அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் துவங்கலாம்.
தடம் பார்த்து நடப்பவன் மனிதன். தடம் பதித்து நடப்பவன் மாமனிதன் – ஃபிடல் காஸ்ட்ரோ.
மனிதனுக்கும் மாமனிதனுக்கும் உள்ள வித்தியாசம் சொல்லும் ஃபிடல் காஸ்ட்ரோ அவர்களின் வாசகம் உங்களுக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். சரி இன்றைய பதிவிற்கு வரலாம். பதிவர் இராய செல்லப்பா அவர்களைப் பற்றி நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. நல்லதொரு பதிவர் – சிறப்பான சிறுகதைகளையும் கவிதைகளையும், பதிவுகளையும் எழுதி தன் வலைப்பக்கத்தில் எழுதி வருபவர். நீங்கள் அறியாமல் இருக்க முடியாது. பிரபல பதிவர் - மிகச் சிறப்பான பதிவுகளை எழுதக் கூடியவர். இது வரை அமேசான் தளத்தில் 4 புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. சில புத்தகங்கள் பதிப்பகங்கள் வாயிலாகவும் வெளி வந்திருக்கின்றன. அப்படி அமேசான் தளத்தில் வெளி வந்த ஒரு கவிதைத் தொகுப்பு பற்றியே இன்று நாம் பார்க்கப் போகிறோம்.
தலைநகர் தில்லியில் நான் வருவதற்கு முன்னே இங்கே வசித்து, வங்கியில் பணிபுரிந்தவர். வங்கி நேரம் போக மற்ற நேரங்களில் தில்லியின் தமிழ்ச் சங்க நிகழ்ச்சிகளில் பங்கேற்று, கவியரங்கங்களைத் தலைமையேற்று நடத்தியவர். தலைநகர் தில்லியிலும், நியூ ஜெர்சியிலும் எழுதிய கவிதைகளில் 20 கவிதைகளைத் தொகுத்து கிண்டில் நூலாக அமேசான் தளத்தில் பதிவேற்றம் செய்திருக்கிறார். சமீபத்தில் அவரது நூலை இலவசமாகத் தரவிறக்கம் செய்யும் வாய்ப்பு கிடைக்க, தரவிறக்கம் செய்து கொண்டேன். விலையும் அதிகமில்லை – ரூபாய் 49/- மட்டுமே! கவியரங்கத்திலும், வானொலியிலும் வாசித்த கவிதைகளும், அவரது இணையப் பக்கத்தில் வந்த கவிதைகளில் சிலவும் இங்கே தொகுத்து வைத்திருக்கிறார். பெரும்பாலான கவிதைகள் மரபுக் கவிதைகள் என்றாலும் சுவையாக இருக்கும் கவிதைகள். இருபது கவிதைகளில் எனக்குப் பிடித்த சில கவிதைகளாக “கவிதா, இந்தா கணையாழி”, ”கல்லில் வடித்த ஜடம்”, “நாற்பதாகி விட்டதா?” “அவளுக்கொரு கவிதை” மற்றும் “அவளின் பதில் கவிதை” ஆகியவற்றைச் சொல்லலாம்!
எல்லா கவிதைகளும் சிறப்பான கவிதைகள் என்றாலும், மிகவும் பிடித்த சில கவிதைகளிலிருந்து மேற்கோள் காட்டும்படியாக சில வரிகள் மட்டுமே இப்பதிவில்! முழுக்கவிதை நூலில் படித்து ரசிக்கலாமே!
கல்லில் வடித்த ஜடம்…
…
“வறுமை கொடிது இளமையி லென்று
வாசகம் சொல்கிறதே, உன்
வளமையில் கொஞ்சம் பங்கீ டாக
வழங்குதல் கூடாதா?
சின்னச் சின்ன உதவியென் றாலும்
செய்வது நன்மை தரும்
சீக்கிரம் செய்தால் யாருக் கேனும்
நிச்சயம் வாழ்வு வரும்!
காலம் உனக்கென நிற்பதில்லை, அது
காற்றென கரைந்து விடும்
கண்டும் காணாமல் நிற்பாயேல், நீ
கல்லில் வடித்த ஜடம்!”
நாற்பதாகி விட்டதா?
”சோம்பலிலே திரிந்து மனம்
சோர்ந்தழும் வீண் மனிதா,
தூங்கியது போதும் இனி
துள்ளி எழு, விரைவாய்!
இறுதி மூன்று ஓவர்களில்
எழுபது ரன் வேண்டும்-
என்பதுபோல் வேகமுடன்
இயங்கிடவே வா வா!”
அவளுக்கொரு கவிதை
என் பெற்றோரும்
உன் பெற்றோரும்
பார்த்தனர்
நானும் நீயும்
நாமானோம்
ஆனாலும்
நீ நீயாக இருந்தாய்
நான் நானாக இருந்தேன்”
அவளின் பதில் கவிதை
என்னின் நானை
நான் தெரியாதவள்
உன்னின் நானை
நீ புரியாதவன்
உன்னிடம் எனக்குப் பிடித்ததில்
உன் மீசையும் ஒன்று
என்னிடம் பிடித்ததைச்
சொன்னதுண்டா
இன்னதென்று?
மேற்கோள் காட்டியிருக்கும் வரிகள் அந்தத் தலைப்பில் வெளிவந்த கவிதையின் சில வரிகள் மட்டுமே என்பதை மீண்டும் சொல்லி விடுகிறேன். நீங்களும் தரவிறக்கம் செய்து வாசித்துப் பார்க்கலாமே! தரவிறக்கம் செய்ய கீழே உள்ள சுட்டியைக் கிளிக்கலாம்!
இந்த நாளின் கிண்டில் வாசிப்பு பதிவு உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். உங்கள் எண்ணங்களையும் கருத்துகளையும் பின்னூட்டம் வழியே பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி. மீண்டும் வேறொரு பதிவின் வழி சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட்
புது தில்லியிலிருந்து…
நண்பர் திரு.இராய செல்லப்பா அவர்கள் நல்ல மனிதரும்கூட சென்னையில் சந்தித்து இருக்கிறேன். அவருக்கு எமது வாழ்த்துகளும்...
பதிலளிநீக்குஅவளுக்கொரு கவிதை ஆயிரம் அர்த்தங்களை சொல்கிறது.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.
நீக்கு// இறுதி மூன்று ஓவர்களில்
பதிலளிநீக்குஎழுபது ரன் வேண்டும் //
அருமை...!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குஅவருடைய எழுத்தை ரசிப்பவர்களின் நானும் ஒருவன். அவருக்கு வாழ்த்துகள். பகிர்ந்தஉங்களுக்கு நன்றி.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குபகிர்ந்த கவிதைகள் மிக அருமை.
பதிலளிநீக்குதிரு .இராய செல்லப்பா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
உங்களுக்கு நன்றி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...
நீக்குமிக அருமையான கவிதைகள்.கவிக்கு என் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.
நீக்குVery nice. Fidel castro quote very good.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி மேடம்.
நீக்குஸாரைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா? சிறப்பான பகிர்வு.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குஅவருடைய எழுத்துக்களின் ரசிகன் நான்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குதிரு ராய.செல்லப்பா அவர்களைப் பார்த்ததில்லை என்றாலும் திரு கிருஷ்ணமூர்த்தி பற்றி அவர் தொகுத்த தொகுப்பைத் தான் நான் முன்னர் விமரிசனம் செய்து எழுதினேன். அவர் மனைவிக்குக் கிருஷ்ணமூர்த்தி தாய்மாமா என்றும் கேள்விப் பட்டேன். அவருடைய பதிவுகளையும் வாசித்திருக்கிறேன். கவிதைகள் நன்றாக உள்ளன. விமரிசனம் செய்த, அறிமுகம் செய்த உங்களுக்கும் புத்தக வெளியீட்டுக்காக அவருக்கும் வாழ்த்துகள், பாராட்டுகள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...
நீக்குசெல்லப்பாவின் எழுத்துகளை நான் வாசித்திருக்கிறேன் நல்ல எழுத்தாளர் கூடவே ந் அல்ல மனிதர் புஸ்தகாவில் நான் வெளியிட்டிருந்த மின் நூல்கள் அமேசான் கிண்டிலிலும் வ்ருகிறதாமே
பதிலளிநீக்குஆமாம் ஜி.எம்.பி. ஐயா. அமேசான் கிண்டில் வழியே உங்கள் நூல்களும் கிடைக்கின்றன.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.