ஞாயிறு, 12 ஜனவரி, 2020

அந்தமானின் அழகு – நிழற்பட உலா – பகுதி நான்கு

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாமா?

நீங்கள் எந்த வார்த்தையை அடிக்கடிச் சொல்கிறீர்களோ அந்த வார்த்தை ஒரு நாள் உங்கள் வாழ்வில் உண்மையாகப் பலித்து விடும். எனவே நம்பிக்கையுடன் வெற்றி வெற்றி என்று சொல்லுங்கள். 


அந்தமான் சுற்றுலாப் பயணத்தின் போது எடுத்த சில படங்களை நிழற்பட உலாவாக, இந்த பதிவு தவிர மூன்று பதிவுகள் வெளியிட்டு இருக்கிறேன். அப்பதிவுகளை பார்க்காதவர்கள் வசதிக்காக, இதோ இங்கே அப்பதிவுகளின் சுட்டி…
அந்தமான் என்றதும் உங்கள் நினைவுக்கு வருவது “அந்தமானைப் பாருங்கள் அழகு” எனும் பாடலாக இருக்கலாம். நிறைய திரைப்படங்கள் இங்கே படம் பிடிக்கப்படுகிறது. என்னதான் தீவுக்குள் இருந்தாலும் அங்கே அலைபேசி பயன்பாடும் இருக்கிறது என்றாலும் 2ஜி தான்! 4ஜி, 5 ஜி என எல்லா இடங்களிலும் எங்கள் நெட்வொர்க் வேலை செய்யும் என பல அலைபேசி நிறுவனங்கள் கூவிக் கூவி விளம்பரம்  செய்தாலும், அவை பொய் எனப் புரிய வைக்கும் இடங்களில் ஒன்று தான் இந்த அந்தமான். ஜியோ சுத்தமாக வேலை செய்யவில்லை. ஏர்டெல் கிடைத்தாலும் ஏதோ தூர தேசத்திலிருந்து பேசுவது போல, எதிர் முனையிலிருப்பவர்கள் பேசி சில நிமிடங்கள் கழித்தே நமக்குக் கேட்கும். பேசிக் கொள்ளவாது முடியுமே தவிர இணையம் நிச்சயம் கிடைக்காது! ஒரே வழி அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல். மட்டுமே இணையப் பயன்பாடுக்கு வழி. அதுவும் தொலைபேசி வழி இணையம் மூலம் தான் என்பதால் ரொம்பவே மெதுவாகத் தான் இணையத்தில் வலம் வர முடியும்! என்ன ஒரு வசதி என்றால் இணையம் ஒழுங்காக இல்லாததால் நிம்மதியாக இயற்கையை ரசிக்க முடியும்! இணையம் இருந்தால் பலரும் அதிலேயே மூழ்கிவிடுவார்களே!

சரி வாருங்கள், இந்த வாரத்தில், இன்னும் சில படங்களைக் காணலாம் – இந்த வாரம், நண்பரின் மகள் எடுத்த சில படங்கள் உங்கள் பார்வைக்கு – மிகவும் சிறப்பாக எடுத்து இருக்கிறார். 


படம்-1: இப்படி கூர்மையா இருந்தா, எப்படி உணவு வைப்பாங்க, நான் எப்படி சாப்பிடுவேன் என்று யோசிக்கிறதோ இந்தக் காகம்?


படம்-2: என்னதான் இருந்தாலும் இயற்கை அழகிற்கு ஈடாகுமா? என்று கேட்க வைக்கும் காட்சி ஒன்று.படம்-3: பசுமையைப் போர்த்திக் கொண்ட மரம் ஒன்று...படம்-4: இதுவும் இயற்கை வரைந்த ஓவியம் தான் - கடலிலிருந்து ஒதுங்கி இருந்த ஒரு கல்...படம்-5: எல்லாவற்றிலும் அழகு இருக்கிறது. பார்ப்பவர்கள் பார்த்தால்!படம்-6: என் மேல் விழுந்த பனித்துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்? என்று கேட்கிறதோ இந்த இலை?படம்-7: கடக்க வேண்டிய தூரம் நிறையவே உண்டு... வாருங்கள் தொடர்ந்து நடப்போம்...


படம்-8:  பல சிக்கல்கள், தடங்கல்கள் இருந்தாலும் வெளிச்சம் வந்தே தீரும் என்று உணர்த்துகிறோ இப்படம்?
படம்-9: இயற்கை பின்னிய கூந்தலோ இது? படம்-10: ஒளிமயமான எதிர்காலம் உண்டு என்று சொல்கிறதோ சூரியனின் கிரணங்கள்?


படம்-11: ஒரே விஷயத்தினை பல வ்யூகங்களில் பார்க்க முடியும் என்று சொல்கிறதோ இந்த இலை?படம்-12: சும்மா தெறிக்க விடலாம் வாங்க... என்று சொல்கிறதோ இந்தப்படம்?படம்-13: சூரியனின் கிரணங்களும், கடலின் அலைகளும் சந்தித்தபோது...படம்-14: அலைகள் விட்டுச் சென்ற தடமோ - இலை மீது மணல்!படம்-15: சூரிய அஸ்தமனம் ஆகக் காத்திருந்த போது - கடற்கரையிலிருந்து...


படம்-16: சூரியன் அஸ்தமித்த வேளையில் - ஒரு சொகுசுப் படகிலிருந்து...படம்-17: அலையாத்திக் காடுகளின் நடுவே... படம்-18: இயற்கை எழில் கொஞ்சிய ஒரு இடம் - அப்படியே தங்கிவிடலாம் எனச் சொன்னபோது ஒரு சக பயணி சொன்னது - “சொல்பவர்கள் செய்வதில்லை!”


படம்-19: இயற்கையோடு இயைந்து....படம்-20: இதுவும் அலையாத்திக் காடுகள் தான்...

நண்பர்களே, இந்த வாரத்தின் நிழற்பட உலா உங்களுக்குப் பிடித்திருந்ததா என்பதை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் [சி]ந்திப்போம்...

நட்புடன்

வெங்கட்
புது தில்லி

26 கருத்துகள்:

 1. அருமையான வாசகம். அதற்குதான் தவறான வாசகம் எதுவும் வாயிலிருந்து வரக்கூடாது என்று பெரியவர்கள் சின்னவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பார்கள்.  

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தவறான வாசகம் வாயிலிருந்து வந்து விடக்கூடாது என்று பெரியவர்கள் சொன்னது நல்ல விஷயம். ஆனாலும் நம்மில் பலராலும் அப்படி இருக்க முடிவதில்லை ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. எல்லாப் படங்களும் மிக அருமை.  இயற்கை அளித்த கூந்தல்'முன்னே ஒரு முகம் மறைந்திருக்கிறதோ' என்று யோசிக்க வைக்கிறது.  பசுமை கண்களை நிறைக்கிறது -மனதையும்தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லா படங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

   பசுமை - எவ்வளவு அழகு இல்லையா ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. அருமையான வாசகம். இதை வேறொரு காரணத்துக்காக நான் என் மனோபலம் கூடுவதற்காகப் பிரயோகிக்கிறேன். வெற்றி என நேரிடையாகச் சொல்லாட்டியும் ஒண்ணும் பிரச்னை இல்லை; சரியாகிடும்; நல்லதே நடக்கும் எனச் சொல்லிக் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்லதே நடக்கும் - நல்லதே நடக்கட்டும் கீதாம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. எல்லாப் படங்களும் அழகு என்றாலும் இயற்கையாக அமைந்த பின்னலும் எப்போவும் சலிக்காத சூரிய கிரணங்களும், சூரிய அஸ்தமனமும் அழகோ அழகு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எப்போவும் சலிக்காத சூரிய கிரணங்களும், சூரிய அஸ்தமனமும் அழகோ அழகு - உண்மை தான். எப்போது பார்க்க சலிக்காத காட்சிகள் தான் அவை கீதாம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. >>> ஒரு வசதி என்றால் இணையம் ஒழுங்காக இல்லாததால் நிம்மதியாக இயற்கையை ரசிக்க முடியும்!..<<<

  சரியாகச் சொல்லியிருக்கின்றீர்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இயற்கையை ரசிக்கச் சென்று அங்கேயும் இணையத்தில் மூழ்கி விடும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள் இல்லையா துரை செல்வராஜூ ஜி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. கவிதையாகப் படங்கள்.. அத்தனையும் அழகு.. அழகு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படங்கள் அனைத்தும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. படங்கள் அனைத்தும் அழகு ஜி

  //சொல்பவர்கள் செய்வதில்லை//
  உண்மையான வார்த்தை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சொல்பவர்கள் செய்வதில்லை - :) உண்மையாகத் தான் சொல்லி இருக்கிறார் அவர் இல்லையா கில்லர்ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. பதில்கள்
  1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. நல்ல வார்த்தைகளையே பேசுவேண்டும் என்ற முயற்சி வெற்றி பெறட்டும்.
  படங்கள் நன்றாக எடுத்து இருக்கிறார் உங்கள் நண்பரின் மகள்.

  பசுமை கண்ணை நிறைக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பசுமை கண்ணை நிறைக்கிறது - மகிழ்ச்சி கோமதிம்மா....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 10. ஒவ்வொரு படங்களும் அழகோ அழகு...

  பனித்துளி இலை ஆகா...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படங்கள் அனைத்தும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 11. //நீங்கள் எந்த வார்த்தையை அடிக்கடிச் சொல்கிறீர்களோ அந்த வார்த்தை ஒரு நாள் உங்கள் வாழ்வில் உண்மையாகப் பலித்து விடும். எனவே நம்பிக்கையுடன் வெற்றி வெற்றி என்று சொல்லுங்கள். // MGR தனது படங்களில் வெற்றி வெற்றி என்றே தொடங்குவார். படம் 3, 7, 8, 13 நன்றாக உள்ளன. கோணங்கள் சிறப்பாக உள்ளன. Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எம்.ஜி.ஆர். படங்கள் பற்றிய உங்கள் கருத்து கண்டு மகிழ்ச்சி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 12. மிக நல்ல வாசகம் வெற்றி. நன்றி வெங்கட். வெற்றிக்கு முன்னால் உடல் ,மன வளம், நிம்மதி,கீதா சொன்னது போல நல்லதையே நினைக்கும் மனம் எல்லாம் இருக்கிறது.

  அந்தமான் படங்கள் மிக மிக அழகு. கலையுணர்வோடு எடுக்கப் பட்ட அத்தனை படங்களும் ஒன்றை ஒன்று மிஞ்சுகின்றன.
  கடலில் இருந்த ஃபாசில் கல், உறைந்த நுரை என்னை மிகவும் ஈர்த்தது.
  புவியியல் படிக்காமல் போனோமே என்ற யோசனை எப்போதும் உண்டு.
  இணையம் வந்து நீங்கள் எல்லாம்
  எழுதுவதில் மனதுக்கு மகிழ்ச்சி. மிக மிக நன்றி மா.
  நல்ல வாழ்வே நமக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்லதையே நினைப்போம் வல்லிம்மா...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 13. "அந்தமானைப்பாருங்கள் ..... படங்களே சொல்கின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....