அன்பின் நண்பர்களுக்கு, இரண்டு வார இடைவெளிக்குப் பிறகு
உங்களைச் சந்திக்கிறேன். இந்த இடைவெளியில் ஒரு துக்க சம்பவம். என்னுடைய பதிவுலகப் ப்ரவேசத்திற்குக்
காரணமாக இருந்த எனது சித்தப்பா (அப்பாவின் சொந்தத் தம்பி) திரு ராகவன் கல்யாணராமன்
என்கிற ரேகா ராகவன் இறைவனடி சேர்ந்தார். நேற்று தான் பதிமூன்று நாட்கள் காரியங்கள்
நடந்தேறின. யாருமே எதிர்பாரா மரணம் – இரவு பதினொன்று மணிக்கு எனக்குத் தகவல் வர, என்னால்
நம்பவே முடியவில்லை. மரணம் சொல்லி விட்டு வருவதில்லை
என்பது உண்மை என்றாலும், சில மரணங்கள் நம்மால் ஜீரணிக்க முடிவதில்லை – அப்படி ஒரு மரணம்
ரேகா ராகவன் அவர்களின் மரணம்.
ரேகா ராகவன் மற்றும் அன்பே சிவம் என்ற வலைப்பூக்களில்
சில பதிவுகள் மட்டுமே வெளியிட்டு இருந்தாலும், அவர் எழுதிய சிறுகதைகள், ஒரு பக்கக்
கதைகள், துணுக்குகள் ஆகியவை பல பத்திரிகைகளில் குறிப்பாக, குமுதம், குங்குமம், தினமணிக்
கதிர், பாக்யா, சுமங்கலி, சாவி போன்றவற்றில் வெளிவந்திருக்கின்றன. வலைப்பூவை எனக்கு
அறிமுகம் செய்து வைத்தவர் பிறகு முகநூல், ட்விட்டர் என மாறிக் கொண்டே இருக்க, நான்
மட்டும் இங்கேயே இருந்து விட்டேன். அவர் மூலம் எனக்கு அறிமுகம் ஆன பதிவர்கள், சிறந்த
எழுத்தாளர்கள் – குறிப்பாக திரு கே.பி. ஜனார்த்தனன், திரு ரிஷபன் – என நிறைய பேர் உண்டு.
இன்றைக்கும் அந்த நட்பு தொடர்வதற்குக் காரணம் அவர் கொடுத்த அறிமுகம். கடந்த வாரத்தில்
திரு ஜனார்த்தனன் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது கூட, திரு ரேகா ராகவன் அவர்களின்
உதவி செய்யும் மனப்பாங்கு, நட்பு பாராட்டும் விதம் என்பது தான் முக்கிய விஷயமாக இருந்தது.
சாதாரணமாகவே இருந்தார் – எந்த வித உடல்நலக் கோளாறும் –
மூட்டு வலி தவிர – இல்லாமல் இந்த 70 வயதிலும் தோட்ட வேலைகள், வீட்டு வேலைகள், பக்கத்துக்
கோவிலில் சில உதவிகள், எழுத்துப் பணிகள் என செய்து கொண்டிருந்த அவர் மரணம் பற்றிய செய்தி
தெரிந்து தன்னால் நம்பவே முடியவில்லை என்பது தான் நட்பு வட்டத்தில் பலரது சிந்தனையாகவும்,
சொல்லாகவும் இருந்தது. மறைவுக்குச் சில நாட்கள்
முன்னர் கூட கோவையில் நடக்கப் போகும் ஒரு எழுத்தாளர் சந்திப்பிற்காக கோவை செல்ல பயணச்
சீட்டு முன்பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தார். என்ன இருந்தாலும், காலன்
வீசும் கயிறு எப்போது யார் மேல் விழும் என்பதைச் சொல்ல முடியாதே! இதோ அவர் மறைந்து
13 நாட்கள் வேக வேகமாக ஓடிவிட்டது. அவரை இழந்து மன வேதனையில் இருக்கும் அவரது துணைவி,
மகள் மற்றும் மகன்கள் ஆகியோருக்கு, இந்த இழப்பைத் தைர்யமாகக் கடக்கும் மனோ பலத்தினை
இறைவன் அளிக்கட்டும்.
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குமிகவும் வருத்தமான செய்தி. மனதை கலங்க வைத்தது. அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறேன். அவரின் குடும்பத்தவர்களுக்கு அவர் பிரிவை தாங்கும் சக்தியை இறைவன் அளிக்கவும் வேண்டிக் கொள்கிறேன்.
கமலா ஹரிஹரன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குஅம்பத்தூரில் இருக்கார் போல/மன்னிக்கவும், இருந்தார் இல்லையா? பாவம் தான். அப்படி ஒண்ணும் வயசும் ஆகலை. அதுவும் உங்க சொந்த சித்தப்பா! மனதுக்கு வேதனையாகவே இருக்கிறது. அவர் குடும்பத்துக்கும், உங்கள் குடும்பத்துக்கும் இந்த இழப்பிலிருந்து மீண்டு வர இறைவன் அருள் புரியட்டும். எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள்
பதிலளிநீக்குஆமாம் கீதாம்மா. அம்பத்தூரில் தான் இருந்தார்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
மிகவும் வருத்தமான செய்தி எனது இரங்கல்கள்.
பதிலளிநீக்குகடந்த வாரம் எனது அண்ணனின் மனைவி இறந்து விட்டார். (எனது குழந்தைகளை வளர்த்தவர்)
உங்கள் அண்ணியார் மரணம் - அதுவும் உங்கள் குழந்தைகளை வளர்த்தவர் மரணம் வருத்தமான விஷயம் தான் கில்லர்ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நாம் ரொம்ப நேசிப்பவர் மரணமடைந்ததை ஜீரணிக்க முடியாமல் போவது இயல்பு. அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
நீக்குஆழ்ந்த இரங்கல்கள்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குஆழ்ந்த இரங்கல்கள். குடும்பத்தினருக்கு ஆறுதல் கிடைக்கப் பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
நீக்குமிகுந்த அதிர்ச்சி. சிலருக்கு இறுதி என்பதே இராது என்பது போல் ஒரு ஆழ்ந்த நம்பிக்கை. என்ன சொல்லி நம்மைத் தேற்றிக் கொள்ள..
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி.
நீக்குஅன்பு வெங்கட், மிக அதிர்ச்சியான செய்தி.
பதிலளிநீக்குஉங்கள் வழியே அவரைத் தெரியும்.
திடீர் மறைவு யாராலும் தாங்கிக் கொள்ள முடியாது. நீங்களும் தேறி அந்தக் குடும்பத்துக்கும்
ஆறுதல் சொல்லுங்கள்.
இறைவன் எல்லோருக்கும் மன நிம்மதி கொடுக்கட்டும்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...
நீக்குசித்தப்பாவின் மறைவுக்கு அஞ்சலிகள். ஆழ்ந்த இரங்கல்கள்.
பதிலளிநீக்கு//அவரது துணைவி, மகள் மற்றும் மகன்கள் ஆகியோருக்கு, இந்த இழப்பைத் தைர்யமாகக் கடக்கும் மனோ பலத்தினை இறைவன் அளிக்கட்டும்.//
மனோ பலத்தை இறைவன் அருள வேண்டும்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...
நீக்கு//என்ன இருந்தாலும், காலன் வீசும் கயிறு எப்போது யார் மேல் விழும் என்பதைச் சொல்ல முடியாதே!//
பதிலளிநீக்குஇது தான் உண்மை வெங்கட்! சொந்த சித்தப்பாவின் மரணம் மிகவும் உங்களைப் பாதித்திருக்கும் இந்த நேரத்தில் மனதை திடப்படுத்திக்கொள்ளுங்கள் என்று மட்டும்தான் சொல்ல முடிகிறது. அதிர்ச்சியிலிருந்தும் மீண்டு வாருங்கள். என் ஆழ்ந்த இரங்கல்கள்!!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.
நீக்குமரணம் யாருக்கும் சொல்லாமக்ல் வருவது எல்லோருக்கு தெரியும் இதுவும்கடந்துபோகும் என்று எடுத்து கொள்ள வேண்டும் ஆழ்ந்த இரங்கல்கள்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.
நீக்குவருத்தம் தரும் செய்தி. ஆழ்ந்த இரங்கல்கள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குஆழ்ந்த இரங்கல்கள். உங்கள் பதிவு மூலமாக அவரைப் பற்றி அறிந்தேன். இழப்பு என்பது ஈடு செய்ய முடியாதது.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குசமீப காலமாக மனத்தளவில் மிக நெருக்கமானவர்களின் இழப்புத் தகவல்கள் அதிக வேதனை தருகிறது...அவரின் ஆன்மா சாந்தியடையவும் அவரின் இழப்பைத் தாங்கும் சக்தியை அவரது குடும்பத்தாருக்கு வழங்கவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்..
பதிலளிநீக்குஉண்மை தான் ஐயா. நேற்று தான் இன்னுமொரு பதிவர் - பழனிசாமி கந்தசாமி ஐயாவின் மறைவு பற்றி எங்கள் பிளாக் வழி அறிந்தேன்... அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி.
சமீபத்தில் தஞ்சாவூரில் ஒரு கல்யாணத்தில் அறிமுகம் ஆனோம்.
பதிலளிநீக்குமிகவும் சிறந்த மனிதர். மனசு மிகவும்
கஷ்டப் படுகிறது. அவர் தம் குடும்பத்தார்க்கு என் ஆறுதல் .ஏ. நாகராஜன் பம்மல்
உங்களது முதல் வருகையோ பம்மல் ஏ. நாகராஜன்?
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ஆழ்ந்த இரங்கல்கள் ஐயா
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குஆழ்ந்த இரங்கல்கள்...
பதிலளிநீக்குஅவரின் குடும்பத்தாருக்கு இறைவன் துணை இருக்கட்டும்..
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுப்ரேம் ஜி.
நீக்கு