படம்: இணையத்திலிருந்து....
எங்கள் வீட்டின் அருகே இருந்த
குடிசைகளை இடித்தது பற்றி சில வாரங்களுக்கு முன்னர் எழுதி இருந்தது நினைவில்
இருக்கலாம். அந்தப் பதிவினை படிக்காதவர்களின் வசதிக்காக இங்கே அந்தப் பதிவின்
சுட்டி தந்து விடுகிறேன்….
இந்த இடிக்கப்பட்ட குடிசைகள்
இருந்த பகுதிக்கு வெளியே ஒரு சில நடைபாதைக் கடைகள் உண்டு. அப்படி ஒரு கடையின்
உரிமையாளர் – உழைப்பாளி தான் இன்றைக்கு நாம் பார்க்கப் போகும் கதை மாந்தர்.
குள்ளமான உருவம் – அந்த உருவமும் படைத்தவன், திருப்பிப் போட்ட L மாதிரி ஆக்கி வைத்திருக்கிறான். இப்படி
படைத்துவிட்டானே என்னை இந்த ஆண்டவன் என்ற வருத்தம் மனதிற்குள் இருந்தாலும் அதனை
வெளிக்காண்பித்துக் கொள்ளாமல் உழைத்துக் கொண்டிருக்கிறார்.
அவர். கடையில் அமர்ந்து வேலை
பார்த்துக் கொண்டிருக்கும் அவரைப் பார்த்தால் அவருக்கு கூன் முதுகு என்பதே
தெரியாது. சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருப்பார். நான்கு கற்கள் வைத்து ஒரு
அடுப்பு. அதன் மேல் ஒரு இரும்பு வாணலி. சமோசா செய்து சுடச் சுட விற்பனை. கூடவே தேநீரும்
கிடைக்கிறது. இடிக்கப்பட்ட வீடுகளில் இருந்த தொழிலாளிகள் தான் அவரது
வாடிக்கையாளர்கள். அவர்கள் தவிர ரிக்ஷா ஓட்டுபவர்கள் போன்றவர்கள். இப்போது
வீடுகள் இடிக்கப்பட்டு விட்டதால் அவரது தொழிலில் பாதிப்பு. ஆனாலும் தொடர்ந்து கடை
போட்டுக் கொண்டிருக்கிறார்.
குனிந்தபடியே நடந்து சென்று பால்
வாங்கி வருவது, கடையில் வரும் குப்பைகளை எடுத்துக் கொண்டு போய் குப்பைக் கூடையில்
போடுவது என எல்லாவற்றையும் செய்து விடுகிறார். குனிந்து, தரையைப் பார்த்துக்கொண்டே
நடப்பதில் சில சிரமங்கள் உண்டு – எதிரே வரும் வாகனம் தெரியாது என்பதால் நிதானமாகத்
தான் போக வேண்டியிருக்கும். கொஞ்சம் தூரம் அப்படி குனிந்தபடி நடப்பதே சிரமமான
காரியம். நேராக நடப்பதற்கே நம்மில் சிலருக்கு வலிக்கிறது. வாகன சவாரி கிடைக்குமா
எனப் பார்க்கிறோம்.
தன் உடலின் குறைபாட்டை எண்ணிக்
கவலைப்படாது உழைக்கும் இந்தப் பெண்மணிக்கு ஒரு பூங்கொத்து!
இந்த வாரத்தின் இரண்டாவது பூங்கொத்து
இன்னுமொரு உழைப்பாளிக்கு. அவர் ஒரு முதியவர். தினமும் காலையிலேயே ஒரு பள்ளிக்கருகே
நடைபாதையில் கடை வைத்திருப்பவர். ஒரு மூட்டையில் தின்பண்டங்களை (குர்குரே, பாப்ஸ்
போன்ற தின்பண்டங்கள்] கொண்டு வந்து கடை விரித்து, பள்ளிக்குச் செல்லும்
குழந்தைகளுக்கு விற்பனை செய்பவர். எந்தப் பொருளுமே பத்து ரூபாயைத் தாண்டாது. இங்கே
ஒரு விஷயம் சொல்ல வேண்டும். இங்கே பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு நிறையவே
பாக்கெட் மணி தருகிறார்கள் பெற்றோர்கள். அதனால் பள்ளி செல்லும்போது இப்படி
கடைகளில் வாங்கி உண்பது சர்வ சாதாரணம். எனக்கெல்லாம் பாக்கெட் மணி
பள்ளிப்பருவத்தில் கிடைத்ததே இல்லை!
இந்த முதியவர் காலை நான் பூங்காவில்
நடந்து திரும்பும்போதே கடை போட்டிருப்பார். மாலை அலுவலகத்திலிருந்து வரும்போது
தான், மூட்டையில் பொருட்களை எடுத்துக் கொண்டு தனது இருப்பிடத்திற்குத்
திரும்புவார். முதியவருக்கு எப்படியும் 70 வயதுக்கு மேல் இருக்கும். தள்ளாடியபடியே
நடக்கும் அவரைப் பார்த்தால் இந்த வயதிலும் உழைத்துச் சம்பாதிக்கிறாரே என்ற எண்ணம்
தோன்றும். இந்த வயதிலும் அசராது உழைக்கும் அவருக்கும் இந்த வாரத்தின் பூங்கொத்து!
வேறு சில கதை மாந்தர்களுடன் சந்திக்கும்
வரை....
நட்புடன்
வெங்கட்
தமிழகத்திலிருந்து.....
குட்மார்னிங் வெங்கட். இன்றும் முகநூல் வழியாகத்தான் வந்திருக்கிறேன். முதலில் ஒரு கமெண்ட் போட்டு பிளாக்கை நார்மல் தோற்றத்துக்குக் கொண்டு வரணும்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குகுட்மார்னிங் வெங்கட் ஜி....ஆஜர்....கணினி படுத்தல்...பின்னர் வரேன்..
பதிலளிநீக்குகீதா
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
நீக்குதிருப்பிப்போட்டு L = நல்ல வர்ணனை. பாவம் அவர்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குஅந்த வயதான பாட்டி தாத்தாவை கட்டாயம் பாராட்டவேண்டும். உழைப்பால் உயர்வு.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குஎனக்கு எல்லாம் பள்ளி நாட்களில் பாக்கெட்டே கிடையாது... அப்புறம் அல்லவா மணி?!!!!
பதிலளிநீக்குபாக்கெட்டே இல்லை... அப்புறம் தானே மணி! ஹாஹா....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
குட்மார்னிங் வெங்கட்ஜி .ஆஜர்...இன்று கணினி படுத்தல்....ஸோ பின்னர் வரேன்...கருத்திட....
பதிலளிநீக்குகீதா
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
நீக்குஉடல்குறையை நினைத்து கையேந்தாமல் உழைத்து உண்ண நினைப்போர் வாழ்க!
பதிலளிநீக்குவயதானாலும் உழைக்கும் பெரியவர் வாழ்க!
எனக்கு சில உடல் தொந்திரவால் வலி இரவு தூங்கவில்லை . இந்த போஸ்ட் படித்தவுடன் சோர்வை உதறி கடமையை செய்ய கிளம்பி விட்டேன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...
நீக்குஇது என்ன என் கமென்ட் மொபைலில் கொடுத்தது முதலில் கொடுத்தது வந்ததா என்றே தெரியலை ஸோ அடுத்துக் கொடுத்தால் மீண்டும் வந்துருக்கு...
பதிலளிநீக்குமாற்றுத் திறனாளிகள் தங்கள் உடல் குறையையும் நினைத்து வருந்தாமல், பிறரைச் சார்ந்திராமல் உழைத்து வாழும் இவர்களை வாழ்த்துவோம்...அந்தப் பெரியவருக்கும் நம் வாழ்த்துகள். ஒரு பாசிட்டிவ் செய்தி...
பாக்கெட் மணி!! ஹா ஹா என் சிறு வயதிலும் இது கிடையாது என் மகனுக்கும் கூடக் கொடுத்ததில்லை....அவனும் கேட்டதில்லை. சைக்கிளில் செல்லத் தொடங்கிய போது ஒரு வேளை அது பஞ்சர் ஆனாலோ என்று அதற்கான பணம் மட்டும் கொடுத்துவிடுவேன் ஆனால் அதை அவன் வேறு எதுக்கும் பயன்படுத்தியதும் இல்லை..
கீதா
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
நீக்குபோற்றப்பட வேண்டியவர்கள்... வாழ்த்துகள்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குஉழைப்பாளிகளைப் பற்றிப் படிக்க நன்றாக இருந்தது.
பதிலளிநீக்குஇந்த மாதிரி விற்பனையாளர்கள்தான் பள்ளி செல்லும் பாலகரின் மனதில் மகிழ்ச்சிபொங்கச் செய்கிறார்கள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
நீக்குபாக்கெட் மணி - எனக்குக் கிடைத்ததில்லை. என் பசங்களுக்குக் கொடுப்பேன். அவர்கள் இருவரும் எந்த தேவையில்லாதவற்றிர்க்கும் செலவு செய்ததில்லை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
நீக்குஉழைப்பாளிகள் அதுவும் உடல் குறைபாடுகள் உள்ளவர்கள் பாவம்..
பதிலளிநீக்குபாக்கெட் மணி என் சின்ன வயதில் கிடைத்தத்ல்லை. ஆனால் 10 ஆம் வகுப்பிலிருந்து நான் தனியாக ஒரு சின்ன வீட்டில் தான் இருந்தேன். ராசிங்கபுரம் கிராமத்தில் அம்மாவும் அப்பாவும் கேரளம் சென்றுவிட்டதால். நானே சமைத்து சாப்பிட வேண்டும் என்பதால் அதற்கு மட்டும் காசு கொடுத்துவிட்டுச் செல்வார். நானும் தேவைக்கு மட்டும் செல்வழித்து என்று. அப்போதிலிருந்து 25 வயது வரை தனி வாழ்க்கை இடையில் ஊருக்குச் சென்று வந்தாலும். என் குழந்தைகளுக்குக் கொடுக்கும் சூழல் வரவில்லை தேவையான செலவுகளை நாங்களே பார்த்துக் கொண்டுவிடுவதாலும் குழந்தைகள் அவர்கள் அம்மாவுடன் அவர் வேலை செய்யும் அதே பள்ளியில் படித்து வருவதாலும்...இப்போது பெரியவன் வெளியூரில் ஹாஸ்டலில் இருப்பதால் அவனுக்குச் செலவுக்குக் கொடுப்பதுண்டு..
துளசிதரன்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!
நீக்குபூங்கொத்து கொடுத்த உழைப்பாளிகள் நல்ல இதயங்களே.... வாழ்த்துவோம்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
நீக்குஎங்க குழந்தைங்களுக்குக் காசு கொடுப்போம். ஏனெனில் தினம் 15 மைல் போயிட்டுப் பதினைந்து மைல் திரும்பி வரணுமே! அவங்க அநாவசியமாச் செலவழிக்க மாட்டாங்க! இதே முதியவர்களைப் போல் ஓர் சர்தார்ஜி நல்ல உயர் படிப்புப் படித்தவர் பிள்ளைகளால் கைவிடப்பட்டு வேலை செய்து சம்பாதித்துச் சாப்பிடுவதாக முகநூல் மூலம் படித்தேன். இப்போதெல்லாம் பிள்ளைகளுக்குப் பெற்றோரின் அருமை, பெருமை தெரிவதில்லை! :(
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...
நீக்கு