எங்கள் வீட்டின் அருகே மயில்கள்
வரும் என்றாலும் இவ்வளவு அருகே பார்க்க முடிந்ததில்லை. சென்ற வாரத்தில் ஒரு நாள்
மாமியார் வீட்டுக்குச் சென்றிருந்தபோது, மயில்கள் சாப்பிடட்டும் என்று தினமும்
காலையில் மொட்டை மாடியில் கொஞ்சம் அரிசி போட்டு வருவார் அவர். சிறிது நேரத்தில்
மயில் குரல் கேட்க ஆரம்பித்து விடும். மயில்கள் ரொம்பவே கூச்ச சுபாவம் அல்லது
பயந்த சுபாவம் கொண்டவை. ஆள் நடமாட்டம் பார்த்தால் உடனே பறந்து/ஓடி விடும்.
படிக்கட்டுகள் அருகே மறைவாய் நின்று கொண்டு மயில்கள் அரிசியைக் கொத்தித் தின்பதை
பார்க்க முடிந்தது. கொஞ்சம் தொலைவில் நின்று படமும் [மொபைல்] மூலம் படமும் எடுக்க
முடிந்தது.
நிறைய குரங்குகளும் இங்கே உண்டு.
அப்படி வந்த குரங்குகளை மகள் படம் பிடித்து வைத்திருக்கிறார். அந்தப் படங்களை
பிறிதொரு சமயத்தில் பகிர்ந்து கொள்கிறேன். இந்த ஞாயிறில் மயில்களின் படங்கள் –
புகைப்பட உலாவாக….
ஆஹா... நமக்காக அரிசி போட்டு வச்சிருக்காங்களே.... ஒரு கை பார்த்துட வேண்டியது தான்!
கொஞ்சம் இந்தப் பக்கத்திலிருந்தும் சாப்பிடலாம்...
என்ன சத்தம்? யாராவது வராங்களா?
நல்லவேளை யாரும் வரல.... நம்ம சாப்பிடுவோம்!
இந்த மனிதர்களை நம்ப முடியாது, மறைந்து இருந்தாலும் இருப்பாங்க... எதுக்கும் தயாரா ஒரு காலைத் தூக்கி நிற்போம்...
ஏவ்வ்.... நம்ம வயிறு நிறைஞ்சது... ஆனால் அரிசி மீதமிருக்கே.... நம்ம தோழி கூட வந்தாங்களே, அவங்களை கூப்பிடலாம்!
எங்கே போயிட்டாங்க.... காணோமே....
அந்தப் பக்கம் போயிருப்பாங்களா?
இல்லை இந்தப் பக்கம் போயிருப்பாங்களோ....
அட அதோ அங்கே இருக்காங்க. போய் கூப்பிட்டு வருவோம்!
கண்ணே... எங்கே போற... இந்தப் பக்கம் அரிசி இருக்கு... வா போய் சாப்பிடலாம்!
என்ன நண்பர்களே புகைப்படங்களை
ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்…. இன்னும் ஒரு விஷயம் - படங்களுக்குத்
தந்திருக்கும் கமெண்ட்ஸ் – என்னவருடையது!
மீண்டும் ச[சி]ந்திப்போம்….
நட்புடன்
ஆதி வெங்கட்
குட்மார்னிங் வெங்கட். இன்று உங்கள் தளம் மெதுவாகத் திறந்து விட்டது.. ஆனாலும் எங்கள் தளத்துக்கு நான் முகநூல் வழியாகத்தான் வருகிறேன்!!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குமிக மிக அற்புதமான படங்கள் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!
நீக்குஹா... ஹா.. ஹா... புகைப்படங்களையும் தொடர் வரிகளையும் ரசித்தேன். அருமை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குWOW !!!!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.
நீக்குபடங்களுக்கும் அதற்குக் கொடுத்திருக்கும் கருத்து வளத்துக்கும் பாராட்டுகள். இங்கேயும் எப்போதேனும் வரும். குரல் கேட்டு ஓடிப் பார்ப்பதற்குள் அது ஓடிடும்! கெகெகெகெ! குரங்கார் கேட்கவே வேண்டாம். ஒரு முறை பயமுறுத்தினதிலேயே கையில் எண்ணெயைக் கொட்டிக் கொண்டேன். :)
பதிலளிநீக்குமயில்களுக்கு நம்மைக் கண்டால் பயம்.... நமக்கு குரங்கைக் கண்டால் பயம்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....
ராஜஸ்தானிலே வீட்டுத் தோட்டத்திலே மயில் கூட்டங்கள். ஒண்ணு ஆடும், ஒண்ணு பறக்கும், ஒண்ணு கூரையில் உட்காரும்.! என்ன ஒரு பிரச்னைன்னா அப்போல்லாம் படம் எடுக்கும்படி வசதி இல்லை. காமிராவே இல்லை. அதோட எழுத்தாளி ஆவேன்னும் தெரியாமல் போச்சே! :))))
பதிலளிநீக்குதில்லியிலும் முன்பு நிறைய மயில்கள் உண்டு. இப்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கின்றன....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...
ஸூப்பர் படங்கள் வர்ணனையும்தான்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
நீக்குஅழகோ அழகு...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குஅருமை
பதிலளிநீக்குஅருமை
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குமயில் படங்கள் ரொம்ப நல்லா இருந்தது. இவைகளைத்தான் மயக்கம் கொடுத்துப் பிடித்துவிடுகிறார்கள். உங்கள் திருவரங்க வீட்டிலேயே மயில்கள் வருதா?
பதிலளிநீக்குஆமாம் மயக்கம் கொடுத்துப் பிடிப்பதுண்டு. திருவரங்க வீட்டில் தான் மயில்கள் வருகின்றன.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
Photos and Comments really superb
பதிலளிநீக்குதேவதை - உங்கள் முதல் வருகையோ? மகிழ்ச்சி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
மொட்டை மாடியில் மயில்களா ஆச்சரியம்தான்
பதிலளிநீக்குஆமாம் மொட்டை மாடியில் தான்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.
படங்கள் செமையா இருக்கு அதுக்கான கமென்ட்ஸ் சூப்பர். நானும் மயில்களை மிக மிக அருகில் பார்த்திருக்கிறேன் கோயம்புத்தூரில் மருதமலைக்கு அருகில் இருக்கும் என் கஸினின் குடியிருப்புப் பகுதியில். அப்புறம் கோடகநல்லூரில் உறவினர் வீட்டில். மதுரை டு திருநெல்வேலி போகும் வழியில் நிறைய பார்க்கலாம். இப்போதும் இருக்கா என்று தெரியவில்லை. அப்போதெல்லாம் கேமரா இல்லாததால் படம் பிடிக்க முடியலை...
பதிலளிநீக்குகுரங்குகள் இங்கு எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வரும் அடையார் பகுதியில் தரமணி பகுதியில் ஐஐடி வளாக அருகில் இருப்பதால் இவை தினமும். மானும் பார்க்கலாம் தினமும். மானை நான் முன்பு ஃபோட்டோ எடுக்க முயற்சி செய்த போது ஓடிவிட்டது. நடைப்பயிற்சி போகும் வழியில் கொக்குகள் நிறைய பார்க்கலாம்.
ரொம்ப நல்லாருக்கு ஆதி...
கீதா
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
நீக்குபடங்களும் அதற்கான வர்ணனைகளும் அழகாக இருக்கின்றன.
பதிலளிநீக்குதுளசிதரன்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!
நீக்குவணக்கம் சகோதரி
பதிலளிநீக்குமயில்கள் படங்கள் மிக அழகு. அவற்றை மிக அழகாக படமெடுத்திருக்கிறீர்கள். படத்திற்கேற்ற வர்ணனை வாக்கியங்கள் மிக மிக அழகு. ஒவ்வொன்றையும் ரசித்துப் பார்த்து படித்தேன். அருமை .
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி....
நீக்குமயில் பார்ப்பது கண்ணுக்குக் குளிர்ச்சியான அழகு,,,,/
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி Blogger!
நீக்குஸ்ரீரங்கத்து தேவதைகள் வளர்க்கும் மயில்களோ என்னவோ அவை.
பதிலளிநீக்குபடங்கள் அருமை. அதற்கு உங்களவர் தந்துள்ள வர்ணனைகள் மிக அருமை மற்றும் பொருத்தம்.
ஸ்ரீரங்கத்து தேவதைகள் வளர்க்கும் மயில்களோ ? ஹாஹா....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மஹேஷ்.
ரொம்ப அழகு படங்களும் .வரிகளும்..
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!
நீக்கு