செவ்வாய், 7 ஜனவரி, 2020

கதம்பம் – ஆதியின் அடுக்களையிலிருந்து – வைகுண்ட ஏகாதசி - நினைவுகள் - ஓவியம்


நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

தூங்கி எழும்போது புதிதாக பிறப்பது புதிய நாள் மட்டுமல்ல, புதிதாக நீங்களும்தான். நினைவில் கொள்ளுங்கள், புதிய நீங்களும் தான். கடந்த காலத்தின் குப்பைகளைச் சுமந்து செல்ல நாம் ஒன்றும் குப்பைத் தொட்டியல்ல!


ஆதியின் அடுக்களையிலிருந்து – கிறிஸ்துமஸ் கேக் - 26 டிசம்பர் 2019:
மைதாவிற்கு பதிலாக கோதுமை – வெண்ணைக்கு பதில் எண்ணை – முட்டையும் இல்லாமல் செய்த கேக் – இப்படி நிறைய முறைகள் இணையத்தில் காணொளிகளாக பார்க்கக் கிடைக்கிறது! மைக்ரோவேவ் அவனும் தேவையில்லை! அப்படி கிறிஸ்துமஸ் சமயத்தில் எங்கள் வீட்டில் செய்த கேக் உங்கள் பார்வைக்கு!

ரோஷ்ணி கார்னர் – 29 டிசம்பர் 2019:சற்றே இடைவெளிக்குப் பிறகு மகள் வரைந்த ஓவியம் ஒன்று இங்கே உங்கள் பார்வைக்கு!

ஆதியின் அடுக்களையிலிருந்து – Home Made Cookies – 27 டிசம்பர் 2019முதல்முறையாக முயற்சி செய்தது.. பார்க்க சுமாராக இருந்தாலும் சுவையிலும், பக்குவத்திலும் நன்றாகவே இருந்தது..:) செய்வதும் எளிது..

ஸ்ட்ராபெரி, பட்டர்ஸ்காட்ச், மேங்கோ என மூன்று ஃப்ளேவர் சேர்த்து செய்துள்ளேன்..

எல்லோரும் எடுத்துக் கொள்ளுங்கள்..

நான் பிளாஸ்டிக் அல்ல – 2 ஜனவரி 2020:கடைகளில் சில பொருட்களை பேப்பரில் சுற்றியும், பேப்பர் காகிதங்களில் போட்டும் தருகிறார்கள். Carry bagsஐ தடை செய்திருந்தாலும் ஒரு சில பொருட்களை இது போன்ற பைகளில் போட்டுத் தருகின்றனர். இன்று ஒரு கடையில் தந்த பையில் பார்த்ததில் "நான் பிளாஸ்டிக் அல்ல! 100 % மக்கும் தன்மையுடைய பை!! என்று போட்டிருந்தது. அப்படியென்றால் இது போன்ற பைகள் எதைக் கொண்டு தயார் செய்யப்படுகிறது? தெரிந்தவர்கள் சொல்லலாம்! இது போன்று வேறு மாற்றுப் பொருள் என்னென்ன சந்தையில் வந்துள்ளது?

ஆதியின் அடுக்களையிலிருந்து – 5 ஜனவரி 2020:இந்த வாரம் கதம்பம் பகிர்வில் இன்னுமொரு இனிப்பாக, ஆதியின் அடுக்களையிலிருந்து Home Made Chocolates! இதுவும் இணையத்தில் பார்த்துச் செய்தது தான்.  செய்முறை பார்க்க நினைத்தால் இங்கே பார்க்கலாம்!


வைகுண்ட ஏகாதசி – 2020 – 6 ஜனவரி 2020


வருடந்தோறும் திரண்டு வரும் பக்தர்களிடையே உள்ளூர்வாசியாக நாங்களும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளியிருக்கும் நம்பெருமாளை ரத்னங்கள் கொண்ட அங்கியில் தரிசித்து வந்தோம்.

"எல்லோரையும் காப்பாற்று ரங்கா!!" அடுத்து கேமராக் கண்ணால் தரிசனம் :) நான் மட்டுமல்லவே!! எல்லோருமே இதைத் தானே செய்கிறார்கள் :)

திசைதோறும் நிற்கும் காவல்துறை வீரர்கள், தீயணைப்பு வாகனம், மருத்துவ வசதிகள் என்று எத்தனை ஏற்பாடுகள் செய்தாலும் அதில் குறை காணும் மக்கள். 10 ரூ பொருளானாலும் பேரம் பேசி கடைக்காரருடன் சண்டை போடும் மக்கள். வரிசையில் தள்ளுமுள்ளு!! கடைகளில் விற்பனைக்கு வைத்திருக்கும் பொருட்கள் என்று வருடந்தோறும் இதே தான் :)

எல்லாவற்றையும் புன்முறுவலுடன் ரசித்துக் கொண்டிருக்கும் ரங்கன்.


திரும்பிப் பார்க்கிறேன் – வைகுண்ட ஏகாதசி - 2013:


நேற்று தான் வைகுண்ட ஏகாதசி. சாதாரண நாட்களிலேயே திருவரங்கத்தில் வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகம். வைகுண்ட ஏகாதசி சமயம் என்றால் பக்தர்களின் எண்ணிக்கைக்கு அளவே கிடையாது! 2013-ஆம் வருடம் இதே வைகுண்ட ஏகாதசி சமயத்தில் எழுதிய இரண்டு பதிவுகளின் சுட்டி கீழே! படிக்காதவர்கள் படிக்க ஏதுவாக!என்ன நண்பர்களே, இந்த நாளின் கதம்பம் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா? பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாமே!

மீண்டும் சந்திப்போம்… சிந்திப்போம்…

நட்புடன்

ஆதி வெங்கட்.

24 கருத்துகள்:

 1. அரங்கன் முகம் ஜூம் செய்து எடுத்திருக்கலாமோ? ஆழ்வார் நன்றாகத் தெரிகிறார். இவை எல்லாம் முகநூலிலும் பார்த்தேன், ரசித்தேன், இங்கேயும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிற்க இடம் இல்லா அளவிற்குக் கூட்டம் அதிகம். அலைபேசியில் இதை விட அதிகம் ஜூம் செய்ய முடியவில்லை கீதாம்மா...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. சுவையான கதம்பம்.  பின்னே, கேக், குக்கீஸ் சாக்லேட் எல்லாம் இருந்தால் சுவைக்காதா?!!   ரோஷ்ணியின் திறமை வளர்ந்துகொண்டே போகிறது.  வாழ்த்துகள்.அரங்கன் தரிசனத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கதம்பம் பதிவின் அனைத்துப் பகுதிகளும் உங்களுக்குப் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. கேக், குக்கீஸ் , சாக்லேட் எல்லாம் இனிக்கிறது ...

  கோதுமை மாவில் எங்கள் வீட்டின் ஓவனில் செய்யும் கேக் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் ..


  நம்பெருமாளை ரத்னங்கள் கொண்ட அங்கியில் தரிசித்து வந்தோம்....ஆஹா அழகு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுப்ரேம் ஜி.

   நீக்கு
 4. கேக் மலபார் கிண்ணத்து அப்பம் போல் இருந்தது. ஆனால் கிண்ணத்து அப்பம் அரிசிமாவு பால் வெல்லம் அல்லது கருப்பட்டி இவைகளால் செய்யப்படுவது இது நாம ஊர் வெண்ணை புட்டு போன்றது. ஸ்ட்ராபெர்ரி வடை, பட்டர் ஸ்கேட்ச் வடை மாங்காய் வடை என்று தலைப்பில் செய்முறையை யூடியூபில் வெளியிடுங்கள். பார்வையாளர்கள் நிறைய வருவார்கள். Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஜி.

   நீக்கு
 5. தற்போது உங்கள் தளத்து தலைப்பில் கூகிள் விளம்பரமும் சேர்ந்து வருகிறதே! ஏன்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கூகிள் ஆட்சென்ஸ் பயன்பாடு இப்போது இருக்கிறது என் தளத்தில். அதனால் இப்படி விளம்பரம் வருகிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஜி!.

   நீக்கு
 6. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
 7. கதம்பம் மிக அருமை.
  முகநூலில் எல்லாம் ரசித்தேன். இங்கேயும் ரசித்தேன்.
  ரங்கனை நேற்று பொதிகையில் தரிசனம் செய்தேன். உங்கள் பதிவிலும் தரிசனம் செய்தேன்.
  ரோஷ்ணியின் ஓவியம் அருமை. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 8. கதம்பம் தொடக்க வாசகம் மிகவும் நன்றாக இருந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி!

   நீக்கு
 9. அன்பு வெங்கட்,
  முதலில் நன்றி.
  நீங்களும் ஸ்ரீரங்கம் வந்திருந்தீர்களா.
  மிக அருமை. சுவைக்க கேக் வகைகள், பார்க்க
  ரோஷ்ணியின் தேவதை,
  பக்திக்கு அரங்கன் என்று பல் சுவை.ஆதிக்கும் ரோஷ்ணிக்கும் அன்பு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திருவரங்கம் வரலைம்மா... ஆதியும் ரோஷ்ணியும் மட்டும் சென்று வந்தார்கள்...

   தங்கள் அன்பிற்கு நன்றி வல்லிம்மா...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 10. பதில்கள்
  1. கதம்பம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 11. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி மேடம்.

   நீக்கு
 12. இனிப்புகளுடன் தித்திக்கும் கதம்பம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....