பாக வளர்ந்து விவசாயிகளின் மனம்
குளிரணும்! இயற்கை நமக்கு உற்ற துணையாக என்றும் இருக்கணும்! மக்கள் மனதில்
திருப்தியும், நிதானமும், பக்குவமும் நிலைத்து இருக்கணும்! நடப்பவை எல்லாம்
நன்மைக்கே என்ற மனநிலை நமக்குள் வளரணும்! எல்லாவற்றையும் தந்த இறைவனுக்கு என்றும்
நன்றி சொல்வோம்!
தித்திக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்!
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை
பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும்
சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
பால் பொங்கும் பருவ அழகாக இருக்கிறது ஆதி! பார்க்கவே இதமாக சுவாமி முன் வைத்திருப்பதும் எல்லாம் பார்க்கவே மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கு!
பதிலளிநீக்குஉங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்! எல்லோரும் நல்ல உடல் நலத்துடன் இருந்திட மகிழ்வாக இருந்திடவும் வாழ்த்துகள்!
கீதா
பதிவு குறித்தான உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
நீக்குஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இனிய பொங்கல் வாழ்த்துகள் கீதா சேச்சி.
கோலம் மிக அழகு! ரோஷ்னியின் கைவண்ணமா பெயர் இல்லை எனவே உங்கள் கைவண்ணமா யார் போட்டிருந்தாலும் மிக அழகாக இருக்கு. வாழ்த்துகள்!
பதிலளிநீக்கு//பணம் பணம் என்று ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் மனதை நேசிக்கும் உறவுகள் கிடைத்தால் தொலைத்துவிடாதீர்கள்//
உண்மை.
கீதா
மார்கழிக் கோலங்கள் முழுவதுமே ரோஷ்ணியின் கைவண்ணம் தான். வர்ணம் கொடுக்கவும் எடுபிடி வேலைகள் மட்டுமே நான்..:) நன்றிகள் கீதா சேச்சி.
நீக்குபொங்கல் வாழ்த்துகள் ஆதி. வெங்கட் நலபெற்று விட்டார் என நினைக்கிறேன்.
பதிலளிநீக்குபொங்கலுக்கு வெங்கட் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கும் உங்கள் இருவருக்கும்.
கோலம் ரோஷ்னி போட்டது அருமை.
பிரசாதங்கள் அருமை.
வெங்கட் உடல் நலமில்லாமல் இருந்தாரா? இப்போது நலம் பெற்று விட்டாரா?
நீக்குஅவர் நலமாக இருக்கிறார் அம்மா. அடுத்த பயணத்திற்கான சிந்தனையில் இருக்கிறார். இந்த வருட பொங்கலில் அவர் எங்களுடன் இருந்ததில் மிக்க மகிழ்ச்சி. நன்றிம்மா.
நீக்குஉங்களுக்கும் எங்கள் இனிய பொங்கல் வாழ்த்துகள் கோமதிம்மா.
அவருக்கு ஜுரம் வந்திருந்தது சார். பயப்பட ஒன்றுமில்லை. இப்போது நலமாக இருக்கிறார். நன்றி ஸ்ரீராம் சார்.
நீக்குதற்போது பூரண நலம். எல்லாம் நலமே. அதீத குளிர் ஒத்துக் கொள்ளவில்லை. சென்ற வருடத்தின் கடைசியில் கிட்டத்தட்ட 10 நாட்கள் கங்கைக்கரையில் (வாரணாசி) நகரில் சுற்றி வந்தது ஒத்துக் கொள்ளாமல் போனது.
நீக்குஉங்கள் அனைவருக்கும் எங்கள் பொங்கல் வாழத்துக்கள்.
பதிலளிநீக்குபொங்கல் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றிகள் ராமசாமி சார். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இனிய பொங்கல் வாழ்த்துகள் சார்.
நீக்குஉங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!
பதிலளிநீக்குபொங்கல் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றிகள் மனோம்மா.
நீக்குஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இனிய பொங்கல் வாழ்த்துகள் .
பொங்கல் வாழ்த்துகள் உங்கள் அனைவ்ருக்கும். பொங்கல் மற்றும் சந்நிதியில் வைத்திருப்பது மிக அழகு.
பதிலளிநீக்குபொங்கல் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றிகள் நெல்லை சார்.
நீக்குஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இனிய பொங்கல் வாழ்த்துகள் சார்.
பால் பொங்கிய புகைப்படம் உற்சாகத்தைத் தருகிறது. இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குபொங்கல் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றிகள் ஸ்ரீராம் சார்.
நீக்குஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இனிய பொங்கல் வாழ்த்துகள் சார்.
கோலமும், பால் பொங்குவதுமாக இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். பொங்கல் எல்லோரையும் மகிழ்வித்து நன்மை ஓங்கிட செய்யட்டும். எல்லோருக்கும் இறை அருள் கிடைக்கட்டும் மகிழ்ச்சி பொங்கட்டும்.
பதிலளிநீக்குவெங்கட்ஜி அவர்கள் நலமும் இருப்பது பார்த்து மிக்க மகிழ்ச்சி.
துளசிதரன்
தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் சார்.
நீக்குஐயா வணக்கம் நாம் தமிழர்கள் காலத்தை சரியாக கணித்து பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது. டிசம்பர் 22 அன்று பொங்கல் முடிந்து விட்டது தற்போது நவீன உலகத்தில் பழமை மறந்து காலம் தவறிய பண்டிகைகள் கொண்டாடுவது ஒரு பயனும் இல்லை டிசம்பர் 22 தனுசு சங்கராந்தி கொண்டாடப்பட்டது மேலும் நம் தமிழர்களின் அறிவை வானிலை பற்றி அறிந்து கொள்ள whatsapp 9994013539 அனுப்பவும் தங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். தங்கள் எழுத்துக்கள் மூலம் உண்மையை வெளியிட்டால் மற்றவர்களுக்கும் பயன்பெறும் நன்றி ஐயா
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நீக்குவணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. தங்களுக்கும், தங்கள் குடும்பத்திற்கும் இனிய பொங்கல் திருநாள் மற்றும் உழவர் திருநாள் நல்வாழ்த்துகள். பொங்கல் சிறப்புடன் கொண்டாடியது குறித்து மிக்க மகிழ்ச்சி. சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்கள் உடல்நிலை ஜுரம் குணமடைந்து சரியானது குறித்தும் மகிழ்ச்சி. (நேற்று பதிவுகளுக்கு வரவில்லையாததால் தாமதமாக வந்து உள்ளேன். மன்னிக்கவும்.) பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் வாழ்த்துகள்!
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலாஜி.