புதன், 16 மே, 2018

குஜராத் போகலாம் வாங்க – கிர் வனத்திலிருந்து தங்குமிடம் – காலை, மதிய உணவு – அஹமதாபாத் நோக்கி…



இரு மாநில பயணம் – பகுதி – 39

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


நாங்கள் பயணித்தது இந்த வாகனத்தில் அல்ல!
Gகிர் வனத்திலிருந்து அஹமதாபாத் நோக்கி....

வனப்பயணத்தினை முடித்து வனத்துறையின் அலுவலகத்திற்கு வந்து சில நினைவுப் பரிசுகளை வாங்கிக் கொண்டு வெளியே வந்த நாங்கள், எங்கள் வாகன ஓட்டுனர் முகேஷ்-ஐ அழைத்தோம். காலையில் எங்களை வன அலுவலகத்திற்கு அருகே விட்டுவிட்டு அவர் தங்குமிடம் சென்று விட்டார். வாகனத்தினை கொஞ்சம் நீராட்ட வேண்டும் – Water Wash – என்று சொல்லி இருந்தார். அவரை அழைத்து எங்கள் வேலை முடிந்ததைச் சொன்னோம். சில நிமிடங்களில் அவர் வந்து சேர வேண்டும் – அது வரை வெளியே நின்று கொண்டிருந்த எங்களை வனத்துறையைச் சேர்ந்த சிலர் சிங்கம் பார்க்க வேண்டுமானால் காட்டுக்குள் அழைத்துச் செல்கிறோம் என கேட்டுக் கொண்டிருந்தார்கள்.




நாங்கள் பயணித்தது இந்த வாகனத்திலும் அல்ல!
Gகிர் வனத்திலிருந்து அஹமதாபாத் நோக்கி....


ஷிவ் ஃபார்ம் ஹவுஸ் உரிமையாளர் மோஹித் [இடமிருந்து வலம் - இரண்டாவது நபர்] உடன் நாங்கள் ஐவரும்...



இப்படி அழைத்துச் செல்வதை Location என்று அழைக்கிறார்கள் – சிங்கங்கள் இருக்கும் இடங்களை அவர்களுக்குள் விசாரித்துக் கொண்டு வனத்திற்குள் அழைத்துச் செல்வதாக பேரம் பேசுவார்கள் – வனத்துறைக்கு காசு போகாமல் அவர்களின் பாக்கெட்டுகளுக்கு காசு போகும்! இப்படி நிறைய பேர் அங்கே சுற்றிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களிடம் பேரம் பேசி வனத்திற்குள் செல்பவர்களும் இருக்கிறார்கள். நாங்கள் மென்மையாக மறுத்து விட்டோம். அது தான் எட்டு சிங்கங்களை அவ்வளவு கிட்டத்தில் பார்த்து இருக்கிறோமே. அங்கே சில புகைப்படங்களை எடுத்துக் கொண்ட பிறகு எங்கள் ஓட்டுனர் முகேஷ் வந்து சேர, அவர் வண்டியில் தங்குமிடம் சென்று சேர்ந்தோம். அங்கே தங்குமிட உரிமையாளர் மோஹித் எங்களுக்காக காத்திருந்தார்.


ஓட்டுனர் முகேஷ் [இடமிருந்து வலம் - இரண்டாவது நபர்] உடன் நாங்கள் ஐவரும்...


பயணித்த பாதையில் ஒரு கோவில் நுழைவாயில்....

Gகிர் வனத்திலிருந்து அஹமதாபாத் நோக்கி....



மாலை நேரச் சூரியனா? இல்லை தெருவிளக்கா?

காலை உணவாக ஆலு பராட்டாவும் தொட்டுக்கொள்ள இனிப்பு ஊருகாயும், தயிரும். நன்றாகவே இருந்தது.  சுவைத்துச் சாப்பிட, கொஞ்சம் உறக்கம் வந்தது. காலை சீக்கிரமே எழுந்ததால் உறக்கம். மரத்தடியும் கயிற்றுக் கட்டிலும் இருக்க கேட்பானேன். கொஞ்சம் படுத்து அரை மணி நேரம் உறக்கம். மோஹித் வந்து அருகே உட்கார எழுந்து அவருடன் அவரது தொழில் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். தங்குமிடம் மட்டுமே இருந்தால் அத்தனை வருமானம் பார்க்க முடியாது – சில சமயங்களில் வனம் சுற்றுலாப் பயணிக்களுக்கு மூடிவிடுவதால் வருடம் முழுவதும் விருந்தினர் வருகை இருக்காது. அதுவும் இந்த தொழில் எனக்கு இரண்டாவது தொழில் தான் – முக்கிய தொழில் மாந்தோப்பு தான் என்றும், வருடத்திற்கு மாந்தோப்பில் இருந்து நல்ல வருமானம் என்றார். கிட்டத்தட்ட 10000 பெட்டி [ஒவ்வொரு பெட்டியிலும் 10 கிலோ மாம்பழம்] வரை விற்பனை செய்ய முடிகிறது என்றார்.


போதுமா Bags! இத்தனையும் இரு சக்கர வாகனத்தில்....

Gகிர் வனத்திலிருந்து அஹமதாபாத் நோக்கி....


கொஞ்சம் பேசிக் கொண்டிருந்த பிறகு ஒவ்வொருவராக குளித்து உடைமைகளை சரிபார்த்து Pack செய்து கொண்டிருந்தோம். இந்த ஷிவ் ஃபார்ம் ஹவுஸ் முன்பதிவு செய்யும் போது, மூன்று வேளை உணவு, தங்கும் வசதி எல்லாவற்றுக்கும் சேர்த்து தான் பேசி இருந்தேன். அதனால் மதியமும் சாப்பிட்டுத் தான் புறப்பட வேண்டும் என மோஹித்-இன் அன்புத் தொல்லை! சரி பணமும் கொடுக்கிறோம் சாப்பிட்டுவிட்டு புறப்படலாம் என முடிவு செய்தோம். கொஞ்சம் ஓய்வாக இருந்து விட்டு, மதிய உணவு தயாராக, மதிய உணவினையும் முடித்துக் கொண்டோம். கத்தியாவாடி உணவு – ரொட்டி, சாதம், DHதால், Bபிண்Dடி மசாலா, Chசாச்ch, வெல்லம் சேர்த்த தக்காளி சாலட்! என சுவையான மதிய உணவு. ரொம்பவே நன்றாக இருந்தது.




Gகிர் வனத்திலிருந்து அஹமதாபாத் நோக்கி....



மதிய உணவை உண்ட பிறகு, தங்குமிட வாடகை கொடுத்து, மூன்று வேளை உணவு சமைத்துக் கொடுத்த பெண்மணியையும் அழைத்து அவருக்கு கொஞ்சம் அன்பளிப்பாக கொடுத்தோம் – இந்தப் பயணத்தில் கிடைத்த உணவு வகைகளில் இந்த உணவுக்குத் தான் முதலிடம் என்றும் சொல்லி அவரை கொஞ்சம் மகிழ்ச்சியில் ஆழ்த்தினோம். வெட்கத்தோடு நன்றி சொல்லி நகர்ந்தார். வண்டியில் எங்கள் உடைமைகளை எடுத்து வைக்க அங்கே இருந்த சிப்பந்திகள் கைகொடுத்தார்கள். அவர்களுக்கும் அன்பளிப்பு கொடுத்து அங்கிருந்து நாங்கள் புறப்பட்டபோது மதியம் இரண்டு மணி! Gகிர் வனப்பகுதியிலிருந்து நாங்கள் சென்று சேர வேண்டிய இடம் – ஆம்தாவாத் – அதாவது அஹமதாபாத்! கிட்டத்தட்ட 350 கிலோமீட்டர் தொலைவு! குறைந்தது ஏழு மணி நேரமாவது ஆகும்!


மறையத் தயாராகும் மாலைச் சூரியன்...

Gகிர் வனத்திலிருந்து அஹமதாபாத் நோக்கி....


அன்றைய இரவு தங்குவதற்கு எந்த முன்னேற்பாடும் செய்து இருக்கவில்லை. அங்கே சென்ற பிறகு தான் தேட வேண்டும்! பார்த்துக் கொள்ளலாம் என்ற தைரியம். நெடுஞ்சாலையில் பார்த்த காட்சிகளை படம் பிடித்துக் கொண்டே பயணித்துக் கொண்டிருந்தோம். பயணித்துக் கொண்டிருக்கும்போது உங்கள் வசதிக்காக, Gகிர் பயணம் செய்ய நினைப்பவர்கள் வசதிக்காக சில குறிப்புகள் – வனப் பயணம் செய்ய வேண்டுமானால் இணையம் மூலம் முன்பதிவு செய்ய வேண்டியது மிக அவசியம். அதற்கான இணைய முகவரி - http://girlion.in/ForestVisitDetails.aspx. இங்கேயும் தங்குமிடங்கள் உண்டு. அதற்கும் முன்பதிவு செய்து கொள்ளலாம். தவிர நிறைய ஃபார்ம் ஹவுஸ்கள் இங்கே உண்டு. நாங்கள் தங்கிய ஷிவ் ஃபார்ம் ஹவுஸ் இணைய முகவரி - http://shivfarmhouse.com/ உரிமையாளர் மோஹித் உனட்கட்-இன் அலைபேசி எண் – 0-9558565397. செல்வதற்கு முன்னர் இவரிடம் பேசி முன்பதிவு செய்து கொள்ள முடியும்.


நாங்கள் பயணித்தது இந்த வாகனத்திலும் அல்ல!

Gகிர் வனத்திலிருந்து அஹமதாபாத் நோக்கி....


தொடர்ந்து என்ன செய்தோம் என்பதை வரும் பகுதியில் சொல்கிறேன். அடுத்த பகுதியில் சந்திக்கும் வரை….

தொடர்ந்து பயணிப்போம்.
 
நட்புடன்

வெங்கட்
தமிழகத்திலிருந்து....

38 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி...ஆஜர்....கணினி படுத்தல்...பதிவு வாசித்தாயிற்று....கருத்து பின்னர்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கணினி படுத்தல்! :( விரைவில் சரியாகட்டும் கீதா ஜி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. குட்மார்னிங் வெங்கட். சிங்கத்தைப் பார்த்து வந்துவிட்டது தெரியாமலேயே அழைத்துக் கொண்டிருந்தார்களா? காசா? வனத்துறையினருக்கு இது தெரியாமல் இருக்குமா என்ன!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வனத்துறையினருக்கும் தெரிந்தே தான் நடக்கிறது எனப் புரிகிறது. எல்லோரும் ஒன்றுக்குள் ஒன்று தானே! காசு கொடுத்தால் எதையும் செய்யத் தயாராக இருப்பவர்கள் நிறையவே உண்டு.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. மோஹித்தைப் பார்த்தால் என் இரண்டாவது பையனைப் பார்ப்பது போல இருக்கிறது! முகேஷை முன்னரே பார்த்திருக்கிறோம் இல்லை? (போதை தெளிந்த கோலத்தில்!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம் இப்போதுதான் புகைப்படத்தைப் பார்த்தேன் ஆம் !!

      முகேஷை முன்னரே பார்த்திருக்கிறோம் இல்லை? (போதை தெளிந்த கோலத்தில்!)//
      ஹா ஹா ஹா ஹா ஆமாம்...

      கீதா

      நீக்கு
    2. உங்கள் இரண்டாவது மகன் போல இருக்கிறாரா மோஹித்! உருவ அமைப்பு இப்படி இருப்பது பார்க்க முடிகிறது! ஏழு பேர் ஒரே மாதிரி இருப்பாங்கன்னு சொல்றது உண்மையோ?

      முகேஷ் - போதை தெளிந்த கோலத்தில்! ஹாஹா....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    3. ஓ நீங்கள் ஸ்ரீராம் அவர்களின் இரண்டாவது மகனைப் பார்த்திருக்கிறீர்களா? அவரையே நான் இன்னும் பார்க்க முடியவில்லையே கீதா ஜி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. விளக்குக் கம்பத்தில் நடுவில் சூரியன்... அதுவே பொருத்தப்பட்ட விளக்கு போல இருக்கிறது. அழகு. அழகாக எடுத்திருக்கிறீர்கள்.

    மரங்களிடையே தெரியும் சூரியன் படமும் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளக்குக் கம்பத்தில் நடுவே சூரியன் - பயணித்தபோது எடுத்தது சரியாக அமைந்திருக்கிறது.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. வனத்துக்கு அருகிலேயயே கயிற்றுக் கட்டிலில் படுத்து உறங்க தைரியம் வேண்டும்! நடுவிலேயே விழித்துப் பார்க்கும்போது நாய்க்குட்டி போல ஒரு சிங்கமும் நம் அருகில் படுத்திருந்தால் எப்படி இருக்கும்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விழித்துப் பார்க்கும்போது நாய்க்குட்டி போல ஒரு சிங்கமும் நம் அருகில் படுத்திருந்தால்..... கற்பனை செய்யவே பங்கரமாக இருக்கிறதே ஸ்ரீராம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. ஹப்பா கணினி தோழி எழுந்துவிட்டாள்...எப்படியோ அவளி தாஜா பண்ணி எழுப்பிவிட்டேன் இனி அவள் சோர்வதற்குள் சென்னைக்கும் திருவரங்கத்திற்கும் மாறி ஓட வேண்டும் ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கணினித் தோழி! :))

      திருவரங்கத்திற்கும் சென்னைக்கும் மாறி மாறி ஓட்டம்! ஹாஹா....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  7. அந்த மாலை சூரியன் வெகு அழகாக விளக்குக் கம்பத்தில் பொருந்தி வந்திருப்பது செம அழ்கு!!! எப்படி ஜி ஓடும் வண்டியிலிருந்தா எடுத்தீர்கள் வாவ்!!!! சூப்பர்...ரொம்ப அழகான படம்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓடும் வண்டியிலிருந்து எடுத்த படம் தான் கீதா ஜி!. சரியாக அமைந்தது ஃப்ளூக் தான்! என் திறமையில்லை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  8. வனத்திற்குள் எப்படி வனத்துறை மக்களே இப்படி ப்ரைவேட்டாக அழைத்துச் செல்கிறார்கள். வனத்துறை எப்படி அனுமதிக்கிறார்கள்..

    சாப்பாடு செம மெனு....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோரும் ஒன்றுக்கொன்று தான்! பணம் எல்லாவற்றையும் சரி செய்து விடும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    பயணமும் அருமை. அதை எழுதிய விதமும், படங்களும் மிகவும் அருமை. மாலைச்சூரியனை விளக்கு கம்பத்திற்கு நடுவில் இருக்குமாறு எடுத்த புகைப்படம் மிகவும் ரசித்தேன்.

    நீங்கள் பயணிக்காத வாகனங்கள் நன்றாக இருந்தது. இருசக்கர வாகனத்தில் இத்தனை லக்கேஜ்களா?

    இருக்கும் இடத்தை விட்டு புறப்பட்ட அனுபவங்களை அழகாக கூறிய விதங்களை ரசித்தேன்.

    சென்றவாரம் நான் இன்னமும் படிக்கவில்லை. படித்த பின் அதற்கும் கருத்து தெரிவிக்கிறேன். பகிர்வுக்கு நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு
  11. படங்களும் பதிவும் அழகு.. அருமை..
    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  12. கயிற்றுக் கட்டில் தூக்கம் ஆஹா சுகம் சுகம் அதுவும் வனம் அருகில்...மெனு ஃபோட்டோ போடவில்லையே வெங்கட்ஜி...நார்மலாக சாப்பாட்டுப் படமும் வந்துவிடுமே!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாப்பாட்டுப் படம் எடுக்க வில்லை என்பதால் இங்கே இல்லை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  13. மாலை நேரத்து சூரியன் படங்கள் வெகுவாக கவர்ந்தன...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

      நீக்கு
  14. விளக்கு கம்பத்தின் மீதான சூரியன் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

      நீக்கு
  15. உடன் பயணிக்கிறோம். அருமையான புகைப்படங்கள் நிகழ்விடத்திற்கே எங்களை அழைத்துச்சென்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  16. சூரியன் நீங்கள் படம்பிடிக்கவே வந்தது போல் இருக்கிறதே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  17. பயண அனுபவங்கள் அருமை. இந்தத் தடவை உங்களுக்கு உணவுப் பிரச்சனை இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  18. சிங்கத்தைப் (படம்) பிடித்த சிங்கங்கள் படமும் நன்றாகவே இருக்கு! எல்லாத்தையும் விட அந்தச் சாப்பாட்டு மெனு. உடனே போய்ச் சாப்பிடணும்னு தோணுது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாப்பாட்டு மெனு உங்களுக்குப் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி கீதாம்மா....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....