நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு
வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.
பொய் சொல்லித் தப்பிக்க நினைக்காதே. உண்மையைச் சொல்லி மாட்டிக்
கொள். ஏனென்றால் பொய் வாழ விடாது. உண்மை சாகவிடாது – விவேகானந்தர்.
லூசும்
லூசும் - 9 ஃபிப்ரவரி 2020:
முகநூல் இற்றைகள்:
1) இன்று கடைத்தெருவில் சுற்றிக் கொண்டிருந்த காதல் ஜோடிகளின்
உரையாடல் :)
”ஏய் லூசு??
இது வேணும்னு சொன்னியே!!
ஆமாண்டா லூசு!”
ஹா ஹா ஹா ( இது எதற்காகவோ!!?? )
2) பூ விற்றுக் கொண்டிருந்த அம்மா - அவர் பின்னே பழைய தெர்மக்கோல் பெட்டி ஒன்றுக்குள் இரு
சின்னஞ்சிறு சிறுவர்கள்! அந்த பெட்டிக்குள் இருப்பதனால் அவர்களுக்கு கிடைத்த மகிழ்ச்சியை
நமக்கும் தொற்ற வைத்துக் கொண்டிருந்தனர் :) ஒரு ராஜாங்கத்தைப் பிடித்து விட்ட பெருமிதம்
:)
3) பேருந்து முழுதும் எங்கெங்கு காணினும் காதல் ஜோடிகள்.
அவர்கள் எதற்கு சிரிக்கிறார்கள் என்றே தெரியாத மனநிலையில் சில பெரியோர்கள் :) பேருந்து
நிறுத்தத்தின் அருகில் ஒரு வீட்டின் வாசலில் மரமெங்கும் பூத்துக் குலுங்கிய சப்போட்டா
பழங்களும், நாரத்தங்காய்களும்!
4) எங்கள் குடியிருப்பில் பொதுத் தேர்வு எழுதும் மாணாக்கர்களுக்காக
ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டுப் பிரார்த்தனை.
இவை எல்லாவற்றையும் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும்
பரம்பொருள்!
உலக
ரேடியோ தினம் - 13 ஃபிப்ரவரி 2020:
வந்தே மாதரத்தில் ஆரம்பித்து சுப்ரபாதம்,
பக்தி பாடல்கள், தழைச் சத்து மணிச்சத்து, சாம்பல் சத்து என்று வேளாண் செய்திகள், நாட்டு
நடப்புகள், இன்னிசை பாடல்கள் என்று நம் அன்றாட வாழ்வில் ஒன்றான ரேடியோவுக்கான தினமாம்
இன்று.
சிறுவயது முதலே எங்களுக்கான பொழுதுபோக்குகளில்
ரேடியோ முக்கிய பங்கு வகித்திருக்கிறது. பள்ளிக்கு கிளம்பும் வரை வீட்டிலும், போகும்
வழியில் எல்லாம் எங்கெங்கு பாடல்கள் ஒலிக்கிறதோ கேட்டுக் கொண்டே செல்வேன் :)
கோவையின் அவினாசி சாலையில் தான் என் பள்ளி
நாட்கள் முழுதும். கல்லூரி நாட்களிலும் அவினாசி சாலை வரை நடந்தே சென்று அங்கிருந்து
2ஆம் நம்பர் பேருந்து பிடித்து செல்வேன். அவினாசி சாலையில் உள்ள B.J Bakery-இல் எப்போதும்
பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கும். அதைக் கேட்டுக் கொண்டே செல்வது அப்போதைய என் வழக்கம்
:)
இன்றும் FM கேட்பதில் தான் என் அன்றைய நாளே
துவங்குகிறது. காலையில் எழுந்ததும் அலைபேசியில் Hello FM சன்னமாக வைத்து விட்டுத் தான்
வேலைகளை துவக்குகிறேன். வியாழனான இன்று காலை ஒலித்த "ஸ்கந்த குரு கவசத்தை"
தெரிந்த வரை கூடவே சொல்லிக் கொண்டே பாலை அடுப்பில் வைத்தேன். அதில் ஒலிக்கும் செய்திகளும்,
பாடல்களும், நல்லது நடக்கும்! நல்லதே நடக்கும்! போன்றவைகளும் தான் எனக்கு புத்துணர்வையும்,
உற்சாகத்தையும் தருகின்றன.
உங்களுக்கும் ரேடியோவுக்குமான விஷயங்களை
இங்கு பகிருங்களேன்.
காதலர்
தினம் – 14 ஃபிப்ரவரி 2020
என்ன! சாப்பிடறயா?
ம்ம்ம்ம்.
இன்னிக்கு ஸ்பெஷல் டேவாமே! என்ன பண்ணிருக்க?
ம்ம். தயிர்சாதம் & மஞ்சள் ஊறுகாய்! ஸ்ஸ்ஸ்ஸ்! காரம்
தாங்கல!
ஓ!!! சூப்பரா செஞ்சிருக்கியே!
என்ன!! இதுவா ஸ்பெஷல்!!
ஆமாம்.
சரி! அங்க என்ன ஸ்பெஷல்?
அதுவா!!! நாலு பேர துரத்தறேன்!!
நடுவில உன்கிட்ட பேசலாமேன்னு தான் கூப்பிட்டேன் :)
எதுக்கு?
ப்ரோபஸ் பண்ணத் தான் :)
ஹா..ஹா..ஹா..ஹா..ஹா.
என்ன! எங்க ஸ்பெஷல் எப்படியிருக்கு???
கிராமம்
நோக்கி ஒரு பயணம் – 15 ஃபிப்ரவரி 2020:
"ஆவாரம்பூவு ஆறேழு நாளா, நீ போகும் பாதையில்.
'பொன்னான மனசே பூவான மனசே வெக்காதே பொண்ணு மேல ஆசை' (
டி.அர் பாட்டோ இது??? 'என்னவர்' என்னை வெறுப்பேத்த அடிக்கடி பாடுவார் :)
அட! ஆச மச்சான் வாங்கித் தந்த மல்லிகைப்பூ.
கிராமத்தை நோக்கிய இன்றைய பேருந்துப் பயணத்தில் கேட்ட
பாடல்கள்:)
ஓட்டுனரும் கூடவே சத்தமாகவே பாடிக் கொண்டே வந்தார் :)
வழி நெடுகிலும் சாலையின் இருபுறமும் குடை போன்று காட்சியளித்த
புளியமரங்களை பார்த்த போது, பஞ்சபூத சக்திகளையும் தன்னுள்ளே வைத்திருக்கும் ஆற்றல்
மிக்க சக்தி கொண்ட மரம் என்று அத்திமலைத்தேவனில் வாசித்தது நினைவுக்கு வந்தது.
கிராமத்தில் ஒரு திருமண மண்டபத்தின் வாசலில் பார்த்த பதாகையில்
மாப்பிள்ளையின் தோளில் கை போட்டுக் கொண்டிருந்தவரை பார்த்ததும் இன்ப அதிர்ச்சி :) அட!!!!
இவர் எப்போது இங்கே வந்தார்!
இப்போது டைப் பண்ணும் போதும் சிரிச்சு மாளலை :)
அவர் யாரா??? 'தல' தோனி!!!
ஆதியின்
அடுக்களையிலிருந்து… - பாலக் பனீர் – 16 ஃபிப்ரவரி 2020:
இன்னிக்கு நம்ம வீட்டில் வட இந்திய சாப்பாடு தான்..:)
தவா ரொட்டி, பாலக் பனீர் சப்ஜி, வெங்காயம் முள்ளங்கி சாலட்!!
வாரச் சந்தையில் வாங்கிய பாலக் இது..பனீர் வீட்டில் தயாரித்தது..
பாலக் பனீர் செய்முறை என்னுடைய வலைப்பூவில் 2011ல் போட்டிருக்கேன்..
இதோ இணைப்பு - https://kovai2delhi.blogspot.com/2011/01/popeye.html
வாங்க சாப்பிடலாம்!
பின்னோக்கிப்
பார்க்கலாம் வாங்க – 18 ஃபிப்ரவரி 2013
இதே நாளில் 2013-ஆம் வருடம் எழுதிய கேரளச் சுற்றுலாத்
தொடரின் ஆறாம் பகுதி – பள்ளம், மேடு, சம்மந்தி… படிக்காதவர்கள் படிக்கலாமே!
என்ன நண்பர்களே, இந்த நாளின் கதம்பம் பதிவு உங்களுக்குப்
பிடித்திருந்ததா? பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாமே!
மீண்டும் சந்திப்போம்… சிந்திப்போம்…
நட்புடன்
ஆதி வெங்கட்.
வாசகம் சுவாரசியம். உண்மை. பொய்யை நினைவு வைத்துக்கொள்ளமுடியாது, உண்மையை மறக்க முடியாது என்பதுபோல!
பதிலளிநீக்குவாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
இந்தப் பதிவின் சிலபகுதிகளை ஃபேஸ்புக்கிலேயே படித்திருக்கிறேன். இங்கும் ரசித்தேன்.
பதிலளிநீக்குவெங்கட்... அந்த பாடலை பாடி எனக்கு அனுப்புங்களேன்... நானும் கேட்கிறேன்! ஹா...ஹா... ஹா....
முகநூலிலும் இங்கேயும் படித்து ரசித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.
நீக்குபாடலை பாடி அனுப்பவா? ஹாஹா... என் குரல் கேட்டு பயப்பட எதற்கு ஆசைப்படுகிறீர்கள் ஸ்ரீராம்! ஹாஹா...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ஒவ்வொரு பகுதியும் ரசித்தேன்... சிரித்தேன்...
பதிலளிநீக்குதொகுப்பின் அனைத்து பகுதிகளையும் ரசித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நல்லது. வானொலி தினத்தை வானொலியில் பணிபுரிந்து கொண்டாடுவதில் மகிழ்ச்சி. இதேவேளை, வானொலி தினத்தில் இலங்கை வானொலி விருது விழாவில் நான் பணிபுரியும் வானொலி ஐந்து விருதுகளை வெற்றி கொண்டமை மகிழ்ச்சியளித்தது.
பதிலளிநீக்குதமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
----- முதல் ஓலை பதிவில் பரீட்சார்த்தமாக ஆறு வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தங்களது தளத்தின் 10 பதிவுகள் சந்தித்தபோது சிந்திக்கவைத்த 10 பதிவுகள் (17.02.2020) எனும் தலைப்பில் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.
ஆஹா... நீங்கள் பணிபுரியும் வானொலி விருதுகளைப் பெற்றது அறிந்து மகிழ்ச்சி சிகரம் பாரதி.
நீக்குவலை ஓலை - பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அருமை இரசித்தேன்...ஊரில் செய்தி கேட்க எனவே பஞ்சாயத்து போர்டு ஆபீஸ் வரும் கிராம மக்களையும் செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசாமி என்கிற கட்டைக் குரலும் தங்கள் ரேடியோ தினச் செய்தியைப் படிக்க வந்து போனது..சுவாரஸ்யமான கதம்பம்..வாழ்த்துகள்..
பதிலளிநீக்குரேடியோ என்றாலே நிச்சயம் எனக்கும் சரோஜ் நாராயணசாமி அவர்களின் குரல் நினைவுக்கு வரும் ரமணி ஜி!
நீக்குகதம்பத்தின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
கதம்பம் அருமை சகோ
பதிலளிநீக்குகதம்பம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
சுவையான கதம்பம்...
பதிலளிநீக்குகதம்பம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அனு ப்ரேம் ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
சுவாரஸ்யமான கதம்பம்.
பதிலளிநீக்குகதம்பம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ராமலக்ஷ்மி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அன்றாடம் நான் தெருவில் சந்திக்கும் பலர் பேசும் வித்தியாசமான பேச்சுக்களை தொகுக்க எண்ணியதுண்டு. உங்கள் எழுத்து அதனை நினைவு படுத்தியது.
பதிலளிநீக்குஆஹா... நீங்களும் தொகுத்து எழுதுங்கள் ஜோதிஜி. உங்களுக்கு பலரைச் சந்திக்கும் வாய்ப்பு இருப்பதால் உங்கள் அனுபவங்கள் ஸ்வாரஸ்யமாகவே இருக்கும்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ரசித்தேன் ஐயா
பதிலளிநீக்குநன்றி
பதிவினை நீங்களும் ரசித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நல்லதொரு வாசகம்
பதிலளிநீக்குகதம்பம் அருமை.
முகநூலில் படித்தது இங்கும் படித்தேன்.
முகநூலிலும் இங்கேயும் படித்து ரசித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
கண்ணன் அழகு.
பதிலளிநீக்குகண்ணன் அழகே!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.
சுவையான பதிவு! காதலர் தினத்தில் கண்ணனை தனியாக போட்டிருக்காமல், ராதையோடு சேர்த்து போட்டிருக்கலாம். லூசுப்பெண்ணே, லூசுப்பெண்ணே லூசுப்பெண்ணே, லூசுப்பையன் உம்மேலதான் லூசா சுத்தறான் என்று ஒரு பாட்டு உண்டு. அது சரி நீங்கள் ஏன் காதலர்கள் பேசுவதையெல்லாம் ஒட்டு கேட்கிறீர்கள்? ஹாஹா!
பதிலளிநீக்குகாதலர் தினத்திற்கு முன்பே முகநூலில் வெளியிட்ட படம் மா... கண்ணனும் ராதையும் சேர்ந்த படம் வெளியிட்டு விடலாம் பானும்மா! அடுத்த காதலர் தினத்தில்! ஹாஹா...
நீக்குகாதலர்கள் பேசுவதையெல்லாம் எதற்கு ஒட்டு கேட்கிறீர்கள் - ஹாஹா நல்ல கேள்வி :)
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
விவேகானந்தரின் பொன்மொழியோடுத் தொடங்கியக் கதம்பம் மணமோ மணம். சுவையான பன்னீரோடு பிரமாதம். உங்கள் நகைச்சுவை உணர்வு அருமை அண்ணா.
பதிலளிநீக்குகதம்பத்தின் மணம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கிரேஸ்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
என்னுடைய வானொலி நினைவுகள்- இலங்கை வானொலியில் பாடல்கள் கேட்பது, பிறகு இன்னொரு விஷயம் நான் ஆரம்பப் பள்ளியில் படிக்கும் பொழுது காலை 8.20 மணிக்கு நியூஸ் ரெட் பை ராஜாராம் என்று ஒலிக்கும் பொழுது சரியாக வீட்டை விட்டுப் பள்ளிக்கு கிளம்பியது எப்பொழுதும் நினைவில்.
பதிலளிநீக்குஉங்கள் வானொலி நினைவுகளையும் முடிந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள் கிரேஸ்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
லூசு லூசு..இத்தகைய உரையாடல்கள் திரைப்படங்களில் அதிகமாக வருகின்றன. வாடா போடா, வாடி போடி என்பன போன்ற சொற்களும் மிகுதியாக காணப்படுகின்றன. நாகரிகம் என்பதைத் தொலைத்துவிட்டு எங்கோ போகிறோம் என இவர்கள் உணரவில்லை.
பதிலளிநீக்குநாகரிகம் என்பதைத் தொலைத்துவிட்டு - உண்மை தான் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ஆதியின் பதிவு மிக அழகு.
பதிலளிநீக்குநீங்கள் தரும் ஒவ்வொரு வாசகமும் ஒவ்வொரு அனுபவத்தைக் கொடுக்கின்றன.
காதலர் தின உரையாடல் .நல்ல சுவை.
சப்பாத்தி, பனீர், சாலட் மிக அருமை.
தல தோனியைப் பார்த்து இத்தனை சந்தோஷமா. ஆஹா.
வானொலி என்னுடைய கையை விட்டு நகர்ந்ததே இல்லை.
என் இனிய தோழி. புத்தகங்களைப்போலவே
இசை இல்லாமல் இருக்க முடியாது.
இப்பொழுதும் கணினியில் வானொலி இணைத்துக் கேட்டுக் கொண்டுதான் எழுத்து.
வானொலி - சிறுவயதில் நிறைய கேட்டதுண்டு. இப்போதெல்லாம் யூட்யூப் தான்! மடிக்கணினியில் பாடல்களை ஓடவிட்டு வேலை நடக்கிறது!
நீக்குகதம்பம் பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
சாதாரணமாக பாலக் கீரையை பிளான்ச் பண்ணி உபயோகிப்பார்கள். Blanch பண்ணுவதால் பச்சை நிறம் மாறாமல் இருக்கும். பாலக் பன்னீரில் சிட்டிகை சீனியும் சேர்ப்பார்கள். நீங்கள் செய்தது கறுத்து விட்டது.
பதிலளிநீக்குJayakumar
பாலக்கை ப்ளாஞ்ச் செய்யவேண்டாம்னு நினைக்கிறேன்.. மஞ்சள் பொடி சேர்த்திருப்பதால் நிறம் இப்படி வந்திருக்க வாய்ப்புகள் உண்டு. பாலக்கை நறுக்கி வேகவிட்டு மசித்தாலும் நிறம் மாறுவது இல்லை. பாலக்கை வதக்கிவிட்டுச் சிலர் மிக்சியில் போட்டு அரைப்பார்கள். அப்போதும் நிறம் மாறாது. குக்கரில் வேக வைத்தால் நிறம் மாறும். ஆனால் எல்லாக் கீரை வகைகளையும் குக்கரில் வேக வைக்காமல் திறந்த பாத்திரங்களில் வைத்து வேகவைக்க வேண்டும். அதுவே நல்ல முறை.
நீக்குஉங்களுக்கான பதில் கீழே தந்திருக்கிறார் ஜெயக்குமார் சந்திரசேகரன் ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
குக்கரில் வேக வைக்காமல் திறந்த பாத்திரங்களில் வைத்து வேக வைப்பதே நல்லது - இங்கே கடாயில் தான் செய்கிறார்கள். ஆனால் நேரப் பற்றாக்குறை என குக்கரில் வேக வைப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருக்கிறது என்பதையும் ஒத்துக் கொள்ள வேண்டியது தான் கீதாம்மா...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அருமையான வாசகங்கள். உண்மை பேசினாலும் பலருக்குப் பிடிப்பதில்லை என்பதும் உண்மை. ஆனாலும் உண்மையைத் தான் சொல்ல வேண்டும். இவை எல்லாம் முகநூலிலும் பார்த்து ரசித்தேன். எல்லாமே நன்றாக இருக்கின்றன.
பதிலளிநீக்குவாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாம்மா...
நீக்குகதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
கீரையை ஆவியில் ஐந்து நிமிடம் வைத்தெடுத்து அரைத்து சேர்த்திருக்கிறேன்..பச்சையாகத் தான் இருந்தது..ஃபோட்டோ எடுத்ததில் தான் கறுத்துள்ளதாக தெரிகிறது என்று நினைக்கிறேன்..
பதிலளிநீக்குசில சமயம் புகைப்படங்களில் நிறங்கள் மாறுபட்டே தெரிகிறது. எனக்கும் இந்த அனுபவம் உண்டு. தோசைப் படம் போட்டால் நேரில் கருகல், சிவப்பு இல்லாதபோதும் படங்களில் தெரியும். :)
நீக்குஃபோட்டோவில் கறுத்துப் போவது - சில சமயம் அப்படித்தான்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.
பதிலளிநீக்குபேருந்து பயணம் பாடல்கள் ரசனை.
பதிலளிநீக்குகதம்பம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.
நீக்கு