வெள்ளி, 25 மே, 2018

குஜராத் போகலாம் வாங்க – அமைதியைக் குலைத்த சண்டை – தமிழனும் மலையாளியும்



இரு மாநில பயணம் – பகுதி – 43

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!



சென்ற பகுதியில் சபர்மதி ஆஸ்ரமத்தின் சில காட்சிகளையும் தகவல்களையும் பார்த்தோம். அங்கே சொல்லாமல் விட்ட சில விஷயங்கள் இங்கே இன்றைக்கு தனிப்பதிவாக…..  ஆஸ்ரமத்தின் நுழைவாயிலில் ஒரு அறிவிப்புப் பலகை – இங்கே இருக்கும் தபால் பெட்டியில் போடும் தபால் அட்டையில் சர்க்கா அதாவது இராட்டை வடிவம் பொறித்து அனுப்பப்படும் – சாதாரண வட்ட வடிவ Seal போல இல்லாது இராட்டை வடிவ Seal வைத்து அனுப்புவார்கள் என தகவல் தெரிவித்தது. அதற்கான தபால் அட்டைகளும் ஆஸ்ரமத்திற்குள்ளேயே கிடைக்கிறது. வெளியில் பார்த்தபோதே ஒரு தபால் அட்டை வாங்கி மகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என முடிவு செய்தேன்.





ஆஸ்ரமத்திற்குள் WiFi இணைப்பும் இருக்கிறது. அதற்கான அறிவிப்பும் நுழைவாயில் அருகிலேயே இருக்கின்றது. அங்கேயும் சென்று அலைபேசியில் மூழ்க வேண்டாமென பயன்படுத்தவில்லை. அமைதியான சூழலில் பார்த்த இடங்கள் அனைத்துமே பிடித்திருந்தன. சுத்தமாக வைத்திருப்பதால் – பராமரிப்பு வேலைகள் நடக்கின்றன என்பதன் அறிகுறி! – அங்கே இன்னும் சில நிமிடங்கள் இருக்கலாம் என்று தோன்றியது ஒவ்வொரு பகுதியாக பார்த்துக் கொண்டே ஆஸ்ரமத்தில் இருக்கும் நினைவுப் பரிசு விற்பனை செய்யும் இடத்திற்கு வந்து சேர்ந்திருந்தோம். நிறைய புத்தகங்கள், காந்திஜி படம் போட்ட வாழ்த்து அட்டைகள், சாவிக் கொத்துகள், புத்தகத்திற்கான அடையாள அட்டைகள், கடிகாரங்கள் என பல விஷயங்களை இங்கே விற்பனை செய்கிறார்கள்.



முதல் பத்தியில் சொன்னது போல, தபால் அட்டைகளும் இங்கே தான் விற்பனை செய்கிறார்கள். அவற்றில் சில தபால் அட்டைகளை வாங்கி எனது மகளுக்கும், பிரமோத்-இன் மகன் – மகளுக்கும் அனுப்பி வைக்கலாம் – அவர்களுக்கும் பிடித்திருக்கும் என வாங்கினோம். ஆஸ்ரமத்தின் நுழைவாயிலில் இருக்கும் தபாய் பெட்டியில் வெளியே போகும் போது நினைவாகப் போட வேண்டும்! போடவும் செய்தேன். நண்பர் வீட்டுக்கு அனுப்பிய தபால் அட்டைகள் சென்று சேர, நான் மகளுக்கு அனுப்பிய தபால் அட்டை சென்று சேரவேயில்லை. நான் தபால் பெட்டியில் போட்டவுடனேயே மகளுக்கும் சொல்லி இருக்க, அவள் வரும் வரும் என எதிர்பார்த்து கிடைக்காமல் போனதில் வருத்தம். தபால் துறை பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை!



சரி மீண்டும் நினைவுப் பரிசு விற்பனை நிலையத்திற்கு வருவோம். நாங்கள் அங்கே இருந்த போது விற்பனைக்கு வைத்திருந்த விஷயங்களை பார்த்துக் கொண்டிருந்தோம். பலரும் குறிப்பாக சுற்றுலாப் பயணிகள் அங்கே இருந்தார்கள். அமைதியான சூழல் – விற்பனை பிரதிநிதிகள் கூட மெல்லிய குரலில் பேசினார்கள். அப்போது அங்கே இருந்த தமிழ்க் குடும்பம் ஒன்றும், மலையாளக் குடும்பம் ஒன்றும் அமைதியைக் குலைத்து விட்டார்கள். ஒரு குடும்பம் வாங்கிய பொருட்களின் விலையும், Bill-ல் வந்த விலையும் வேறு – Bar Coding பிரச்சனை! சரி பார்த்து விற்பனை பிரதிநிதியிடம் பேச வந்த அவர்களை – மற்ற குடும்பம் – நாங்க Bill போடும்போது எப்படி குறுக்கே வருவீர்கள் என சண்டைக்கு இழுத்தார்கள்.

சிறிது நேரத்திற்குள் அமைதியான சூழல் மாறி மீன் மார்க்கெட் போல ஆனது அந்த இடம். இத்தனைக்கும் சண்டைக்கு நடுவே, இரண்டு பேரும் இந்த இடத்திலும் வந்து சண்டை போட வேண்டுமா எனச் சொல்கிறார்களே தவிர சண்டையை விட்ட பாடில்லை. நான் தமிழர்களிடமும், நண்பர்கள் மலையாளிகளிடம் சண்டையை வெளியே போய் வைத்துக் கொள்ளுங்கள் என அவரவர் மொழியில் சொல்ல வேண்டியிருந்தது – அதுவும் பொறுக்க முடியாமல்! இந்தக் களேபரத்தில் விற்பனை நிலையத்தில் இருந்த சிப்பந்திகளும் குழப்பமடைந்து தவறு தவறாக Bill போடும்படி ஆனது – மற்றவர்களுக்கும்! ஏற்கனவே ஒரு தகராறு – அது முடிவதற்குள் அடுத்த தகராறு ஆரம்பித்துவிடுமோ என நினைக்க, சிப்பந்திகள் சுதாரித்துக் கொண்டார்கள்.



அங்கே சில புத்தகங்கள், சாவிக் கொத்துகள், பேனாக்கள் என சில நினைவுப் பரிசுகளை வாங்கிக் கொண்டு வெளியே வந்தோம். வெளியில் குஜராத்தி ஸ்பெஷல் ஆன டோக்லா விற்பனை நடந்து கொண்டிருந்தது. டோக்லாவும் பச்சை மிளகாயும் வைத்துத் தருவார்கள். டோக்லா ஒரு கடி, பச்சை மிளகாய் ஒரு கடி! வாவ் நல்ல சுவையாகவே இருந்தது. தில்லியில் நிறைய முறை சாப்பிட்டிருந்தாலும் குஜராத்தி உணவான டோக்லாவினை குஜராத்தில் சாப்பிடுவது தானே முறை! ரசித்து ருசித்து டோக்லா சாப்பிட்ட பிறகு அங்கிருந்து புறப்பட்டோம்.  நண்பரின் காலணியில் ஏதோ பிரச்சனை – அதைச் சரி செய்ய வேண்டும் எனச் சொல்ல, வழியில் ஒரு இடத்தில் நின்று சரி செய்து கொண்டோம். அவர் அதைச் செய்து முடிக்கும் வரை தேநீர்!

அங்கிருந்து புறப்பட்டு எங்கே சென்றோம், அங்கே பார்த்த விஷயங்கள் என்ன என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.

தொடர்ந்து பயணிப்போம்.
 
நட்புடன்

வெங்கட்
தமிழகத்திலிருந்து....

26 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!

    அணிலும், கடைசியில் ஏதோ ஒரு திங்க வும் கண்ணைப் பறிக்குது பார்த்துவிட்டு வருகிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் கீதா ஜி!. திங்க - டோக்லா - எனக்கும் பிடித்த ஒரு தின்பண்டம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. சுவர் ஏறிக் குதிச்சு வரவங்கலாம் ஏறிக் குதிச்சு வரதுக்குள்ள திங்க வ டேஸ்ட் பார்த்துட்டு நான் ஓடிப் போய்டறேன் அந்த அணிலைப் போல...ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா.... நிறைய பேருக்கு சுவர் ஏறி குதிக்கப் பழகிடுச்சு இப்ப! கூகிளாண்டவர் புண்ணியத்தில்! என்ன பிரச்சனை என்பது விளங்கவில்லை.

      அணில் போல் சுறுசுறுப்பு - வாவ்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  3. குட்மார்னிங் வெங்கட். தபால் அட்டை வாங்கியதும் ஒரு போட்டோ எடுத்திருக்கலாமே... இடங்களை சுத்தமாகவே பராமரிக்கிறார்கள் என்று படங்களை பார்த்தால் தெரிகிறது.​

    டோக்லா இதுவரை சுவைத்ததே இல்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தபால் அட்டை வாங்கியதும் ஒரு ஃபோட்டோ எடுத்திருக்கலாமே.... லாம். ஆனால் அப்போது எடுத்து வைக்கத் தோன்றவில்லை.

      டோக்லா நன்றாகவே இருக்கும் ஸ்ரீராம். சுவைத்துப் பார்க்க முடிந்தால் சுவையுங்கள். பச்சை மிளகாயை ஒரு கடி கடித்துக் கொண்டு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. ஆஸ்ரமத்து அந்த அறையில் விழும் வெயில் என்று அழகான புகைப்படம்…

    அதெப்படி கேரளத்திற்குச் சென்றிருக்கிறது தமிழ்நாட்டிற்கு வந்து சேரவில்லை? இப்போதாவது வந்து சேர்ந்ததா?
    காந்தியின் இடத்தில் சண்டை!!!! ம்ம்ம்ம் என்ன சொல்ல இந்த மனிதர்களை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேரளத்திற்குச் செல்கிறது தமிழகத்திற்கு வரவில்லை - இதுவும் அரசியலோ? ஹாஹா....

      காந்தியின் இடத்திலும் சண்டை - அந்த மனிதர்களை ஒன்றும் சொல்வதிற்கில்லை..... சொன்னாலும் புரிந்து விடுமா என்ன....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு

  5. டோக்ளா! குஜராத்தி ஸ்பெஷல் ஆச்சே…ரொம்பவே பிடிக்கும் வீட்டிலும் செய்வதுண்டு….டோக்லா வித் பச்சை மிளகாய் செமையா இருக்கும்…

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டோக்ளா உங்களுக்கும் பிடிக்கும் என்று தெரிந்து மகிழ்ச்சி. வீட்டிலே செய்வதில்லை. வெளியில் வாங்கியே சாப்பிடுவேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  6. ஹப்பா, உங்க பதிவுக்கு வரவே முடியலை! ரொம்ம்பக் கஷ்டமா இருக்கு! முகநூல் வழியா வந்து சுவர் ஏறிக் குதிச்சு! போதும்டா சாமி! :))))) நல்லாவே பராமரிப்பாங்க குஜராத்தில். கோயில்கள் கூடச் சுத்தமாகவே இருக்கும். தெருக்களிலும் குப்பைகள், குப்பை மலைகள் பார்க்க முடியாது! டோக்ளா எனக்கு ரொம்பப் பிடிச்சது. வழக்கம் போல் நம்ம ரங்க்ஸுக்கு அது பிடிக்காது! ஹெஹெஹெஹெ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கு, ஸ்ரீராம்க்கு, சில சமயம் கீதாஜிக்கு என ஏதோ பிரச்சனை - என் தளம் வருவதில். என்ன என்று புரியவில்லை. எனக்கும் சிலரின் தளங்கள் திறப்பதில்லை.

      வழக்கம் போல் ரங்க்ஸுக்கு பிடிக்காது - ஹாஹா.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  7. வேடிக்கை என்னனா முகநூலில் இருந்து திறக்கறசே உங்க டெம்ப்ளேட்டின் வல, இடப்பக்கங்களில் மஸ்டர்ட் நிற பார்டர் முழுசாப் பதிவுக்குள் வந்து நடுவில் இந்த க்ரீம் கலர் கொஞ்சம் போல் தெரியும். படிக்கக் கஷ்டமா இருக்கும். ஆனாலும் விடுவோமா என்ன? படிச்சுட்டுக் கருத்துச் சொன்னதும் தானே சரியாகும்! இது என்ன மாஜிக்? ஹிஹிஹி, ஒரு வாரமா இப்படித் தான் நடக்குது! ஏதேனும் இக்ஷிணி வேலையா? நமக்குனு விசித்திரமா எல்லாம் நடக்குது! ஏற்கெனவே எல்லோரும் நம்மை வியர்டு னு சொல்வாங்க! இப்போ இது வேறே! :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இக்ஷிணி வேலையா? ஹாஹா.... சிலருக்கு இப்படித்தான் நடக்குது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

      நீக்கு
  8. என்னன்னா இம்மாதிரிச் சின்னச் சின்ன விஷயங்கள் தான் மன இறுக்கத்தைத் தளர்த்தி நம்மை நிதானத்துக்குக் கொண்டு வருகிறது. ஆகவே இவற்றை நான் ரசிக்கவே செய்கிறேன். :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இம்மாதிரிச் சின்னச் சின்ன விஷயங்கள் தான் மன இறுக்கத்தைத் தளர்த்தி நம்மை நிதானத்துக்குக் கொண்டு வருகிறது - நூற்றுக்கு நூறு உண்மை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    அருமையான விபரங்கள். தங்கள் மகளுக்கு அனுப்பிய தபால் கார்டு மட்டும் ஏன் வந்து சேரவில்லை... எதிர்பார்க்கும் போது ஏமாற்றம் சற்று கடினமாகத்தான்
    இருக்கும். படிக்கும் எனக்கே ஒரு மாதிரிதான் இருந்தது.

    அணில் படமும், டோக்ளா படமும் நன்றாக இருந்தது.

    எங்கு வந்தாலும் மனிதர்கள் தங்கள் நியாயம் கூறி சண்டை போட வேண்டுமா? அமைதி காக்கும் இடத்திலாவது சிறிது விட்டு கொடுக்க வேண்டாமோ?
    பகிர்வுக்கு நன்றிகள். தொடர்கிறேன்..

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதிர்பார்க்கும்போது ஏமாற்றம் கடினம் தான் - உண்மை.

      அமைதி காக்கும் இடத்திலாவது சண்டை போடாமல் இருக்கலாம் - என்ன சொல்வது. அவர்களுக்கு அது புரியவில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு
  11. சிலருக்கு பொது இடத்தில் இப்படி நடந்து கொள்வது தவறென்று உணர்வதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். உணர்வு இருந்திருந்தால் இப்படிச் சண்டை போட்டிருக்க மாட்டார்களே....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  12. >>> தபால் துறை பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை!.. <<<

    எத்தனை ஆவல் மனதில் இருந்திருக்கும்?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். நான் மகளிடமும் சொல்லி விட்டதால் அவருக்கு எதிர்பார்ப்பு இருந்தது. கிடைக்காததால் கஷ்டமாகிவிட்டது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  13. அட! தபால் அட்டை அட போட வைத்தது. மகளுக்கு வந்து சேராதது பாவம் ஆசையுடன் காத்திருந்திருப்பார் இல்லையா.

    குஜராத் சுத்தமாக இருக்கிறது என்று படங்கள் சொல்லுகின்றன. படங்கள் வழக்கம் போல் மிகவும் அழகாக இருக்கின்றன. டோக்ளா எப்படி இருக்கும் என்று தெரியாது. சுவைக்க வாய்ப்பு கிடைத்தால் சுவைக்க வேண்டும்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல இடங்கள் சுத்தமாகவே இருக்கின்றன - சில Exceptions உண்டு!

      டோக்ளா சுவைக்கக் கிடைத்தால் சுவைத்துப் பாருங்கள். நன்றாகவே இருக்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....