செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

கதம்பம் – வரலாறு கசக்குமா – துர்கா – பதிவர் சந்திப்பு – மோர்க்களி – புளி அவல்



நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

எல்லோரும் உலகத்தை எப்படி மாற்ற வேண்டும் என்று எண்ணுகிறார்களே தவிர, ஒருவரும் தன்னை எப்படி மாற்றிக் கொள்ள வேண்டும் என எண்ணுவதில்லை – லியோ டால்ஸ்டாய்.
 
தற்போதைய வாசிப்பில் – அத்திமலைத் தேவன் பகுதி 1 - 29 ஜனவரி 2020:



பொதுவாக பள்ளிநாட்களில் வரலாற்று வகுப்பு என்றால் சற்றே தூக்கம் கண்ணைக் கட்டுவது நம் எல்லோருக்குமே இயல்பு தான் இல்லையா! ஆனால் நம் வரலாறை ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். மறைக்கப்பட்ட உண்மைகளையும், நடந்த அநீதிகளையும், மர்மங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

என் கையில் தற்போது ஒரு பொக்கிஷம் கிடைத்திருக்கிறது. வரலாற்றுச் சான்றுகளுடன் வாசிக்கும் போது ஸ்வாரஸ்யம் கூடுகின்றது. தொய்வில்லாத நடை. தற்சமயம் வாசிப்பில், காலச்சக்ரம் நரசிம்மா அவர்கள் எழுதிய அத்திமலைத் தேவன் – முதலாம் பகுதி.

அத்திமரத்துடனான தொடர்பு மகத, நந்த சாம்ராஜ்யங்களைக் கடந்து மெளரிய வம்சத்தை தோற்றுவித்திருக்கிறது. ராஜதந்திரி கவுடில்யனின் மதியால்! சந்திரகுப்தனுக்கு துர்தராவின் மீதான தீராக் காதல்!!!

மகளும் என்னுடன் போட்டி போட்டுக் கொண்டு வாசிக்கிறாள். நான் புத்தகத்தை கீழே வைக்கும் நொடியில் அவள் கைகளில் அத்திமலையான்!!

சரித்திர உலகில் சஞ்சரிக்கிறோம் இருவரும். கதையைப் பற்றி விவாதிக்கிறோம். தொடர்கிறது வாசிப்பனுபவம்!

ரோஷ்ணி கார்னர் - ஓவியம் - 31 ஜனவரி 2020:

மகள் தன் தோழி ஒருவருக்காக வரைந்து கொடுத்த துர்கா!



பதிவர் சந்திப்பு – 2 ஃபிப்ரவரி 2020

ஆதியும், லாஜியும் சாரி!! ராஜியும் சந்தித்துக் கொண்ட திடீர் சந்திப்பு!!

”உங்க ஊருக்கு வந்திருக்கேன்!! பெருமாளை பார்த்துட்டு வரேன்!!” என்று அலைபேசியில் சொன்னார்.

அவரது குடும்ப உறுப்பினர்கள் பிஸியாகி விட, ”என் ஃப்ரெண்டை பார்த்துட்டு வரேன்!” என்று கிளம்பி வந்திருந்தார் ராஜி வெங்கட். இந்த பக்கத்து வெங்கட்டையும், அந்த பக்கத்து வெங்கட்டையும் பேச்சில் இழுக்காமல் நிறைவு பெறுமா எங்கள் உரையாடல் :) சிறிது நேரச் சந்திப்பு என்றாலும் மகிழ்வாக இருந்தது இந்த சந்திப்பு. அடுத்த முறை நிதானமாக வந்து, இங்கே அதிக நேரத்தை செலவிட அரங்கன் அருள் புரியட்டும்.

ஆதியின் அடுக்களையிலிருந்து… – புளி அவல் – 4 ஃபிப்ரவரி 2020:



முதன்முறையாக செய்துள்ளேன். செய்வது எளிது. ஏறக்குறைய புளி சாதத்தை சுவைத்தது போல் இருந்தது. அரிசி உணவை தவிர்க்க நினைப்பவர்களுக்கு ஏற்ற உணவு. விரத நாட்களுக்கும், லஞ்ச் பாக்ஸுக்கும் ஏற்றது. சட்டென்று செய்திடலாம். செய்து பாருங்களேன்.

எப்படி செய்வது? இதோ இணைப்பு.

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு – 5 ஃபிப்ரவரி 2020:



குடமுழுக்கு பற்றிய தகவல்களும், காணொளிகளும் பார்த்துக் கொண்டிருந்தேன்.  மாமன்னர் ராஜராஜன்! திட்ட மேலாண்மை, நீர் மேலாண்மை, சிற்பக்கலை, கட்டிடக்கலை, கொடை, கல்வெட்டுகள், தமிழ்ப்பற்று, இறைப்பற்று என்று எத்தனை எத்தனை!! வியப்பின் உச்சத்திற்கு செல்கிறேன்.

ஆதியின் அடுக்களையிலிருந்து… - மோர்க்களி – 6 ஃபிப்ரவரி 2020:



பாட்டி காலத்து சிற்றுண்டி இது. செய்வது சுலபம். சுவையோ பிரமாதம்!

சென்ற வாரம் தான் மிஷினுக்குச் சென்று சாம்பார் பொடியும், அரிசிமாவும் அரைத்து வந்தேன். அரிசிமாவு பெரும்பாலும் கோலம் போடுவதற்குத் தான் என்றாலும் இது போல் என்றைக்காவது உதவும். எல்லோரும் எடுத்துக் கொள்ளலாமே!

எப்படி செய்வது? இணைப்பு இதோ.

என்ன நண்பர்களே, இந்த நாளின் கதம்பம் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா? பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாமே!

மீண்டும் சந்திப்போம்… சிந்திப்போம்…

நட்புடன்

ஆதி வெங்கட்.

18 கருத்துகள்:

  1. கதம்பம் அருமை சகோ
    வாசித்து விட்டு விமர்சனம் எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. நல்லதொரு கதம்பம். முகநூலிலும் பார்த்தேன் என்றாலும் மணம் குறையவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மணம் குறையா கதம்பம் - மகிழ்ச்சி கீதாம்மா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. மகள் வரைந்த ஓவியம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. முகநூலில் பார்த்தாலும் இங்கும் பார்த்தேன், படித்தேன். ரோஷ்ணியின் ஓவியம் அழகு.
    மோர்களி படம் மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முகநூலிலும் இங்கேயும் ரசித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. அத்திமலைத் தேவன்...அத்தி வரதர் பற்றிய வரலாற்று கதை என அறித்தேன்...

    திருவரங்கன் உலா வாசித்து இருக்கிறீர்களா.. நம் பெருமாளின் வரலாற்று செய்திகள்...இப்பொழுது எனது வாசிப்பில்...

    ரோஷ்ணி ஓவியம் வெகு அழகு...

    மோர்களி நல்லா இருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருவரங்கன் உலா நான் இதுவரை வாசித்ததில்லை. வாசிக்க விருப்பம் வந்திருக்கிறது அனுப்ரேம் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. கதம்பம் ரசனையாக இருந்தது. மகளுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரசனையான கதம்பம் - மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. கதம்பச்சமையல் ருசியோ ருசி...சுவைத்து மகிழ்ந்தோம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பத்தினை நீங்களும் சுவைத்ததில் மகிழ்ச்சி ரமணி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. அ ம தே பற்றி பேஸ்புக்கிலும் படித்தேன்.  வாசகம் ரசித்தேன்.  ரோஷ்ணியின் துர்க்கா சற்றே கோபமாக இருக்கிறார் போல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோபமான துர்கா:)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  9. தொகுப்பு அருமை!. மகள் வரைந்த ஓவியம் நன்றாக இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமேஷ்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....