சனி, 15 பிப்ரவரி, 2020

காஃபி வித் கிட்டு – ஆத்மாவின் குரல் - கரோனா - ஹர்யானாவின் இசை - சாண்டா க்ளாஸ் அலைபேசி எண்


காஃபி வித் கிட்டு – பகுதி 54

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:

வெற்றியின் வாசல் தேடி வந்தவர்கள் நிச்சயம் ஆயிரம் தோல்விகளிடம் விலாசம் கேட்டு இருப்பார்கள்.  



இந்த வாரத்தின் செய்தி – கரோனா:

சீனாவில் வூஹான் நகரில் ஆரம்பித்து பல பகுதிகளில் பரவியுள்ள கரோனா (கோவிட்-19) வைரஸ் ஒரு மிகப் பெரிய சவாலாக இருக்கப் போகிறது. 1500 பேர் இதுவரை இறந்து விட்டார்கள் என்று சீன அரசின் கணக்கு சொன்னாலும், மரணம் அடைந்தோர் எண்ணிக்கை நிச்சயம் அதை விட அதிகமாகவே இருக்கும் என மனது சொல்கிறது. அங்கிருந்து தகவல்கள் கசிவதில்லை – அவ்வப்போது வரும் காணொளிகள் மனதைக் கலங்கடிக்கின்றன.  இந்தியாவிலும் சிலர் இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறார்கள் (சமீபத்தில் சீனா சென்று திரும்பியவர்கள்).  பெரிய அளவில் பரவினால் அதில் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும்.  உலகின் பல பகுதிகளிலும் கொஞ்சம் கொஞ்சமாக பரவி வருகிறது என்பதும் மிகப்பெரிய அபாய அறிகுறியாகவும் Chemical Warfare என்று சொல்லக் கூடியதாகவும் இருக்கிறது. வைரஸ் தானே என அலட்சியமாக இருந்துவிடக்கூடாது – அதன் அழிவு மிகக் கொடியதாக இருக்கும் என நினைக்கும்போதே நெஞ்சு பதறுகிறது.  விரைவில் இதற்கான தீர்வு கிடைக்கட்டும்…

இந்த வாரத்தின் இசை – ஹர்யான்வி கிராமிய இசை:

ஹர்யானாவின் இசை கேட்டதுண்டா நீங்கள்? சில பாடல்கள் விரசமாக இருந்தாலும் கிராமிய இசையில் சில பாடல்கள் நன்றாகவே இருக்கும். ஒரு சில பாடகர்கள் ரொம்பவே பிரபலம் – அவர்களது இசை நிகழ்ச்சியில் பணமழை பொழிவது உண்டு – ரசிகர்கள் புதிய நோட்டுகளை அள்ளி இசை/நடனக் கலைஞர்கள் மீது வீசி  எறிவார்கள் – முன்னரும் அப்படி ஒரு நிகழ்வு பற்றி எழுதி இருக்கிறேன். இந்த வாரத்தின் இசையாக ஹரியானாவிலிருந்து! பாருங்களேன்.



தலைநகரக் காட்சி – ஆத்மாவின் குரல்…

ஜீன்ஸ் பேண்ட், மேலே காதியிலிருந்து ஜவஹர் கோட், ஜீன்ஸ் பேண்டுடன் சம்பந்தம் இல்லாத ஃபார்மல் ஷூஸ்! கையில் அலைபேசி! நடையில் தள்ளாட்டம் – கடந்த இரண்டு நாட்களாக இரவு ஒன்பது அளவில் இப்படி ஒரு மனிதரை சந்திக்கிறேன் – சாலையில் தான்! இரண்டு நாட்களிலும் அதே உடை – அதே தள்ளாட்டமான நடை – உள்ளே சென்றிருக்கும் சரக்கின் வேலை – அவர் என்ன செய்வார் பாவம்!  இரண்டு நாளும் தள்ளாட்ட நடையிலும் யாருக்கோ வீடியோ அழைப்பு விடுத்து பேசிக் கொண்டே நடக்கிறார்! முதல் நாள் “இதோ என் கையைப் பார் – ஆசீர்வாதம் தரும் கை! நீ எங்கே இருந்தாலும் என்னோட ஆசீர்வாதம் உனக்கு உண்டு! கொஞ்சம் கஷ்டப்பட்டு எதிர்பக்கத்தில் யார் இருக்கிறார் எனப் பார்க்க, எதிர் புறம் இருக்கும் ஆண் சிரித்துக் கொண்டே இவரது தள்ளாட்டத்தை ரசிக்கிறார்!”  நேற்று பார்த்தபோது அவர் பேசிக் கொண்டு சென்றது – “என்னோட ஆத்மாவின் குரல் கேட்கிறதா உனக்கு! நீ நல்லா இருப்பே என என் ஆத்மா சொல்கிறது! ஆத்மா என்றைக்கும் பொய் சொல்லாது!” 

உள்ளே சென்றிருக்கும் சரக்கு என்னவெல்லாம் பேச வைக்கிறது! ஒழுங்கா வீடு போய் சேரும் வழியைப் பார்க்கலாம் என நான் திரும்பினேன்! அவர் வீடு திரும்பினாரா என்பதை எப்படி உறுதி செய்வது? இன்றைக்கு இரவு சந்திக்க முடிந்தால் கேட்டு விடவேண்டியது தான்! ஹாஹா…

இந்த வாரத்தின் ரசித்த விளம்பரம் – Portuguese Telecom!

சாண்டா க்ளாஸ் அலைபேசி எண் உங்களுக்குக் கிடைத்து விட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்?  ஒரு குழந்தைக்கு அப்படி ஒரு எண்ணை அவரது தந்தை கொடுக்க, பிறகு என்ன நடந்தது என்பதை நீங்களே பாருங்களேன்! நல்லதொரு விளம்பரம். 




இந்த வாரத்தின் கேள்வி - காதல்:

எப்போதுமே எதைப் பேசினாலும், கொஞ்சம் யோசித்து பேசுவது நல்லது! வாயிலிருந்து வெளிவந்து விழுந்த அக்னி தெறிக்கும் வார்த்தைகளை திருப்புதல் இயலாது!

ஒரு பையனுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையிலான சிறந்த இரண்டு வரி கதை எது?

மணி நள்ளிரவு 12:05

"உனக்கு என் மேல காதலோ அக்கறையோ கிடையாது.எனக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல கூட மறந்துட்டேல"வெளியூரில் இருக்கும் தன் காதலனிடம் செல்பேசியில் கத்தினாள் அவள்.

"சரி கோவப்படாத செல்லம் வந்து கதவை திற " அவளுடைய வீட்டு வாசலில் பரிசுபெட்டியோடு நின்று கொண்டிருந்தான் அவன்.

பின்னோக்கிப் பார்க்கலாம் வாங்க:

2013-ஆம் வருடம் இதே நாளில் எழுதிய ஃப்ரூட் சாலட் பதிவொன்றை உங்களில் சிலர் படித்திருக்க வாய்ப்பில்லை என்பதால் இங்கே அதன் சுட்டி… அப்பதிவிலிருந்து ஒரு கவிதையும்…

”ஒரு ஏழைச்சிறுவனின் கேள்வி

பல்லி சொல்லும் பலனைப்
பஞ்சாங்கத்தில்
பார்க்கத் தெரிந்த
என் தந்தைக்கு,
நான் பள்ளி செல்லும்
பலன் மட்டும்
தெரியாமல் போனதேன்?

-          செம்பசேகர்.


நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் [சி]ந்திப்போம்...

நட்புடன்

வெங்கட்
புது தில்லி

22 கருத்துகள்:

  1. அருமையான தொகுப்பு. சான்டா விளம்பரம் ரசிக்க வைத்தது. கருத்துக்கள் அருமை.
    //பல்லி சொல்லும் பலனைப்
    பஞ்சாங்கத்தில்
    பார்க்கத் தெரிந்த
    என் தந்தைக்கு,
    நான் பள்ளி செல்லும்
    பலன் மட்டும்
    தெரியாமல் போனதேன்?//
    மில்லியன் டாலர் கேள்வி...!!!

    நமது வலைத்தளம் : சிகரம்
    இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்

    https://newsigaram.blogspot.com/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றைய தொகுப்பு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி சிகரம் பாரதி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. சீனாவின் துயரம் மனதை வருத்துகிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனதை வருத்தும் நிகழ்வுகள் தான் துரை செல்வராஜூ ஜி. என்று இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கப் போகிறதோ...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. சீனாவின் துயரம் தீரவேண்டும்.  சீனாவுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே ஆபத்து. வாசகம் நன்று.  இரண்டு வரிக்கதை நேற்றோ முதல் நாளோ பார்த்த வண்டி விளம்பரத்தை  நினைவு படுத்துகிறது.  அந்தக் குடிகார மனிதரின் பெயர் ஆத்மாவோ என்னவோ!ஹா...  ஹா...  ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சீனாவில் பரவும் வைரஸ் - உலகத்துக்கே ஆபத்து - உண்மை தான் ஸ்ரீராம்.

      வாசகம், இரண்டு வரிக்கதை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      குடிகார மனிதரின் பெயர் ஆத்மாவோ? ஹாஹா... இன்று பார்த்தால் கேட்டு விட வேண்டியது தான்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. சீனா மீண்டு வர பிரார்த்திப்போம்.
    இரண்டு வரிக்கதை அற்புதம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டு வரிக் கதை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      சீனா - துயரத்தின் உச்சம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. அந்த நிலையிலும் ஆத்மாவை வம்புக்கிழுக்கிறாரே, அவர்?.. பக்திமானாக இருப்பாரோ?.. குடியிருக்கும் கோயில் என்ற வார்த்தைக்கு வேணா அர்த்தம் கேட்டுப்பார்க்கலாம், அடுத்த தடவை அவரைப் பார்க்கும் பொழுது. :)

    தேர்வுகளே வேண்டாம் என்ற உரத்த குரலுக்குக் காரணம் இது தானோ?..
    ஏழை பாழைகளெல்லாம் இப்படி பள்ளித்தலங்களை நையாண்டி செய்ய, பணம் படித்தவர்கள்?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த முறை அவரைப் பார்த்தால் கேட்க சில கேள்விகள் உண்டு - இரண்டு நாட்களாக அவரைப் பார்க்க இயலவில்லை ஜீவி ஜி. பார்த்தால் உங்கள் கேள்வியையும் கேட்டு விடலாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. இந்றைய வாசகம் அட்சரலக்ஷ்ம்.
    ஆத்மா !இரவு நண்பருக்கு சரக்கு உள்ளே போனதும் விழித்துக் கொள்கிறதோ.

    பள்ளிப் புதல்வன் புலம்பல் தந்தைக்குக் கேட்குமோ.
    சந்தனப் புடவை இன்னோன்று ஆர்டர் செய்து ஆதிக்கு வாங்கிக் கொடுக்கவும்:)

    சீன மக்களின் இழப்பு 50 ஆயிரத்தைத் தாண்டி விட்டதாகச் சொல்கிறார்கள்.
    இங்கே யு கே வரை வந்து விட்டது.
    அதன் இங்குபேஷன் பீரியட் 15 நாட்களாகுமாம்.
    தெரியாமலியே கொண்டு வந்தவர்கள்
    தனிப்படுத்தப் படுகிறார்கள்.
    மீண்டு வருவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சந்தனப் புடவை - வாங்கிக் கொடுத்துவிடலாம் வல்லிம்மா! :)

      வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. சீனாவின் நிலைமை உலகுக்கே அச்சுறுத்தலாகத் தான் இருக்கிறது. விரைவில் தீர்வு கிடைக்கப் பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சீனாவின் நிலை பரிதாபம் தான் கீதாம்மா... விரைவில் தீர்வு கிடைக்கட்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. கரோனா கஷ்ட காலம்...

    ஹர்யானாவின் இசை நன்றாக இருக்கிறது...

    இரண்டு வரி கதையில் காதலன் என்று முடித்திருக்கலாம்....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹரியானாவின் இசை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      கதைக்கு வேறு முடிவு - :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. பதில்கள்
    1. வேதனையான நிகழ்வு தான் கரந்தை ஜெயக்குமார் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. ரசித்த வாசகம் அருமை!
    கொரோனா வைரஸ் பாதித்து மறைந்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருகிறது. அங்கங்கே அதற்கான மருந்தும் தீர்வும் கண்டு பிடித்து விட்டதாகவும் தகவல்கள் வருகின்றன. பலதரப்பட்ட மக்கள் விமான நிலையங்களில் கூடுவதால் அங்கேயும் பாதிப்பு வருகிறது. சென்ற வாரம் தமிழ்நாடு புறப்பட இருந்த எங்கள் பிரயாணமும் இதனால் தடைபட்டு விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மனோ சாமிநாதன் மேடம்.

      அடடா உங்கள் பயணமும் தடைபட்டு விட்டதா? விரைவில் நிலை சரியாக வேண்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. விரைவில் இதற்கான தீர்வு கிடைக்கட்டும்…//
    அனைவரின் பிரார்த்தனையும் அதுதான்.
    சீனாவின் துயரம் தீர வேண்டும்.
    ஹரியானா பாடலும், ஆடலும் அருமை.

    //நீ நல்லா இருப்பே என என் ஆத்மா சொல்கிறது! ஆத்மா என்றைக்கும் பொய் சொல்லாது!”//

    பாஸிடிவ் செய்தியாக இருக்கே! நல்லா இருக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சீனாவின் நிலை விரைவில் சரியாக வேண்டும் என்பது தான் அனைவருடைய பிரார்த்தனையும் கோமதிம்மா...

      ஆத்மா - :)))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....