சமீபத்தில் ஒரு நாள் இரவு வீட்டிலிருந்து
உணவுக்குப் பிறகு கொஞ்சம் நடந்து வரச்சென்ற போது பக்கத்தில் இருந்த பூங்கா
ஒன்றிலிருந்து பாட்டின் சப்தம். இசையைக் கேட்டவுடன் அங்கே சென்று பார்க்கலாம் எனத்
தோன்றியது. தலைநகரில் இந்தியாவின் எல்லாப் பகுதி மக்களும் இருப்பதால், அவ்வப்போது
அந்தந்த பகுதி மக்கள் சேர்ந்து ஏதாவது விழா நடத்துவது வழக்கம். உத்திராகண்ட் பகுதி
மக்கள் சிலர் சேர்ந்து அவர்களது மாநிலத்திலிருந்து கலைஞர்களை அழைத்து வந்து
இசை/நடன நிகழ்ச்சி ஒன்றை நடத்திக் கொண்டிருந்தார்கள். சில பெண் கலைஞர்கள் மேடையில்
ஆடிக் கொண்டிருக்க, கீழே ஆண்கள் ஒருபக்கமும் பெண்கள் ஒரு பக்கமும் ஆடிக் கொண்டிருந்தார்கள்.
சின்ன இடம் தான் என்றாலும் இருக்கைகள்
போட்டு பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வசதியும் இருந்தது. பக்கத்தில் இரவு
உணவுக்கான ஏற்பாடும் செய்திருந்தார்கள். நடனத்தினை விட பக்கத்து பந்தலில் இருந்து
வந்த உணவின் வாசம் இரவு உணவை முடித்து விட்ட என்னையும் அங்கே செல்லத் தூண்டியது –
யாராவது பார்த்து "உங்களை நாங்க கூப்பிடலையே" எனச் சொல்லிவிடுவார்களோ
என்ற எண்ணம் தோன்றியதால், என்னைக் கட்டுப் படுத்திக் கொண்டேன். பாடல் ஒரே மெட்டில்
இருப்பதாகத் தோன்றியது. நடனமும் ஒரு சில Movement மட்டுமே திரும்பத் திரும்ப வருவதாக
இருந்தது.
மலைப் பிரதேசப் பெண்களின் தாலி பற்றி
என்னுடைய பயணக் கட்டுரை ஒன்றில் எழுதி இருப்பதாக நினைவு. மூக்கில் ஒரு பெரிய
வளையம் மாட்டி, அதிலிருந்து ஒரு செயின் காதுத் தோட்டுடன் இணைத்திருப்பார்கள். அந்த
வளையம் போட்டுக்கொண்டு எப்படி தான் சாப்பிடுகிரார்களோ என்று தோன்றும். இந்த
நிகழ்விலும் இப்படி பெரிய வளையம் அணிந்த பெண்களைப் பார்க்க முடிந்தது – குறிப்பாக
நடனம் ஆடிக்கொண்டிருந்த பெண்கள்! அது சரி நீங்க மட்டும் இந்த மாதிரி நிகழ்வுகளைப்
பார்த்து ரசித்தால் என்ன அர்த்தம்? எங்களுடன் பகிர்ந்து கொள்ளக் கூடாதா என யாரும்
கேட்பதற்கு முன்னர் உத்திராகண்ட் மாநிலத்தின் இரண்டு பிரபலமான பாடல்களின் காணொளிகளை
கீழே தந்திருக்கிறேன். நீங்களும் பார்த்து ரசிக்கலாம்!
முதலாவது பாடல்….
இரண்டாவது பாடல்….
என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் ரசித்த
பாடல்களாக கொடுத்திருக்கும் இந்த இரண்டு பாடல்களை ரசித்தீர்களா? உங்கள் கருத்துகளை
பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.
நட்புடன்
வெங்கட்
தமிழகத்திலிருந்து.....
குட்மார்னிங் வெங்கட். அங்கும் கொடுக்கப்பட்ட உணவை சுவை பார்த்தீர்களா இல்லையா? அதைச் சொல்லவில்லையே...!!
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம். அங்கே கொடுக்கப்பட்ட உணவை சுவைக்கவில்லை - எனக்கு அழைப்பில்லை - வரும் போது அங்கே சென்றேன் - அழைப்பில்லாமல் உணவு உண்ண முடியாதே! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
முதல் காணொளியில் அந்தப் பெண் பாடுவது "வீடு பார்ப்போம்... வாழ பார்ப்போம்" என்பது போல இருக்கிறது. ரசித்துப் பாடுகிறார்கள்! டியூனும் ரசிக்கக் கூடியதாய் இருக்கிறது. இரண்டுமே நீளமான பாடல்களாய் இருக்கும் போல.
பதிலளிநீக்குகொஞ்சம் நீளமான பாடல்கள் தான். வீடு பார்ப்போம், வாழ பார்ப்போம்! :) நீங்கள் சொல்லும் பாடலை கேட்ட நினைவில்லை.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
// நீங்கள் சொல்லும் பாடலை கேட்ட நினைவில்லை.//
நீக்குஅப்படி எதுவும் பாடல் இல்லை. நீங்கள் கொடுத்திருக்கும் காணொளியில் வரும் பாடல் வரிகள் "வீடு பார்ப்போம்.. வாழ பார்ப்போம்" என்று வருவது போல கேட்கிறது என்று சொன்னேன்!
:)))
ஹாஹா... எனக்குத் தான் புரியவில்லை!
நீக்குதங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி
இரண்டாவது காணொளியில் வருபவர் கொஞ்சம் மன்சூர் அலிகானை நினைவு படுத்துகிறார்!
பதிலளிநீக்குஹையோ ஸ்ரீராம் நானும் பார்த்ததும் அட நம்மூர் மன்சூர் போல இருக்காரே என்று நினைத்தேன்
நீக்குகீதா
மன்சூர் அலி கான்! ஹாஹா... ஓரளவுக்கு!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
அட நீங்களும் அப்படியே நினைத்தீர்களா கீதா ஜி!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
பதிவுக்கு வரதே பெரிய விஷயமா இருக்கு! :) முகநூல் வழியாச் சுத்திக் கொண்டு வர வேண்டி இருக்கு. காணொளியை மத்தியானமாத் தான் பார்க்கணும். பெண்கள் அனைவரும் கொள்ளை அழகு!
பதிலளிநீக்குநானும் பெண்கள் அழகு என்று எழுதலாம்னு நினைச்சேன். அழகில்லாத பெண்கள் ஏது (எங்கள் பார்வையில்).
நீக்குகீசா மேடம்.. உங்களுக்கு பெரிய ரங்குவைத் தரிசனம் செய்வதாகட்டும், இடுகைக்கு வருவதாகட்டும்... சுற்றுப்பாதைதான் போல. ஹா ஹா ஹா.
ரங்குவைப் பார்க்கச் செல்வதில் சுத்திண்டு எல்லாம் போகலை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், கோயிலில் அப்படிப் பாதை அமைச்சிருக்காங்க! நீங்க போனாலும் அப்படித் தான் போயாகணும். இங்கே இத்தனை நாட்கள் நல்லாத் தான் வந்துட்டு இருந்தேன். இப்போத் தான் 2,3, நாட்களாய்! எ.பி.க்குக் காலங்கார்த்தாலே போனால் நேரடியா உள்ளே நுழையலாம். ஆனால் இப்போல்லாம் தாமதமா வரதாலே முகநூல் வழி தான்! :)))))
நீக்குஹாஹா... சுத்தி சுத்தி வந்துடுங்க - எப்படியாவது!
நீக்குமலைப் பிரதேச பெண்கள் கொஞ்சம் அழகு அதிகம் தான்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.
அழகில்லாத பெண்கள் ஏது - ஹாஹா.... சரியாகச் சொன்னீர்கள்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
முகநூல் வழியோ, நேரடியாகவோ - வருவது மட்டுமே முக்கியம்!
நீக்குஇம்முறை கோவிலுக்குப் போகவே இல்லை!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...
காணொளி இரசிக்க வைத்தது ஜி பகிர்வுக்கு நன்றி
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
நீக்குஉணவைப் பற்றிச் சொல்லையே. காணொளி பிறகு பார்க்கிறேன்.
பதிலளிநீக்குஅங்கே உண்ணவில்லை நெல்லைத் தமிழன். அதனால் தான் சொல்லவில்லை.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
பாட்டோட அர்த்தத்தையும் சொல்லி இருக்கலாம்.
பதிலளிநீக்குஹிந்தி கத்துக்கோங்கன்னு சொன்னா கேட்டாத்தானே! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!
முதல் பாடல் மிக இனிமை.
பதிலளிநீக்குஆடலும் இயற்கை காட்சிகளும் அருமை.
இரண்டாவது பாடலும் நன்றாக இருக்கிறது. ஆட்டம் அருமை.பெண்ணின் மூக்கு அணிகலன் பற்றிதான் பாடுகிறார் போலும் இரண்டாவது பாடல்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...
நீக்குரொம்பப் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய பாடல்! படம் பிடித்த விதம் அருமை!
பதிலளிநீக்குஆமாம் கொஞ்சம் பெரிய பாடல் தான்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...
>>> நடனத்தினை விட பக்கத்து பந்தலில் இருந்து வந்த உணவின் வாசம் ... <<<
பதிலளிநீக்குஆகா.. அருமை!...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!
நீக்குஆடலுடன் பாடல் கேட்டு ரசிப்பதுதானே சுகம் சுகம் சுகம்!!!! இரு காணொளிகளும் பாட்டும் செமையா இருகு. பெண்கள் அழகு என்றால் அந்த மூக்கு ரிங்க். அதானே எப்ப்டிச் சாப்பிடுவார்கள் உங்கள் கேள்வியேதான் ஹா ஹா ஹா ஹா...
பதிலளிநீக்குசாப்பாட்டு வாசம் ஹா ஹா ஹா அதானே முதலில் அதுதானே நம்மை வந்தடையும்...ஹா ஹா ஹா
கீதா
எப்படிச் சாப்பிடுவார்கள்? அதானே!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!