ஞாயிறு, 2 பிப்ரவரி, 2020

அந்தமானின் அழகு – நிழற்பட உலா – பகுதி ஐந்து



அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாமா?

வாழ்க்கையில் நாம் கடைபிடிக்க வேண்டிய இரண்டு விஷயங்கள் – கோபமாய் இருக்கும்போது பேசக் கூடாது! கோபமாய் இருப்பவர்கள் பேசும் வார்த்தைகளைப் பொருட்படுத்தக் கூடாது!
 
முதலாவதை கடைபிடிக்கிறேனோ இல்லையோ, இரண்டாவதை பல சமயங்களில் கடைபிடிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் தான் நானும் இருக்கிறேன் – பலரும் இருக்கிறார்கள் இல்லையா! உங்கள் அனுபவம் எப்படி என்று சொல்லலாமே!

அந்தமான் சுற்றுலாப் பயணத்தின் போது எடுத்த சில படங்களை நிழற்பட உலாவாக, இந்த பதிவு தவிர நான்கு பதிவுகள் வெளியிட்டு இருக்கிறேன். அப்பதிவுகளை பார்க்காதவர்கள் வசதிக்காக, இதோ இங்கே அப்பதிவுகளின் சுட்டி…





பொதுவாக தமிழகத்திலும், கேரளத்திலும் இன்னும் சில மாநிலங்களிலும் கடல், கடற்கரை என சுற்றி வந்திருக்கிறேன் என்றாலும், அந்தமான் கடற்கரைகளில் பார்த்த அளவு கடல்வாழ் உயிரினங்களை வேறு எந்த கடற்கரையிலும் பார்த்ததில்லை. அந்தமானில் அக்டோபஸ் முதல் சங்கு, நத்தை, நண்டு என பல வித கடல்வாழ் உயிரினங்களைப் பார்க்கக் கிடைத்தது. சிலவற்றை படங்களாக நானும் சேமித்துக் கொண்டேன் என்றாலும், நண்பரின் மகன் – அவர் ஒரு மருத்துவர் – தனது One Plus அலைபேசியில் நிறைய கோணங்களில், விதம் விதமாக – எண்ணற்ற நிழற்படங்களை எடுத்திருந்தார் இந்தப் பயணத்தில். அப்படி அவர் எடுத்த சில படங்கள் இந்த வார நிழற்பட உலாவாக. அனைத்துமே அழகான படங்களே… நீங்களும் பாருங்களேன்.























































 


நண்பர்களே, இந்த வாரத்தின் நிழற்பட உலா உங்களுக்குப் பிடித்திருந்ததா என்பதை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் [சி]ந்திப்போம்...

நட்புடன்

வெங்கட்
புது தில்லி

24 கருத்துகள்:

  1. உண்மையிலேயே அரிய காட்சிகள் ஜி காண வைத்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காட்சிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது உடனடி வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. அருமையான வாசகம். முடிந்தவரை நான் பின்பற்றப் பாடுபடுவது!

    தெளிவான சுவாரஸ்யமான படங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. அழகான படங்கள்.

    கோபம் பற்றிய வாசகம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. நீர்வாழ் உயிரினங்கள் படம் எல்லாம் மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் அனைத்தும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
    2. அன்பு வெங்கட், பக்கெட் லிஸ்ட் ல அந்தமானைச் சேர்க்கணும்னு நினைக்கிறேன்.
      மிக மிக அழகான வண்ணப்படங்கள். ஷார்ப் இமேஜஸ்.
      எடுத்தவரும் ,காமிராவும் சிறப்பு.
      எத்தனை கடல் வாழ் இனங்கள்.!!!
      அதிசயமா இருக்கிறதுமா!!!!
      கோப வசனம் உண்மையே. முடிந்தவரை கோபிக்காமல் இருப்போம்.
      மற்றவர்களும் நம்மைக் கோபிக்காமல் இருக்கட்டும்.
      மிக மிக நன்றி மா.

      நீக்கு
    3. கோபம் பற்றிய வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா...

      அலைபேசிகளிலும் இப்போது கேமராக்கள் மிகச் சிறப்பாக வருகின்றன. எடுத்தவரும் ரசனையானவர் என்பதால் படங்கள் நன்றாக வந்திருக்கின்றன. உங்கள் சார்பில் அவருக்கு வாழ்த்துகளைச் சொல்லி விடுகிறேன் மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    கோபத்தைப் பற்றிய முதல் வாசகம் அருமை. ரசித்தேன்.

    அத்தனைப் படங்களும் நன்றாக உள்ளன. கடல்வாழ் உயிரினங்கள் எத்தனை விதங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் வெவ்வேறு வடிவத்தில்... இறைவன் படைப்பே ஒரு ஆச்சரியமான விஷயம்தான்..! பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆண்டவனின் படைப்பில் தான் எத்தனை விதம், எத்தனை அழகு இல்லையா? அனைத்தும் ஆச்சரியம் தான். இன்றைய படங்களும் வாசகமும் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி கமலா ஹரிஹரன் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. அருமையாகப் படங்கள் எடுத்திருக்கிறார். அதென்னமோ தெரியலை, வனவிலங்குகளைப் பார்க்கப் பிடிக்கும் அளவுக்குக் கடல்வாழ் உயிரினங்களைப் பார்க்கப் பிடிக்காது. ஆனால் இங்கே எடுத்திருக்கும் கோணங்கள் ரசிக்க வைக்கின்றன.

    கோபம் வராமல் இருக்கவும், கோபத்தில் பேசும் வார்த்தைகளைப் பொருட்படுத்தாமல் இருக்கவும் பழகி வருகிறேன். :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களின் கோணங்கள் உங்களுக்குப் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாம்மா...

      கோபம் - தவிர்ப்பதே நல்லது. நானும் பல சமயங்களில் கோபம் வந்தாலும் அடக்கிக் கொள்ள முயற்சிப்பதே வழக்கம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. எத்தனை விதமான உயிரினங்கள்! அருமையா எடுத்திருக்கிறார் தங்கள் நண்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ராமலக்ஷ்மி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. ஒவ்வொரு படத்தின் துல்லியமும் அசுர வைக்கிறது...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  10. சின்ன சின்ன உயிரினங்களின் அற்புத காட்சிகள்... மிக அழகு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுப்ரேம் ஜி.

      நீக்கு
  11. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் இரசிப்பிற்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....