அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
Success in Life Depends upon Two important things. “Vision” to see the Invisible Opportunities & “Mission” to Solve the Impossible Things….!!
******
இந்த நாளில் எனது அந்தமானின் அழகு பயண நூலுக்கான இரண்டு விமர்சனங்களை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. கலையரசி பாண்டியன் மற்றும் பா. சுதாகர் ஆகியோர் எழுதிய மின்னூல் வாசிப்பனுபவங்களை பார்க்கலாம் வாருங்கள்.
*******
‘அந்தமானின் அழகு’ எனும் பயண நூலை, அண்மையில் வாசித்தேன். ‘சந்தித்ததும், சிந்தித்ததும்’ என்ற வலைப்பூ வழியாக, ஆசிரியரின் எழுத்து எனக்கு ஏற்கெனவே நன்கு பரிச்சயமானது தான்.
அந்தமான் பயணம் குறித்த இது, அத்தீவுகளுக்குப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு மிகுந்த பயனுள்ள நூல். அந்தமான் செல்ல திட்டமிடுபவர்கள், இதை வாசித்தால் போதும்.
அங்குப் பார்க்க வேண்டிய இடங்கள், சீசன் மாதம், திட்டமிடலுக்குத் தேவையான ஆலோசனைகள், முன்பதிவுக்கான இணையதள முகவரிகள் என எல்லா விபரங்களையும் சேர்த்துக் கொடுத்திருப்பதால், மிகவும் பயனுள்ள நூல். எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்ற விபரங்களை விரிவாகச் சொல்லியிருக்கிறார்.
அந்தமானில் உள்ள சிறை பற்றிய வரலாற்றுக் குறிப்புகள், 20 ரூபாய் நோட்டில் இடம்பெற்றிருக்கும், அந்தமான் கடற்கரை பற்றிய விபரம், இந்திய விடுதலைக்குப் பிறகு மாற்றம் பெற்றிருக்கும் தெருப்பெயர்கள் எனப் பல்வேறு தகவல்களையும் சுவையாகச் சேர்த்துள்ளார்.
நீர் விளையாட்டுகள் பற்றிய விபரங்கள், கடலுக்கடியில் பார்த்த பவளப்பாறைகள், சதுப்புநில அலையாத்திக்காடுகள் ஆகியவற்றைப் பற்றிய சுவாரசியமான குறிப்புகளைப் படித்த போது, அந்தமானுக்குக் கண்டிப்பாகப் போக வேண்டும் என்ற ஆவல் எழுகின்றது.
எந்தப் பொருள் வாங்கினாலும், அதன் பில்லைப் பத்திரமாக வைத்திருக்க வேண்டும்; இல்லையேல் அப்பொருட்கள் சோதனையில் பறிமுதல் செய்யப்படும் என்ற எச்சரிக்கை பலருக்குப் பயன்படும். நம் அடையாள சான்றுகளை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதும், முக்கியமான தகவல்.
இவர் ரசித்த அனுபவங்களோடு, இவர் கூட பயணம் செய்தவர்களின் அனுபவங்களையும், அவர்கள் பார்வையில் எழுதி இந்நூலில் சேர்த்துள்ளமை சிறப்பு. புதுமையும் கூட.
மொத்தத்தில் மிகவும் அருமையான பயண நூல். அமேசானில் ஐந்து ஸ்டார் ரேட்டிங் கொடுத்து, விமர்சனமும் எழுதிவிட்டேன்.
பாராட்டுகள் வெங்கட் ஜி!
கலையரசி பாண்டியன்
***********
அந்தமான் என்றதும் நம் நினைவுக்கு வருவது அந்தமானைப் பாருங்கள் அழகு என்ற பாடலும் அந்தமான் சிறையும் தான் என்று சொல்லித் தன் அந்தமான் அனுபவங்களைத் சொல்லத் தொடங்குகிறார் ஆசிரியர்.
தனது பயணத் திட்டம் தொடங்கி, அதன் வெவ்வேறு படிநிலைகள் கடந்து எப்படி அந்தமான் வரை சென்றார் என்பதை வெகு அழகாக விவரிக்கிறார்.
அந்தமான் சிறை பற்றியும் அதன் வரலாறு பற்றியும் அவர் விவரிக்கும் பல விஷயங்கள் நான் அறியாதவை. அந்தக் கொடுமைகளைக் கேட்கவே மனம் சங்கடப்படுகிறது.
நடந்த அனைத்து விஷயங்களையும் சந்தித்த அனைத்து அனுபவங்களையும் அப்படியே பதிவு செய்துள்ளார் ஆசிரியர்.
ஒவ்வொரு இடத்தைப் பற்றி சொல்லும் போதும், அதன் கட்டணம், முன்பதிவு செய்யும் விவரம் போன்றவற்றைத் தவறாமல் குறிப்பிடுகிறார்.
வெறுமனே சுற்றிப் பார்ப்பது என்று இல்லாமல் கூடவே தகவல் திரட்டுவது என்பது பெரிய விஷயம். திரட்டிய தகவல்களைத் தவற விடாது அவற்றை அனுபவங்களுடன் கோர்த்து மாலையாகத் தொடுப்பது என்பது அதைவிட பெரிய விஷயம். இவற்றையெல்லாம் அற்புதமாகக் கையாண்டிருக்கிறார் ஆசிரியர்.
இந்தப் புத்தகம் வெறும் பயணக் கட்டுரையாக மட்டுமல்லாமல் பயண வழிகாட்டியாகவும் இருக்கிறது.
இதை நான் படித்து முடிக்கும் போது நான் இரண்டு முடிவுகளை எடுத்தேன். ஒன்று, நிச்சயம் அந்தமானுக்கு சுற்றுலா செல்ல வேண்டும். இரண்டு, இந்தப் புத்தகத்தில் உள்ள அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்க்க வேண்டும், அனைத்து விஷயங்களையும் அனுபவிக்க வேண்டும். அதற்கான பட்ஜெட்டை போடத் தொடங்கி விட்டேன்.
புத்தகம் அமேசான் போட்டியில் இருப்பதால் 5 ஸ்டார் ரேட்டிங்குடன் ரிவியூ எழுதுகிறேன். நீங்களும் செய்யுங்கள்.
பா.சுதாகர், சென்னை
********
என்ன நண்பர்களே, எனது ”அந்தமானின் அழகு” மின்னூலை படித்து, வாசிப்பனுபவம்/விமர்சனம் பகிர்ந்து கொண்ட நண்பர்களுக்கு நன்றி. அவர்களின் மின்னூல் விமர்சனம் குறித்த உங்கள் எண்ணங்களைப் பின்னூட்டம் வாயிலாகச் சொல்லுங்களேன். மீண்டும் வேறொரு பதிவுடன் உங்களைச் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லியிலிருந்து…
மனப்பூர்வமான இரண்டு விமர்சனங்கள். அருமை. வாழ்த்துகள்.
பதிலளிநீக்குபதிவின் வழி சொன்ன விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. வாழ்த்தியமைக்கு நன்றி ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
இருவரது விமர்சனங்களும் அந்தமானைப்போல் அழகு ஜி
பதிலளிநீக்குவிமர்சனங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அருமை வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவாழ்த்தியமைக்கு நன்றி மதுரைத் தமிழன்.
நீக்குஅழகான அருமையான விமர்சனங்கள் சார்.
பதிலளிநீக்குபோட்டியில் வெல்ல வாழ்த்துக்கள்.
வாழ்த்தியமைக்கு நன்றி அரவிந்த்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
புத்தகம் அமேசான் போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள். அமேசான் ரிவிவ் கண்டிப்பாக எழுதுவேன் விரைவில். வாழ்த்துக்கள் பல
பதிலளிநீக்குவாழ்த்தியமைக்கு நன்றி ரங்கராஜன் ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அருமையான விமரிசனங்கள் . முன்பு படித்த நினைவை தூண்டி விட்டது. நன்றி.
பதிலளிநீக்குபதிவின் வழி பகிர்ந்த விமர்சனங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நாகேந்திர பாரதி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
மிகவும் கவர்ந்ந பயணம்... விமர்சனங்கள் அருமை...
பதிலளிநீக்குவிமர்சனங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
விமர்சனங்கள் அருமை
பதிலளிநீக்குவாழ்த்துகள்
வாழ்த்தியமைக்கு நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
விமர்சனங்கள் மிக அருமை.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் விமர்சனம் செய்தவர்களுக்கும், உங்களுக்கும்.
வாழ்த்தியமைக்கு நன்றி கோமதிம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.