வியாழன், 10 மே, 2018

கதம்பம் – உனக்கு இது தேவையா? – என்ன பூ – சந்தேகம் – இலவம் பஞ்சு



உனக்கு இது தேவையா?



சமீபத்தில் ஒரு நாள் இரவு சாப்பிட்ட பிறகு ஒரு நடை. வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது சாலையில் ஒரு இளைஞர் – பட்டன்கள் அவிழ்த்து விடப்பட்ட சட்டை, உள்ளே ஏதோ பெண்ணின் படம் போட்ட ஒரு பனியன், கீழே பல பாக்கெட்கள் கொண்ட ஒரு பேண்ட் – கைகளில் ஒரு பெரிய அட்டை, முதுகில் மூட்டை – அதாங்க Back Pack! – கழுத்திலும் கைகளிலும் விதம் விதமான கயிறுகள், உச்சியில் முடியைச் சேர்த்து, ரப்பர் பேண்ட் போட்டு ஒரு குடுமி! என்ன ஸ்டைலோ இது, பள்ளி/கல்லூரியில் படிக்கும் இந்த இளைஞர்கள்/ இளைஞிகளின் நடை உடை பாவனை எதுவுமே சரியில்லையே என்ற நினைத்தபடி கொஞ்சம் தூரத்திலிருந்தே பார்த்துக் கொண்டு வந்தேன்.


அருகில் வந்ததும், அந்த இளைஞர் “நமஸ்தே அங்கிள்!” என்று சொல்லி புன்சிரிப்போடு சென்றார்! எனக்கு பயங்கர சிரிப்பு தான் வந்தது! யார் என்று தெரியாத இளைஞர் நான் அவரை தொடர்ந்து கவனிப்பது கண்டு, “அவர் அப்பாவின் நண்பர் போல!” என எனக்கு வணக்கம் சொல்ல, யார்டா இந்தப் பையன், குறுகுறுன்னு பார்த்து அவனையும் கன்ஃப்யூஸ் பண்ணிட்டியே…. என்ற நினைவுடன் சிரிப்புடன் பதில் வணக்கம் சொல்லி கடந்தேன்!

இது என்ன பூ?



தில்லியில் நான் இருக்கும் பகுதி புது தில்லி நகராட்சியின் கீழ் வருகிறது. எண்ணிலடங்காத மரங்கள் இங்கே உண்டு. ஒவ்வொரு சாலையிலும் ஒவ்வொரு விதமான மரங்கள் மட்டுமே – அதுவும் பல வருடங்களுக்கு முன்னரே வைக்கப்பட்ட மரங்கள் – ஒரு சாலையில் அரச மரங்கள் இருந்தால், ஒரு சாலையில் புளிய மரம், மற்றொரு சாலையில் வேப்ப மரம், என வித்தியாசம். இரு மருங்கிலும் மரங்கள் இருப்பது எத்தனை அழகு. நம் நெஞ்சாலைகள் இப்படி இரு மருங்கிலும் மரங்களோடு இருந்த போது செய்த பயணத்திற்கும், இப்போது அகலப்படுத்திய பிறகு மரங்களின்றி இருப்பதில் பயணிப்பதற்கும் எத்தனை வித்தியாசம்.

எங்கள் வீட்டின் அருகே இப்படி இருக்கும் ஒரு வித மரங்கள் – என்ன மரம் என்று தெரியாது – ஆனால் அதன் பூக்கள் வித்தியாசமான அழகு! இந்தச் சமயத்தில் அம்மரத்தின் பூக்கள் நிறையவே கீழே விழுகின்றன. அப்படி விழுந்த ஒரு பூ தான் மேலே கொடுத்திருப்பது! என்ன பூ என்று யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன்!

வீணாய்ப் போகும் இலவம் பஞ்சு:



மரங்கள் பற்றி பேசும்போது இன்னும் ஒரு மரத்தினைப் பற்றியும் சொல்லத் தோன்றுகிறது. எங்கள் பகுதியில் நிறைய இலவ மரங்களும் இருக்கின்றன. சில மாதங்கள் வரை பூக்கள் பூத்து கீழே விழுந்து கொண்டிருந்தன என்றால் இப்போது மரத்தில் காய்த்து, மரத்திலேயே வெடித்து சாலையெங்கும் இலவம்பஞ்சு பறந்து கொண்டிருக்கிறது காற்றில்! தில்லியில் இந்த இலவம் பஞ்சின் பயனை யாருமே அறிந்திருக்கவில்லை! நம் ஊர் என்றால் இலவ மரத்திலிருந்து இந்தக் காயைப் பறித்து அதில் உள்ள கொட்டைகளை எடுத்து, பஞ்சைப் பிரித்து தலையணை, மெத்தை என தைத்துத் தருவார்கள். இங்கே அனைத்தும் வீணாய்ப் போகும். சாலை ஓரங்கள் முழுவதும் பஞ்சு தான்! இதனை யாருமே இங்கே பயன்படுத்துவதில்லை. வீணாய்ப் போகிறது இலவம்பஞ்சு! பூக்கள் விழும் போது சாலை முழுவதும் பூக்களாகக் கிடக்கும் – கொஞ்சம் ஏமாந்தால் காலை வழுக்கி விட்டுவிடும் இந்தப் பூக்கள் – இப்போது பஞ்சு பறந்து கண்களிலும் மூக்கிலும் படுகிறது!

சந்தேகம் நட்பை முறிக்கும்!




காலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை தால்கட்டோரா பூங்காவில் நடைப் பயணம் செல்வது தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புது அனுபவம் இங்கே கிடைக்கிறது! காதைத் தீட்டிக் கொண்டால் நிறைய விஷயங்கள் கேட்கக் கிடைக்கிறது! ராஜா காது கழுதைக் காது எழுத நிறைய விஷயங்கள்! ஆனாலும் ஏனோ எழுதுவதில்லை. அப்படி கேட்ட ஒரு விஷயம் சந்தேகம் பற்றியது! இந்தப் பூங்காவில் நடைபாதை போல ஆங்காங்கே அமர்ந்து கொள்ள இரும்பில் பெஞ்சுகளும் உண்டு. அப்படி ஒரு பெஞ்சில் இரு இளைஞிகள் ஒரு இளைஞருடன். ஒரு பெண் அந்த இளைஞரிடம் மல்லுக் கட்டிக் கொண்டிருந்தார்.

“நீ எப்படி என்ன சந்தேகப்படலாம்? என்ன பத்தி இன்னொருத்தர் கிட்ட கேட்டிருக்க, என் மேல சந்தேகம் வந்துடுச்சு உனக்கு, இது சரி வராது!” இளைஞர் தன் வாக்குவாதமாக, “நான் சந்தேகப் பட்டால், உன்னிடம் தான் கேட்டிருப்பேன், வேற ஒருத்தர்கிட்ட எதுக்குக் கேட்கணும்”னு அழாத குறையா சொல்ல, இரண்டு பேருக்கும் வாக்குவாதம் – காலையிலேயே சண்டை போடறதுக்காகவே பூங்காவிற்கு வந்திருக்கிறார்கள் போலும்! சாட்சிக்கு இன்னுமொரு பெண் வேறு! மூவருக்கும் வயது இருபத்துக்கும் கீழே தான் இருக்கலாம் என்பது கூடுதல் தகவல்.

விரைவில் வேறு சில கதம்பச் செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
தமிழகத்திலிருந்து.....

46 கருத்துகள்:

  1. குட்மார்னிங்க் வெங்கட்ஜி!! இன்று நான் தான் ஃபர்ஸ்டூஊஊஊஊஊஊஊ...ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் 🙏 கீதா ஜி. ஃபர்ஸ்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டூ....... :)

      நீக்கு
  2. இப்போது இளைஞர்கள் சிலர் வித்தியாசமாகத்தான் உடை, சில ஸ்டைல்கள் செய்து கொள்கிறார்கள்...சமீபத்தில் ஒரு இளைஞர் (எங்கள் பகுதியில் வட இந்திய இளைஞர்கள் அதிகம்...கேட்டரிங்க் இன்ஸ்டிட்ட்யூட் ஃபேஷன் டெக்னாலஜி, மேத்தமெட்டிக்கல் சயின்ஸ் வளாகங்கள் இருப்பதால்...) தலை முடியில் ரிங்க் ரிங்காகக் கோர்த்துக் கொண்டிருந்தார்.

    பதிவை வாசித்து வடும் போது வடிவேலு ஏதோ ஒரு படத்தில் உச்சியில் கொண்டையுடன் வருவாரே என்று நினைவு வந்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தலையில் ரிங்ரிங்காக கோர்த்துக் கொள்வது இப்பொழுது ஃபேஷன் கீதாஜி.

      நீக்கு
    2. பாதி பக்கத் தலை ஒட்ட கிராப். இன்னொரு பக்கத்தலை பின்னி ஜடை போடுமளவுக்கு முடி வளர்ப்பது இப்ப பேசன். எட்டி மூஞ்சியிலேயே குத்தலாமான்னு வரும்

      நீக்கு
    3. எட்டி மூஞ்சியிலேயே குத்தலாம்னு வரும்... ஹாஹா... வன்முறை கூடாது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

      நீக்கு
  3. பூ ரொம்ப அழகாக இருக்கிறதே...இதுவும் ஒரு செம்பருத்தி வெரைட்டிதான் ஜி. ஹைபிஸ்கஸ் ஃபேமிலி. சீமை செம்பருத்தி என்று சொல்லுவதுண்டு. சைனீஸ் ஹைபிஸ்கஸ். (சீமைப் பசலை என்று ஒரு கீரை வெகு விரைவில் வளருமே அதை சைனா பசலை என்றும் சொல்லுவதுண்டு அது போலத்தான்) இதுவும் அப்படித்தான் இருக்கிறது...வேறு யாரேனும் தெரிந்தவர்கள் சொன்னால் நல்லது

    கீதா

    பதிலளிநீக்கு
  4. இப்போதெலலம் சாலைகள் அழகற்று குறிப்பாக நெடுஞ்சாலைகள் போடப்பட்டு மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டு சாலைகள் பொலிவிழந்து என்ன சொல்ல...வருத்தம் தான்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். மரங்களற்ற சாலைகள் பெரும் சோகம் தான் கீதாஜி.

      நீக்கு
  5. குட்மார்னிங் வெங்கட். இன்று உங்கள் தளம் திறந்தது. எங்கள் தளம் திறக்க மறுக்கிறது!!! ஃபேஸ்புக் வழியாக சுவர் ஏறிக்குதித்துதான் எங்கள் தளத்துக்குச் செல்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹையோ ஸ்ரீராம் இதைப் பார்த்ததும் அடித்துப் பிடித்து நானும் சுவர் ஏறிக் குதிக்கணுமோ என்னால் முடியாதே பதிவு வெளியாகிருச்சோ என்று ஓடிப் போய் எபி போய்ப் பார்த்தேன் ஹப்பாடா இன்னும் வெளிவரலை...ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    2. காலை வணக்கம் 🙏 ஸ்ரீராம்.

      உங்கள் தளம் அல்லது என் தளம் - ஏதோ ஒன்று திறக்காமல் படுத்துகிறது தினமும்!

      நீக்கு
    3. சுவர் வழியே ஏறிக் குதித்து! ஹாஹா கொஞ்சம் கஷ்டம் தான் கீதாஜி.

      நீக்கு
  6. அந்த பூ என்ன பூ? யாராவது சொன்னால் நானும் தெரிந்து கொள்கிறேன். நான் இதிலெல்லாம் ரொம்ப வீக்.. கேட்டேளா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் நான் சொல்லிட்டேனே அது என்ன பூ என்று

      கீதா

      நீக்கு
    2. நானும் உங்களை மாதிரி வீக்கோ வீக் கேட்டேளா ஸ்ரீராம்.

      நீக்கு
    3. செம்பருத்தி வகையா என்று சரியாக தெரியவில்லை கீதாஜி.

      நீக்கு
    4. ஸ்ரீராம் - நான் இதிலெல்லாம் ரொம்ப வீக்.. கேட்டேளா! - கடைசி வார்த்தை, நெல்லைத் தமிழ். என்ன... எங்கிட்ட சொல்லாம மதுரைலேர்ந்து எங்க ஏரியாவுக்கு வர்ரீங்க

      நீக்கு
    5. ஏரியா விட்டு ஏரியா வருவது தவறு தானே! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  7. சாலையின் இருமருங்கிலும் மரங்கள். முன்பு எங்கள் ஏரியாவும் அப்படி இருந்தது. அழகான சாலைகளாய்க் காட்சி அளிக்கும். இப்போது சாலையை அகலப் படுத்துகிறேன் என்று மரங்களை ஒழித்து விட்டார்கள். அதுவும் ஒவ்வொரு சாலையிலும் ஒவ்வொரு விதமான மரங்களின் வரிசை என்பது சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அகலப் படுத்துவதற்கு பல வருடங்களாக இருந்த மரங்களை வெட்டித் தள்ளுவது பெரும் சோகம். ஆமாம் ஒவ்வொரு சாலையிலும் ஒவ்வொரு விதமான மரங்கள் என்பது சிறப்பு தான் ஸ்ரீராம்.

      நீக்கு
  8. இலவம் பஞ்சு ரொம்ப அழகாக இருக்கிறது. எங்கள் வீட்டருகிலும் இலவம் பஞ்சு காய்கள் தொங்கிக் கொண்டு இருக்கும் ஆனால் இப்படி பஞ்சு வருவதற்குள் காணாமல் போய்விடும் பஞ்சு வருவதைப் பார்க்க முடியாது என்றாலும் பஞ்சு வரும் சமயம் ஒரு சின்ன விதை போன்ற ஒன்றைச் சுற்றி பஞ்சு விரிந்து பூ போன்று பறந்து கொண்டே இருக்கும் அதைப் பார்க்க மிக அழகாக இருக்கும்... பாராசூட் என்போம் நாங்கள்.

    சந்தேகம் நட்பிற்கு/காதலுக்கு முறிவுதான் அது ஒரு தொடரும் பேய்....இளைஞர்களை நினைத்தால் வேதனைதான்..வேர்டிங்க்ஸ் நல்லாருக்கு ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிலர் அதை தாத்தா பூச்சி என்று கூட சொல்வார்கள் கீதாஜி.

      ஒவ்வொரு வருடமும் இப்படி வீணாகத் தான் போகிறது.

      நீக்கு
  9. சந்தேகப்படும் ஆண் - சண்டை போடும் பெண்... சுவாரஸ்யமான காதலாயிருக்கும் போல!

    பதிலளிநீக்கு
  10. நாங்க இன்னமும் இலவம்பஞ்சு மெத்தை, தலையணை தான்! இதைப் பறக்கும்போது தாத்தாப்பூ என்றோ என்னமோ சொல்லுவாங்க. சரியான பெயர் மறந்து போச்சு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாத்தா பூச்சின்னு தான் சொல்வோம் கீதாம்மா.

      நீக்கு
    2. தாத்தா பூச்சியா?..

      தனித்தனியாக மெல்லிய விதைகளுடன் பளபளப்பான குஞ்சங்களுடன் காற்றில் மிதந்து செல்லும்..

      அப்படிச் செல்வது எருக்கம் பூக்களை என்று நினைக்கிறேன்!?..

      நீக்கு
    3. எருக்கம் பூக்கள் - தாத்தா பூச்சி! இருக்கலாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  11. கதம்பம் நன்றாக இருக்கிறது.
    தனபாலன் சொல்வது போல் சந்தேகம் பெரிய நோய்தான், நம்பிக்கை, புரிதல் இல்லையென்றால் வாழ முடியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  12. விததியாசமான தோற்றத்தில் வாழ்த்திய இளைஞன் ஒரு வகை செம்பருத்திப் பூ இலவ மரம் காதலர் பஞ்சாயத்து என்று சுவாரஸ்யம் தூக்கலான கதம்பம் கோடையிலே இளைப்பாற்றும் இன்னமுது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முத்துசாமி ஐயா.

      நீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    இக்கால இளைஞர்கள் இளைஙிகள் செய்து கொள்ளும் ஸ்டைலே தனிதான். அப்படியும் தங்களுக்கு வணக்கம் தெரிவித் தது சிறப்புதான்.

    வித்தியாசமான பூ அருமை. பெயர் தெரியாவிடினும் அழகாக உள்ளது.

    இலவம் பஞ்சு தலையணை மெத்தை உடம்புக்கு நல்லது. விளக்குத் திரி செய்து வீட்டில் விளக்கேற்றலாம். அனாவசியமாக பயன் ஏதுமின்றி போவது வருத்தமாக உள்ளது..

    சண்டை சச்சரவு இல்லாவிட்டால் அவர்களுக்கும் போரடிக்குமே... ஆனால் அதை நாலுபேர் நடமாடும் இடத்தில் போட வேண்டாம்..
    கதம்பம் அருமை மிகவும் ரசித்தேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு
  14. கதம்பம் ருசிதான்.

    வீணாய்ப்போகும் இலவம்பஞ்சு - ஆச்சர்யம்தான். ஆனால் போகப் போக இது நடக்கும் என்றுதான் நினைக்கிறேன். இப்போவே செயற்கை இழைகளுடன் கூடிய மெத்தை, தலையணைக்குத்தான் மவுசு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  15. சமயத்துல பெண் சண்டை போடறது, அவன் சமாதானப்படுத்தட்டுமே என்று எதிர்பார்ப்பதால் இருக்குமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  16. கதம்பம் ஸ்ரீரங்கம் கதம்பம் போல் ரசிக்கும்படி இருக்கிறது.

    தானே புயல் கே.கே.நகரில் இருந்த மரங்களை சாய்த்த பிறகுதான் அந்த மரங்கள் சாலைக்கு எத்தனை அழகை கொடுத்திருக்கின்றன என்று புரிந்தது.

    // என்ன ஸ்டைலோ இது, பள்ளி/கல்லூரியில் படிக்கும் இந்த இளைஞர்கள்/ இளைஞிகளின் நடை உடை பாவனை எதுவுமே சரியில்லையே//
    இப்படி சொல்ல ஆரம்பித்து விட்டால் நமக்கு வயதாகி விட்டது என்று பொருள்.

    எங்கள் பக்கத்து வீட்டில் என்ஜீனியரிங் படிக்கும் பையனின் சிநேகிதர்கள் அவனைப் பார்க்க வருவார்கள், விதம் விதமான கலர்களில் சுருள் சுருளான தலைமுடி, வினோதமான ஹேர் கட்.. நிஜமான முடியா? அல்லது விக்(wig)ஆ என்று சந்தேகமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....