சமீபத்தில் கோவைக்கு ஒரு பயணம் – பள்ளிப்
பருவ நட்புகளை சந்திக்க ஒரு வாய்ப்பு அமைந்தது. அதற்குச் சென்ற போது கிடைத்த அனுபவங்கள்….
திருச்சி ஜங்ஷனில் –
தூய்மை இந்தியா
ரயில் பயணத்தில்….
கிளம்பிய நிமிடத்திலிருந்து ஆரம்பம்.
மசால் வடை, பஜ்ஜி, ஸ்வீட் போளி, ரோஸ்
மில்க், காலிப்ளவர் chசில்லி.
சத்தியமா நான் இந்த விளையாட்டுல இல்ல... :)))
விற்பனையில் - மூன்று புத்தகங்கள்
50 ரூ, மல்லிப்பூ, கீ செயின்...
முன்னாடி சீட்டில் இருப்பவருக்கும்
பின்னாடி சீட்டில் இருப்பவருக்கும் திடீரென்று சண்டை :) எதற்கென்று தெரியலை :) தெரிஞ்சா
சொல்லி இருக்கலாம்:)
சொர்க்கமே என்றாலும்…
எங்கூரு எங்கூரு தான்!!
ஈரோடு தாண்டிய பிறகு தான் சில்லென்ற
குளுமையான காற்று வீசத் துவங்கியது. ஏறக்குறைய பத்து மணி போல கோவை சென்றடைந்தேன். முதல்
நாள் இரவு மழை. அடுத்த நாள் காலையில் சில்லென்ற சூழலை அனுபவிக்கத் தொடங்கியிருக்கேன்.
கோவையில் இருக்கறவங்க கொடுத்து வச்சவங்கப்பா.
இந்த நாள் இனிய நாள்!!!
சமீபத்தில் எங்கள் பள்ளியின்
முன்னாள் மாணாக்கர்களின் சந்திப்பு வெகு விமரிசையாக நடைப்பெற்றது. பள்ளியில்
மராமத்து வேலைகள் நடைபெறுவதால், விளையாட்டு மைதானத்தில் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
விழாக்குழுவினர் மிகவும் அருமையாக ஏற்பாடு செய்திருந்தனர்.
பள்ளிக் கட்டிடத்துக்குச் சென்று
மகளுக்கு காண்பித்தேன். நினைவு அடுக்குகளில் இருந்த காட்சிகள் கண்முன்னே
விரிந்தது. நிறைய மாற்றங்கள். தோழமைகளின் அறிமுகம் கிடைத்தது. ஜூஸுடன் வரவேற்று
உபசரித்தனர்.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி
துவங்கி, ஆசிரியர்களின் உரையுடன் தொடர்ந்தது. குழுப்புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.
தோழமைகளின் கலகலப்பான பேச்சுடன் நாள் இனிமையாக கடந்தது.
அடுத்து மதிய உணவு மிகச்சிறப்பாக
இருந்தது. பாக்கு மட்டை தட்டுகளில் காசி ஹல்வா, சப்பாத்தியுடன் பனீர் பட்டர்
மசாலா, வெஜிடபிள் புலாவ், சேமியா பகாளாபாத் மற்றும் ஐஸ்க்ரீம். எல்லோருக்கும்
தண்ணீர் பாட்டில்களில்.
மாணாக்கர்களின் சுய அறிமுகத்தில்
அடியேனும் சில வார்த்தைகளில் என் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டேன்.
என் ஆசிரியர் மகளிடம், "உன்
அம்மா ரொம்ப சமத்து!! நல்லா படிப்பா! எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு
செய்வா!! நீயும் அம்மா மாதிரி இருக்கணும்!!" என்றார். மிகவும் மகிழ்ச்சியாக
இருந்தது.
1992 பேட்ச்சில் தான் விஜய்
தொலைக்காட்சி புகழ் கோபி நாயர் [தன் குரலால் நம்மை வசியம் செய்பவர்] என்ற தகவலை
இன்று தான் என் சீனியர்கள் மூலம் தெரிந்து கொண்டேன். 1969ல் படித்தவரும், 1971ல்
படித்தவரும் கூட இன்று கலந்து கொண்டனர்.
ஒருசில ஆசிரியர்களை இன்னும்
பார்க்க நினைத்திருந்தேன். முடிந்தால் அடுத்த முறை சந்திக்க எண்ணம். இப்படியான
நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற வேண்டும்.
ஆசிரியர்களின் உரையில் அவர்கள் எங்களிடம்
நடந்து கொண்ட விதத்தையும், நாங்கள் எங்கள் பிள்ளைகளை வழிநடத்தவும் அறிவுரை வழங்கினார்கள்.
அவர்கள் பேசும் போது, "எங்கள் குழந்தைகளான நீங்கள்" என்ற போது, அப்படியே
வயது குறைந்து பள்ளிப்பருவத்திற்கு சென்று விட்ட உணர்வு. மனதுக்கு மிகவும் நெகிழ்வாக
இருந்தது.
தோழமைகள் ஒவ்வொருவரும் அவர்கள் இந்தப்
பள்ளியின் மூலம் கற்றுக் கொண்ட கல்வியும், தாங்கள் வாழ்வில் முன்னேறிய விதத்தையும்
பகிர்ந்து கொண்டனர்.
அன்றைய மாணாக்கர்கள் இன்றைக்கு காவல்துறையிலும்,
பத்திரிக்கைத் துறையிலும், வியாபாரத்திலும், ஆசிரியப் பணியிலும் சிறந்து விளங்குகிறார்கள்.
எங்கள் பள்ளியின் நிறுவனர் R.K. சண்முகம்
செட்டியார் சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சர். காந்தியால் நியமிக்கப்பட்டவராம்.
போன்ற பெருமைவாய்ந்த விஷயங்களையும் கூட்டத்தில் நினைவு கூர்ந்தனர்.
இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்த தோழமைகளுக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
மீண்டும் ச[சி]ந்திப்போம்…
நட்புடன்
இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி அண்ட் ஆதி
பதிலளிநீக்குகீதா
காலை வணக்கம் கீதா ஜி!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
குட்மார்னிங் திருமதி வெங்கட். திருச்சி ரயில்வே ஸ்டேஷன் சுவர் ஓவியங்கள் அழகாய் இருக்கிறது.
பதிலளிநீக்குஇந்த ரயில் பயண திங்கற அனுபவம் பற்றி (அடுத்த சீட் காரர்கள்தான்!) நானும் முன்பு ஒரு பதிவு எழுதி இருந்தேன்.
நெகிழ்ச்சியான அனுபவங்கள். மீண்டும் குழந்தைகளாக ஒரு சந்தர்ப்பம்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குஸ்வச் பாரத் படங்கள் அழகாக இருக்கின்றன
பதிலளிநீக்குரயிலில் இப்போதெல்லாம் என்னென்னமோ வந்துக்கிட்டே இருக்கு. நமக்குத்தான் ஆர்வம் வருவதில்லை அதை வாங்க. பல பயங்கள் வருகின்றன அதுவும் இப்போது வாட்சப் வந்ததிலிருந்து அதில் வரும் படங்களைப் பார்த்து...
கோவை எனக்கு மிகவும் பிடித்த ஊர். மூன்று வருடங்கள் அங்கு இருந்திருக்கிறேன்.
கீதா
என்னென்னமோ வந்துக்கிட்டே இருக்கு! உண்மை தான். அத்தனையும்/எதையும் சாப்பிட நமக்கு தோன்றுவதில்லை.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
மறக்கவே முடியாத இனிய சந்திப்பு... அனைவருக்கும் வாழ்த்துகள்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குபடித்த பள்ளி நண்பர் சந்திப்பு என்பது மிகவும் நல்ல தருணங்கள். நினைவடுக்குகளில் அடுத்த ஒரு அடுக்கு பின்பு நினைவு கூர...இல்லையா...சாப்பாடு நல்ல மெனு போல இருக்கே...
பதிலளிநீக்குகீதா
உண்மை தான். கூடப் படித்தவர்களை இப்படிச் சந்திப்பது சிறப்பான ஒன்று.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
அருமையான சந்திப்பு. எல்லாம் நன்றாக அமைந்ததும் மகிழ்ச்சி. இளவயது நண்பர்களுடன் மீண்டும் தொடர்பு வைத்துக் கொள்வதும் மிக அபூர்வமாக நடைபெறும். இனிமையான நினைவுகளைப் பகிர்ந்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குஇளவயது நண்பர்களுடன் மீண்டும் தொடர்பு - நல்லதொரு விஷயம். எல்லோருக்கும் இப்படி அமைந்துவிடுவதில்லை.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....
நாங்க செட்டில் ஆகவேண்டிய ஊர்கள் வரிசையில் கோவையும் இருந்தது. மைசூர், பெண்களூரும் இருந்தது. ஹோசூரும் இருந்தது. மைசூர், பெண்களூர் ஒரு சில காரணங்களால் தவிர்த்தோம். ஹோசூர் தண்ணீர்ப் பிரச்னை வரவேண்டாம் என்றனர். கோவை மற்ற ஊர்களுக்குச் செல்லக் கொஞ்சம் சிரமம். அதோடு திருச்சி மையத்தில் இருப்பதால் இங்கிருந்து எல்லா ஊர்களுக்கும் ரயில் வசதி இருக்கு! ஆகவே இதைத் தேர்ந்தெடுத்தோம். இப்போ இங்கே கோவையின் சீதோஷ்ணம் போலவே ஒரு வாரமா இருக்கு. :))))) ராத்திரி சீக்கிரமா ஏசியை அணைக்க வேண்டி இருக்கு. தினம் தினம் ஒரு மணி நேரமாவது தூற்றல்!
பதிலளிநீக்குஒரு வாரமா கோவையின் சீதோஷ்ணம் திருவரங்கத்திலும். உண்மை தான். நானும் இதனை உணர்ந்தேன். இன்றைக்கு தலைநகரில்! நேற்று இரவு 10.30 மணிக்கு விமானம் தரையிறங்கும் சமயத்தில் 40 டிகிரி!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...
அட! திரும்பியாச்சா? வருவீங்க அல்லது தொலைபேசி அழைப்பு வரும்னு நினைச்சேன். உங்க நம்பரை எ.பி. வாட்ஸப் குழுமத்தில் இருந்து சேமிக்கணும்னு நினைச்சுட்டு மறந்தே போகுது! இல்லைனா நானாவது பேசி இருப்பேன். நீங்க ரொம்பவே பிசினு தெரியும்! இருந்தாலும் எதிர்பார்த்தோம்! :))))))
நீக்குபயணங்கள், வேலைகள் என நிறையவே தடைகள் - உங்களைச் சந்திப்பதில்! அடுத்த முறை கண்டிப்பாக வருகிறேன்.
நீக்குதங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...
சந்திப்பை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
நீக்குஇனிய சந்திப்பு அருமை..
பதிலளிநீக்குதிருச்சி ஜங்ஷனில் – தூய்மை இந்தியா..ஆஹா அழகிய ஓவியங்கள்...
பல இரயில் நிலையங்களில் இப்படி வரைந்து இருக்கிறார்கள். தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!
நம்மோடு படித்த பள்ளி மாணவர்களை இப்போது சந்திப்பதில் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி உண்டாகிறது. இனிய தருணத்தை சுவாரஸ்யமாக சொன்னீர்கள்
பதிலளிநீக்குசந்திப்பில் இனம் புரியாத மகிழ்ச்சி - உண்மை தான். சமீபத்தில் எனது கல்லூரி நண்பர்களைச் சந்தித்தேன் - அப்போது இப்படித்தான் உணர்ந்தேன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.
உடன் படித்தவர்களைப் பார்க்கும்போது, அதுவும் பல வருடங்களுக்குப் பிறகு...மறக்க முடியாத அனுபவமாகவே இருந்திருக்கும். என்னுடைய அந்த நாள் நினைவுகள் மனதிற்கு வந்தன.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குபழைய பள்ளிப் பருவம் திரும்பி இருக்கும் ஆதிக்கு.. ஆதியின் தோளில் தொற்றிக் கொண்ட கிளி போல் ரோஷ்ணி அழகு.
பதிலளிநீக்குபடங்கள் , சொல்லிய செய்திகள் எல்லாம் அருமை.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...
நீக்குபள்ளிக்குச் சென்றாலும் எனக்கு அம்மாதிரி அனுபவம் கிடைக்காது இப்போது இருக்கும் தலைமை ஆசிரியரே நான்பள்ளி இறுதி படிக்கும்போது பிறக்காதவராம் என்னுடன்படித்தவர்கள் அநேகமாக சென்றிருப்பார்கள் எங்கே என்று சொல்லாமலே தெரியும் அல்லவா
பதிலளிநீக்குஎங்கே என்று சொல்லாமலே தெரியும்! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.