எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, February 15, 2013

ஃப்ரூட் சாலட் - 33 – சேலையில் சந்தன வாசம் – ஒற்றுமை


இந்த வார செய்தி:

அன்வர் பாஷா – வயது 21 – இருப்பிடம் ஆந்திராவின் அனந்தபுரி மாவட்டம் தர்மாவரத்தினைச் சேர்ந்த நெசவாளி. தர்வாமரம் பட்டுக்குப் பெயர் போனதாயிற்றே. அங்கே பட்டு நெசவாளிகள் நெய்யும் பட்டுப் புடவைகள் பிரசித்தம். 

அன்வர் பாஷா தற்போது தயாரித்து விற்பனை செய்திருக்கும் ஒரு புடவை சாதாரண பட்டுப் புடவைகளை விட கொஞ்சம் விசேஷமானது. வாசனையானது என்று கூட சொல்லலாம்! புதுத் துணிக்கென்றே ஒரு வாசம் இருக்குமே அது போல சாதாரண வாசனை இல்லை – சந்தன வாசம்!

கரும்பச்சை நிறத்தில் தூய பட்டு கொண்டு ஆங்காங்கே கருப்பு, வெள்ளை கற்கள் பதிக்கப்பட்டு சிறப்பான சரிகை/பூத்தையல் வேலைகள் செய்யப்பட்டது மட்டுமல்லாது புடவைக்கென்றே தயாரிக்கப்பட்ட 2000 சந்தன மணிகள் நடுநடுவே தைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டது இந்த புடவை. இப்படி ஒரு புடவை கட்டிக்கொண்ட பெண் நம்மைக் கடந்து போனால் அப்படியே சந்தன வாசம் நம் நாசியைத் துளைத்து நறுமணம் கமழ்ந்து போகுமாம்! அட கடக்கக் கூட வேண்டாம் – ஏனெனில் பத்து மீட்டர் தொலைவு வரை இந்த சந்தன மணம் கமழும் எனச் சொல்கிறார் அன்வர்.

பல முறை புடவையை துவைத்தாலும் கண்டிப்பாக ஒரு வருஷம் வரை இந்த சந்தன மணம் அகலாது. இதைத் தயாரிக்க அவருக்கு ஆன செலவு ரூபாய் 28,000/-.  விற்பனை விலை ரூபாய் 35,000/-.  சரி அடுத்த கல்யாண நாளுக்கு அம்மணிக்கு வாங்கிக் கொடுத்துடுவோம்னு மேல படிச்சா......, ‘சே நம்மாளுக்கு லக் இல்லை!ஏற்கனவே கடப்பால இருக்கற வேற ஒருத்தர் வாங்கிட்டாராம்! இதே மாதிரி இன்னுமொரு புடவை சொல்லலாம்னா – ஒரு மாடல்ல, ஒரு புடவை மட்டும் தான் செய்யறது அன்வரின் வழக்கமாம்!

இந்த வார முகப்புத்தக இற்றை:மற்றவர்களால் முடியாத செயல்களை நம்மால் முடியும் என்று தன்னம்பிக்கையோடும், விடா முயற்சியோடும், எடுக்கும் செயலை விரும்பியும் செய்தால், வானம் கூட தூரமில்லை.

இந்த வார குறுஞ்செய்தி


ALWAYS TRY TO SPEND FEW SECONDS WITH YOUR FRIENDS EVEN WHEN YOU ARE BUSY. BECAUSE ONE DAY YOU CAN GET FREE TIME BUT NOT YOUR FRIENDS. 

ரசித்த புகைப்படம்: 
படம் எடுத்தவரை நோக்கியே பாய்ந்ததோ என்று நினைக்க வைக்கும் புகைப்படம்! அப்படி அது தான் உண்மை என்றால் ‘என்ன ஒரு கடமை உணர்ச்சி!என்று தோன்றுகிறது! :)


ரசித்த காணொளி:

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வேஎன்பதை நிருபீக்கும் ஒரு காணொளி. நிச்சயம் நீங்களும் ரசிக்க முடியுமென நம்பி இங்கே தந்திருக்கிறேன் உங்கள் ரசனைக்காக!ராஜா காது கழுதை காது:

சூரஜ்குண்ட் மேளா சென்ற போது அங்கே கூர்க் காபி குடிக்க கடையில் நின்ற போது ஒரு வயதான தம்பதிகளும் அங்கே வந்தார்கள். மனைவி கணவனிடம் ‘ம்ம்ம்... நான் அங்க உட்கார்றேன், காபி வாங்கி எடுத்துட்டு வாங்க!என்று சொல்ல, பக்கத்திலிருந்த ஒருவர் சொன்னது ‘வயசானப்புறம் கூட கணவனுக்கு கட்டளையிடுவதை நிறுத்த மாட்டேங்கறாங்கப்பா!

படித்ததில் பிடித்தது:

ஒரு ஏழைச்சிறுவனின் கேள்வி

பல்லி சொல்லும் பலனைப்
பஞ்சாங்கத்தில்
பார்க்கத் தெரிந்த
என் தந்தைக்கு,
நான் பள்ளி செல்லும்
பலன் மட்டும்
தெரியாமல் போனதேன்?

-          செம்பசேகர்.

சிறுவனின் கேள்வி நியாயமானது தானே.

மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


48 comments:

 1. புடவையை துவைப்பது தான் மிக கவனம் தேவை...

  முடிவில் சரியான கேள்வி...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 2. காணொளி ரசித்தேன்... அருமை...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ஸ்கூல் பையன்.

   Delete
 3. அனைத்தும் அருமை. குறிப்பாக முகப் புத்தக புகைப்படம், வீடியோ சூப்பர்,
  காலையில் இரண்டாம் முறை காபி குடித்துக்கொண்டே ப்ரூட் சால்ட்டின் சுவையை அனுபவித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. காபியுடன் ஃப்ரூட் சாலட்.... மிக்க மகிழ்ச்சி!

   தஙகளது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்....

   Delete
 4. //இப்படி ஒரு புடவை கட்டிக்கொண்ட பெண் நம்மைக் கடந்து போனால் அப்படியே சந்தன வாசம் நம் நாசியைத் துளைத்து நறுமணம் கமழ்ந்து போகுமாம்! அட கடக்கக் கூட வேண்டாம் – ஏனெனில் பத்து மீட்டர் தொலைவு வரை இந்த சந்தன மணம் கமழும் எனச் சொல்கிறார் அன்வர்.//

  படித்ததும் ஏதேதோ கற்பனை செய்து பார்த்தேன். சந்தன நறுமணத்தில் அப்படியே மயங்கி விழுந்துவிட்டேனாக்கும். அதனால் மேற்கொண்டு ஏதும் எழுத முடியவில்லையாக்கும். ;)))))

  ReplyDelete
  Replies
  1. அச்சச்சோ.... ரொம்ப அதிகமா கற்பனை பண்ணிடாதீங்க.... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 5. //சரி அடுத்த கல்யாண நாளுக்கு அம்மணிக்கு வாங்கிக் கொடுத்துடுவோம்னு மேல படிச்சா......, ‘சே நம்மாளுக்கு லக் இல்லை!”//

  இருக்கு! இருக்கு! இங்க கோ - ஆப்டெக்ஸில் இந்த மாதிரி சந்தன மணிகள் கொண்டு மைசூர் சில்க்கில் செய்து ஒரு மாமி வாங்கியிருக்கிறார். விலை வெறும் 4000 தானாம். அதை வாங்கிட்டா போச்சு....இங்க எஸ்கேப் ஆக முடியாது...:))

  ReplyDelete
  Replies
  1. மலையாளத்தில் “வடி கொடுத்து அடி வாங்கற”துன்னு ஒண்ணு உண்டு! அதத் தான் நான் இப்ப செஞ்சுட்டேன் போல! :(

   சரி சரி 40000 செலவுக்கு பதில் 4000 செலவு தானே... செஞ்சுடுவோம்!

   Delete
 6. நல்ல கதம்பம்!! அந்த நெசவாளி நெய்யும் அடுத்த ஸ்பெசல் சேலையை வாங்கி கொடுத்துடுங்க!! :)

  ***

  விடாமுயற்சி இருந்தால் வானமும் தொட்டு விடும் தூரம்தான்ற கருத்தும், புகைப்படமும் அருமை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழூர் கார்த்தி.

   Delete
 7. மணியெல்லாம் வச்ச புடவைக்கு மணி கூடுதலாத்தான் கொடுக்கணும்.

  இந்த மாதிரி புடவைகள் எல்லாம் கட்டிக்க கனமா இருக்காதோ?

  ரோஷ்ணியம்மா சொன்ன புடவை கனமா இருக்கவே இருக்காது:-)

  கல்யாண நாள் எப்போ வருதுன்னு சொல்லுங்க. வாங்கித்தந்தீங்களான்னு பார்க்க வருகிறேன்!

  ReplyDelete
  Replies
  1. அட ஆமாம்.. நீங்க சொல்றதும் சரிதான். இந்தப்புடவை நிச்சயம் கனமாத்தான் இருக்கும். அதுனால தான் வேண்டாம்னேன்! :)

   கல்யாண நாள் - அதுக்கு இன்னும் மூணு மாசம் இருக்கு! மே 24. [சரிதானான்னு அம்மணி தான் சொல்லணும்!] நமக்கு கொஞ்சம் மறதி ஜாஸ்தி கேட்டோ!

   வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 8. வாங்கியாச்சுன்னு சொல்லி வீட்டுல ஏமாத்திட்டீங்க.... தெரியுதுங்க....
  மற்ற எல்லா பகுதிகளும் அருமை...
  கவிதை கண்டிப்பாக நியாயமானதுதான்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   Delete
 9. வாசனை புடவை பற்றி தகவல் சொல்லிட்டு அது கிடைக்காதுன்னு சொல்லிட்டீங்களே??

  முகபுத்தக இற்றை, குறுஞ்செய்தி காணொளி, படம் எல்லாமே மிக அருமை.

  கடைசி கவிதை சிறப்பு. அந்த சிறுவனின் கேள்வி நியாயமானதுதான்.

  ஃபுருட் சாலட்- சுவை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமா ரவி.

   Delete
 10. சிறுவனின் கேள்வி நியாயமானது. படங்கள் வெகு சிறப்பு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சசிகலா.

   Delete
 11. anne!
  ovvontrum arumai

  kaanoli piramaatham....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும், ரசிப்பிற்கும் மிக்க நன்றி சீனி.

   Delete
 12. இ .வா.செ - அம்மணி அதிர்ஷ்டகாரங்கதான். எப்படியும் ரிசர்வ் [vation ] இருக்கே ! - 25 %

  இற்றை - அட ! -5 %

  குறுஞ்செய்தி - ஓஹோ ! - 5%

  புகைப்படம் - சிறுத்தையின் சீற்றம் அப்படிதான் உள்ளது .என்னய்யா படம் எடுக்கிறாய்
  என்றி பெண் சிறுத்தை சீறுவது போல் உள்ளது. -10 %

  காணொளி - மிக ரசித்தேன் ! - 50 %

  காது - கேட்காது ! - 5%

  பபி - ஆதங்கம் - அருமை ! -5%

  ReplyDelete
  Replies
  1. சிறு திருத்தம் - "1. என்னையா
   2.இ .வா . செ - 20 %
   3.என்று "
   மன்னிக்க !

   Delete
  2. ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு % சொல்லி ரசித்ததற்கு நன்றி ஸ்ரவாணி!

   Delete
  3. கூட்டிப் பார்த்தா 105% வருதேன்னு பார்த்தேன்! :)

   பரவாயில்லை கூட தானே இருக்கு!

   இரண்டாவது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி.

   Delete
 13. சேலை கட்டும் பெண்ணுக்கொரு(சந்தன)வாசமுண்டுன்னு ஆளாளுக்குப் பாட ஆரம்பிக்கப்போறாங்க..

  ஆஹா.. ஆதி!! என்கவுண்டர் ஜூப்பரு :-)))

  ReplyDelete
  Replies
  1. ஆஹா.... என்கவுண்டர் :)))

   பாட்டு மாத்தி பாடினா தான் உண்டு!

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

   Delete
 14. கூந்தலிலேயே இயற்கையான நறுமணம் இருக்கு இந்தப் புடவையில் சந்தனமணமெல்லாம் எதுக்கு?!:)

  ReplyDelete
  Replies
  1. தங்களுடைய வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குட்டன்.

   Delete
 15. எல்லாமே நல்லா இருக்கிறது. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு கணொளி அருமை. சந்தனமணி புடவை இல்லையென்றால் போகுது, மைசூர்சில்க் புடவை சந்தனமணி புடவை வாங்கி கொடுத்துவிடுங்கள் ஆதிக்கு.

  ReplyDelete
  Replies
  1. வாங்கி கொடுத்துடுவோம்!

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   Delete
 16. தன் மனைவி கட்டிய சேலையை முகர்ந்தாலே
  (மனைவி மேல் அவருக்கும் இருக்கும் அன்பினால்)
  கணவனுக்கு அந்த சேலை வாசமாய்த் தெரியுமாமே....

  (எதுக்கு இவ்வளவு செலவு...? நம் ஆண்கள் வாய்சொல்லிலேயே
  சொக்க வைத்து விடுவார்களாமே....)

  பதிவுகள் அனைத்தும் அருமை.
  முக்கியமாக காணொளி சூப்பர் நாகராஜ் ஜி.

  த.ம. 7

  ReplyDelete
  Replies
  1. நம் ஆண்கள் வாய்சொல்லிலேயே
   சொக்க வைத்து விடுவார்களாமே....) அதானே...


   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் தமிழ் மணம் 7-ஆம் வாக்கிற்கும் மிக்க நன்றி அருணா.

   Delete
 17. மற்றவர்களால் முடியாத செயல்களை நம்மால் முடியும் என்று தன்னம்பிக்கையோடும், விடா முயற்சியோடும், எடுக்கும் செயலை விரும்பியும் செய்தால், வானம் கூட தூரமில்லை.

  வானம் தொட்டுவிடும் தூரம்தான் - தன்னம்பிக்கை இருந்தால் ..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 18. சிறுவனின் கேள்வி நியாயமானது.

  சந்தனப் புடவை விஷயம் புதுமை.
  காணொளி மிக மிக ரசித்தேன்.
  உங்கள் சாலட் சுவையோ சுவை.

  நன்றி பகிர்விற்கு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!.....

   Delete
 19. கடமை உணர்ச்சி... ஹிஹி.
  தண்ணி கஷ்ட காலங்களில் இது போன்ற வாசனைத் துணிகள் அவசியம் தான். சந்தன மணம் மென்மையாக இருந்தால் தான் ரசிக்க முடியும். புடவை மணம் எப்படி தெரியவில்லையே?

  ReplyDelete
  Replies
  1. மழைக்காலங்களில் - :))))

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

   Delete
 20. சரி அடுத்த கல்யாண நாளுக்கு அம்மணிக்கு வாங்கிக் கொடுத்துடுவோம்னு மேல படிச்சா......, ‘சே நம்மாளுக்கு லக் இல்லை!” ஏற்கனவே கடப்பால இருக்கற வேற ஒருத்தர் வாங்கிட்டாராம்!//

  இப்பவே ஆர்டர் பண்ணினா வேற டிசைன்ல இன்னொரு புது மாதிரி செஞ்சுடப் போறார்!

  ReplyDelete
  Replies
  1. அடடா.... செஞ்சுடுவோம்.... :)

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நிலாமகள்.

   Delete
 21. ஹா...ஹா....
  " ....... தன் வாயால் கெடும்" என்பார்களே மாட்டிக் கொண்டீர்களே :))

  காணொளி அருமை.

  சிறுவனின் கேள்வி :((

  ReplyDelete
  Replies
  1. நுணலும்... :) சரி தான்....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 22. சந்தனப் புடவை ரசனையாக உள்ளது.
  எல்லாமே சுவையாக உள்ளது.
  இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.
  http://kovaikkavi.wordpress.com

  ReplyDelete
  Replies
  1. தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வேதா. இலங்காதிலகம் ஜி!

   Delete
 23. சிறுவனின் கேள்வியில் ரொம்ப நியாயம் இருக்கிறது.
  நிஜமாகவே பாயும் புலி தான்! புகைப்படத்திலேயே என்ன ஒரு கம்பீரம்! பயமாகத்தான் இருக்கிறது.

  சந்தனப் புடவை? ஆஹா! வட போச்சே!
  ராஜா காது கேட்ககூடாததையெல்லாம் கேட்குதே!
  காணொளி அட்டகாசம்!

  வானமே எல்லை - உங்கள் ப்ரூட் சாலட்டிற்கு!

  ReplyDelete
 24. கேட்கக் கூடாததெல்லாம் கேட்குதே - சீக்கிரமே எனக்குக் கழுதைக் காது ஆகப்போவது நிச்சயம்! :)

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....